பக்கங்கள்

12 ஜனவரி 2011

கமலின் மகள் என்பதால் எனக்கு பொறுப்பு அதிகம்!

கலையை என் தந்தையிடமும் ஒழுக்கத்தை தாயிடமும் கற்றேன். அதே நேரம் தப்பு செய்தால் தண்டனை அனுபவித்தே தீரணும் என்பார் என் தந்தை கமல்ஹாஸன். இதை மனதில் வைத்துள்ளேன், என்றார் நடிகை ஸ்ருதி.
கமல் மகள் ஸ்ருதி 7-ஆம் அறிவு படத்தில் சூர்யா ஜோடியாக நடிக்கிறார். தெலுங்கில் சித்தார்த் ஜோடியாகவும் ஒரு படத்தில் நடிக்கிறார்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், "நடிகையானது என் சிறு வயது கனவு இசையமைத்தல், பாடுதல், நடிப்பு இவற்றில் நடிக்கவே ரொம்ப பிடிக்கிறது. இசையமைப்பது கடினமான வேலை.
கமல் மகள் என்ற முத்திரையால் எனக்கு பொறுப்பு கூடியுள்ளது. கமல் மகளாக என்னை பார்க்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். கலையை என் தந்தையிடமும், ஒழுக்கம், கட்டுப்பாடுகளை தாயிடமும் கற்றேன். நான் அழகாக இருப்பதாக கூறுகிறார்கள்.
என் அழகு ரகசியம் என்பது நிம்மதியான தூக்கம். நிறைவாக தூங்கினால் முகத்தில் பொலிவு ஏற்படும் முகத்தை அடிக்கடி சுத்தம் செய் வேன், அரிசி உணவுகளை சாப்பிட மாட்டேன்.
சர்க்கரையும் சேர்த்துக் கொள்ள மாட்டேன். தெலுங்கு இயக்குனர் கே.விஸ்வநாத், என்னை வைத்து ஒரு படம் இயக்க விரும்பினார். கால்ஷீட் இல்லாததால் அவர் படத்தில் நடிக்க முடியவில்லை. என் தந்தை நிறைய அறிவுரைகள் சொல்லி இருக்கிறார்.
தப்பு செய்தால் அதற்கான பலனை அனுபவித்து தான் தீர வேண்டும் என்பார். அதேநேரம் என் நடிப்பு சம்பந்தமாக ஆலோசனைகள் எதுவும் அவர் சொல்வதில்லை,"என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக