பக்கங்கள்

24 பிப்ரவரி 2012

காதல் இல்லை!

மலையாள நடிகர் ராஜீவ் பிள்ளையை நான் காதலிப்பதாக வரும் செய்திகளில் உண்மையில்லை. நான் யாரையும் காதலிக்கும் நிலையிலும் இல்லை என்று கூறியுள்ளார் நடிகை பாவனா.

சித்திரம் பேசுதடி படத்தில் அறிமுகமானவர் பாவனா. ஒரு ரவுண்ட் வந்த பிறகு, தெலுங்குக்குப் போய்விட்டார். அங்கு கொஞ்ச காலம் பரபரப்பாக நடித்தார். இப்போது மீண்டும் மலையாளப் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

இந்த நிலையில் மலையாள நடிகரும் கிரிக்கெட் வீரருமான ராஜீவ் பிள்ளையை அவர் காதலிப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

சமீபத்தில் நடந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் பாவனா மலையாள நடிகர் அணிக்கு தூதுவராக பணியாற்றினார். அந்த அணியில் ராஜீவ் பிள்ளை முன்னணி வீரராக இருந்தார். அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்ததாக சொல்கிறார்கள்.

ஆனால் இதை மறுத்துள்ளார் பாவனா. "ராஜீவ்பிள்ளையும் நானும் நட்சத்திர கிரிக்கெட் போட்டியில்தான் சந்தித்தோம். அவரை எனக்கு நன்றாக தெரியும். ஆனால் அவரை நான் காதலிக்கவில்லை. இந்த செய்திகளில் எந்த உண்மையும் இல்லை," என்றார்.

ராஜீவ் பிள்ளையும் இந்த செய்திகளை மறுத்துள்ளார்.

எவ்வளவு வேகமா மறுக்கிறாங்களோ அந்தளவுக்கு தீவிர காதல் இருக்கு என்று சினிமா டிக்ஷனரி சொல்கிறது... பார்க்கலாம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக