
சென்னை, கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சுளா. இவரது மகள் சரண்யா(22). சினிமா நடிகை. "காதல், பேராண்மை படத்தில் நடித்துள்ள இவர், "மழைக்காலம் என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்த மஞ்சுளா, தன் மகள் சரண்யாவை காணவில்லை என்று புகார் அளித்தார். புகாரை அடுத்து, விசாரணை நடந்து வந்த நிலையில், தி.நகர் போலீஸ் நிலையம் வந்த நடிகை சரண்யா, உதவி கமிஷனர் மனோகரனை சந்தித்து தன் நிலை குறித்து விளக்கியுள்ளார்.
அப்போது சரண்யா, "என் தாயார் கூறியது போல் நான் யாரையும் காதலிக்கவில்லை. சினிமா தொடர்பாக என் அம்மாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனக்கு நிறைய படங்களில் வாய்ப்பு கிடைத்ததால், வீட்டில் இருந்து வெளியேறி வெளியில் தங்கி நடித்து வருகிறேன். நான் சென்னையில் தான் இருக்கிறேன். என் தாயார் என்னை துன்புறுத்துகிறார். நான் எல்லாவற்றையும், அவரிடம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை; அவருக்கு அறிவுரை கூறுங்கள் என்று கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக