சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த நடிகை ஐஸ்வர்யா ராயின் சூட்கேஸ் விமான நிலையத்தில் மாயமானது. இதனால் நிகழ்ச்சியில் போட்டுக் கொள்ள டிரஸ் இல்லாமல் தவிப்புக்குள்ளானார் ஐஸ். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அவசரம் அவசரமாக டிரஸ்ஸை தயார் செய்து கொடுத்து ஐஸ்வர்யாவைக் காப்பாற்றினர். அவசர டிரஸ்ஸாக இருந்தாலும் அதிலும் அசத்தலாக தோன்றி அனைவரையும் அசத்தி விட்டார் ஐஸ்வர்யா.
சென்னையில் நடந்த ஒரு புரமோஷனல் நிகழ்ச்சிக்காக டெல்லியிலிருந்து வந்தார் ஐஸ்வர்யா. நிகழ்ச்சியில் போட்டுக் கொள்வதற்கான விசேஷ உடையுடன் சென்னை வந்து இறங்கிய ஐஸ்வர்யாவுக்கு அதிர்ச்சி. அவரது டிரஸ் இருந்த சூட்கேஸைக் காணவில்லை. இதனால் நிகழ்ச்சியில் போட்டுக் கொள்ள டிரஸ் இல்லாத நிலை ஏற்பட்டது.
இதனால் ஐஸ்வர்யாவுக்கு டென்ஷனாகி விட்டது. இருந்தாலும் அதை அடக்கிக் கொண்டு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களைத் தொடர்பு கொண்ட ஐஸ்வர்யா, நிலைமையை விளக்கி, நான் டிராக் சூட்டிலேயே நிகழ்ச்சிக்கு வந்து விடட்டா என்று கேட்டுள்ளார்.
இதைக் கேட்டு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு அதிர்ச்சியாகி விட்டது. கொஞ்சம் பொறுமையா இருங்க என்று ஐஸ்வர்யாவை சமாதானப்படுத்திய அவர்கள் அவசரம் அவசரமாக ஒரு புதிய டிசைனர் டிரஸ்ஸையும், அதற்கேற்ற ஷூவையும் தயார் செய்து ஐஸ்வர்யாவிடம் வழங்கி நிலைமையை சமாளித்தனர்.
ஐஸ்வர்யாவின் சூட்கேஸ் காணாமல் போனது தங்களது தவறுதான் என்பதை சம்பந்தப்பட்ட விமான நிறுவனம் ஒத்துக் கொண்டது. ஆனால், நிகழ்ச்சி முடிந்த பிறகுதான் அவரது பேக்கை கண்டுபிடித்துக் கொடுத்தனர் விமான நிறுவனத்தினர்.
சும்மா சொல்லக் கூடாது, நிலவை எத்தனை மேகம் வந்து மறைத்தாலும், நிலவின் பொலிவு அப்படியேதான் இருக்கும் என்பதைப் போல அவசரம் அவசரமாக கிடைத்த டிரஸ்ஸைப் போட்டுக் கொண்டு வந்தாலும், படு அட்டகாசமான அழகுடன் காட்சி அளித்தார் ஐஸ்வர்யா.
இருக்காதா பின்னே, உலக அழகின்னா சும்மாவா...!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக