பக்கங்கள்

21 ஆகஸ்ட் 2010

திருமணம் செய்யாமல் குழந்தை பெற 20 ஆண்களுடன் படுக்கையை பகிர்ந்து கொண்ட பெண்.

கல்யாணம் வேண்டாம், கணவன் வேண்டாம் ஆனால் குழந்தை பெற வேண்டும் என்பதற்காக இங்கிலாந்தை சேர்ந்த ஒரு பெண், கடந்த ஒரு ஆண்டில் 20 ஆண்களுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டுள்ளார். இங்கிலாந்தை சேர்ந்த லாரா கார்டர்(25) என்ற பெண் இங்கிலாந்திலிருந்து வெளியாகும் "தி சன்" என்ற பத்திரிகைக்கு கொடுத்துள்ள பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார். லாரா இங்கிலாந்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் உதவி மேனேஜராக பணிபுரிகிறார். அவரது தோழி ஒருவருக்கு கடந்த ஆண்டு குழந்தை பிறந்தது. அதைப் பார்க்க சென்ற லாராவுக்கு, குழந்தை பெற்றுக் கொள்ளும் ஆசை வந்தது. ஆனால் இதற்காக ஒருவரை திருமணம் செய்து, வாழ்க்கை முழுவதும் அவருடன் வாழ லாராவுக்கு இஷ்டம் இல்லை. விந்து தானம் பெற்று செயற்கை முறையில் கருத்தரித்துக் கொள்ளலாம் என குழந்தை பேறு மையத்துக்கு சென்றார். கன்சல்டிங் கட்டணம் 295 பவுண்ட்(ரூ.21 ஆயிரம்), விந்து தானம் அளிப்பவருக்கு 2 ஆயிரம் பவுண்ட் (ரூ.1 லட்சத்து 46 ஆயிரம்) நன்கொடை வழங்க வேண்டும் என்றனர். இவ்வளவு பணம் செலவு செய்வதற்கு பதில், அழகான ஆண்களை மயக்கி ஓசி.யில் எளிதாக குழந்தை பெற்றுக் கொள்ள என முடிவு செய்தார் லாரா. கருத்தரிக்க உரிய நாட்கள் எவை என்பதை மருத்துவ சோதனை மூலம் அறிந்து, அந்த நாட்களில் பார், நைட்கிளப் ஆகிய இடங்களுக்கு சென்றார். மது அருந்தியது போல் நடித்து, அங்கு வரும் அழகான ஆண்களை நோட்டமிட்டு, அவர்களுடன் பேச்சு கொடுப்பார். ஜொள்ளு விடும் ஆண்களிடம் உங்களுக்கு எஸ்.டி.டி(பாலியல் நோய்கள்) இருக்கிறதா என கேட்பார். இல்லை என்று கூறிவிட்டால் அவர்களை மயக்கி தள்ளிச் சென்றுவிடுவார். வாய்ப்பு கிடைத்தால் தனி அறை. இல்லையென்றால் கார், நைட்கிளப் டாய்லெட்டில் முடித்துவிடுவார். சில ஆண்கள், ஆணுறை வேண்டும் என கேட்பார்களாம். அதெல்லாம் வேண்டாம் என லாரா கூறுவாராம். வற்புறுத்தும் ஆண்களுக்காவே, ஓட்டை போட்ட ஆணுறை ஒன்றை கைவசம் எடுத்துச் செல்வாராம் லாரா. காரியத்தை கச்சிதமாக முடித்துவிட்டு, வாந்தி எடுப்பதற்காக பல நாட்கள் காத்திருப்பார் லாரா. ஆனால் அவருக்கு ஒவ்வொரு முறையும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. கர்ப்பமாவதற்காக கடந்த ஒரு ஆண்டில் இப்படி 20 ஆண்களுடன் போராடியுள்ளேன் என சோகமாக பேட்டியளித்துள்ளார் லாரா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக