பக்கங்கள்

12 டிசம்பர் 2010

சிம்புவுக்காக துடிக்கும் ஷம்மு!

சிம்புவுடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஷம்மு துடியாத் துடித்துக் கொண்டிருக்கிறாராம்.
சிம்புவுக்கு திரையுயலகில் நிறைய நண்பர்கள். அவர்களில் ஆண்களைப் போலவே பெண்களும் நிறையவே உள்ளனர். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் ஷம்மு.
மலையாளத்து ஷம்மு, காஞ்சிவரம் படம் மூலம் நடிகையாக வந்தவர். தொடர்ந்து சில படங்களில் நடித்த ஷம்மு இப்போது தமிழில் லைம் லைட்டில் இல்லை.
தமிழில் நிறையப் படங்கள் இல்லாதது குறித்து ஷம்முவிடம் கேட்டால், அப்படியெல்லாம் இல்லை. நல்ல கதைகளாக வரும் படங்களை மட்டுமே ஏற்று நடிக்க காத்திருக்கிறேன். கதைக்குத் தேவையான கவர்ச்சிக்கும் நான் தயார்தான். ஆனால் கவர்ச்சிக்காக கதையில் காட்சிகளைத் திணிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என்கிறார்.
நல்ல கதைக்காக காத்திருக்கும் ஷம்மு, சிம்புவுடனும் நடிக்க துடிப்புடன் இருக்கிறாராம்.
இவர் சிம்புவின் நெருங்கிய தோழிகளில் ஒருவர். ஆனால் இதுவரை தனக்கு சிம்பு ஒரு படத்தில் கூட வாய்ப்பு தரவில்லையே என்று ஏக்கப்படுகிறார் ஷம்மு. சிம்புவுக்கு நான் நெருங்கிய தோழிதான். ஆனால் இதுவரை அவர் என்னை ஒரு படத்தில் கூட நடிக்க கூப்பிடவில்லை. அவர் எப்போது கூப்பிட்டாலும் உடனே கால்ஷீட் தர தயாராகவே இருக்கிறேன். பிற படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் சரி, சிம்பு கேட்டால் எத்தனை நாள் வேண்டுமானாலும் கால்ஷீட் தரத் தயாராம் ஷம்மு.
ஷம்முவுக்கேற்ற ஜம்மென்ற கதை ரெடியானால் கூப்பிடலாம் என்று சிம்பு இருக்கிறாரோ என்னவோ!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக