பக்கங்கள்

09 டிசம்பர் 2010

கமல்,த்ரிஷா இருவரையும் கைதுசெய்ய வேண்டும்.

நடிகர் கமல்-த்ரிஷா நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் மன்மதன் அம்பு. இப்படத்தில் கமல் எழுதியுள்ள பாடல் ஒன்று பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.
கோவை இந்து மக்கள் கட்சியின் பிரச்சார அணி செயலாளர் கிருஷ்ண கனகராஜ் மற்றும் நிர்வாகிகள் இன்று காலை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்து புகார் மனு கொடுத்தனர்.
அப்புகார் மனுவில், ’’மன்மதன் அம்பு படத்தின் திரைப்பட பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது.
இந்த படத்தில் கமலஹாசன் எழுதியுள்ள “கண்ணோடு” எனத் தொடங்கும் பாடல் மிகவும் ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும், தமிழ் பெண்களை கேவலப்படுத்தும் வகையிலும் உள்ளது. மேலும் இந்து சமய உணர்வுகளை கொச்சைப்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டுள்ளது.
தமிழ் வேதமான பிரபந்தம் குறித்து அவதுறு பரப்பும் நோக்கத்தில் எழுதப்பட்டுள்ளது. தமிழ் பெண்கள் கடை பிடிக்கும் வரலட்சுமி நோன்பை அசிங்கப் படுத்தும் வகையிலும், வக்கிரமான பாலுணர்வை தூண்டும் வகையிலும் அமைந்துள்ளது.
இந்து சமய கடவுளான அரங்கநாதர் குறித்தும் அவதூறு செய்யப்பட்டுள்ளது. இது ரெங்கநாதரின் பக்தரான எனக்கும், எங்கள் அமைப்பை சேர்ந்தவர்களுக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் பெண்கள் இந்த பாடல் மற்றும் அந்த படத்தில் நடித்த நடிகர், நடிகைகள், இயக்குனர் ஆகியோர் மீது அதிருப்தி அடைந்துள்ளனர்.
இந்த பாடலை எழுதிய கமலஹாசன் மீது மத உணர்வை புண்படுத்துதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், வக்கிரமான பாலுணர்வுகளை தூண்டுதல் ஆகிய குற்றங்களை செய்ததற்காக உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும்’’என்று குறிப்பிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக