பக்கங்கள்

18 ஏப்ரல் 2010

படித்ததில் ரசித்தது!


ஒரு காட்டில் ஒருவன்,வேட்டை ஆடுவதற்காககொட்டகை அமைத்து தங்கியிருந்தான்,அந்த சமயத்தில்பொழுது சாயும் நேரத்தில் ஒரு இளம் பெண்,அவ்வழியாக தன்னந்தனியாக வந்து கொண்டிருந்தாள்,அவளை இடைமறித்த வேட்டைக்காரன்,"இப்போ இருட்டாகிவிட்டது இந்நேரத்தில் தன்னந்தனியாக எங்கே போகின்றாய்"எனக்கேட்டான்,அதற்கு அப்பெண்"இக்காட்டிற்கு அப்பால்எனது உறவினர் வீடு இருக்கின்றது,அங்கே போகின்றேன்"என்றாள்.அதற்கு வேட்டைக்காரன்,"இங்கே இனி கொடிய மிருகங்கள்எல்லாம் நடமாடும்,நீ திரும்பி போய் விட்டு காலையில் வா,அல்லது உனக்கு விருப்பமானால் எனது கொட்டகையில் தங்கிவிட்டு காலையில் போ"என்றான்.அவளும் அவனுடனே காட்டில் தங்குவதற்கு சம்மதிதாள்,அங்கே ஒரு கட்டில் மட்டும் இருந்ததால்,அவளை கட்டிலில்படுக்குமாறு கூறிவிட்டு,அவன் கட்டிலின் அருகே கீழே படுத்துஉறங்க ஆரம்பித்தான்,அப்போ பெரும் காற்றுடன் கூடிய மழைஅடிக்க தொடங்கியது,வேட்டைக்காரன் குளிரிலே நடுங்கத்தொடங்கினான்,இதைப்பார்த்த அப்பெண்,வேட்டைக்காரனை எழுந்து தனக்கருகேகட்டிலில் படுக்குமாறு கூறினாள்,வேட்டைக்காரனும்,"திருமணம் செய்தவர்கள் போல் படுக்கலாமா,திருமணம் செய்யாதவர்கள் போல் படுக்கலாமா?"என்றான்.அதற்கு அவள் "திருமணம் செய்தவர்கள் போலேயே படுப்போம்"என்றாள்.பின்னர் இருவரும் ஒருவர் முதுகை ஒருவருக்கு காட்டியவாறுகுறட்டை விட்டு உறங்க ஆரம்பித்தார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக