பக்கங்கள்

31 ஜூலை 2014

வெற்றி வலம் வரும் ப்ரியா ஆனந்த்!

ப்ரியா ஆனந்த்
அரிமா நம்பியைத் தொடர்ந்து ப்ரியா ஆனந்த் நடித்த இரு படங்கள் அடுத்தடுத்து வெளியாகின்றன. தமிழில் ஒரு காலத்தில் தோல்விப் பட நடிகையாகப் பார்க்கப்பட்டவர் ப்ரியா ஆனந்த். அவர் அறிமுகமான வாமனன் படம் தொடங்கி அடுத்தடுத்து படங்கள் சரியாகப் போகாத நிலையில், அவர் சிவகார்த்திகேயனுடன் நடித்த எதிர்நீச்சல் கைகொடுத்தது. அதைத் தொடர்ந்து அவருக்கு ஏராளமான படங்களில் வாய்ப்பு கிடைத்தது.சமீபத்தில் அவர் விக்ரம் பிரபுவுடன் இணைந்து நடித்த அரிமா நம்பி வெளியானது. இந்தப் படம் வர்த்தக ரீதியாக நல்ல வெற்றிப் படமாக அமைந்துள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து ப்ரியா ஆனந்த் நடித்த இரு படங்கள் வெளியாகின்றன. வரும் ஆகஸ்ட் 29-ம் தேதி இரும்புக் குதிரை படம் வெளியாகிறது. இதில் பிரான்சுக்குப் போகும் பாண்டிச்சேரி பெண்ணாக நடித்துள்ளார். அதர்வா நாயகனாக நடித்துள்ளார். அதைத் தொடர்ந்து செப்டம்பர் 5-ம் தேதி ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படம் வெளியாகிறது. இதில் விமலுக்கு ஜோடியாக, மருத்துவக் கல்லூரி மாணவியாக நடித்துள்ளார் ப்ரியா. இந்தப் படங்களைத் தொடர்ந்து ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் அவர் நடித்துள்ள வை ராஜா வை படம் வெளியாகிறது.

23 ஜூன் 2014

இயக்குநர் ராம நாராயணன் மரணம்!

உலக சாதனை படைத்த இயக்குநர் ராம நாராயணன் மரணம்... அதிர்ச்சியில் தமிழ் சினிமா!பிரபல திரைப்பட இயக்குநரான ராம. நாராயணன் மாரடைப்பால் காலமானார். சிங்கப்பூரில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர் அங்கு மரணமடைந்துள்ளார். 9 மொழிகளில் 125 படங்களை இயக்கி சாதனை படைத்தவர் ராம.நாராயணன். இந்தியாவிலேயே அதிக படங்களை இயக்கிய இயக்குநர் இவர்தான்.குறிப்பாக விலங்குகளை வைத்தும், கிராபிக்ஸ் மூலமும் பல படங்களை இயக்கி அனைவரையும் ரசிக்க வைத்தவர். விஜயகாந்த்துக்கு ஆரம்ப காலத்தில் ஏற்றம் கொடுத்த பல படங்களை இயக்கியவர். சர்க்கரை வியாதி மற்றும் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த அவரை சிகிச்சைக்காக சிங்கப்பூர் அழைத்துச் சென்றிருந்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மாரடைப்பால் மரணமடைந்தார். ராம நாராயணனிடம் உதவியாளராக இருந்தவர்தான் நடிகர் ராமராஜன். ஆரம்பத்தில் உதவி இயக்குநராக இருந்து பின்னர் இயக்குநராக மாறி அதன் பின்னர் ராமராஜன் நடிகரானார் என்பது நினைவிருக்கலாம். இதேபோல இன்னொரு சிஷ்யர் இயக்குநர் பேரரசு. ராம நாராயணனின் 30 படங்களில் பேரரசு உதவி இயக்குநராக இருந்துள்ளார். 1989-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ராம.நாராயணன் காரைக்குடி தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1990-ம் ஆண்டு தமிழக அரசின் `கலைமாமணி' விருது இவருக்கு கிடைத்தது. 1995-ம் ஆண்டு இயல், இசை, நாடக மன்ற தலைவராக பதவி வகித்தார். 2005-ம் ஆண்டு முதல் திரைப்பட தணிக்கை குழு உறுப்பினராக இருந்து வருகிறார். ராம.நாராயணனின் மனைவி பெயர் ராதா. மகன் ராமசாமி. மகள்கள் அன்பு, உமா. அனைவருக்கும் திருமணமாகி விட்டது.

16 ஜூன் 2014

இனியா வீட்டில் திருடி மாட்டிய அக்கா கணவன்!

இனியா
இனியாவின் அக்கா சுவாதிக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையே, அவர் வீட்டில் கொள்ளையடித்தது அம்பலமாகியுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த மாப்பிள்ளையை கைது செய்து 'மாமியார் வீட்டுக்கு' அனுப்பினர் போலீசார். தமிழில் பிரபல நடிகையாகத் திகழும் இனியா, கேரளாவைச் சேர்ந்தவர். இவரது சொந்த ஊர் திருவனந்தபுரம் கரமணை அருகே உள்ள மருதூர்க்க கடவு கிராமம்.இனியாவுக்கு சுவாதி என்ற அக்கா உள்ளார். மலையாள டி.வி. தொடர்களில் நடித்து வருகிறார். நடிகை சுவாதியும் ஷாபின் (வயது 32) என்பவரும் காதலித்து வந்தனர். ஷாபின் தங்கள் அளவுக்கு வசதியான குடும்பத்தை சேர்ந்தவர் அல்ல என்பதால் நடிகை இனியாவின் பெற்றோர் ஆரம்பத்தில் இந்த காதலை ஏற்கவில்லை. ஆனால் ஷாபினைத்தான் திருமணம் செய்வேன் என்று உறுதியாக சுவாதி இருந்ததால் வேறு வழியின்றி கடந்த மே 29 - ந் தேதி, நடிகை சுவாதி - ஷாபின் திருமண நிச்சயதார்த்தம் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு பெரிய நட்சத்திர ஓட்டலில் கோலாகலமாக நடந்தது. இருவருக்கும் இந்த மாத இறுதியில் திருமணம் செய்யவும் முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி நடிகை இனியா குடும்பத்தினர் இரவுக் காட்சி படம் பார்க்க சென்ற போது, அவர்களது வீட்டில் இருந்த ரூ.5 லட்சம் ரொக்கம் மற்றும் 10 பவுன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இதுபற்றி கரமணை போலீசில் புகார் செய்தனர் இனியா குடும்பத்தினர். திருவனந்தபுரம் துறைமுக உதவி போலீஸ் கமிஷனர் ஸ்ரீகுமார் தலைமையிலான போலீஸ் படையினர் இந்த கொள்ளை பற்றி தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது இந்த கொள்ளையில் ஈடுபட்டது நடிகை இனியாவின் அக்கா சுவாதிக்கு நிச்சயிக்கப்பட்ட ஷாபின்தான் என்ற உண்மை வெளியாகி, அதிரவைத்தது. உடனடியாக போலீசார் ஷாபினையும் அவருக்கு உதவிய அவரது நண்பர் சஜியையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க, சுவாதியைப் பயன்படுத்த ஷாபின் முயன்றது தெரிய வந்தது. சுவாதியுடன் நிச்சயதார்த்தம் முடிந்ததுமே, அந்த வீட்டில் பணம், நகையைக் கொள்ளையிட திட்டமிட்டுள்ளார். முதலில் வீட்டுச் சாவியைத் திருடி, அதை வைத்து போலி சாவி தயாரித்துள்ளார். பின்னர் அந்த சாவியை தன் கூட்டாளிகள் சஜி, ராஜன், சஜு ஆகிய மூவரிடமும் கொடுத்து வைத்திருந்தார்.கொள்ளையடிக்க ஒரு நாளைத் தேர்வு செய்தவர், அந்த நாளில் இனியா, சுவாதி மற்றும் குடும்பத்தினர் அனைவருடனும் இரவுக் காட்சி சினிமா பார்க்க சென்றுள்ளார். வீட்டில் யாருமில்லாத அந்த மூன்று மணி நேரத்துக்குள் பக்காவாக திட்டத்தை அரங்கேற்றியுள்ளார். கொள்ளையடித்த பணத்தில் ஷாபினுக்கு வந்த பங்கு ரூ.2 லட்சத்து 51 ஆயிரமாம். மீதியை கூட்டாளிகள் பிரித்துக் கொண்டார்களாம். போலீஸ் விசாரணையில் இந்த உண்மைகளைக் கக்கியுள்ளார் ஷாபின். அவரையும் அவர் கூட்டாளி சஜியையும் கைது செய்துள்ள போலீஸ், தலைமறைவாக உள்ள ராஜன் மற்றும் சஜூவைத் தேடி வருகின்றனர். இந்த கொள்ளை மூலம், நடிகை சுவாதி திருமணம் ரத்தாக வேண்டிய நிலைக்கு வந்துவிட்டது.

13 ஜூன் 2014

ஸ்ருதியின் அறைக்கதவு தட்டப்பட்டதால் பரபரப்பு!

ஸ்ருதி
டேராடூனில் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த நடிகை ஸ்ருதி ஹாஸனின் அறைக் கதவை ரசிகர் ஒருவர் குடிபோதையில் தட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை ஸ்ருதி ஹாஸன் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் திக்மான்ஷு துலியாவின் யாரா என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் நடந்தது.இதற்காக ஸ்ருதி டேராடூனில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கி படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இந்நிலையில் நள்ளிரவில் ஹரியானா மாநிலம் சிர்சா நகரைச் சேர்ந்த ரசிகர் ஒருவர் குடிபோதையில் ஸ்ருதி தங்கிய அறையின் கதவை தட்டிக் கொண்டே இருந்துள்ளார். இதனால் பதட்டமடைந்த ஸ்ருதி இந்த சம்பவம் குறித்து முசோரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். முன்னதாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஸ்ருதியை நீண்ட நாட்களாக பின் தொடர்ந்த ஒருவர் மும்பை பந்த்ரா பகுதியில் இருந்த அவரது வீட்டுக்கே வந்து தாக்கினார். இதையடுத்து ஸ்ருதி மும்பை அந்தேரி பகுதியில் புதிய வீடு ஒன்றை வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

05 ஜூன் 2014

தீவிர சிகிச்சைப் பிரிவில் நடிகை மனோரமா!

மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள மனோரமாவுக்கு, தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நடிகை மனோரமா மூச்சுத்திணறல் காரணமாக, சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இரு தினங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்த நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகை மனோரமாவுக்கு 2 ஆண்டுகளுக்கு முன் முழங்கால் அறுவைச் சிகிச்சை நடந்தது.பின்னர் காளஹஸ்தி கோவிலுக்கு சென்றிருந்தபோது, குளியல் அறையில் தவறி விழுந்தார். அப்போது அவருடைய தலையில் காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றார். ஆனால் இந்த சம்பவத்துக்குப் பிறகு அவருக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்தது. கடந்த மார்ச் மாதம் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அவர், கடந்த மாதம் 26ந் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். இந்த நிலையில், தற்போது மீண்டும் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். டாக்டர்கள் அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். மனோரமா உடல் நிலை ஆபத்தான கட்டத்தில் இல்லை என்றும், இன்னும் இரு தினங்களில் அவர் வீடு திரும்புவார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

07 மே 2014

படுக்கையில் தன்னுடன் பேய் என்கிறார் நடிகை!

பேயுடன் உடலுறவு கொள்வதாக பாலிவுட் நடிகை ஒருவர் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் உக்ரைன் நாட்டை சேர்ந்த நடாஷா பிளாசிக். இவர் லண்டன் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டி நேற்று ஒளிபரப்பானது.அதில் தன்னுடைய படுக்கையறையில் அடிக்கடி கண்களுக்கு புலப்படாத ஒரு உருவம் தன்மீது படுத்துக்கொண்டு இயங்குவதாகவும் அந்த அனுபவம் தனக்கு மிகவும் புதுமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதாக தெரிவித்தார்.தன்னுடன் உடலுறவு கொண்டது ஒரு பேய்தான் என்று தன்னால் அடித்துக் கூற முடியும் என்றும், எப்போதெல்லாம் நான் படுக்கையறையில் இருக்கிறேனோ அப்போதெல்லாம் இதுபோல அடிக்கடி நடக்கிறது என்றும் அவர் கூறினார்.முதன்முறையாக தனக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து அவர் விவரிக்கும்போது "ஒரு நாள் படுக்கையில் இருந்தபோது கதவு திறக்கும் சத்தம் கேட்டது. எட்டிப்பார்த்தபோது அங்கு யாருமே இல்லை. எனது மேல் யாரோ படுப்பது போல கனமாக இருந்தது. ஆனால் உருவத்தை பார்க்க முடியவில்லை. ஒரு அரவணைப்பை, உடலின் கதகதப்பை மட்டும் என்னால் உணர முடிந்தது. அதன்பிறகு நான் அதை அனுபவிக்க தொடங்கிவிட்டேன்" என்று கூறினார்.நடாஷா பிளாசி தற்போது பாராநார்மல் ஆக்டிவிட்டி 2 என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை வித்தியாசமாக விளம்பரப்படுத்த வேண்டும் என்பதற்காக நடிகை தானே திரைக்கதை எழுதி பேய்க்கதை விடுவதாக பாலிவுட்டில் கிசுகிசு எழுந்துள்ளது.இவரை மனநல மருத்துவர்களிடம் அனுப்ப வேண்டும் என்றும் சிலர் குரல் கொடுத்து வருகிறார்கள்.

29 மார்ச் 2014

கனிகா கடும் கோபம்!

கனிகா 
தமிழ் பட இயக்குனர்களுக்கு பக்குவம் இல்லை. திருமணம் ஆன பிறகும் கிளாமர் காட்டச்சொல்கிறார்கள் என்றார் கனிகா. பைவ் ஸ்டார், ஆட்டோகிராப், வரலாறு உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் கனிகா. அவர் கூறியதாவது: சினிமாவுக்கு வந்த புதிதில் எல்லோரும் என்னைப் பற்றி பேச வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் இப்போது அப்படி இல்லை. பெயருக்காக படங்கள் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அர்த்தமுள்ள கதாபாத்திரங்கள் வந்தால் மட்டுமே ஏற்கிறேன். இப்படித்தான் நடிக்க வேண்டும் என்ற கொள்கை எதுவும் வகுத்துக்கொள்ளவில்லை. ஆனால் எனக்கு பொருத்தமான வேடமா என்று பார்க்கிறேன். இல்லாவிட்டால் நடிப்பதில்லை. என் குடும்பத்தினர் எனக்கு ஆதரவாக உள்ளனர். அவர்கள் எனக்கு எந்த நிபந்தனையும் விதிப்பதில்லை. தமிழ் திரையுலகை பொருத்தவரை திருமணம் ஆன நடிகைகள் என்றால் அவர்களை ஓரம்கட்டவே பார்க்கிறார்கள். எனக்கு திருமணம் ஆனபிறகும் ஆடை குறைத்து கிளாமராக நடிக்க வேண்டும் என்று சொன்னார்கள். கிளாமர் காட்டாமல் சேலை கட்டி நடிப்பதாக கூறினேன். அதற்கு பதில் எதுவும் அவர்களிடம் இல்லை. மலையாள திரையுலகில் அப்படி இல்லை. ஹீரோயின்களை ஓரம்கட்ட மாட்டார்கள். வயதானவராக இருந்தாலும் அவரை நாயகியாக நடிக்க வைப்பார்கள். அதற்கு காரணம் மலையாள இயக்குனர்கள் பக்குவப்பட்டவர்கள் என்று  தெரிவித்துள்ளார்.

20 மார்ச் 2014

ஸ்ருதிஹாசனின் ஆபாச போஸ்டர் கிழிப்பு!

நடிகை ஸ்ருதிஹாசன் அல்லி அர்ஜூனாவுடன் நடித்துள்ள ரேஸ் குரோம் படத்தில் படுகவர்ச்சியாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் விளம்பரத்திற்காக ஐதராபாத் உட்பட ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. வானத்தை நிறுத்திவிட்டு இந்த போஸ்டர்களை கண்ட வாகன ஓட்டிகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து சில மனித உரிமை ஆர்வலர்கள் ஆபாச போஸ்டர்கள் ஒட்டபட்ட இடங்களில் போராட்டம் நடத்தியதாதவும், இதனை கண்ட போலீஸார் போஸ்டர்களை கிழித்து எரிந்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இது போன்ற போஸ்டர்களை ஒட்ட கூடாது என்று அந்த படநிறுவனத்திற்கு போலீஸார் எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.

21 பிப்ரவரி 2014

குத்து ரம்யாவிற்கு எதிர்ப்பு!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேரை விடுவிக்கும் தமிழக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த நடிகை 'குத்து' ரம்யாவுக்கு இந்து மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.இது குறித்து இந்து மக்கள் கட்சியின் மண்டல செயலாளர் சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,நடிகைகள் பலர் தமிழர்களுக்கு எதிரான உணர்வுகளை கொண்டுள்ளனர். அசின் எதிர்ப்பை மீறி இலங்கைக்கு சென்று வந்தார். பாவனா தமிழ் படங்களை டப்பிங் செய்யக் கூடாது என்று கன்னட நடிகர்கள் நடத்திய போராட்டத்தில் பங்கேற்றார். தற்போது குத்து ரம்யா ராஜீவ் கொலை கைதிகள் விடுதலையை எதிர்க்கிறார்.ஆயுள் கைதிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்வது அரசின் வழக்கமான நடைமுறை. பிரதமராக இருந்தவருக்கும் சாதாரண மனிதருக்கும் சட்டம் என்பது சமமானதுதான். கைதிகளை விடுதலை செய்யக் கூடாது என்று அரசின் முடிவை எதிர்ப்பது ஏற்புடையது அல்ல. குத்து ரம்யாவை தமிழ் திரையுலகம் நிரந்தரமாக புறக்கணிக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

13 ஜனவரி 2014

த்ரிஷாவின் அம்மா உமாவுக்கு பிடிவாரண்டு!

நடிகை த்ரிஷா நிர்வாண குளியல் போட்டதாக வெளியான வீடியோ தொடர்பான வழக்கில் ஆஜராகாததால் அவரது அம்மா உமாவுக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.நடிகை த்ரிஷாவைப் போன்ற ஒரு பெண் ஓட்டல் அறை ஒன்றில் குளிப்பது போன்ற காட்சியொன்று 2004-ல் இணைய தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.பாத்ரூமில் ரகசிய கேமராவை பொருத்தி இக்காட்சியை படமாக்கியதாகவும் கூறப்பட்டது. இந்த படத்தை வார பத்திரிகையொன்றும் வெளியிட்டது.ஆனால் த்ரிஷாவும், அவரது தாய் உமாவும் இதனை மறுத்தனர். படத்தில் இருப்பது த்ரிஷா இல்லை என்றும் மார்பிங்கில் போலியாக இப்படத்தை உருவாக்கியாதாகவும் கூறினர்.படத்தை வெளியிட்ட ஒரு வார பத்திரிகையிடம் நஷ்டஈடு கேட்டு உமா கிருஷ்ணன் எழும்பூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு விசாரணை கடந்த 8 ஆண்டுகளாக நடந்து வந்தது. விசாரணைக்கு வருமாறு உமாகிருஷ்ணனுக்கு கோர்ட்டு பல தடவை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் ஆஜராகவில்லை.இதையடுத்து நீதிபதி கோபாலகிருஷ்ணன் த்ரிஷாவுக்கும், உமாகிருஷ்ணனுக்கும் கைது வாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டதாக செய்திகள் வெளியாகின. இதனை உமாகிருஷ்ணன் வக்கீல் மறுத்து விளக்கம் அளித்துள்ளார்.அவர் கூறும்போது, ‘‘நீதிமன்றம் த்ரிஷாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கவில்லை. அவரது தாய் உமாகிருஷ்ணனுக்கு மட்டுமே வாரண்டு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதை சட்ட ரீதியில் எதிர்கொள்வோம்," என்றார்.

14 டிசம்பர் 2013

அஞ்சலி ஆந்திராவில் தரிசனம்!

அஞ்சலி 
அஞ்சலி இந்த நாட்டில்தான் இருக்கிறாரா, வெளிநாட்டில் போய் ரகசியத் திருமணம் செய்து கொண்டாரா என சூடான விவாதமே நடந்து வரும் வேளையில், ஆந்திர மாநில சிவன் கோயில் ஒன்றில் அஞ்சலி சாமி கும்பிட்ட தகவல் பரவியதால் ரசிகர்கள் அங்கு திரண்டனர். சென்னையிலிருந்து வெளியேறி மாதக் கணக்கில் ஆந்திராவிலேயே தங்கியுள்ளார் அஞ்சலி. சென்னையிலிருந்த தன் புதிய வீட்டை சித்தி அபகரித்துக் கொண்டதால், அதை மீட்க சட்டரீதியான நடவடிக்கைகளை எடுத்துள்ளார். வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. அவருக்கு எதிராக சித்தி பாரதிதேவியும், இயக்குநர் களஞ்சியமும் வெவ்வேறு வழக்குகளைத் தொடர்ந்துள்ளனர். ஆனால் இவற்றில் எதிலும் அஞ்சலி ஆஜராகவில்லை. தமிழ்ப் படங்களிலும் நடிக்க மறுத்துவிட்டார். தெலுங்கிலும் அவருக்குப் படமில்லை. எனவே அஞ்சலி வெளிநாட்டில், ஒரு பெரும் புள்ளியுடன் செட்டிலாகிவிட்டார் என்று கூறப்பட்டது. ஆனால் அவர் ஆந்திராவில்தான் இருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் ஸ்ரீ சைலத்தில் உள்ள மல்லிகார்ஜூனா சுவாமி கோவிலில் அவர் நேற்று சாமி கும்பிட்டார். அங்கு சிவபெருமானுக்கு ருத்ராபிஷேகமும், தாயார் பிரமராம்பிகாவிற்கு குங்கும அர்ச்சனையும் செய்து வழிபட்டார். அஞ்சலியை காண ரசிகர்கள் முண்டியடித்தனர். பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தினார்கள். சித்தியிடம் ஏற்பட்ட மோதல் குறித்து அஞ்சலியிடம் கேட்டபோது, நான் சாமி கும்பிட வந்தேன். இங்கு எதுவும் பேசவிரும்பவில்லை. நான் இங்குதான் இருக்கிறேன். விரைவில் செய்தியாளர்களைச் சந்தித்து விவரமாகப் பேசுவேன், என்று கூறிவிட்டு காரில் ஏறிப் பறந்தார்.

30 நவம்பர் 2013

நடன இயக்குனர் ரகுராம் காலமானார்!

மகள் காயத்ரியுடன் ரகுராம் மாஸ்ரர் 
பிரபல சினிமா நடன இயக்குனர் ரகுராம் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 69. நடன குடும்பத்தில் இருந்து வந்தவர் ரகுராம். அதன் வெளிப்பாடாக இவரும் சினிமாவில் நடன இயக்குனராக களம் இறங்கினார். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு நடனம் அமைத்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட பல மொழி படங்களிலும் நடன இயக்குனராக சுமார் 1000 பாடல்களுக்கு மேல் நடனம் அமைத்துள்ளார். சென்னை, மகாலிங்கபுரத்தில் தனது வீட்டில் வசித்து வந்த ரகுராமிற்கு இன்று(நவ., 30ம் தேதி) மதியம் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மாரடைப்பால் காலமானார். மறைந்த ரகுராமிற்கு கிரிஜா என்ற மனைவியும், காயத்ரி ரகுராம், சுஜா ரகுராம் என்ற இரு மகள்களும் உள்ளனர். கிரிஜாவும் நடன இயக்குனர் தான். இவர் பிரபல நடன இயக்குனர் கலாவின் சகோதரி ஆவார். மகள்கள் காயத்ரியும், சுஜாவும் நடன இயக்குநர்களாக உள்ளனர். இதில் காயத்ரி ரகுராம் சார்லி சாப்ளின் உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். மறைந்த ரகுராமின் உடல் சென்னை, மகாலிங்கபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. காயத்ரி ரகுராம், வை ராஜா வை படத்தின் பாடல் ஷூட்டிங்கிற்காக பாங்காக் சென்றுள்ளார். தந்தை மறைவுக்கு குறித்து அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் வந்த பிறகு, ரகுராமின் இறுதிசடங்கு திங்களன்று(டிச. 2ம் தேதி) நடைபெறுகிறது.

23 நவம்பர் 2013

ஸ்ருதியை தாக்கியது பிரபல நடிகரின் மனைவி?

  • பாலிவுட்டின் பிரபல நடிகர் ஒருவரின் மனைவி ஏற்பாட்டில்தான் ஸ்ருதி ஹாஸன் தாக்கப்பட்டதாக பரபரப்பாக தகவல்கள் வெளியாகியுள்ளன மும்பை மீடியாவில்.ஸ்ருதி ஹாஸன் வீட்டிலிருந்த போது அவரை மர்ம மனிதன் தாக்கிவிட்டு ஓடியது தெரிந்ததே. ஸ்ருதிஹாஸன் தாக்கப்பட்டதன் பின்னணியில் பிரபல நடிகர் மனைவி? இதுகுறித்து ஸ்ருதிஹாஸன் முதலில் போலீசில் புகார் செய்யவில்லை. காரணம், அந்த தாக்குதல் நடந்தபோது, அவர் வீட்டில் ஒரு பிரபல இந்தி நடிகர் இருந்ததாகவும், புகார் செய்தால இந்த விவகாரம் வெளியில் வந்துவிடும் என்று அஞ்சியதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தாக்குதல் குறித்து நேற்றுதான் போலீசில் புகார் செய்தார் ஸ்ருதிஹாஸன். ஆனால் இப்போது வெளியாகியுள்ள ஒரு தகவல் அதிர வைத்துள்ளது. கொடுத்த புகாரை திரும்பப் பெற்றுக் கொண்டார் ஸ்ருதி என்றும் இதற்கு ஒரு பிரபல கான் நடிகர்தான் காரணம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.இதைவிட அதிர வைக்கும் விஷயம், ஸ்ருதியைத் தாக்க இந்த நபரை ஏவியவர் அந்த நடிகரின் மனைவிதானாம். ஸ்ருதி புகார் தந்ததுமே, அந்த நடிகர் ஸ்ருதியைத் தொடர்பு கொண்டு, இந்த புகாரை வாபஸ் பெற்றுக் கொள். இல்லாவிட்டால் என் பெயர் நாறிவிடும், என வற்புறுத்தினாராம்.அபார்ட்மென்ட்டில் உள்ள அனைவரும் பார்க்கும் வகையில் ஸ்ருதியுடன் பிரச்சினை செய்ய வேண்டும் என்று சொல்லித்தான் அந்த நபரை நடிகரின் மனைவி ஏற்பாடு செய்திருந்தாராம். அவர் நினைத்தது கிட்டத்தட்ட இப்போது நடந்துவிட்டது. ஸ்ருதி தாக்கப்பட்டதை விட, அதன் பின்னணி பற்றித்தான் அதிகம் பேச ஆரம்பித்துள்ளனர்.முக்கிய பத்திரிகைகளின் நிருபர்களுக்கு இந்த விஷயத்தை நடிகரின் மனைவியே போன் போட்டு சொன்னதும் அம்பலமாகியுள்ளது."நடிகருடனான தொடர்பை ஸ்ருதி இத்துடன் நிறுத்திக் கொள்ளாவிட்டால், நிச்சயம் அடுத்தமுறை நானே நேரில் வந்து அனைவருக்கும் தெரியும் வகையில் சண்டை போடவும் தயங்கமாட்டேன்... என் கணவருடன் சேர்ந்து அவரது கள்ளத் தொடர்புகளும் அம்பலமாகட்டும்," என்றும் எச்சரித்துள்ளாராம் நடிகர் மனைவி.இந்தத் விவரங்கள் இப்போது தமிழ்ப் பத்திரிகைகள் மத்தியிலும் பரவ ஆரம்பித்துள்ளது.

    20 நவம்பர் 2013

    ஷ்ருதி ஹாசனை பலாத்காரம் செய்ய முயற்சி!

    கமல் ஹாஸன் மகளும் முன்னணி நடிகையுமான ஸ்ருதி ஹாஸனின் மும்பை வீட்டுக்குள் புகுந்து அவரை பலாத்காரம் செய்ய முயன்ற நபரை காவலாளிகள் விரட்டியுள்ளனர். ஸ்ருதி ஹாஸன் அவரிடமிருந்து விலகி, அந்த நபரை பாதுகாவலர்கள் துணையுடன் விரட்டினார். இதுகுறித்து போலீசில் புகார் எதுவும் இன்னும் பதிவாகவில்லை. வீடு புகுந்து ஸ்ருதி ஹாஸனை தாக்கி பலாத்காரம் செய்ய முயன்ற நபர்... பாலிவுட்டில் பரபரப்பு! ஆனால் இந்த சம்பவத்தால் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளாராம் ஸ்ருதி. இந்தியில் பிஸியான நடிகையாக உள்ளார் ஸ்ருதி ஹாஸன். அவரை கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கும் மேலாக ஒரு நபர் பின்தொடர்ந்து வந்தாராம். ராமய்யா வஸ்தாவய்யா படப்பிடிப்பின்போது ஸ்ருதியை அவர் நெருங்க முயன்றுள்ளார். ஆனால் படக்குழுவினர் விரட்டியடித்துவிட்டனர். இந் நிலையில் செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு பாந்த்ராவில் ஸ்ருதி தங்கியுள்ள வீட்டு அழைப்பு மணி ஒலிக்க, பாதி தூக்க கலக்கத்துடன் கதவைத் திறந்துள்ளார் ஸ்ருதி ஹாஸன். உடனே சட்டென்று உள்ளே நுழைந்த அந்த நபர், ஸ்ருதியை கட்டிப்பிடித்து, கழுத்தை நெறிக்க முயன்றாராம். உடனே சுதாரித்துக் கொண்ட ஸ்ருதி, அந்த நபரை பலமாக வெளியில் தள்ளி கதவை தாழிட முயன்றாராம். அதே நேரம் பலமாகக் குரலெழுப்பி செக்யூரிட்டிகளை அழைத்துள்ளார். அவர்கள் வந்து அந்த நபரைப் பிடித்து இழுத்து விரட்டியடித்துள்ளனர். ஸ்ருதியின் மும்பை ஏஜென்ட் இத்தகவல்களை உறுதிப்படுத்தியுள்ளார். அந்த நபர் யார், ஸ்ருதியைக் காதலித்த ரசிகரா... ஸ்ருதியின் மீதான தனிப்பட்ட பகை காரணமா என்பது குறித்து எதுவும் தெரியாது என அந்த ஏஜென்ட் தெரிவித்தார். ஆனால் தங்களுக்கு இதுபற்றி எந்த புகாரும் வரவில்லை என்று மும்பை போலீஸ் துணை கமிஷனர் செர்ரிங் டோர்ஜ் தெரிவித்தார்.

    14 நவம்பர் 2013

    இளையதளபதி எல்லாம் சும்மா!

    என் வாழ்க்கையில் அப்பா அம்மா மனைவி குழந்தைக்குப் பிறகு எனக்கு எல்லாமே என் நண்பன் விஷால்தான். இளையதளபதி அது இதெல்லாம் சும்மா, என்று கண்கலங்கினார் நடிகரும் விஜய்யின் தம்பியுமான விக்ராந்த். விக்ராந்த்... நடிகர் விஜய்யின் ரத்த சொந்தம். சித்தி மகன். அவர் கற்க கசடற படத்தில் அறிமுகமான போதே, விஜய்யின் தம்பி என்றுதான் தன்னை காட்டிக் கொண்டார். படத்திலும் விஜய்க்கு ஏக பில்டப் தரும் காட்சிகள் உண்டு. அதன் பிறகு, எங்கள் ஆசான், முத்துக்கு முத்தாக, கோரிப்பாளையம் உள்ளிட்ட பல படங்களில் நாயகனாக நடித்தார். நட்சத்திர கிரிக்கெட்டில் செஞ்சுரி அடிக்க முடிந்த அவரால், சினிமா நட்சத்திரமாக திரையில் ஜெயிக்க முடியவில்லை. இந்த நேரத்தில்தான் விஷால் அவருக்குக் கைகொடுத்தார். தான் மிகுந்த நெருக்கடியில் இருந்த போதும், தன்னைவிட மிகவும் நெருக்கடியில், கிட்டத்தட்ட பூஜ்யத்திலிருந்த விக்ராந்துக்கு தன் சொந்தப் படமான பாண்டிய நாட்டில் சிறு வேடம் கொடுத்தார். அதன் விளைவு இன்று விக்ராந்துக்கு நல்ல பெயர். அத்துடன் நிற்கவில்லை விஷால். தன் சொந்தப் பட நிறுவனம் அடுத்து தயாரிக்கும் படத்தில் முழு ஹீரோவாக விக்ராந்தையே நடிக்க வைக்கிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் நேற்று வெளியிட்டார். இத்தனையும் சேர்த்து விக்ராந்தை நெக்குருக வைத்துவிட்டது. உங்க சொந்த அண்ணன் இளையதளபதி செய்யாததை, இந்த அண்ணன் விஷால் செய்திருப்பது குறித்து? என கேட்டபோது, "நான் உண்மையிலேயே சொல்றேன். விஷால் என்னை ஹீரோவா வெச்சு படம் பண்றார்ங்கிறதுக்காக சொல்லல. நானும் விஷாலும் 12 வருஷமா ப்ரெண்ட்டா இருக்கோம். என்னோட அப்பா, அம்மா, என்னோட மனைவி, குழந்தைக்கப்புறம் அவனுக்குத்தான் எனக்கு ஏதாவது செய்யணும்னு தோணிருக்கு. அதனால தான் என்னை வெச்சி படம் பண்றேன்னு சொல்றாப்ல. மத்தபடி ‘இளையதளபதி' அது இதெல்லாம் சும்மா... அதையெல்லாம் பேச விரும்பல," என்றார்.

    09 நவம்பர் 2013

    தமன்னாவுக்கு ஈடு கொடுக்க முடியாத கதாநாயகர்கள்!

    தமன்னா 
    தமன்னாவுடன் டான்ஸ் ஆட வேண்டும் என்பதை நினைத்தாலே தெலுங்கு ஹீரோக்கள் தெறித்து ஓடுகிறார்களாம். தமன்னா தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார். அவர் டான்ஸ் ஆடுவதில் வல்லவர். எவ்வளவு கஷ்டமான ஸ்டெப்பாக இருந்தாலும் ஒரே டேக்கில் ஓகே செய்துவிடுவார். அவர் சோலோவாக ஆடும்போது பிரச்சனை இல்லை. ஆனால் டூயட் பாடல்களுக்கு ஆடுகையில் தெலுங்கு ஹீரோக்கள் அதிலும் சீனியர்களுக்கு மூச்சு முட்டுகிறதாம். தமன்னா வேகத்திற்கு ஈடுகொடுத்து ஆட முடியாமல் ஹீரோக்கள் அல்லாடுகிறார்களாம். அதனால் டான்ஸ் மாஸ்டரை அழைத்து ஸ்டெப்ஸ் போடும்போது எங்களை மனதில் வைத்து சொல்லிக் கொடுங்கள். தமன்னாவை நினைத்து ஸ்டெப்ஸ் வேண்டாம், எங்களால் முடியவில்லை என்கிறார்களாம். ஹீரோக்கள் தனக்கு ஈடாக ஆட முடியாததால் தன்னால் தனது நடனத் திறமை முழுவதையும் வெளிப்படுத்த முடியவில்லை என்ற கவலை தமன்னாவுக்கு என்கிறார்கள்.

    29 அக்டோபர் 2013

    நிசாவுக்குத்தான் திருமணம்!

    என் தங்கை நிஷாவுக்குத்தான் உடனடியாக திருமணம் செய்யப் போகிறோம். எனக்கு இன்னும் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகுதான் திருமணம் என்று கூறியுள்ளார் காஜல் அகர்வால்.நடிகை காஜல்அகர்வால் புதிய படங்களில் நடிக்க மறுப்பதாகவும், சினிமாவை விட்டு விலகுவதாகவும் தெலுங்கு திரையுலகில் கடந்த வாரம் பரபரப்பு பேச்சு நிலவியது.இந்த பேச்சு, ஹாட் நியூஸாக தெலுங்கு மீடியாவில் வலம் வந்தது.அதற்கேற்ப, காஜலும் சில தினங்களாக மவுனம் காத்தார்.தமிழில் ஜில்லா என்ற படம் மட்டுமே அவர் கைவசம் உள்ளது. தெலுங்கில் அவர் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை.இந்த நிலையில் இன்று தன் திருமண செய்தி, படங்களில் நடிக்காதது பற்றியெல்லாம் விளக்கமாகக் கூறியுள்ளார் அவரது செய்தித் தொடர்பாளர்.அதில், "காஜல்அகர்வால் உடனடியாக திருமணம் செய்து கொள்ள மாட்டார். தங்கை நிஷா அகர்வாலுக்குதான் இப்போது திருமணம் நடக்கிறது.அந்த திருமண வேலைகளில் காஜல்அகர்வால் பிஸியாக இருக்கிறார்.இப்போது ஜில்லாவில் நடித்து வரும் காஜல்,அடுத்து இரு தெலுங்குப் படங்களுக்கும் ஒரு புதிய தமிழ்ப் படத்துக்கும் கால்ஷீட் கொடுத்துள்ளார். தொடர்ந்து புதிய படங்களில் நடிப்பார்.மூன்று ஆண்டுகளுக்குப் பிறகுதான் காஜல் அகர்வால் திருமணம் நடக்கும். இப்போதைக்கு திருமணம் பற்றிய எண்ணமில்லை அவருக்கு,"என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    22 அக்டோபர் 2013

    அஞ்சலி நடிக்கிறார்!

    அஞ்சலி எங்கே இருக்கார்? என்ன பண்றார்? என்பது புரியாத புதிர். ஆனாலும் அக்கட பூமியில் தொடர்ந்து நடித்துக்கொண்டே இருக்கிறார் அஞ்சலி.சீனியர் ஹீரோ வெங்கடேஷூக்கு ஜோடி என்றாலும் அஞ்சலி ஓ.கே சொல்லத் தயங்குவதில்லை. தெலுங்கில் மகேஷ்பாபு, வெங்கடேஷ் நடித்த படம் தான் 'சீதம்மா வாகிட்லோ சிறுமல்லே செட்டு'. மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக சமந்தா நடித்தார். அப்போது, அஞ்சலி வெங்கடேஷூக்கு ஜோடியாக நடித்தார். மகேஷ்பாபுவுக்கு அண்ணியாக நடிக்க எப்படி சம்மதித்தீர்கள்? என்று அஞ்சலியைக் கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்தனர். அதற்கெல்லாம் அசராமல் பதில் சொன்னதால் தான், இப்போது மீண்டும் ஒரு வாய்ப்பு அஞ்சலிக்குக் கிடைத்திருக்கிறது. இந்தியில் அபிஷேக் பச்சன், அஜய் நடிதத 'போல் பச்சான்' படம் தெலுங்கில் 'மசாலா' என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. அதில் வெங்கடேஷூக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். இப்போது எந்தப் பிரச்னையும் இல்லாமல், டோலிவுட்டில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார் அஞ்சலி.

    18 அக்டோபர் 2013

    மீண்டும் கைதானார் பவர் ஸ்டார்!

    பவர் ஸ்டார் அடைமொழியுடன் திரியும் நடிகர் சீனிவாசன் மீது இதுவரை ஆறு மோசடி வழக்குகள் உள்ளன. ஏழாவதாக, டெல்லியை சேர்ந்த ஒருவருக்கு 50 கோடி கடன் வாங்கித் தருவதாகக்கூறி பணம் மோசடி செய்த வழக்கில் டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். அந்த வழக்கில் திஹார் ஜெயிலில் அடைக்கப்பட்டவர் தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார். இப்படிப்பட்ட சூழலில் நேற்று மீண்டும் படாவதி ஸ்டார் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே இவர் மீது சிவகாசி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கார் நம்பர் பிளேட்டுக்கும், கார் ஆவணத்தில் இருந்த நம்பருக்கும் வித்தியாசம் இருந்ததால் இந்த வழக்கு சீனிவாசன் மீது போடப்பட்டது. அந்த வழக்கில் சீனிவாசன் ஜாமின் வாங்கியிருந்தார். அது காலாவதியானதைத் தொடர்ந்து நேற்று சென்னை வந்த சிவகாசி போலீஸார் அவரை கைது செய்தனர். திஹார் மீண்ட நிலையில் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார் சீனிவாசன். சிவகாசி போலீஸாரின் நடவடிக்கையால் சீனிவாசனின் சினிமா முயற்சி மீண்டும் பெவிலியன் திரும்பியிருக்கிறது.

    15 அக்டோபர் 2013

    சிம்புவுக்கு சரியான ஜோடி!

    சிம்புவுக்கு சரியான ஜோடி ஆன்ட்ரியாதான் என்று கூறியுள்ளார் விடிவி கணேஷ். 'விண்ணைத் தாண்டி வருவாயா ' படத்தில் சிம்புவிடம் இங்க என்ன சொல்லுது என்ற கேள்வியை கேட்டுப் பிரபலமானவர் கணேஷ். அந்த படத்தில் துவங்கிய இவர்களது நட்பு , இப்போது கணேஷ் தயாரிக்கும் ' இங்க என்ன சொல்லுது' படம் வரை தொடர்ந்து, சிம்புவின் ஈடுப்பாட்டால் அந்த படத்தை பெரிய படமாக்கும் வரை நீடித்து வருகிறது. இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகையின் தேர்வு நீண்ட நாட்களாக நடைபெற்று வந்தது. இதுவரை வந்திராத ஜோடியாக இருக்க வேண்டும் என்று படத்தின் தயாரிப்பாளரான கணேஷ் எண்ணத்துக்கு ஏற்ப தேர்வு நடந்தது . இறுதியில்சிம்பு ஜோடியாக ஆண்ட்ரியா தேர்ந்து எடுக்கபட்டார். இந்த ஜோடி தேர்வை பற்றி கணேஷ் கூறும் போது, 'சிம்புவும் ஆண்ட்ரியாவும் மிக சரியான ஜோடி. என் கணிப்பில், என் பார்வையில் அவர்களது ஜோடி ஒரு உற்சாகமான ஜோடியாகவே தெரிகிறது . ரசிகர்களுக்கு இந்த ஜோடியை ரொம்பவே பிடிக்கும் . இந்த கதாபாத்திரமும் அவர்களுக்கெனவே படைத்தது போலவே பொருத்தமாக இருக்கிறது . படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்தது , இறுதிகட்ட பணிகள் தொடர்ந்து நடை பெற்றுக் கொண்டு இருக்கிறது .இந்த மாத இறுதியில் படத்தை முடித்து பெரிய அளவில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறேன்," என்கிறார் . இங்க என்ன சொல்லுது படத்தை வின்சென்ட் செல்வா இயக்குகிறார். தமன் இசையமைக்கிறார். மீரா ஜாஸ்மின், சொர்ணமால்யா, சந்தானம், பாண்டியராஜன் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

    25 செப்டம்பர் 2013

    குடியில் மூழ்கும் திரிஷா!

    ‘த்ரிஷா குடிக்கிறதை நிறுத்தவே மாட்டாரா?’இப்படித்தான் ஆரம்பிக்கிறது த்ரிஷா பற்றி ஒரு தெலுங்கு மீடியா வெளியிட்டுள்ள செய்தி. என்ன நடந்தது? சமீபத்தில் ஹைதராபாதின் தாஜ் பஞ்சாரா ஹோட்டலில் நடந்த இரவு விருந்துக்குப் போயிருக்கிறார் நடிகை த்ரிஷா. அவருடன் நடிகை சங்கீதாவும் மகேஸ்வரியும் போயிருக்கிறார்கள். உடன் வந்தவர்கள் கொஞ்சம் லைட்டான சரக்கில் இறங்கி, த்ரிஷா மட்டும் செம ஹாட்டில் இறங்கி, போதையின் உச்சத்துக்குப் போய் ஆட்டம் போட்டிருக்கிறார். அங்கிருந்தவர்களுடன் தகராறு, கலாட்டா என விவகாரம் எல்லை மீற, ஓட்டல் சிப்பந்திகள் வலுக்கட்டாயமாக த்ரிஷாவை வெளியேற்றினார்களாம். த்ரிஷா – நள்ளிரவு மது விருந்துகள் – கலாட்டா என்பது வாசகர்களுக்குப் புதிய விஷயமும் இல்லை. கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஆரம்பித்த த்ரிஷாவின் போதை கலாட்டா வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் என எங்கே போனாலும் தொடர்கிறது. பார்க் ஷெராட்டன் ஓட்டலில் முற்றாக நினைவிழந்த த்ரிஷாவை போலீசார் காரில் அழைத்துவந்து விட்டதாக முன்பு ஒரு செய்தி வெளியாகியிருந்தது நினைவிருக்கலாம்.

    21 செப்டம்பர் 2013

    ஆபாசமாக வந்து நின்ற சமீரா ரெட்டி!

    தமிழில் வாரணம் ஆயிரம், அசல், வேட்டை, நடுநிசி நாய்கள் போன்ற படங்களில் நடித்தவர் பாலிவுட் நடிகை சமீரா ரெட்டி. இவருக்கு தற்போது தென்னிந்திய மொழிகளில் படவாய்ப்பில்லை. ஆனால், இந்தியில் அதிகப்படியான படங்களில் நடித்து வருகிறார். அப்படி நடிக்கும் படங்களில் படுகவர்ச்சியாக நடித்து அங்குள்ள நடிகைகளுக்கு சவால் விட்டுக்கொண்டிருக்கிறார். இதனால் அங்குள்ள படாதிபதிகள் சிறந்த கமர்சியல் நடிகை என்ற முத்திரையை சமீரா மீது குத்தி விட்டனர். ஆக, அவரது படக்கூலியும் தற்போது கிடுகிடுவென்று உயர்ந்து நிற்கிறதாம். அதனால்தான் மற்ற மொழிகளில் நடிப்பது பற்றி யோசிக்காமல் முழுநேர இந்தி நடிகையாகியிருக்கிறாராம் சமீரா ரெட்டி. இந்தநிலையில், சமீபத்தில் மும்பையில் நடந்த ஒரு பேஷன் ஷோவில் சமீராவும் கலந்து கொண்டாராம். அப்போது அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களைவிட படு ஆபாசமாக டிரஸ் அணிந்திருந்தாராம் சமீராரெட்டி. அதைப்பார்த்து விழாவுக்கு வந்திருந்தோர் ஆட்சேபணை தெரிவித்தார்களாம். ஆனால் சமீராவோ, பேஷன் ஷோவில் இப்படி உடையணிந்து நடந்தால்தான் பியூட்டி. இப்படித்தான் ஹாலிவுட் நடிகைகள் வருவார்கள். அதை பின்பற்றித்தான் நானும் வந்திருக்கிறேன். அதனால் அழகை அருவருப்பாய் பார்க்காமல் ரசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள் என்று உரக்க குரல் கொடுத்தாராம் சமீரா. இதையடுத்து இந்த விவகாரத்தை சர்ச்சையாக்க நினைத்தவர்கள் வாயடைத்து நின்றார்களாம்.

    17 செப்டம்பர் 2013

    நழுவியது பிரபல நடிகையின் உடை!

    சமீபத்தில் துபாயில் நடந்த சிமா விருது வழங்கும் விழாவில் பிரபல கன்னட நடிகை ராகினி திவிவேதியின் உடை திடீரென நழுவியது. இதில் நடிகையை விட பார்வையாளர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். துபாயில் நடந்த இந்த விழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சிகளில், ஒரு கலவை பாடலுக்கு மேடையில் நடனமாடிக் கொண்டிருந்தார் ராகினி. அப்போது திடீரென அவரது ஸ்கர்ட் நழுவி, உள்ளாடை தெரிய, ரசிகர்கள் அதிர்ந்தனர். ஆனால் இது எதுவுமே தெரியாமல் உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்தார் ராகினி. இதைப் பார்த்த நடிகையும் தயாரிப்பாளருமான லட்சுமி மஞ்சு, மேடைக்கு ஓடினார். விளக்குகளை அணைக்கச் சொன்ன அவர், ராகினியை உள்ளே அழைத்துப் போய் உடையைத் திருத்தினார். பின்னர் மீண்டும் மேடைக்கு வந்து மிச்சத்தையும் ஆடிவிட்டுச் சென்றார் ராகினி. இந்த விழாவில் அவருக்கு சிறந்த நடிகைக்கான விமர்சகர் விருது கிடைத்தது (கன்னடப் படம் சிவாவில் நடித்ததற்காக). தனது உடை நழுவியது குறித்து கருத்து தெரிவித்த அவர், "எதுவோ தப்பா இருக்கேன்னு நினைச்சிக்கிட்டேதான் டான்ஸ் பண்ணேன். நல்ல வேளை விளக்குகளை அணைச்சிட்டாங்க. ஒரு விபத்துதான். அதை நான் மறக்க விரும்புகிறேன்," என்றார்.

    14 செப்டம்பர் 2013

    ஆன்ட்ரியாவுடன் சேர்ந்த அனிருத்?

    முத்த சர்ச்சைக்குப் பிறகு ஆன்ட்ரியா என் படத்தில் பாடியது உண்மைதான். ஆனால் இருவரும் ஒரே இடத்தில் சேர்ந்து பணியாற்றவில்லை. நான் மும்பையில் இருந்தேன், அவர் சென்னையில் இருந்து பாடினார் என்று விளக்கம் அளித்துள்ளார் அனிருத். 3 படத்தில் 'ஒய் திஸ் கொல வெறி' பாடலுக்கு இசையமைத்ததன் மூலம் பிரபலமானவர் அனிருத். இவர் ஆண்ட்ரியாவுடன் லிப் டு லிப் முத்தம் கொடுத்த படம் வெளியானதில் ஏக பரபரப்பு கிளம்பியது. இந்தப் படத்தை அனிருத்தே வெளியிட்டுவிட்டார் என செய்தி வெளியானதால் அனிருத்தை மீடியாவில் திட்டிவிட்டார் ஆண்ட்ரியா. இனி எங்களுக்குள் எந்தத் தொடர்பும் இல்லை என்று அறிவித்தார். ஆனால் இப்போது இருவரும் இணைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அதற்கு அடையாளமாக அனிருத் இசையில் மீண்டும் வணக்கம் சென்னை படத்தில் ஆண்ட்ரியா பாடியதாக செய்தி வெளியானது. இதை அனிருத் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "வணக்கம் சென்னை படத்தில் எனது இசையில் 'எங்கடி பொறந்த எங்கடி பொறந்த' என்ற பாடலை ஆண்ட்ரியா பாடியுள்ளார் என்பது உண்மைதான். இந்தபாடலின் ஒரு பகுதிக்காக நான் மும்பையில் ரெக்கார்டிங் செய்து கொண்டிருந்தேன். அதே வேளையில் ஆண்ட்ரியாவுடன் எனது உதவியாளர் சென்னையில் ரெக்கார்டிங் செய்துகொண்டிருந்தார். ஆகையால் நாங்கள் இருவரும் சேர்ந்து பணியாற்றவில்லை," என்றார். அடேங்கப்பா.. இது ரொம்பப் புதுசா இருக்கே!!

    08 செப்டம்பர் 2013

    கேயார் வெற்றி, தாணு தோல்வி!

    திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்.. கேயார் வெற்றி, தாணு தோல்விதமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தேர்தலில் இயக்குநர் கேயார் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தயாரிப்பாளர் தாணு தோல்வியடைந்தார். 2013-2015ம் ஆண்டுக்கான தமிழ்த் திரைப்பட சங்கத் தலைவர் பதவி உள்பட பல்வேறு பதவிகளுக்கான தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், குஷ்பு என பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு வாக்களித்தனர். தேர்தல் முடிந்ததும் வாக்குகள் எண்ணப்பட்டு மாலையில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட இயக்குநர் கேயார் 449 வாக்குகளும், எதிர்த்துப் போட்டியிட்ட கலைப்புலி தாணு 252 வாக்குகளும் பெற்றனர். இதனால் கேயார் வெற்றி பெற்றார். இரு துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சுபாஷ் சந்திரபோஷ் 407 வாக்குகளுடனும், டி.ஜி.தியாகராஜன் 358 வாக்குகள் பெற்றும் வெற்றி பெற்றனர். இரு செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட ஞானவேல்ராஜா 414, டி.சிவா 284 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றனர். இப்பதவிக்குப் போட்டியிட்ட சிவசக்திபாண்டியன் 280 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். 21 பேர் கொண்ட செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிட்டதில் எஸ்.தாணு அணியைச் சேர்ந்த ராதாரவி, கருணாஸ் ஆகிய இருவர் வெற்றி பெற்றனர். சுயேட்சையாக போட்டியிட்ட கோவைத்தம்பி வெற்றி பெற்றார். மொத்தத்தில் கேயார் அணியினரே பெரும் வெற்றியைப் பெற்றனர்.