பக்கங்கள்

09 ஆகஸ்ட் 2010

மன்மதன் அம்பு படத்தில் சொந்தக் குரலில் திரிஷா பேசுகிறார்.



கமல்ஹாசனும், கே.எஸ்.ரவிக்குமாரும் கேட்டுக் கொண்டதற்கிணங்க, மன்மதன் அம்பு படத்தில் சொந்தக் குரலில் பேசப் போகிறாராம் திரிஷா. திரிஷாவுக்கு நல்லா தமிழ் தெரியும், ஆனாலும் ஆங்கிலத்தில்தான் நிறைய பேசுவார். நல்ல குரல் வளமும் உண்டு, ஆனாலும் படங்களில் அவருக்கு டப்பிங் குரல்தான். இப்படி படு முரண்பாடாக வளைய வந்து கொண்டிருந்த திரிஷா இப்போது கமல்ஹாசன், கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியிடம் சிக்கி வழிக்கு வந்துள்ளார். இவ்வளவு நல்லா தமிழ் தெரியுது, இவ்வளவு நல்ல குரல் வளம் வேறு, பிறகு எதற்கு இரவல் குரல், நீங்களே உங்களுக்கு இந்தமுறை டப்பிங் கொடுக்கப் போகிறீர்கள் என்று திட்டவட்டமாக இருவரும் திரிஷாவிடம் கூறி விட்டனராம். மன்மதனே வேண்டுகோள் விடுக்கும்போது மறுக்க முடியுமா, சரி என்று ஒத்துக் கொண்டு விட்டாராம் தென்னிந்தியத் தேவதை. இதையடுத்து மன்மதன் அம்பு படத்தில் முதல் முறையாக சொந்தக் குரலில் பேசப் போகிறார் திரிஷா. இதுவரை திரிஷா நடித்த அத்தனை படங்களிலும் இரவல் குரல்தான். இப்போதுதான் முதல்முறையாக அவரே அவருக்காகப் பேசப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. திரிஷா பேசப் போவதை கேட்கவே இப்பவே 'திரில்'ஷாவா இருக்கு....!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக