பக்கங்கள்

02 பிப்ரவரி 2012

ஒரு வழியா தப்பித்தேன்!

பெரிய நெருக்கடியி்ல இத்தனை நாள் சிக்கித் தவித்தேன். இப்போது ஒருவழியாக மீண்டுவிட்டேன், என்று நடிகை நயன்தாரா கூறினார்.
பிரபு தேவாவுடன் தீவிர காதலில் இருந்தார் நயன்தாரா. பிரபு தேவாவுக்காக சினிமா வாழ்க்கையைத் துறந்தார். கிறிஸ்தவ மதத்திலிருந்து இந்துவாகவும் மாறினார்.
ஆனால் பிரபு தேவா தன்னை திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை, அவர் வேறு நடிகையுடன் தொடர்பில் இருக்கிறார் என்பதைப் புரிந்து கொண்ட நயன்தாரா, இனியும் காலம் தாழ்த்த வேண்டாம் என்று உறவைத் துண்டித்துக் கொண்டார்.
இதுகுறித்து கடந்த ஒரு வாரமாக செய்திகள் வந்தாலும், சம்பந்தப்பட்ட இருவரும் இதுபற்றி எதுவும் கூறாமல் இருந்தனர்.
இந்த நிலையில் மீண்டும் தமிழ், தெலுங்கில் பிஸியாகிவிட்ட நயன்தாரா முதல் முறையாக தனது காதல் முறிவு குறித்து மறைமுறைமுகமாக தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "நான் சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்தேன். அது எனக்கு மிகுந்த நெருக்கடியில் சிக்கியிருந்தது உண்மைதான். இப்போது ஒருவழியாக அதிலிருந்து மீண்டு வந்துவிட்டேன்.
இனி முழு கவனமும் சினிமாதான். இப்போது தெலுங்கு படத்தில் நாகார்ஜூனா ஜோடியாக நடிக்கிறேன். அது ஒரு காதல் கதை.
தமிழ் திரையுலகம் எனக்கு பெரிய நட்சத்திர அந்தஸ்தை கொடுத்தது. தெலுங்கு பட உலகம் என்னை இன்னொரு படி உயரத்தில் கொண்டு போனது. இந்த இரு மொழிகளிலுமே தொடர்ந்து நடிப்பேன்," என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக