பக்கங்கள்

24 பிப்ரவரி 2012

காதல் இல்லை!

மலையாள நடிகர் ராஜீவ் பிள்ளையை நான் காதலிப்பதாக வரும் செய்திகளில் உண்மையில்லை. நான் யாரையும் காதலிக்கும் நிலையிலும் இல்லை என்று கூறியுள்ளார் நடிகை பாவனா.

சித்திரம் பேசுதடி படத்தில் அறிமுகமானவர் பாவனா. ஒரு ரவுண்ட் வந்த பிறகு, தெலுங்குக்குப் போய்விட்டார். அங்கு கொஞ்ச காலம் பரபரப்பாக நடித்தார். இப்போது மீண்டும் மலையாளப் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

இந்த நிலையில் மலையாள நடிகரும் கிரிக்கெட் வீரருமான ராஜீவ் பிள்ளையை அவர் காதலிப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

சமீபத்தில் நடந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் பாவனா மலையாள நடிகர் அணிக்கு தூதுவராக பணியாற்றினார். அந்த அணியில் ராஜீவ் பிள்ளை முன்னணி வீரராக இருந்தார். அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்ததாக சொல்கிறார்கள்.

ஆனால் இதை மறுத்துள்ளார் பாவனா. "ராஜீவ்பிள்ளையும் நானும் நட்சத்திர கிரிக்கெட் போட்டியில்தான் சந்தித்தோம். அவரை எனக்கு நன்றாக தெரியும். ஆனால் அவரை நான் காதலிக்கவில்லை. இந்த செய்திகளில் எந்த உண்மையும் இல்லை," என்றார்.

ராஜீவ் பிள்ளையும் இந்த செய்திகளை மறுத்துள்ளார்.

எவ்வளவு வேகமா மறுக்கிறாங்களோ அந்தளவுக்கு தீவிர காதல் இருக்கு என்று சினிமா டிக்ஷனரி சொல்கிறது... பார்க்கலாம்!

18 பிப்ரவரி 2012

வந்தது மூன்றும் போச்சோ?

இந்த வாரம் வெள்ளிக்கிழமை அமலா பால் நடித்த மூன்று படங்கள் வெளியாகின. அமலா பாலைப் பொறுத்தவரை இது ரொம்ப ரொம்ப ஹேப்பியான சமாச்சாரம்.

ஆனால் படம் பார்த்தவர்களுக்கே மண்டைக் காய்ச்சல்.
அதர்வாவுடன் இவர் நடித்த படம் முப்பொழுதும் உன் கற்பனைகள் நேற்று பெரிய அளவில் வெளியானது. நம்பர் ஒன் டெக்னீஷியன்ஸ், நல்ல நிறுவனம், பிரமாண்ட தயாரிப்பு என அனைத்தும் இருந்தும், இந்தப் படம் ரசிகர்களைக் கொஞ்சம் குழப்பியடித்தது என்பதே உண்மை. நகர்ப்புறங்களிலேயே இந்த நிலை என்றால், இன்னும் மற்ற ஏரியாக்களில் எப்படியோ?
அடுத்து காதலில் சொதப்புவது எப்படி? - படத்தின் ரிசல்டையே தலைப்பாக வைத்த மாதிரி இருந்தது படம். சித்தார்த் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் வேறு.
இதே படம் தெலுங்கில் லவ் பெயிலியர் என்ற பெயரில் வெளியானது. அதுவும் நேற்றே வெளியாகிவிட்டது.
ஒரே நாளில் மூன்று படங்கள் வெளியாவது இன்றைய நாட்களில் ஒரு ஹீரோயினுக்கு பெரிய விஷயம்தான். ஆனால் இந்தப் படங்களின் முடிவு, இனி இப்படி ஒரு வாய்ப்பு அமலாவுக்கு அமையுமா என கேட்க வைத்துவிட்டது!

15 பிப்ரவரி 2012

மீண்டும் சிம்புவின் ஜோடியாகிறார் நயன்?

நயனின் முன்னாள் காதலன் சிம்பு, தனது புதிய படத்தில் ஜோடியாக நடிக்க அவருடன் பேச்சு நடத்தி வருகிறார் என முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கெனவே நயன்தாராவை தனது ஒஸ்தி படத்தில் நடிக்க வைக்க முயற்சித்தார் சிம்பு. அப்போது நடிக்க மறுத்துவிட்டார் நயன். ஆனால் இப்போது, பிரபு தேவாவை விட்டு முற்றாக விலகிவிட்ட நிலையில், அனைத்து வித வாய்ப்புகளையும் பரிசீலிக்க ஆரம்பித்துவிட்டார்.
இப்போது அஜீத்தின் அடுத்த படத்தில் நடிக்க அட்வான்ஸ் வாங்கிவிட்ட நயன், அடுத்து சிம்புவின் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளார் ஒரு முக்கிய இயக்குநர்.
நயன்-சிம்பு மீண்டும் ஜோடி என்ற செய்தியால் கிளம்பவிருக்கும் பரபரப்பு நல்ல வசூலைக் கொட்டும் என நம்புகிறார்களாம்!

14 பிப்ரவரி 2012

மீண்டும் கமலை எதிர்பார்க்கும் அசின்.

தசாவதாரத்தில் கிடைத்த மாதிரி கமலுடன் நடிக்க மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி அடைவேன், என்று அசின் கூறியுள்ளார்.
தமிழில் உச்சத்தில் இருந்தபோது, வந்த வாய்ப்புகளை உதறிவிட்டு மும்பைக்குப் போய் செட்டிலானவர் அசின். இப்போது இரண்டு மூன்று இந்திப் படங்களில் நடித்தாலும், தமிழில் பெரிய நடிகர்களுடன் ஜோடி சேர்வதில் ஆர்வம் காட்டுகிறார்.
ரஜினியின் கோச்சடையானில் ஹீரோயின் உறுதி செய்யப்படாமல் இருந்த போது, ரஜினியுடன் நடித்தால் சந்தோஷப்படுவேன், வாய்ப்பு கிடைக்குமா? என்று ஒரு கல் விட்டுப் பார்த்தார். ஆனால் அங்கு தீபிகா படுகோன் வந்துவிட்டார்.
இந்த நிலையில், கமல் - ஷங்கர் - ஆஸ்கர் ரவிச்சந்திரன் கூட்டணியில் புதிய படம் உருவாகப் போவதாக பேச்சு கிளம்பியுள்ளது.
இந்தப் படத்தில் அசின் நடிப்பதாக சிலர் 'கிளப்பிவிட்டிருந்தனர்.' ஆனால், அது வெறும் புரளி என அசின் தெரிவித்துள்ளார் (இவரே சொல்லியிருப்பாரோ!).
அவர் மேலும் கூறுகையில், "தசாவதாரத்தில் கமலுடன் நடித்தது மறக்கமுடியாதது. மீண்டும் அதுபோன்ற வாய்ப்பு வந்தால் மகிழ்வேன்.இப்போதைக்கு பேஸ்புக்கில் 'டச்'சிலிருக்கிறோம்", என்றார்.

10 பிப்ரவரி 2012

புயலால் பாதிக்கப்பட்டோருக்கு நயன்தாரா உதவி.

தமிழ்நாட்டின் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களை நாசமாக்கிய தானே புயலினால் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண நிதிக்கு நடிகை நயன் தாரா ரூ5 லட்சம் நிதி வழங்கி உள்ளார்.
தொழிலதிபர்கள், திரை உலக நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள் முதல்வர் ஜெயலலிதாவிடம் தானே புயல் நிவாரண நிதி வழங்கி வருகின்றனர்.
நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த், சிவகுமார் உள்ளிட்டோரும் தானே புயல் நிவாரண நிதி வழங்கியிருந்தனர்.
இந்நிலையில் தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை நடிகை நயன் தாரா இன்று சந்தித்தார்.
தானே புயல் நிவாரண நிதியாக ரூ5 லட்சத்துக்கான காசோலையை அவர் முதல்வரிடம் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நயன், அனைவரும் தானே புயல் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

04 பிப்ரவரி 2012

தாலி கட்டிய பெண்ணை கைவிட்டோடிய பிரபுதேவாவின் தந்தை!

எனக்கு தாலி கட்டி, குழந்தை பெற்ற பிறகு, ஏமாற்றிவிட்டு ஓடிய டான்ஸ் மாஸ்டர் சுந்தரம், அதன் பிறகுதான் பிரபு தேவாவின் தாயை திருமணம் செய்து கொண்டார். இப்போது நான் கஷ்டப்படுகிறேன், ஜீவனாம்சம் தரவேண்டும் என வழக்கு தொடர்துள்ளார் பெண் நடன இயக்குநர் தாரா.
பிரபல டான்ஸ் மாஸ்டர் சுந்தரம். நூற்றுக்கணக்கான படங்களில் நடன இயக்குநராக பணியாற்றியவர். இவர் நடிகரும் இயக்குனருமான பிரபுதேவாவின் தந்தை ஆவார். மாஸ்டர் சுந்தரம் மீது பெண் நடன இயக்குனர் தாரா உயர்நீதிமன்றத்தில் உள்ள மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் தாக்கல் செய்த மனுவில், "டான்ஸ் மாஸ்டர் சுந்தரத்துக்கும் எனக்கும் 38 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. எனக்கு அவர் தாலி கட்டினார். ஒன்றாக சேர்ந்து குடும்பம் நடத்தினோம்.
பிறகு ஊருக்கு போய் விட்டு வருவதாக சொல்லி விட்டுப் போனார் அங்கு பிரபு தேவாவின் தாயை திருமணம் செய்து கொண்டார். கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்து விட்டதாக கூறி என்னிடம் வருத்தப்பட்டார்.
எனக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பெற்றபின் நான்கு மாதம் என்னுடன் சேர்ந்து இருந்தார். அதன் பிறகு என்னை ஏமாற்றி விட்டு ஓடி விட்டார். இதனால் மனதளவில் நான் பாதிக்கப்பட்டு, ஒதுங்கியிருந்தேன். என் குழந்தையின் பிறப்பு சான்றிதழில் அவர்தான் தந்தை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனது மகன் தந்தையின் ஆதரவின்றி இருக்கிறான்.
பொருளாதார ரீதியாக நாங்கள் இப்போது மிகுந்த கஷ்டத்தில் உள்ளோம்.
எங்களுக்கு நிவாரணம் கிடைக்க நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது வாழ்க்கையாவது நன்றாக இருக்கட்டும் என்றுதான் இத்தனை நாள் அமைதியாக இருந்தோம். ஆநால் இப்போது நாங்களே இவ்வளவு கஷ்டப்படுவதால், எங்களுக்கு உள்ள உரிமையை கோருகிறோம்," இவ்வாறு மனுவில் கூறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த வழக்கில் டான்ஸ் மாஸ்டர் சுந்தரத்துக்கு நீதிமன்றத்துக்கு சம்மன் அனுப்பி உள்ளது.
ஏற்கெனவே பிரபு தேவா எக்கச்சக்க குடும்ப சிக்கலில் உள்ளார். ரம்லத்தை காதலித்து கல்யாணம் செய்துகொண்டு, மூன்று குழந்தைகளையும் பெற்ற பிறகு பிரிந்துவிட்டார். அடுத்து நயன்தாராவை திருமணம் செய்வதாகக் கூறி, கொஞ்சநாள் சேர்ந்து வாழ்ந்த பிறகு, சமீபத்தில் பிரிந்துவிட்டார். இப்போது இன்னொரு நடிகையுடன் தொடர்பிலிருப்பதாகக் கூறுகிறார்கள்.
பிரபு தேவாவுக்கு முன்பே அவரது தந்தை சுந்தரமும், இதே வேலையைத்தான் செய்திருக்கிறார் என்பது இந்த வழக்கு மூலம் உறுதியாகியுள்ளது.
விதி படத்தில் மறைந்த நடிகை சுஜாதா பேசும் வசனம்தான் நினைவுக்கு வருகிறது... 'குடும்ப வழக்கம்... வாழையடி வாழை'!

02 பிப்ரவரி 2012

ஒரு வழியா தப்பித்தேன்!

பெரிய நெருக்கடியி்ல இத்தனை நாள் சிக்கித் தவித்தேன். இப்போது ஒருவழியாக மீண்டுவிட்டேன், என்று நடிகை நயன்தாரா கூறினார்.
பிரபு தேவாவுடன் தீவிர காதலில் இருந்தார் நயன்தாரா. பிரபு தேவாவுக்காக சினிமா வாழ்க்கையைத் துறந்தார். கிறிஸ்தவ மதத்திலிருந்து இந்துவாகவும் மாறினார்.
ஆனால் பிரபு தேவா தன்னை திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை, அவர் வேறு நடிகையுடன் தொடர்பில் இருக்கிறார் என்பதைப் புரிந்து கொண்ட நயன்தாரா, இனியும் காலம் தாழ்த்த வேண்டாம் என்று உறவைத் துண்டித்துக் கொண்டார்.
இதுகுறித்து கடந்த ஒரு வாரமாக செய்திகள் வந்தாலும், சம்பந்தப்பட்ட இருவரும் இதுபற்றி எதுவும் கூறாமல் இருந்தனர்.
இந்த நிலையில் மீண்டும் தமிழ், தெலுங்கில் பிஸியாகிவிட்ட நயன்தாரா முதல் முறையாக தனது காதல் முறிவு குறித்து மறைமுறைமுகமாக தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "நான் சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்தேன். அது எனக்கு மிகுந்த நெருக்கடியில் சிக்கியிருந்தது உண்மைதான். இப்போது ஒருவழியாக அதிலிருந்து மீண்டு வந்துவிட்டேன்.
இனி முழு கவனமும் சினிமாதான். இப்போது தெலுங்கு படத்தில் நாகார்ஜூனா ஜோடியாக நடிக்கிறேன். அது ஒரு காதல் கதை.
தமிழ் திரையுலகம் எனக்கு பெரிய நட்சத்திர அந்தஸ்தை கொடுத்தது. தெலுங்கு பட உலகம் என்னை இன்னொரு படி உயரத்தில் கொண்டு போனது. இந்த இரு மொழிகளிலுமே தொடர்ந்து நடிப்பேன்," என்றார்.

29 ஜனவரி 2012

சிறந்த ஜோடி பிரிந்தது!

விரைவில் மாலையும் கழுத்துமாக பிரவுதேவாவும் நயன்தாராவும் தோன்றுவார்கள் என்று எதிர்பார்த்தால், இப்போது இருவரும் பிரிய முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
பிரபுதேவா டைரக்டு செய்த வில்லு' படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்தார். அப்போது இருவருக்குமிடையே காதல் மலர்ந்தது. இந்த காதலுக்கு பிரபுதேவாவின் மனைவி ரமலத் முதலில் எதிர்ப்பு தெரிவித்தார். பின்னர் விவாகரத்து செய்துகொள்ள சம்மதித்தார். அதைத் தொடர்ந்து பிரபுதேவா, மனைவி ரமலத்தை விவாகரத்து செய்தார்.
பிரபுதேவாவை திருமணம் செய்துகொள்வதற்கு வசதியாக நயன்தாரா கிறிஸ்தவ மதத்தில் இருந்து விலகி, இந்து மதத்துக்கு மாறினார். அத்துடன் சினிமாவை விட்டு விலகவும் முடிவு செய்தார். ராமராஜ்யம்' என்ற தெலுங்கு படம்தான் அவர் நடிக்கும் கடைசி படம் என்று கூறப்பட்டது. அந்த படத்தின் கடைசிநாள் படப்பிடிப்பில் நயன்தாரா கண்ணீர்விட்டு அழுதபடி, பிரியா விடை பெற்றார். நயன்தாரா இனிமேல் நடிக்கமாட்டார்' என்று பிரபுதேவா அறிவித்தார்.
பிரபுதேவா, மனைவி ரமலத்தை விவாகரத்து செய்ததும், தன்னை திருமணம் செய்துகொள்வார் என்று நயன்தாரா எதிர்பார்த்தார். அவருடைய எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடிந்தது. இருவரும் சென்னை போர்ட்கிளப்பில் உள்ள ஒரு வாடகை வீட்டில் சில நாட்கள் தங்கியிருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பிரபுதேவா, தன்னை ஏமாற்றிவிட்டதாக நயன்தாரா கருதினார். இதுவே அவர்களுக்குள் பூசலை ஏற்படுத்தியது.
அதைத் தொடர்ந்து நயன்தாராவும், பிரபுதேவாவும் சுமுகமாக பேசி பிரிவது என்று முடிவு செய்ததாகவும், அதன்படி, பிரபுதேவா, நயன்தாராவை விட்டு பிரிந்து மும்பை சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.
நயன்தாரா, பிரபுதேவாவை பிரிந்து, சொந்த ஊரான கொச்சிக்கு போய்விட்டார். அவர் மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவு செய்திருக்கிறார்.
சந்தோசம்', மிஸ்டர் பெர்பக்ட்' ஆகிய தெலுங்கு படங்களை இயக்கிய தசரத், அடுத்து ஒரு புதிய தெலுங்கு படத்தை டைரக்டு செய்கிறார். அதில், நாகார்ஜுன் கதாநாயகனாக நடிக்கிறார். அந்த படத்தின் மூலம் நயன்தாரா திரையுலகில் மறுபிரவேசம் செய்கிறார்.
தமிழில் அஜீத் கதாநாயகனாக நடிக்க, ஏ.எம்.ரத்னம் தயாரிக்கும் புதிய படத்திலும் அவர் கதாநாயகியாக நடிப்பார் என்று தெரிகிறது. இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இனிமேல் பிரபுதேவாவுடன் எந்த தொடர்பும் வைத்துக்கொள்வதில்லை, அவருடன் பேசுவதில்லை என்பதில் நயன்தாரா உறுதியாக இருக்கிறாராம். அதேபோல், பிரபுதேவாவும், நயன்தாராவுடன் போனில் பேசுவதை நிறுத்திக்கொண்டாராம்.. இரண்டுபேரின் காதல், ஒரேயடியாக முறிந்துபோய்விட்டதாக கூறப்படுகிறது.
இதுபற்றி நயன்தாராவிடம் கேட்டபோது, "நான் மீண்டும் நடிக்கப்போவது உண்மை தான்'' என்று மட்டும் கூறினார்.

26 ஜனவரி 2012

பூஜைக்கேற்ற பூவிது!

நடிகை தமன்னா தற்போது பக்திப் பழமாகி விட்டாராம். எப்பப் பார்த்தாலும் ஹோமம், புனஸ்காரம் என்று புகையும், பூஜையுமாக பிசியாக இருக்கிறாராம்.
ஒரு காலத்தில் தமன்னாவுக்கு தமிழில் அத்தனை மவுசு இருந்தது. ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. தனுஷுடன் ஜோடி சேர்ந்து நடித்த வேங்கைக்குப் பிறகு அவருக்கு தமிழில் வாய்ப்புகள் வந்ததாகத் தெரியவில்லை. ஆனால் அம்மணி தெலுங்கில் பிசியாகத் தான் இருக்கிறார். சும்மா ஓடி, ஓடி நடிக்கிறார்.
ஆனால் தற்போது தமன்னாவைப் பார்ப்பவர்கள் என்னாச்சு இந்த பொண்ணுக்கு இப்படி பக்தி மானாய் மாறிவிட்டதே என்று ஆச்சரியப்படுகிறார்களாம்.
என்ன நம்ப முடியவில்லையா, அட நம்புங்கப்பா. ஹைதராபாத் வந்தால் போதும் தமன்னா கோவில் கோவிலாக ஏறி இறங்குகிறாராம். அட அப்படி என்ன தான் உருகி, உருகி வேண்டுகிறார் என்று தான் தெரியவில்லை.
மும்பைக்கு சென்றால் தனது வீட்டில் ஹோமம், பூஜை நடத்துகிறாராம். தற்போது தமன்னா இருக்குமிடம், போகுமிடமெல்லாம் பக்தி மயமாக உள்ளது.
பார்த்து, புகை ஜாஸ்தியாக கண்ணைக் கெடுத்துடப் போகுது...!

21 ஜனவரி 2012

கட்சியில் இணைந்தார் பூஜா!

நிர்வாண கோலத்தில் நடித்து கன்னட சினிமாவில் பெரும் பரபரப்பைக் கிளப்பிய நடிகை பூஜா காந்தி (தமிழில் கொக்கி படத்தில் நடித்தவர்), தேவே கவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளத்தில் நேற்று முறைப்படி இணைந்தார்.
அவருக்கு தேவே கவுடா மகனும் முன்னாள் முதல்வருமான குமாரசாமி உறுப்பினர் அட்டை வழங்கினார்.
முங்காரு மலே என்ற படம் மூலம் கன்னடத்தில் முன்னணி நடிகையானவர் பூஜா காந்தி. சஞ்சனா என்ற பெயரில் தமிழில் கொக்கியில் அறிமுகமாகி, பின்னர் அர்ஜுன் ஜோடியாக திருவண்ணாமலையில் நடித்தார்.
கன்னடப் படம் தண்டுபால்யாவில் நிர்வாணமாகத் தோன்றி சமீபத்தில் சர்ச்சை கிளப்பினார். கன்னட அமைப்புகள் கண்டனம் தெரிவித்ததும் தான் அப்படி நடிக்கவில்லை என்று மறுத்தார். ஆனாலும் எதிர்ப்பு ஓயவில்லை.
இந்த நிலையில் திடீரென அரசியலில் குதித்துள்ளார்.
மதச்சார்பற்ற ஜனதா தளத்தில் தான் சேர்ந்தது குறித்து பூஜா கூறுகையில், "முன்னாள் முதல்வர் குமாரசாமியை எனக்கு மிகவும் பிடிக்கும். கர்நாடகத்தில் நான் படப்பிடிப்புக்குப் போகும் இடங்களிலெல்லாம் குமாரசாமியின் நல்ல திட்டங்களைச் சொல்லி மக்கள் வாழ்த்தினர். அதனால்தான் இந்தக் கட்சியில் இணைந்தேன்," என்றார்.
பூஜா காந்திக்கு முன் நடிகை ரம்யா காங்கிரஸில் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது. பழைய நடிகை ஜெயந்தி (பாலச்சந்தரின் பேவரிட் நடிகை), தாரா மற்றும் ஸ்ருதி ஆகியோர் ஏற்கெனவே அரசியலில் உள்ளனர்.

18 ஜனவரி 2012

விபச்சாரியாக விரும்பும் ஸ்ரேயா!

நடிகை ஸ்ரேயா தற்போது ஆங்கில படமொன்றில் நடிக்கிறார். இந்நிலையில் அவர் அளித்த பேட்டியொன்றில்,
’’நடிகைகள் எல்லோருக்கும் விலைமாது வேடத்தில் நடிக்க ஆர்வம் உண்டு. எனக்கும் விபசாரியாக நடிக்க ஆசை இருக்கிறது. அனுஷ்கா வேதம் படத்தில் அதுபோன்ற கேரக்டரில் நடித்தார். விலைமாது வேடத்தில்தான் நடிப்புத் திறமையை வெளிப்படுத்த முடியும். வங்காள மொழி பட மொன்றில் நான் விலை மாதுவாக நடிக்கிறேன்.
மிக சிறந்த இடத்தை பிடித்த நடிகைகள் எல்லோருமே இந்த கேரக்டரில் நடித்து உள்ளனர். இந்தியை விட தென் இந்திய மொழி பட வாய்ப்புகளே எனக்கு அதிகம் வருகின்றன.
இந்தி திரையுலகம் ஆணாதிக்கம் மிகுந்ததாக உள்ளது. நடிகைகளுக்கு அங்கு முக்கியத்துவம் இல்லை. கவர்ச்சிக்கும் டூயட் பாட்டுக்கும் மட்டுமே பயன்படுத்துகிறார்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.
அவர் மேலும், ‘’கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்துடன் என்னை தொடர்புபடுத்தி பேசுகின்றனர். அவர் யார் என்றே எனக்கு தெரியாது. ஒரு பேஷன் ஷோவில் மட்டும் அவரை சந்தித்து இருக்கிறேன். சல்மான்கானுடன் நான் நெருக்கமாக இருப்பதாகவும் கிசுகிசுக்கின்றனர். அவர் நல்ல மனிதர். எனக்கு மரியாதை அளிப்பவர். எல்லா பெண்களையுமே அவருடன் இணைத்து பேசுவது சகஜம்.
அதை விளம்பரமாக எடுத்துக் கொள்வது உண்டு. ஆனால் நான் அது போல் மலிவான விளம்பரம் தேட மாட்டேன்’’ என்றும் தெரிவித்துள்ளார்.

16 ஜனவரி 2012

அது நான் இல்லை-காஜல்.

நடிகை காஜல் அகர்வால் மேலாடையின்று அரை நிர்வாணத்தில் “போஸ்” கொடுத்தது போன்ற படம் சமீபத்தில் இண்டர்நெட்டில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து காஜல் அகர்வால், ’’நான் குடும்பபாங்கான வேடங்களில் “மாடர்ன் டிரஸ்” அணிந்து நடிக்கிறேன். நான் எப்படிப்பட்ட பெண் என்பது ரசிகர்களுக்கு தெரியும். எனது அரை நிர்வாணப் படம் இண்டர்நெட்டில் வெளியானதை பார்தது அதிர்ச்சியானேன். எனது குடும்பத்தினர் வருந்தினர். நான் ரொம்ப வேதனைப்பட்டேன்.
அதுபோல் “போஸ்” கொடுக்கும் பெண் நான் அல்ல. சினிமாவுக்கு வந்து 5 ஆண்டுகள் ஆகிவிட்டது. முன்னணி ஹீரோக்களுடன் நடித்து விட்டேன்.
மகேஷ் பாபுவுடன் “பிசினஸ்மேன்” படத்தில் நடித்ததற்காக பாராட்டுகள் குவிகிறது. தமிழில் சூர்யாவுடன் நடிக்கிறேன். இந்தியில் தயாரான “சிங்கம்” படத்தில் நடித்து அங்குள்ள ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்துள்ளேன்.
இந்தியை விட தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்கவே ஆர்வம் உள்ளது. தென் இந்திய நடிகை என்று சொல்வதையே விரும்புகிறேன்.
எனது பாதி நேரம் பயணத்திலேயே கழிகிறது. படப்பிடிப்புக்காக சென்னை, ஐதராபாத், மும்பை என விமானத்தில் பறந்து கொண்டே இருக்கிறேன். கஷ்டப்பட்டால்தான் எல்லாம் கிடைக்கும். உழைப்பு இல்லாவிட்டால் பின்தங்கி விடுவோம்’’என்று தெரிவித்துள்ளார்.

14 ஜனவரி 2012

மனம் தளராத ஐஸ்வர்யா தனுஷ்!

சமீபத்தில் கோடம்பாக்கத்தையே கலக்கிய செய்தி என்றால் அது தனுஷ் - ஸ்ருதி ஹாஸன் விவகாரம்தான்.
செய்தி வெளியான அன்றே அதை மறுத்திருந்தார் ஸ்ருதி. ஆனால் தனுஷ் ஒன்றும் பேசவில்லை. மாறாக அன்று மாலை நடந்த 3 படப்பிடிப்பில் மனைவி ஐஸ்வர்யாவுடன் ஜாலியாக போஸ் கொடுத்திருந்தார் அவர்.
ஆனால் ஒரு மனைவியால் இதுபோன்ற செய்திகளை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியுமா... ஐஸ்வர்யா கொஞ்சமும் அலட்டிக் கொள்ளவே இல்லை. சூப்பர் ஸ்டார் மகள் அல்லவா...
தனுஷ் - ஸ்ருதி விவகாரம் குறித்து அவர் சமீபத்தில் கூறுகையில், "நான் இருப்பது சினிமா துறை. இங்கே அனைத்தையும் எதிர்கொண்டாக வேண்டிய சூழல். ஆனால் தனுஷ் - ஸ்ருதி பற்றி வந்தது வெறும் வதந்திதான். அதில் எந்த உண்மையும் இல்லை. தனுஷை நன்கு புரிந்தவள் நான். அவர் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. நாங்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் நம்பிக்கை, எங்கள் குடும்பத்தின் பக்கபலத்துடன் இதுபோன்ற சோதனைகளைக் கடந்துவிடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது," என்றார் நிதானமாக.

09 ஜனவரி 2012

அர்த்தமே இல்லாத பாடலென்றால் அது கொலைவெறிதான்!

கொலைவெறி பாட்டு ஹிட்டானதில், தனுஷின் ஆட்டமும் கொஞ்சம் ஓவராகத்தான் இருந்தது.
சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள், பிரதமர்கள் என பெரிய மனிதர்களின் நட்பும் அரவணைப்பும் இந்தப் படம் மூலம் தனுஷுக்குக் கிடைத்தாலும், கடும் சர்ச்சைகள், எதிர்ப்புகளுக்கும் பஞ்சமில்லை.
இந்தப் பாடல் வெளியான உடனேயே பெண்கள் அமைப்பிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின. பின்னர் இலக்கியவாதிகள் கடுமையாக விமர்சித்தனர். உலகளவில் பிரபலமாகும் அளவிற்கு தரமான பாடலா? என்று கேள்வி எழுப்பினர் சிலர். ரசிகர்களை முட்டாளாக்கிவிட்டனர் என்று கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் பிரபல இந்தி பாடலாசிரியர் ஜாவேத் அக்தரும் கொலவெறி பாடலுக்கு எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்துள்ளார்.
"எந்தவொரு பாடலாக இருந்தாலும் கொஞ்சமாவது அர்த்தமும், பொருளும் இருக்க வேண்டும். ஆனால் இவை எதுவுமே இல்லாத பாடல் ஒன்று என்றால் அது 'ஒய்திஸ் கொலவெறி டி...' பாடலாகத்தான் இருக்க முடியும்.
இது அர்த்தமற்ற ரசனையாக உள்ளது. நல்ல அர்த்தங்களும், தத்துவங்களும் நிறைந்த பாடல்கள் ஏராளம் உள்னன. அவற்றுக்கு கூட இவ்வளவு வரவேற்பு இல்லை. இந்த பாடலுக்கு கிடைத்திருக்கிறது என்றால், அதன் மீதான ரசனையை என்ன வென்று சொல்வது?" என்று கூறியுள்ளார்.

05 ஜனவரி 2012

தப்பு தப்பா பேசுறாங்க"சுருதி வருத்தம்.

நடிகர் தனுஷூடன் ஸ்ருதிஹாசன் நெருங்கி பழகுவதாகவும், அதனால் ஐஸ்வர்யா வீட்டில் புகைச்சல் உண்டாகியுள்ளதாக வந்துள்ள செய்திக்கு நடிகை ஸ்ருதிஹாசன் விளக்கம் அளித்துள்ளார். நடிகர் கமல்ஹாசனின் மூத்தமகளான ஸ்ருதிஹாசன் 7ம் அறிவு படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, இப்போது தனுஷூடன் 3 படத்தில் நடித்து வருகிறார்.
படம் வெளிவருவதற்கு முன்பே 3 படத்தில் இடம்பெற்றிருக்கும் கொலவெறி பாடல் தனுஷை பிரதமர் விருந்தில் பங்கேற்கும் அளவுக்கு கொண்டு போய் நிறுத்தியுள்ளது.
இந்நிலையில் கொலவெறி சொந்தக்காரர் தனுஷூம் – 3 படத்தின் ஹீரோயின் ஸ்ருதி ஹாசனும் ரொம்பவே நெருக்கமாக இருப்பதாகவும், இதனால் தனுஷின் மாமனார் கொலவெறியில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த செய்தியை பற்றி கேள்விப்பட்ட ஸ்ருதி ரொம்பவே வருத்தப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தன்னுடைய ட்விட்டரில் வலைதளத்தில் இவ்வாறு எழுதியுள்ளார் ஸ்ருதிஹாசன். இந்த தகவல் முழுக்க முழுக்க அடிப்படை ஆதாரமற்றது, தனுஷ் என்னுடன் நடிக்கும் சக நடிகர். ஐஸ்வர்யா எனது நெருங்கிய தோழி. இப்படிப்பட்ட அடிப்படை ஆதாரமற்ற செய்திகள் சம்பந்தப்பட்டவர்களையும், அவரைச் சார்ந்தவர்களையும் வேதனைப்படுத்தும். புத்தாண்டு அன்று நான் என் தாயாருடன் கோவாவில் இருந்தேன். சினிமா நட்சத்திரம் என்றாலே வதந்திகளுக்கு ஆளாக வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது. அப்படியே இருந்தாலும் ஏற்கனவே திருமணம் ஆன, அதுவும் எனக்கு நெருக்கமான குடும்பத்தின் உறுப்பினருடன் இப்படி இணைத்துப் பேசுவது வருத்தம் அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

02 ஜனவரி 2012

வித்யாபாலனுக்கு விருது!

சில்க் ஸ்மிதா வேடத்தில் நடித்து கலக்கிய வித்யாபாலனுக்கு தனியார் அமைப்பு ஒன்று சிறந்த நடிகை விருது வழங்க தேர்வு செய்துள்ளது.
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்ட பிரபல கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து டர்டி பிக்சர்ஸ் என்ற பெயரில் இந்தியில் படமானது.
ஏக்தா கபூர் தயாரித்த இந்தப் படம், பல்வேறு சர்ச்சைகளுக்குப் பிறகு வெளியானது.
சில்க் ஸ்மிதாவின் அண்ணன் படத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். நடிகர் வினுச் சக்கரவர்த்தி எதிர்ப்பு தெரிவித்தார். சில்க்ஸ்மிதா வேடத்தில் கவர்ச்சியாக நடித்த வித்யாபாலன் மீதும் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் இதையெல்லாம் தாண்டி இந்தியா முழுவதும் இப்படம் வெற்றிகரமாக ஓடி வசூல் குவித்தது.
தற்போது இதில் நடித்த வித்யாபாலன் சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். படத்துக்கும் சிறந்த படத்துக்கான விருது கிடைக்கிறது. நேஷனல் மீடியா நெட்வொர்க் அமைப்பு வருகிற 21-ந்தேதி நடத்தும் விழாவில் இவ்விருதுகள் வழங்கப்பட உள்ளன.

29 டிசம்பர் 2011

பாங்காக் போகிறார் திரிஷா.

சமரன் படத்துக்காக பாங்காக் போகின்றனர் நடிகர் விஷாலும் ஹீரோயின் த்ரிஷாவும்.
சிம்புவின் அதிகப்பிரசங்கித்தனத்தால் பெரும் தோல்வியைத் தழுவிய ஒஸ்தி படத்துக்குப் பிறகு பாலாஜி ரியல் மீடியா தயாரிக்கும் புதிய படம் சமரன். விஷால் - த்ரிஷா ஜோடியாக நடிக்க, தீராத விளையாட்டுப் பிள்ளை படம் தந்த திரு இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
சமரன் என்றால் போர்வீரன் என்று அர்த்தம். பிரகாஷ்ராஜ் உள்பட பல முன்னணிக் கலைஞர்கள் நடிக்கும் இந்தப் படத்தின் கதை இயல்பானது. ஒரு சராசாரி மனிதனின் நடைமுறை வாழ்க்கையில் நடக்கும் எதிர்பாராத திருப்பங்கள், அதனால் அவன்படும் பாடுகள்தான் இந்தப் படத்தின் திரைக்கதையாக உருவாக்கப்பட்டுள்ளது.
இதுவரை பார்க்காத புதிய அனுபவத்தை இந்தப் படம் உங்களுக்குத் தரும் என்கிறார் இயக்குநர் திரு. இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு ஊட்டி மற்றும் சாலக்குடியில் 15 நாட்கள் நடந்தது.
அடுத்த கட்டப் படப்பிடிப்பு வரும் ஜனவரி 20-ந்தேதி முதல் தாய்லாந்தில் 50 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. மேலும் ஐரோப்பாவின் சரித்திர பிரசித்தி இடங்களில் சண்டைக் காட்சிகளை எடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.

27 டிசம்பர் 2011

மீண்டும் வருகிறார் ஷெரின்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு அபாயம் படம் மூலமாக திரைக்கு வருகிறார் ஷெரீன்.
ஏன் இந்த இடைவெளி என்று அவரிடம் கேட்டோம்?
இரண்டரை வருடம் படிப்புக்காக ஆஸ்திரேலியா சென்றுவிட்டேன். ஓவியம் மற்றும் ஆயில்பெயிண்டிங் பற்றிய படிப்பு அது. அதில் தேறிய பிறகு மீண்டும் 'அபாயம்' படம் மூலம் பிரவேசம் செய்கிறேன். இரண்டு மணி நேர படம். எப்ப ஆரம்பமானது.
எப்ப முடிந்தது என்று தெரியாத அளவுக்குப் படத்தை விறுவிறுப்பாக இயக்கி இருக்கிறார் கிருஷ்ணசாமி.
ஓவியக் கண்காட்சி வைப்பீர்களா?
இன்னும் முழுமையாக பயிற்றி எடுத்து நிறைய பெயிண்டிங் பண்ணிய பிறகு கண்காட்சி வைப்பேன்.
தமிழில் மீண்டும் நடிப்பீர்களா?
நிச்சயம் நடிப்பேன். நல்ல கதை, நல்ல டைரக்டர் என்றால் நாளைக்கே நான் ரெடி. ஜே.எஸ்.கே. பிலிம் சார்பில் ஜே.சதீஷ்குமார் தயாரிக்கும் அபாயம் நிச்சயம் என்னை மீண்டும் வெளிச்சத்துக்கு கொண்டு வரும் என்றார் ஷெரீன்.

23 டிசம்பர் 2011

விக்கிரமுக்கு ஈடுகொடுக்க அஞ்சலி தயார்.

விக்ரமுக்கு ஈடுகொடுத்து நடிக்க தயாராகி விட்டேன், என்று நடிகை அஞ்சலி கூறியுள்ளார். நடிகை அஞ்சலி கரிகாலன் படத்தில் விக்ரம் ஜோடியாகியுள்ளார். சமீபத்தில் அவர் நடிப்பில் ரிலீசான எங்கேயும் எப்போதும் படம் ஹிட்டானது. அதைத் தொடர்ந்து விக்ரம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால் சந்தோஷத்தில் இருக்கிறார்.
இது குறித்து அஞ்சலி அளித்துள்ள பேட்டியில், விக்ரம் படங்கள் எல்லாமே நல்ல கதையம்சம் உள்ளவை. அவருடன் நடிக்க வேண்டும் என்று எனக்கு ஆசை இருந்தது. தற்போது அது நிறைவேறியுள்ளது. விக்ரம் திறமையான நடிகர். அவருடன் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பெரிய நடிகருடன் இணைந்து நடிப்பது எனக்கு சவாலாகவே இருக்கும். இப்படத்தில் கடினமாக உழைக்க தயாராகி வருகிறேன். விக்ரமுடன் ஈடு கொடுத்து நடிக்க கிட்டத்தட்ட தயாராகி விட்டேன், என்று கூறியிருக்கிறார்.

22 டிசம்பர் 2011

நான் அப்படி நடிக்கவில்லை.

தி டர்ட்டி பிக்சர் படத்தில் ஆபாசமாக நடித்ததாக தன் மீது போடப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று நடிகை வித்யாபாலன் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சில்க் ஸ்மிதா வாழ்க்கை கதை, த தர்டி பிக்சர்ஸ் என்ற பெயரில் படமாகி ரிலீசாகியுள்ளது. இதில் சில்க் ஸ்மிதா வேடத்தில் வித்யா பாலன், நடித்துள்ளார். படத்தில் அவர் ஆபாசமாக நடித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டதால், அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி ஹைதராபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, நல்லகுண்டா போலீசார் வித்யாபாலன் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த உத்தரவைத் தொடர்ந்து போலீசில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதனால் வித்யாபாலன் கைது ஆகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் வித்யா பாலன் ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில் தனக்கு எதிராக நல்லகுண்டா போலீசார் பதிவு செய்த கிரிமினல் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் கீழ் கோர்ட்டில் நடக்கும் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி மனு தாக்கல் செய்தார்.

16 டிசம்பர் 2011

நட்சத்திர கோட்டலில் ரிச்சா.

ரிச்சாவுடன் ஒரே அறையில் தங்கியதாக வந்த செய்திகள் குறித்து விளக்கம் அளித்துள்ளார் அவரது பாய் பிரெண்ட் - காதலர் என்று சொல்லப்படும் சுந்தர்.
ரிச்சா தன் காதலர் சுந்தர் என்பவருடன் தங்க நட்சத்திர ஓட்டலில் ரூம் கேட்டதும். அதற்கு ஓட்டல் நிர்வாகம் மறுத்துவிட்டதால், வேறு ஓட்டலுக்கு போய் ஒன்றாகத் தங்கியதும் சமீபத்தில் நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் செய்தியாக வந்தது.
யார் இந்த சுந்தர்?
இந்த சுந்தர் வேறு யாரும் அல்ல... மயக்கம் என்ன படத்தில் ரிச்சாவின் பாய் பிரெண்டாக வந்து, பின்னர் காதலியை தனுஷுக்கு தாரை வார்த்துக் கொடுப்பாரே... அவர்தான்.
ரிச்சாவுடன் ஒரே அறையில் தங்கியது குறித்து அவரிடம் கேட்டபோது, "இந்த செய்தியில் அடிப்படை உண்மையே அல்ல. நானும் ரிச்சாவும் நெருக்கமான நண்பர்கள். மயக்கம் என்ன படத்தில் நடித்ததிலிருந்து எங்களுக்குள் நட்பு உள்ளது. அவரை வைத்து நான் எடுத்த போட்டோ ஷூட் படங்களைக் கொடுக்க ஓட்டலுக்குச் சென்றிருந்தேன். ஆனால் அதை மாற்றி செய்தி போட்டுள்ளனர்," என்றார்.

13 டிசம்பர் 2011

தமன்னாவால் குழம்பிய பக்தர்கள்!

பல லட்சம் பக்தர்கள் கூடும் புனித இடமான திருமலைக்கு ஜீன்ஸ் - டி சர்டில் கவர்ச்சியாக வந்து சாமி கும்பிடுவதா என நடிகை தமன்னாவுக்கு பக்தர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
தமிழில் படங்கள் இல்லாவிட்டாலும் தெலுங்கில் தொடர்ந்து முன்னணியில் உள்ளார் நடிகை தமன்னா. ராம் சரண் தேஜாவுடன் நடிக்கு ரச்சா உள்பட 5 தெலுங்கு படங்கள் அவர் கைவசம் உள்ளன.
இன்று ரச்சா படத்தின் படப்பிடிப்பு இடைவேளையில் தமன்னாவும் ராம்சரண் தேஜாவும் திருப்பதி கோவிலுக்கு சாமி கும்பிட சென்றனர். வி.ஐ.பி. வழியில் சென்று சாமி தரிசனம் செய்தார்கள்.
தமன்னா ஜீன்ஸ், டீ சர்ட்டில் வந்து இருந்தார். ஜீன்ஸ் அணிந்த பெண்களை கோவில் நிர்வாகத்தினர் சாமி கும்பிட அனுமதிப்பதில்லை. ஆனால் தமன்னா சுதந்திரமாக வந்து தரிசனம் செய்தது சக பெண் பக்தர்களை எரிச்சல்பட வைத்தது. பல லட்சம் பக்தர்கள் கூடும் இடத்தில் இப்படி கவர்ச்சி காட்டி வரலாமா என கோவில் நிர்வாகத்தினரைக் கண்டித்தனர். இதற்கிடையில் அவசரமாக தரிசனத்தை முடித்துவிட்ட தமன்னா புறப்பட்டுச் சென்று விட்டார்.

தவறி விழுந்த ராம் சரண்:
ராம்சரண் வெளியே வந்தபோது ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கினார். அவரை பார்க்க ரசிகர்கள் முண்டியடித்ததால் ஏற்பட்ட நெரிசலில் ராம்சரண் நிலை தடுமாறி கீழே தவறி விழுந்தார். அவரை போலீசார் பாதுகாப்பாக அழைத்து சென்று காரில் ஏற்றினார்.

10 டிசம்பர் 2011

அஜித் மீது சிம்புவின் விசுவாசம்.

தல அஜித்தின் தீவிர ரசிகரான சிம்பு, நண்பன் படத்தில் நடிக்க மறுத்தார். விஜய் நடிக்கும் படத்தில் நான் நடித்தால் சிம்பு ரசிகர்கள் என்னை கோபித்துக் கொள்வார்கள் என்று பகீரங்கமாக ஸ்டேட்மெண்ட் விடுத்து பரபரப்பு கிளப்பினார். ஆனால் இதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாத விஜய், ஒஸ்தி படத்தின் இசையை கவிஞர் வாலியுடன் சேர்ந்து வெளியிட்டார். தற்போது அஜித் மீதான தனது விசுவாசத்தை நிரூபிக்கும் விதமாக ஒரு அதிரடியான காரியத்தைச் செய்திருக்கிறார் சிம்பு. அஜித்தின் - 50-வது படமான மங்காத்தா படம் கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி வெளியானது. டிசம்பர் 8ம் தேதி சிம்புவின் ஒஸ்தி உலகம் முழுவதும் வெளியானது. தமிழ் மற்றும் ஆங்கில தினசரிகளை அலங்கரிக்கும் ஒரு அதிரடி விளம்பரம்தான் சிம்புவின் தல விசுவாசத்தைக் காட்டுகிறது. மங்காத்தா நூறாவது நாள் கொண்டாடும் நாளில்தான் தனது ஒஸ்தி வெளியாக வேண்டும் என்று சொன்னாராம் சிம்பு. மங்காத்தா வெளியாகி நூறு நாட்களை கொண்டாடிக் கொண்டிருக்கிறது. இதை குறிப்பிடும் விதமாக ஒஸ்தி விளம்பரம் டிசைன் செய்யப்படுள்ளது. அஜித் மற்றும் சிம்பு ரசிகர்கள் இந்த விளம்பர யுத்தியை நிச்சயம் கொண்டாடுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை!

06 டிசம்பர் 2011

திருமணம் இப்போதைக்கில்லை.

பிரசன்னாவுடன் காதல் இருப்பது உண்மைதான். ஆனால் கல்யாணம் இப்போதைக்கில்லை. லேட்டாகும், என்று கூறியுள்ளார் ஸ்னேகா.
நடிகை ஸ்னேகாவுக்கும் தனக்கும் காதல் மலர்ந்துள்ளதாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளதாகவும் பிரசன்னா சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
ஆனால் இந்தத் திருமணம் குறித்து ஸ்னேகா இதுவரை எதுவும் பேசாமல் இருந்தார்.
சமீபத்தில் அவரிடம் இருவருக்கும் திருமணம் எப்போது என்று கேட்டபோது "உடனடியாக திருமணம் செய்து கொள்ளமாட்டோம், கொஞ்சம் லேட்டாகும்," என்றார்.
ரஜினியுடன் கோச்சடையான் படத்தில் நடிக்க ஸ்னேகா ஒப்பந்தமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதைத் தவிர வேறு சில பட வாய்ப்புகளும் அவருக்கு வந்துள்ளன. எனவே இப்போதைக்கு திருமணம் குறித்து யோசிக்கும் நிலையில் அவர் இல்லை என்று தெரிகிறது.

04 டிசம்பர் 2011

ரஜனிகாந்தின் தங்கை சினேகா.

கோச்சடையான் படத்தில் ரஜினியின் தங்கை வேடத்தில் சினேகா நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினி அடுத்து நடிக்கும் படம் கோச்சடையான். சௌந்தர்யா ரஜினி இயக்க, கே எஸ் ரவிக்குமார் மேற்பார்வையில் வரவிருக்கும் படம் இது.
இந்தப் படத்தில் நாயகியாக அனுஷ்கா நடிப்பார் என்று கூறப்படுகிறது. ஆனால் இன்னும் அந்த செய்தியை யாரும் உறுதிப்படுத்தவில்லை.
இந்த நிலையில் படத்தின் மிக முக்கிய வேடத்தில் நடிக்க நடிகை சினேகாவுடன் பேசி வருகின்றனர். ரஜினியின் தங்கை வேடத்தில் அவர் நடிப்பார் என்று தெரிகிறது.
இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் என்றும் செய்திகள் வந்துள்ளன.
இதையெல்லாமே இன்னும் சில தினங்களில் தெளிவாக்கிவிடுவோம். அதுவரை பொறுத்திருங்கள் என்று சௌந்தர்யா ரஜினி தெரிவித்துள்ளார்.