பக்கங்கள்

15 டிசம்பர் 2010

திருநங்கை கல்கி திரைப்பட நாயகியாக புது அவதாரம் எடுத்துள்ளார்.

சகோதரி என்ற பவுண்டேஷனை நடத்தி வருபவர் திருநங்கை கல்கி. எம்.ஏ படித்தவரான இவர் திருநங்கைகளுக்கான திருமண இணையதளத்தையும் நடத்தி வருபவர். தமிழகத்தின் பிரபலமான திருநங்கைளில் இவரும் ஒருவர். திருநங்கைகள் நலனுக்காக பாடுபட்டு வருபவர்.
இந்த நிலையில் தற்போது கல்கி திரைப்பட நாயகியாகியுள்ளார். நர்த்தகி என்ற படத்தில் நாயகியாக நடிக்கிறார் கல்கி. திருநங்கைகள் குறித்த படம் இது. திருநங்கைகளை நல்ல வெளிச்சத்தில் காட்டும் கதை என்பதால் இப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதாக கூறுகிறார் கல்கவி.
புன்னகைப் பூ கீதா இப்படத்தை தயாரிக்கிறார். விஜயபத்மா இயக்குகிறார். திருநங்கைகளின் வாழ்க்கையை அழகுற சித்திரித்த முதல் படம் என்ற பெருமை இப்படத்திற்குக் கிடைக்கும் என்கிறார்கள் படக் குழுவினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக