பக்கங்கள்

19 ஏப்ரல் 2010

ஐயப்ப சாமியும்,தம்பையா சத்திரமும்.




அது சபரிமலை விழாக்கோலம் பூண்டிருக்கும் காலம்,கொழும்பில்தம்பையா சத்திரத்தில் சிறி சபரிமலை சாஸ்தா பீடாதிபதி திரு,சாம்பசிவசரவணபவக்குருக்கள் தலைமையில்,சபரிமலை செல்வோருக்கான மாலை அணிவித்துநாற்பது நாள் நோன்பு வழிபாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தது,இந்த நாற்பது நாள்வழிபாடுகளில் நானும் லவனும் கலந்துகொள்வோம்,நாமும் நாற்பது நாளும்விரதமாகவே இருந்தோம்,பஜனைகளில் கலந்து பக்திபரவசத்தில் மிதப்போம்.எமது பக்தியை கண்ட குருசுவாமி,எம்மை ஐயப்ப தொண்டர்களாக ஏற்று எம்மில்விஷேட கவனம் செலுத்திவந்தார்,பூஜை வழிபாடுகள் நிறைவு பெற்றதும் எல்லோருக்கும் பிரசாதம் பரிமாறப்படும்,பெண்களுக்கு பெண்களும்,ஆண்களுக்கு ஆண்களுமே உணவுபரிமாறுவார்கள்,ஆண்களுக்கு நானும் லவனும்,பெண்களுக்கு வினோதினி,நிஷாந்தினி ஆகியோரும்உணவு பரிமாறுவோம்,இதில் வினோதினியின் தந்தையும்,நிஷாந்தினியின்அண்ணனும் மாலை அணிந்திருந்தனர்,தந்தையும் தொண்டராக இருந்தார்,நிஷாந்தியின்தந்தையை நாம் அங்கிள் என்றே அழைப்போம்,அங்கிள் இடத்திலும்,மற்றோர்இடத்திலும் நாம் நல்ல பெயர் எடுத்திருந்தோம்,சில பெண் பிள்ளைகளுக்குத்தான்எமது குறும்பு தெரியும்,பஜனை நேரங்களில் சாமியே சரணம் ஐயப்பா என்று சொல்வதுவழக்கம்,நாம் வினோதினி,நிஷாந்தினி ஆகியோரைப்பார்த்து ஸ்ஸ்ஸ் என்போம்அவர்கள் எம்மை நோக்கும்போது,சாமியே சரணம் ஐயப்பா என்போம்,இந்த ஸ்ஸ் ஒலிஅவர்களுக்கு நன்கு புரிந்திருந்தது,(ஐயப்பனிலும் பக்தியாகத்தான் இருந்தோம்)ஒரு நாள் பஜனை நேரம் தேங்காய் துண்டொன்றை நிஷாந்தினியின் தங்கைக்குஎறிந்தேன்,அது அவவின் பக்கத்து பிள்ளைமேல் விழுந்துவிட்டது,அவா தாயிடம்சொல்லிவிட்டா,ஆனாலும் தாயார் எதுவும் சொல்லவில்லை,நாம் திருடர் போல்விழி பிதுங்கி நின்றோம்,சாதாரணமாக உணவு பரிமாறி முடிந்ததும் எனக்கும் லவனுக்கும்வினோதினியும்,நிஷாந்தினியும் உணவு பரிமாறுவார்கள்,பின்னர் நாம் அவர்களுக்குபரிமாறுவோம்,ஒரே ஜாலிதான்,இதே நேரம் இன்னொரு பெண் பிள்ளை என்னை சைட்அடித்துக்கொண்டே இருப்பா எனக்கு கோபம் கோபமாக வரும்,ஏனென்றால் எனதுஇலக்கு வினோதினிதான்,ஒரு நாள் பஜனையின் போது லவன் எறிந்த சிரட்டை துண்டுபெண்களின் நடுவே விழுந்தது,இதை அங்கிள் கண்டுவிட்டார்,ஓடி வந்த அங்கிள் உன்னை நெடுகவும் கவனிக்கிறன் என்று சொல்லிக்கொண்டு எமக்கு பக்கத்தில்இருந்த சிறுவனுக்கு பளாரென கன்னத்தில் விட்டார்,செய்யாத தப்புக்கு அடிவாங்கியசிறுவன் அங்கிளை ஏசி,ஏசியே அழுதான்,வினோதினி,நிஷாந்தினிக்கு உண்மைதெரியுமென்பதால் எம்மை கடைக்கண்ணால் பார்த்து சிரித்தார்கள்,மஞ்சள் தண்ணீர் ஊற்றும் விழா நடைபெற்றது,அப்போ வினோதினி குடத்துடன்மஞ்சள் நீரை என்மேல் ஊற்றியதால் எனது வெள்ளை ஷேர்ட் மஞ்சளாகமாறிப்போனது,ஒருமுறை முன்நாள் அமைச்சர் எம்,எஸ்,செல்லச்சாமி என்முதுகில் தட்டி கோவிலில் நான் செயற்படும் விதம் கண்டு பாராட்டு தெரிவித்தார்.இன்னும் நிறைய கதையளக்கலாம்,மீண்டும் சந்திப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக