அமெரிக்காவின் சான்டா அனா பகுதியில், சக பெண் ஊழியரின் தண்ணீர் பாட்டிலில் தனது விந்தணுவைக் கலந்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதுபோல இரண்டு முறை செய்துள்ளாராம் மைக்கேல் கெவின் லல்லனா என்ற அந்த 31 வயது நபர்.
புல்லர்டன் பகுதியைச் சேர்ந்தவர் மைக்கேல். இவர் மீது தற்போது பொது இடத்தில் அநாகரீகமாக நடந்து கொள்வது, பெண் மீதான வன் தாக்குதல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட மைக்கேல் பின்னர் 500 டாலர் பணம் கட்டி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். செப்டம்பர் 14ம் தேதி அவர் மீதான வழக்கு விசாரிக்கப்படவுள்ளது. நியூபோர்ட் பீச் பகுதியில் உள்ள நார்த்வெஸ்டர்ன் மியூச்சுவல் மார்ட்கேஜ் நிறுவனத்தில்தான் பணியாற்றி வருகிறார் மைக்கேல். அன்றைய தினம் தன்னுடன் பணியாற்றும் சக ஊழியையின் டெஸ்க்கில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அதில் தனது விந்துவைக் கலந்து விட்டார்.
இது தெரியாமல் அந்த ஊழியை, தண்ணீர் பாட்டிலை எடுத்துக் குடித்துள்ளார். அது ஒரு மாதிரியாக இருக்கவே உடனடியாக பாட்டிலை கீழே போட்டு விட்டார். இதுகுறித்து தனது நிறுவனத்தில் அவர் புகார் கொடுத்தார். நிறுவனம் தண்ணீர் பாட்டிலை தூக்கிப் போட்டு விட்டு வேறு பாட்டிலை அவருக்குக் கொடுத்தது - நடந்தது தெரியாமல். இந்த நிலையில் 3 மாதம் கழித்து அந்தப் பெண்ணும், மைக்கேல் உள்ளிட்ட மேலும் 6 பேரும் ஆரஞ்ச் பகுதியில் உள்ள கிளைக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.
அப்போது ஏப்ரல் 9ம்தேதி இதேபோல செய்துள்ளார் மைக்கேல். இந்த முறையும் தண்ணீர் பாட்டிலை எடுத்துத் தண்ணீர் குடித்துள்ளார் அந்தப் பெண். அப்போதும் தண்ணீர் ஒரு மாதிரியாக இருக்கவே சந்தேகமடைந்த அவர் தனியார் ஆய்வகத்தில் சோதனைக்காக அதைக் கொடுத்தார். பரிசோதனை செய்து பார்த்த தனியார் ஆய்வகம், அதில் விந்து கலந்திருப்பதாக பெண் ஊழியைக்குத் தகவல் கொடுத்தது.
இதையடுத்து போலீஸுக்குத் தகவல் கொடுத்தார் அந்தப் பெண். இதையடுத்து போலீஸார் டிஎன்ஏ சோதனை நடத்தினர். அதில் சிக்கிக் கொண்டார் மைக்கேல். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். பெண் ஊழியையின் தண்ணீர் பாட்டிலில் விந்தைக் கலந்தது ஏன் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக