பக்கங்கள்

04 ஏப்ரல் 2011

தமிழில் குவியும் வாய்ப்புக்கள்.

காவலன்" படத்தின் மூலம் பிரபலமான நடிகை மித்ராவுக்கு இப்போது தமிழில் நிறைய வாய்ப்புகள் வருகிறதாம். அதன்விளைவு சென்னையிலேயே தங்க முடிவெடுத்து இருக்கிறார் மித்ரா. மலையாளத்தில் வெளியான "பாடிகார்ட்" படத்தின் தமிழ் ரீ-மேக்காக பொங்கலுக்கு வெளியான படம் "காவலன்". இப்படத்தில் விஜய்க்கு அடுத்து பெரிதும் பேசப்பட்ட கேரக்டர் மித்ராவின் கேரக்டர் தான். காவலனில் மதுவாக சிறிய கேரக்டரில் வந்தாலும் நடிப்பில் பட்டயை கிளப்பி அசினையே பின்னுக்கு தள்ளிவிட்டார். இதன் விளைவாக காவலன் படத்தை தொடர்ந்து தமிழில் நிறைய வாய்ப்புகள் வருகிறதாம். அதனால் சென்னையிலேயே தங்கிவிடலாம் என்று முடிவு எடுத்திருக்கிறார் மித்ரா. இதுகுறித்து மித்ரா கூறியதாவது, காவலன் படத்தில் நடிக்குமாறு டைரக்டர் சித்திக் என்னை அணுகியபோது உடன் ஒப்புக்கொண்டேன். காவலன் படத்தின் கேரக்டருக்கும், பாடிகார்ட் படத்தின் கேரக்டருக்கும் நிறைய வித்யாசம் இல்லை என்றாலும், தமிழக ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு மலையாளத்தில் கிடைக்கவில்லை. காவலனில் என்னுடைய நடிப்பை பார்த்து நிறைய பேர் பாராட்டினார்கள். மலையாளத்தை காட்டிலும் தமிழில் சூப்பராக நடித்திருப்பதாக பலரும் கூறினர். காவலன் பட நடிப்பை பார்த்து தமிழில் நிறைய படவாய்ப்புகள் வருகிறது. தற்போது டைரக்டர் சுசீந்திரன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்தில் நடிக்க இருக்கிறேன். இப்படத்தில் நாயகியாக தீக்ஷா செத் நடிக்கிறார். படத்தில் எனக்கு துணை நடிகை ரோல் என்றாலும் மிக அழுத்தமான கேரக்டர் தான். இப்படத்தில் மாடர்ன் கேர்ளாக நடிக்கிறேன். சட்டசபை தேர்தல் முடிந்த பின்னர் இப்படத்தின் சூட்டிங் ஆரம்பமாகிறது. என்னை பொறுத்த வரை நடிப்பதற்கு மொழி ஒன்றும் பிரச்சனை இல்லை. ஏற்கனவே எனக்கு தமிழ் கொஞ்சம், கொஞ்சம் தெரியும். பிறர் பேசுவதை புரிந்து கொள்ள முடியும். அதேசமயம் ஓரளவிற்கு பேசவும் தெரியும். தமிழில் நிறைய படவாய்ப்புகள் தேடி வருகின்றன. இதனால் இங்கேயே தங்கி நடிக்கலாம் என்று முடிவெடுத்து இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக