பக்கங்கள்

28 ஏப்ரல் 2011

விவசாயக் குடும்பத்தில் பெண் எடுக்கிறார் கார்த்தி.

சென்னையில் பி.இ., இன்ஜினியரிங் முடித்து அமெரிக்காவின், நியூயார்க்கில் உள்ள பிங்காம்டன் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்., பட்டம் பெற்றவர் நடிகர் கார்த்தி. எம்.எஸ்., பட்டம் பெற்றாலும் கார்த்தியின் ஆர்வமோ நடிப்பில் தான் இருந்தது. டைரக்டர் அமீரின், பருத்திவீரன் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமான நடிகர் கார்த்தி, முதல் படத்திலேயே வித்யாசமான கேரக்டரில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். பருத்திவீரன் படத்தின் வெற்றி, தொடர்ந்து பையா, நான் மகான் அல்ல, ஆயிரத்தில் ஒருவன், சிறுத்தை போன்ற படங்களிலும் தொடர்ந்தது. மிககுறுகிய காலத்தில் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றார் கார்த்தி. இடையில் நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வால் ஆகியோர்களுடன் காதல் கிசு கிசுவில் சிக்கினார்.
இந்நிலையில் கார்த்திக்கு தீவிர பெண் வேட்டையில் ஈடுபட்ட அவரது பெற்றோர், ஈரோட்டை சேர்ந்த ரஞ்சனியை, கார்த்திக்கு திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர். ஈரோட்டைச் சேர்ந்த சின்னசாமி - ஜோதி மீனாட்சி தம்பதிகளின் மகளாகிய ரஞ்சனி, சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் எம்.ஏ., ஆங்கிலத்தில் தங்க மெடல் பெற்றவர். இவர்களது திருமணம் வரும் ஜூலை மாதம் 3ம்தேதி நடைபெற இருக்கிறது.
வருங்கால மனைவி குறித்து கார்த்தி கூறுகையில், ரஞ்சனியை முதல்முறை பார்த்தபோது ஒரு மணி நேரத்துக்கு மேல் மனம்விட்டு பேசினேன். நான் நடித்த படங்களில் பருத்திவீரன், ஆயிரத்தில் ஒருவன் பார்த்து ரசித்ததாக சொன்னார். கிராமத்து கலாசாரமும் நகரத்து நாகரிகமும் கலந்த ஒரு பெண் எனக்கு மனைவியாக வேண்டும் என்பது அப்பா அம்மாவின் ஆசை. அதே மாதிரி ஈரோடு மாவட்ட கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்த ரஞ்சனி கிடைத்திருக்கிறார், என்றார்.
திருமணம் முடிந்த கையோடு கார்த்தியும் - ரஞ்சனியும் அட்லான்டிக் கடலும் பசிபிக் கடலும் சந்திக்கும் பகுதியிலுள்ள தஹிட்டி தீவுக்கு தேனிலவு செல்ல திட்டமிட்டுள்ளார்களாம்.

25 ஏப்ரல் 2011

பிரித்திவிராஜ் மும்பை பெண் நிருபரை மணக்கிறார்!

பாரிஜாதம்”, “மொழி”,“சத்தம் போடாதே”, “கண்ணாமூச்சி ஏனடா”, “வெள்ளித்திரை,” “அபியும் நானும்”, “நினைத்தாலே இனிக்கும்” உள்ளிட்ட பல படங்களில் நாயகனாக நடித்துள்ளார். மலையாளத்திலும் முன்னணி நடிகராக உள்ளார்.
பிருதிவிராஜூக்கும் மும்பையில் வசிக்கும் பெண் நிருபர் சுப்ரியாமேனனுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக கிசு கிசுக்கள் பரவின. பிரிதிவிராஜிடம் சுப்ரியா பேட்டி எடுத்த போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு பின்னர் காதல் வயப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் பிருதிவிராஜ் இதனை மறுத்து வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை கேரள மாநிலம் பாலகாட்டில் பிருதிவிராஜூக்கும், சுப்ரியா மேனனுக்கும் திருமணம் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அங்குள்ள ரிசார்ட் ஒன்றில் இத் திருமணம் நடந்ததாகவும், நெருக்கமான உறவினர்கள் சிலர் மட்டுமே இதில் பங்கேற்றதாகவும் கூறப்படுகிறது.
மொத்தம் 50 பேர் திருமணத்தில் கலந்து கொண்டார்களாம். திருமணத்துக்கு வந்தவர்களுக்கு விசேஷ அனுமதி சீட்டு வழங்கப்பட்டு இருந்தது. அதை காட்டியவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
மே 1-ந் தேதி திருமண வரவேற்பை எர்ணாகுளத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடத்துகிறார். இதற்கு நடிகர்-நடிகைகளை அழைக்க திட்டமிட்டு உள்ளார்.

24 ஏப்ரல் 2011

எய்ட்சால் கவலையுறும் ப்ரீத்தி!

எய்ட்ஸ் நோயால் தலைகுனிவு ஏற்பட்டிருப்பதாக கன்னக்குழியழகி என வர்ணிக்கப்படும் பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா கவலை தெரிவித்துள்ளார். எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கும் ப்ரீத்தி ஜிந்தா, சோகமயமாக அளித்த பேட்டியொன்றில், இந்தியாவில் உள்ள ஒட்டு மொத்த லாரி ஓட்டுனர்களின் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 70 சதவீதம் பேருக்கு எயிட்ஸ் நோய் பாதித்துள்ளது. அதிலும் குறிப்பாக பஞ்சாப், ஹரியானா,ஹிமாச்சல பிரதேஷம் ஆகிய பகுதிகளில் உள்ள லாரி ஓட்டுனர்கள்தான் அதிக அளவில் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல்களைக் கேட்டதும் மிகவும் கவலையடைந்துவிட்டேன். லாரி ஓட்டுனர்களிடம் எயிட்ஸ் நோய் பற்றிய சரியான விழிப்புணர்வு இல்லாமல் போனதால்தான், இந்தளவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு கண்டீப்பாக நான் ஏதாவது செய்தே தீருவேன். எய்ட்ஸ் நோய் அதிகரித்துக் கொண்டே போனால் அது இந்தியாவிற்கே தலைகுனிவு மட்டுமல்ல, எல்லா விதத்திலும் பெரிய பாதிப்பினை ஏற்படுத்தும். இதற்கான பிரச்சாரத்தில் விரைவில் ஈடுபடப் போகிறேன், என்று கூறியுள்ளார்.

22 ஏப்ரல் 2011

இரசிகர்கள் விரும்பினால் கவர்ச்சிக்கும் தயார்!

ரசிகர்கள் பார்க்க தயாராக இருந்தால் நான் நீச்சல் உடையணிந்து நடிக்க தயாராக இருக்கிறேன் என்று நடிகை சினேகா கூறியுள்ளார். புன்னகை மற்றும் ஹோம்லியால் புகழ்பெற்றவர் நடிகை சினேகா. அம்மணியின் சிரித்த முகத்தை பிடிக்கா‌தவர்களே இருக்க முடியாது. தன்னைத் தேடி வந்த கவர்ச்சி வாய்ப்புகள் பலவற்றை மறுத்து, பல லட்சங்களை இழந்த சினேகா, சமீப காலமாக தனது கிளாமர் லட்சியத்தில் இருந்து இறங்கி வர ஆரம்பித்திருக்கிறார். இதுவரை நீச்சல் உடை, முத்தக்காட்சி, நெருக்கமான டூயட் பாடல்களில் நடிக்காத சினேகாவின் மனதில் இப்போது மனமாற்றம் ஏற்பட்டுள்ளது.
ஐதராபாத்தில் அவர் அளித்த பேட்டியில், நான் பத்து வருடங்களாக சினிமாவில் நடிக்கிறேன். எனக்கென்று ஒரு இமேஜையும் உருவாக்கி வைத்துள்ளேன். இதுவரை கவர்ச்சி வேடங்களில் நடித்தது இல்லை. குடும்ப பாங்கான வேடங்களிலேயே நடித்துள்ளேன். குடும்ப கதைகளா சினேகாவை கூப்பிடுங்கள் என்கிற அளவுக்கு எனது கேரக்டர் மக்கள் மனங்களில் பதிந்து உள்ளது. நீச்சல் உடையில் அறவே நடிப்பது இல்லை என்ற முடிவில் நான் இல்லை. கதைதான் முக்கியம் கதைக்கு நீச்சல் உடை கட்டாயம் தேவை என்ற நிலை ஏற்பட்டால் நீச்சல் உடையில் நடிக்க நான் தயார். என் ரசிகர்கள் எனது கவர்ச்சியை விரும்ப மாட்டார்கள். அவர்கள் விரும்பினால் நடிக்கத் தயார். சமீபத்திய படங்கள் எனக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தன. மேலும் படங்கள் கைவசம் உள்ளன. தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறேன், என்று கூறியுள்ளார்.

20 ஏப்ரல் 2011

மலையாளத்தில் மீண்டும் ஷகீலா!

மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகர்களை தனது கவர்ச்சிக் குலுக்கல் படங்களால் கதிகலங்க வைத்த ஷகிலா, 7 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மலையாளத்தில் நடிக்கிறார்.
தமிழில் காமெடி ரோல்களில் அறிமுகமாகி, கவுண்டமணியின் ஜோடியாக பிரபலமான ஷகிலா, திடீரென்று மலையாளத் திரையுலகின் தவிர்க்க முடியாத அங்கமானார். அவர் நடித்த பிட் படங்களுக்கு கேரளாவிலும் ஆந்திராவிலும் ஏகப்பட்ட வசூல். 10 லட்சம் செலவழித்தால் போதும், அதைவிட பத்துமடங்கு லாபம் சம்பாதிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டதால், முன்னணி ஹீரோக்களான மம்முட்டி, மோகன்லால் படங்களைக் கூட திரையிட பெரிய அளவில் ஆர்வம் காட்டாமல் போனார்கள்.
இதனால் கடுப்பான மலையாள நடிகர்கள் சிலர் ஷகிலாவுக்கு மிரட்டல் விடும் அளவுக்குப் போனதாக செய்திகள் வெளியாகின.
அதன்பிறகு ஷகிலாவும் மலையாளத் திரையுலகை விட்டு ஒரேயடியாக ஒதுங்கினார். தமிழ், கன்னடப் படங்களில் கேரக்டர், காமெடி வேடங்களைச் செய்ய ஆரம்பித்துவிட்டார். இப்போது தமிழ், கன்னடத்தில் 12க்கும் அதிகமான படங்களில் நடித்து வருகிறார்.
விரைவில் வரவிருக்கும் சண்முகிபுரம் என்ற படத்தில் தஷி இசையில் ஒரு பாடல் கூட பாடியுள்ளாராம் ஷகிலா.
மலையாளத்தில் மீண்டும் நடிக்க ஏகப்பட்ட வாய்ப்புகள் வருகின்றனவாம் அவருக்கு. இதுகுறித்து அவர் கூறுகையில், “மலை‌யா‌ளத்‌துல கி‌ட்‌டத்தட்‌ட ஏழு வருடத்‌தி‌ற்‌கு பி‌றகு தே‌ஜா‌ பா‌ய்‌ என்‌கி‌ற படத்‌தி‌ல்‌, சுரா‌ஜ்‌ சா‌ர்‌ கா‌ம்‌பி‌னே‌ஷன்‌ல நடி‌ச்‌சுக்‌கி‌ட்‌டு இருக்‌கே‌ன்‌. பி‌ரி‌தி‌வி‌ரா‌ஜ்‌ முக்‌கி‌ய வே‌டத்‌தி‌ல நடி‌க்‌கி‌ற படம்‌ இது. ரொ‌ம்‌ப ரொ‌ம்‌ப முக்‌கி‌கியமா‌ன ரோ‌ல்‌. இப்‌போ‌து அங்‌கே‌ நி‌றை‌ய கமர்‌சி‌யல்‌ படங்‌களுக்‌கு கே‌ட்‌கி‌றா‌ங்‌க. எனக்‌கு கே‌ரக்‌டர்‌ ரோ‌ல்‌ தருறா‌ங்‌க. சந்‌தோ‌ஷமா‌ இருக்‌கு,” என்‌றா‌ர்‌.

17 ஏப்ரல் 2011

த்ரிஷாவின் முரட்டுத்தனம்!

என்னிடம் அன்பாக பேசினால் நானும் அன்பாக பேசுவேன், அதேசமயம் முரட்டுதனமாக பேசினால் நானும் அப்படித்தான் பேசுவேன். அது என்னுடைய சுபாவம், என் குணத்தை என்னால் மாற்றிக் கொள்ள முடியாது என்று கூறுகிறார் த்ரிஷா. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் இம்மாதம் 13ம் தேதி தேர்தல் நடைபெற்றது. ஓட்டளிக்க காலையிலேயே கர்ப்பிணி பெண்கள், வயதான தாத்த, பாட்டி முதல் இளைஞவர்கள் வரை அனைவரும் நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டளித்தனர். இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள பிரசான்சிஸ் சேவியர் பள்ளியில் ஓட்டுபோட தனது தாயார் உமா, பாட்டி சாரதா ஆகியோருடன் 1மணிக்கு சென்றார் நடிகை த்ரிஷா. அப்போது த்ரிஷா வரிசையில் நிற்காமல் நேராக ஓட்டுபோடும் அறைக்கு சென்றார். அப்போது அவருக்கும், வரிசையில் நின்றுகொண்டிருந்த ஒரு வாக்காளருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து நடிகை த்ரிஷா விளக்கமளித்துள்ளார். அவர் கூறியதாவது, ஓட்டும்போடும் போது என்னை வரிசையில் நிற்கும்படி சொன்னது தவறல்ல. ஆனால் அந்த வாக்காளர் சொன்ன விதம் தான் தவறானது. நடிகையென்றால் என்ன கேவலமானவர்களா..? வரிசையில் நின்று ஓட்டுப்போடுங்கள் என்று அன்போடு கூறியிருந்தால் நானும் வரிசையில் நின்றிருப்பேன். ஆனால் அந்த வாக்காளர் முரட்டுதனமாக பேசியதால் நானும் அவருடன் தகராறில் ஈடுபட வேண்டியதாயிற்று. என்னிடம் அன்போடு பேசினால், நானும் அன்போடு பேசுவேன். அதை‌விட்டு முரட்டுதனமாக பேசுபவர்களிடம் நானும் அப்படித்தான் பேசுவேன். அது என்னுடைய சுபாவம் என்கிறார்.

15 ஏப்ரல் 2011

"குள்ள நரிக்கூட்டம்"ஒரு பார்வை.

மதுரையில் நடக்கிற கதை. கத்தி, ரத்தம், சண்டை, ரவுடியிஸம், எலே... என்ற ஹைபிச் வசனங்கள் எதுவும் இல்லாமல் மதுரையின் மென்மையான இன்னொரு பக்கத்தைக் காட்டியிருக்கிறார் இயக்குனர் ஸ்ரீபாலாஜி. சிம்பிளான கதை, சுவாரஸ்யமான திரைக்கதை என முற்றிலும் புதிதாகவே இருக்கிறது இந்தப் பயணம். படம் பார்க்கிற ரசிகனின் ரத்தத்தை சூடேற்றுவது அல்லது தாரைத் தாரையாக கண்ணீரை வரவழைப்பது என்ற எந்த உணர்ச்சி உசுப்பேற்றல்களும் இதில் இல்லை. தென்றலிடம் பூக்கள் தலை அசைத்து பேசுகிற மாதிரி ஒரு இதமான உணர்வு. ஹீரோ விஷ்ணு நடுத்தர குடும்பத்தை சார்ந்தவர். தன் அப்பாவின் போன் நம்பருக்கு 1500க்கு ரீசார்ஜ் செய்கிறார், ஆனால் நம்பர் மாறி அந்தப் பணம் இன்னொரு நம்பருக்கு ரீசார்ஜ் ஆகிவிடுகிறது. அந்த போன் நம்பருக்கு சொந்தக்காரர் ஹீரோயின் ரம்யா நம்பேசன். இருவரின் மோதல் காதலில்முடிகிறது. இந்த விவகாரம் இருவரின் வீட்டுக்கும் தெரியவருகிறது. ஹீரோவின் அப்பாவுக்கு போலிஸ் என்றாலே பிடிக்காது. ஹீரோயின் அப்பா ஒரு போலிஸ்! அப்படிபோடு... காதல் கேள்விக் குறியாகிவிடுகிறது. மாப்பிள்ளை போலிஸ் ஆனால் தான் கல்யாணம் என்று ஹீரோயின் அப்பா சொல்லிவிட, காதல் நூலில் சிக்கல் அதிகரிக்கிறது. காதலுக்காக ஹீரோ போலிஸ் வேலைக்கு முயற்சிப்பதும், அவர் சந்திக்கும்நண்பர்கள், காதல் கைக்கு வந்ததா, தொடரும் சுவாரஸ்யமான நிகழ்வுகள் என்ன? என்பது மீதிக் கதை. எந்த ஜிகினா வேலைகளையும் நம்பாமல் கதையை மட்டுமே நம்பி பயணித்திருக்கும் இயக்குனரை பாராட்டாலாம். விஷ்ணு, கதைக்கு ரொம்ப பொருத்தம். படத்தில் தேவையான இடங்களில் மட்டும் மூன்று பாடல்கள். கலர் கலர் ஆட்டங்கள் எதுவும் இல்லை என்பது ரொம்பவே ஆறுதல். கொடுக்க வேண்டிய பணத்தை ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு நோட்டாக வாங்குவதும், பின் சில்லைரையாக்கி கடைசி ஒரு ரூபாயில் செண்டிமெண்ட் வைப்பதும் புதுசு. இது தமிழ் சினிமாவின் புது வகையான ரீசார்ஜ் காதல். ஹீரோயின் தோழி ஹீரோயினிடம், உங்களுக்கு மட்டும் எப்படிடீ காய்ச்சல் வர மாதிரி காதல் வருது... நாங்களும் அழகாத்தான் இருக்குரோம் எங்கள ஒரு பையன் காதலிக்க மாட்டேன்குறான் என்று பேசும் சில வசனங்கள் அங்கங்க நச்சுனு இருக்கு! போலிஸ் செலக்‌ஷனில் காட்டப்படும் நண்பர்கள்... இவர்கள் போலிஸா என்ற கேள்வியை எழுப்பினாலும் ஏதேதோ நடந்த தமிழ் சினிமாவில் இது ஒன்னும் பெரிய தப்பில்லை என்றே தோன்றுகிறது. படத்தின் பல இடங்களின் சிரிக்க நல்ல வாய்ப்பு.

13 ஏப்ரல் 2011

பாடகியானார் சுப்ரமணியபுரம் சுவாதி!

சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் பிரபலமான நடிகை சுவாதி, அந்தபடத்திற்கு பிறகு தமிழில் காணாமல் போனார். தற்பொழுது தெலுங்கில் முகாமிட்டு இருக்கும் அம்மணி ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். நடிப்‌பதோடு மட்டும் இல்லாமல் இப்போது பாடகியாகவும் மாறி இருக்கிறார். தெலுங்கில் நாகசைதன்யா-தமன்னா ஆகியோர் நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் 100% லவ் என்ற படத்தில், ஏ ஸ்குயர், பி ஸ்குயர் என்று ஆரம்பிக்கும் பாடல் ஒன்றை பாடியிருக்கிறார் சுவாதி. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருக்கிறார். சில தினங்களுக்கு முன்னர்தான் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடைபெற்றது. படத்தில் பாடியது குறித்து சுவாதி கூறியதாவது, படத்தில் நான் பாடியதற்கு முக்கிய காரணமே தேவி ஸ்ரீபிரசாத் சார் தான். என்னுடைய குரல் நன்றாக இருக்கிறது என்று கூறி அவர் தான் கட்டாயப்படுத்தி பாட வைத்தார். தொடர்ந்து நல்ல வாய்ப்புகள் வந்தால் பாடுவேன் என்றார்.

11 ஏப்ரல் 2011

குழப்பத்தில் இருக்கும் தமன்னா!

தெலுங்கில் தயாரிப்பாளருடன், தான் மோதலில் ஈடுபட்டதாக வந்த வதந்தியால் வருத்தத்தில் இருக்கிறார் தமன்னா. தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னாவிற்கு கைவசம் ஒரே ஒரு படம்(வேங்கை) மட்டுமே உள்ளது. அதுவும் முடியும் தருவாயில் இருக்கிறது. இதனால் தெலுங்கு பக்கம் தனது கவனத்தை திருப்பி இருக்கிறார் தமன்னா. அங்கு ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே தெலுங்கில் நாக சைதன்யாவுடன் 100% காதல் என்ற படத்தில் நடித்து வருகிறார் தமன்னா. இப்படத்தின் போது தயாரிப்பாளருக்கும், இவருக்கும் சம்பளம் தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இதனை மறுத்து உள்ளார் தமன்னா. இதுகுறித்து அவர் கூறியதாவது, சினிமாவிற்கு வந்துவிட்டாலே கிசுகிசுக்களுக்கும், வதந்திகளுக்கும் பஞ்சம் இருக்காது. என்னைப்பற்றியும் நிறைய வதந்தி மற்றும் கிசுகிசுக்கள் வந்துள்ளது. அப்போதெல்லாம் அதைப்பற்றி கவலைப்பட்டதில்லை. ஆனால் இப்போது தயாரிப்பாளருடன் எனக்கு பிரச்சனை இருப்பதாக செய்திகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. தமிழ், தெலுங்கு என இரண்டு ‌மொழிகளிலும் மாறி மாறி நடித்து வருகிறேன். நான் யாரிடமும் இதுவரை பிரச்சனை செய்தது இல்லை. சம்பளம் தொடர்பாக தயாரிப்பாளருக்கும் எனக்கு எந்த மோதலும் கிடையாது. பொதுவாக ஒரு நடிகையின் சம்பளம் படத்தின் பட்ஜெட் மற்றும் அந்த நடிகையின் மார்க்கெட் நிலவரம் இரண்டையும் வைத்து தான் தீர்மாணிக்கப்படுகிறது. என்னுடைய சம்பளமும் அதுபோலத்தான் தீர்மாணிக்கப்பட்டது. தயாரிப்பாளரே எனது நடிப்பு தி‌றமையை பார்த்து சம்பளத்தை ஃபிக்ஸ் செய்தார். நான் எதுவும் சம்பளத்தை உயர்த்தி கேட்கவில்லை. படத்தில் என்னுடைய நடிப்பை பார்த்து வெகுவாக பாராட்டினார் தயாரிப்பாளர். எனக்கும், தயாரிப்பாளருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் இதுபோன்ற வதந்திகளால் எனது கேரியர் பாதிக்கப்படும் என்று வருத்தத்துடன் கூறுகிறார் தமன்னா.

08 ஏப்ரல் 2011

நீதுவும் அமீரும் காதலா?

டைரக்டர் அமீரும் – நடிகை நீது சந்திராவும் காதல் கிசுகிசுவில் சிக்கியிருக்கிறார்கள். நீது சந்திரா சென்னை வரும்போதெல்லாம் காருடன் விமான நிலையம் போய் காத்துக்கிடக்கிறாராம் அமீர். இருவருக்குள்ளும் காதல் என்று ‌கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுவது பற்றி நீதுவிடம் கேட்டால், புன்னகையுடன் பதில் சொல்கிறார். நான் மாதவன், விஷால் கூட நடிச்சிருக்கேன். அவங்க புரபஷனல்ஸ். ஆனால் அமீர் அப்படியல்ல. என்னோட நண்பர். நலம் விரும்பி. நான் ரொம்ப பிரண்ட்லி. பத்து நிமிஷம் பேசினாலே பச்சக்குனு ஒட்டிப்பேன். அது மற்றவங்க கண்ணுக்கு தப்பா தெரிஞ்சா அதுக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும். எனக்கு தினமும் மதிய சாப்பாடு கொடுத்தனுப்புவதே அமீரின் மனைவிதான். அந்த அளவுக்கு அவங்க என்னோட பிரண்ட். விமர்சனத்துக்கு பயந்தா சந்தோஷமா வாழ முடியாது, என்கிறார் நீது. ரொம்ப கூலான பதில்! நிஜமாக இருக்க வேண்டுமே!

07 ஏப்ரல் 2011

ஓராண்டுக்கு தொடர் பிஷி என்கிறார் ஹன்ஷிகா.

அடுத்த ஓராண்டுக்கு பிஸியாக இருப்பேன் என்று நடிகை ஹன்சிகா மோத்வானி கூறியுள்ளார். தமன்னா, டாப்ஸி பன்னு வரிசையில் தமிழ்நாட்டுக்கு வந்திருக்கும் வெள்ளாவிப் பெண் ஹன்சிகா மோத்வானி. ஆந்திராவை சேர்ந்த இவர், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் அவர் நடித்து ஒரு படம் கூட ரீலிஸ் ஆகாத நிலையில் அடுத்த ஓராண்டுக்கு பிஸி நாயகியாகி விட்டார். அந்த அளவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்திருக்கிறது தமிழ் சினிமா. இளம் நடிகர்கள் மட்டுமில்லாமல் மூத்த நடிகர்கள் சிலரும் ஹன்சிகாவை தங்கள் நாயகியாக்க கால்ஷீட் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஹன்சிகாவின் பார்வையோ... 3 கோடிக்கும் அதிகமாக சம்பளம் பெறும் ஹீரோக்கள் மீது மட்டுமே இருக்கிறதாம். அடுத்தடுத்து புதுப்பட வாய்ப்புகள் தேடி வருவது குறித்து ஹன்சிகா அளித்துள்ள பேட்டியொன்றில், அடுத்த ஓராண்டுக்கு என்னோட கால்ஷீட் டைரி ஃபுல் ஆகி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். நிறைய வாய்ப்புகள் வருகின்றன. கதைகளை தேர்ந்தெடுத்த நடிக்க வேண்டும் என நினைக்கிறேன். எனது படம் ரீலிஸ் ஆவதற்கு முன்பே இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை, என்று கூறியிருக்கிறார். நடிகர் விஜய் அடுத்து நடிக்கவிருக்கும் பகலவன் படத்திலும் ஹன்சிகாதான் நாயகி என்பது கூடுதல் தகவல்.

04 ஏப்ரல் 2011

தமிழில் குவியும் வாய்ப்புக்கள்.

காவலன்" படத்தின் மூலம் பிரபலமான நடிகை மித்ராவுக்கு இப்போது தமிழில் நிறைய வாய்ப்புகள் வருகிறதாம். அதன்விளைவு சென்னையிலேயே தங்க முடிவெடுத்து இருக்கிறார் மித்ரா. மலையாளத்தில் வெளியான "பாடிகார்ட்" படத்தின் தமிழ் ரீ-மேக்காக பொங்கலுக்கு வெளியான படம் "காவலன்". இப்படத்தில் விஜய்க்கு அடுத்து பெரிதும் பேசப்பட்ட கேரக்டர் மித்ராவின் கேரக்டர் தான். காவலனில் மதுவாக சிறிய கேரக்டரில் வந்தாலும் நடிப்பில் பட்டயை கிளப்பி அசினையே பின்னுக்கு தள்ளிவிட்டார். இதன் விளைவாக காவலன் படத்தை தொடர்ந்து தமிழில் நிறைய வாய்ப்புகள் வருகிறதாம். அதனால் சென்னையிலேயே தங்கிவிடலாம் என்று முடிவு எடுத்திருக்கிறார் மித்ரா. இதுகுறித்து மித்ரா கூறியதாவது, காவலன் படத்தில் நடிக்குமாறு டைரக்டர் சித்திக் என்னை அணுகியபோது உடன் ஒப்புக்கொண்டேன். காவலன் படத்தின் கேரக்டருக்கும், பாடிகார்ட் படத்தின் கேரக்டருக்கும் நிறைய வித்யாசம் இல்லை என்றாலும், தமிழக ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு மலையாளத்தில் கிடைக்கவில்லை. காவலனில் என்னுடைய நடிப்பை பார்த்து நிறைய பேர் பாராட்டினார்கள். மலையாளத்தை காட்டிலும் தமிழில் சூப்பராக நடித்திருப்பதாக பலரும் கூறினர். காவலன் பட நடிப்பை பார்த்து தமிழில் நிறைய படவாய்ப்புகள் வருகிறது. தற்போது டைரக்டர் சுசீந்திரன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்தில் நடிக்க இருக்கிறேன். இப்படத்தில் நாயகியாக தீக்ஷா செத் நடிக்கிறார். படத்தில் எனக்கு துணை நடிகை ரோல் என்றாலும் மிக அழுத்தமான கேரக்டர் தான். இப்படத்தில் மாடர்ன் கேர்ளாக நடிக்கிறேன். சட்டசபை தேர்தல் முடிந்த பின்னர் இப்படத்தின் சூட்டிங் ஆரம்பமாகிறது. என்னை பொறுத்த வரை நடிப்பதற்கு மொழி ஒன்றும் பிரச்சனை இல்லை. ஏற்கனவே எனக்கு தமிழ் கொஞ்சம், கொஞ்சம் தெரியும். பிறர் பேசுவதை புரிந்து கொள்ள முடியும். அதேசமயம் ஓரளவிற்கு பேசவும் தெரியும். தமிழில் நிறைய படவாய்ப்புகள் தேடி வருகின்றன. இதனால் இங்கேயே தங்கி நடிக்கலாம் என்று முடிவெடுத்து இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

02 ஏப்ரல் 2011

மவுனம் காக்கும் ஸ்ருதி.

மனைவியை விவாகரத்து செய்த நடிகர் சித்தார்த்துடன் ஸ்ருதி ஹாஸன் காதல் வயப்பட்டிருப்பதாக தெலுங்குப் படவுலகில் பேசப்படுகிறது. இந்த விவகாரத்தை ஸ்ருதி மறுக்கவும் இல்லை, ஒப்புக் கொள்ளவும் இல்லை. கமல் மகள் ஸ்ருதி தமிழில் 7-ஆம் அறிவு படத்தில் சூர்யா ஜோடியாக நடித்து வருகிறார். தெலுங்கிலும் நடிக்கிறார். அங்கு சித்தார்த்துடன் தொடர்ந்து இரண்டாவது படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர்கள் இருவரும் நடித்த முதல் படம் சரியாகப் போகாத நிலையிலும், ஸ்ருதியை இரண்டாவது படத்திலும் சித்தார்த் ஜோடியாக்கியிருப்பது அவர்களின் நெருக்கத்தைக் காட்டுவதாகக் கூறுகிறார்கள். இதனால் இருவரும் காதலிப்பதாக வதந்திகள் கிளம்பின. மனைவியை விவாகரத்து செய்துவிட்ட சித்தார்த், இப்போது ஸ்ருதியை தீவிரமாகக் காதலிப்பதாக தெலுங்குப் படவுலகில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. இருவரும் ஒன்றாக சுற்றுவது குறித்த செய்திகளும் தெலுங்குப் பத்திரிகைகளில் வெளியாகி வருகின்றன. இது பற்றி ஸ்ருதியிடம் கேட்ட போது, “நானும் சித்தார்த்தும் ‘அனகனாக ஓ தீருடு’ என்ற படத்தில் இணைந்து நடித்தோம். அந்தப் படம் நன்றாக இருந்தது. இதனால் மீண்டும் இன்னொரு படத்தில் சேர்ந்து நடிக்கிறோம். கிசுகிசுக்களின் பின்னணி இதுதான் என்று நினைக்கிறேன். சித்தார்த் எனது நெருங்கிய நண்பர். இதுபோன்ற கிசுகிசுக்களை நான் பொருட்படுத்தவில்லை. மேலும் நான் மும்பையில் செட்டிலாகிவிட்டதாக பேசுகின்றனர். அங்கு எனக்கு நிறைய படங்கள் வருவதால் தங்க வேண்டி உள்ளது. முழுமையாக அங்கேயே தங்கிவிடவில்லை. மாதத்தில் 20 நாட்கள் சென்னையில்தான் இருக்கிறேன். இந்தியில் லக் படம் நன்றாக ஓடவில்லை. ஆனாலும் அங்குள்ள ரசிகர்கள் என்னை ஒரு நடிகையாக ஏற்றுக் கொண்டுவிட்டனர். அது பெரிய விஷயம்”என்றார்.