இப்போதான் ‘காதல் டூ கல்யாணம்’ படத்துக்காக கல்யாண காட்சியில நடிச்சிட்டு வந்தேன். வழக்கம் போல மந்திரங்கள் ஓத, மேள தாளம், கூட்டம் என அதே ஸ்டைல். இன்னும் எத்தனை முறை எனக்கு கல்யாணம் செய்து பார்ப்பார்களோ தெரியவில்லை என டுவிட்டரில் எழுதிவிட்டார் திவ்யா.
தமாஷாக எழுதியது என திவ்யா நினைத்துக் கொண்டாலும் சம்பந்தப்பட்ட படக்குழு அப்செட்டாம். அதிலும் குறிப்பாக ‘காதல் டூ கல்யாணம்’ பட இயக்குனர் மிலின்த் ராவ் கோபமாகிவிட்டதாக கூறப்படுகிறது. ‘அந்த காட்சிக்கு ஒத்திகை பார்த்து, கூட்டம் சேர்த்து, செட் போட்டு, எவ்வளவு சிரமங்களுக்கு மத்தியில ஷூட் பண்ணினோம்.
அந்த அம்மாவுக்கே அது தெரியும். அது தெரிஞ்சும் படத்துல வந்த காட்சியை லீக் பண்ணினது மட்டுமில்லாம, அதைப் பத்தி கமென்ட்டும் அடிச்சிருக்கிறாரே’ன்னு யூனிட் பேசிக்கொண்டிருக்கிறதாம். இப்படி உங்க படத்தை பற்றியே கமென்ட் அடிச்சிருக்கீங்களே என திவ்யாவிடம் கேட்டால், ‘நோ கமென்ட்ஸ்’ என்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக