
நாம் அன்பு செலுத்தும் உள்ளங்கள் நல்லுள்ளங்களாக இருப்பின், துன்பங்களில் கூட இன்பங்களை காணலாம்.
28 ஏப்ரல் 2010
இப்படியும் நடக்கிறது!!!.

24 ஏப்ரல் 2010
முன்தினம் பார்த்தேன்!திரை விமர்சனம்.

சஞ்சய், சாஃப்ட்வேர் துறையில் வேலை பார்க்கும் காதல் கனவுகள் கொண்ட இளைஞன். கொஞ்சம் மாடர்னாக, அதே நேரத்தில் ஆச்சாரமான குடும்பத்துப் பெண்ணாகவும் இருக்கும் பெண்தான் அவரின் எதிர்பார்ப்பு. பூஜாவைச் சந்திக்கிறார். சஞ்சய் காதலில் விழும்போது, பூஜா பணத்தில் விழுகிறார். சஞ்சயின் எதிர்பார்ப்புக்கு எதிரான குணம்கொண்ட டான்ஸர் ஏக்தா அவரது வாழ்க்கையில் குறுக்கிடுகிறார். ஏக்தாவைக் காதலிக்க ஆரம்பிக்கிறார் சஞ்சய். முன்னாள் காதலன் மூலம் ரகசிய குழந்தை உண்டு என்று ஏக்தாவைச் சுற்றி புரளிகள். இந்த முரண்பாடுகள் ஒன்றையொன்று சந்தித்து வெட்டிக்கொள்ளும் புள்ளியில் ஏற்படும் கீறல், காதலில் விரிசலை உண்டாக்குகிறது. இறுதியாகத் தன் எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்யும் லிஸ்னாவை காதலித்துத் திருமணம் செய்கிறார் சஞ்சய். புரளி பொய் என்று தெரிந்து, ஏக்தாவைத் தேடிச் செல்கிறார் சஞ்சய். ஏக்தாவை அவர் சந்தித்தாரா என்பது இறுதிக்காட்சி!
சஞ்சய்... உற்சாகமான சிரிப்பு, காதல் குறித்த தேடலுடன் கூடிய துடிப்பு என பாத்திரத்துக்குப் பொருத்தம். ரயில்வே ஸ்டேஷனில் லிஸ்னாவைப் பார்த்துப் பதறும்போதும், ஏக்தாவிடம் பேச முடியாமல் தவிக்கும்போது நல்ல ஸ்கோர்.
மூன்று கதாநாயகிகளில் டான்ஸராக வரும் ஏக்தா மட்டும் தேறுகிறார். காதலில் தவிக்கும் போதும், காரணம் தெரியாமலேயே சஞ்சய்யைப் பிரியும்போதும் கண்களாலேயே உணர்ச்சிகளைக் கொட்டியிருக்கிறார். கதாநாயகனின் நண்பர்களுள் பொறாமை மற்றும் அலட்டல் பெண்ணாக வரும் யோகேஸ்வரி எதிர்பார்த்து ஏமாறும் இடங்களில் அசத்தியிருக்கிறார். மெதுவாக நகரும் படத்தைக் கலகலப்பூட்டி நகர்த்துவது சஞ்சய்யின் நண்பனாக வரும் சாய்பிரசாந்த். டான்ஸ் கிளாஸில் ஜோடி கிடைக்காமல் தவிக்கும்போதும், மிஸ்டர் பிஸ்டன் என்று கேர்ள் ஃப்ரெண்டைத் தேடும்போதும் தியேட்டரை அதிரவைக்கிறார் சாய்.
நாம் அதிகம் நேசிக்கிற ஒரு விஷயத்தை நாமே கொன்றுவிடுகிறோம் என்று ஆஸ்கர் வொயில்டின் பொன்மொழியைச் சொல்லி ஆரம்பிக்கிற வசனங்கள் அனைத்தும் அழுத்தமானவைகள்! இரண்டாம் பாதியில் உள்ள கலகலப்பு முதல் பாதியில் தவறுவதால் காட்சிகளின் நீளம் பொறுமையைச் சோதிக்கிறது. கதாபாத்திரங்கள் அனைத்தும் காதல், பெண், ஆண் என்று விடாமல் பேசித் தள்ளுகிறார்கள். அதைத் தவிர இளைஞர்களிடம் பேச வேற விஷயமே இல்லையா? ஏக்தாவைப் பிரிந்ததும், சஞ்சய் உடனடியாக லிஸ்னாவோடு காரணம் இல்லாமலேயே காதலில் விழுகிறார். பின்பு மீண்டும் ஏக்தாவைக் தேடித் தவிக்கிறார். ஏன் இந்தக் குழப்பம்?
தமன் சாய் இசையில் ஹாரிஸ் ஜெயராஜின் சாயல். மேற்கத்திய மெலடிகளால் கவர்கிறார். பின்னணி இசை மெலிதாகவும், இனிமையாகவும் இருக்கிறது. வின்சென்டின் கேமரா, பாடல் காட்சிகளில் வெளிநாட்டின் அழகை அப்படியே படம்பிடித்துக் காட்டியிருப்பது கொள்ளை அழகு!
நிறுத்தி, நிதானமாக ஃப்ளாஷ்பேக்கில் புதிய உத்தியில் கதை சொல்லி இருக்கிறார்கள். அதுதான் கதையின் பலம். பலவீனமும்கூட!
மனிதர்களின் வித்தியாசமான நுண்ணுணர்வுகளை நுணுக்கமாகப் பதிவு செய்திருக்கிறார் அறிமுக இயக்குனர் மகிழ் திருமேனி. காதல் என்பது ஒருமுறைதான் வரும் என்னும் வழக்கமான சினிமா பல்லவியில் இருந்து விலகிப் பயணிக்கிறது படம். ஐ.டி. இளைஞர்களின் அசலான வாழ்க்கையைக் குறையோ, மிகையோ இல்லாமல் பதிவு செய்திருப்பது பாராட்டுக்குரியது.
19 ஏப்ரல் 2010
ஐயப்ப சாமியும்,தம்பையா சத்திரமும்.
அது சபரிமலை விழாக்கோலம் பூண்டிருக்கும் காலம்,கொழும்பில்தம்பையா சத்திரத்தில் சிறி சபரிமலை சாஸ்தா பீடாதிபதி திரு,சாம்பசிவசரவணபவக்குருக்கள் தலைமையில்,சபரிமலை செல்வோருக்கான மாலை அணிவித்துநாற்பது நாள் நோன்பு வழிபாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தது,இந்த நாற்பது நாள்வழிபாடுகளில் நானும் லவனும் கலந்துகொள்வோம்,நாமும் நாற்பது நாளும்விரதமாகவே இருந்தோம்,பஜனைகளில் கலந்து பக்திபரவசத்தில் மிதப்போம்.எமது பக்தியை கண்ட குருசுவாமி,எம்மை ஐயப்ப தொண்டர்களாக ஏற்று எம்மில்விஷேட கவனம் செலுத்திவந்தார்,பூஜை வழிபாடுகள் நிறைவு பெற்றதும் எல்லோருக்கும் பிரசாதம் பரிமாறப்படும்,பெண்களுக்கு பெண்களும்,ஆண்களுக்கு ஆண்களுமே உணவுபரிமாறுவார்கள்,ஆண்களுக்கு நானும் லவனும்,பெண்களுக்கு வினோதினி,நிஷாந்தினி ஆகியோரும்உணவு பரிமாறுவோம்,இதில் வினோதினியின் தந்தையும்,நிஷாந்தினியின்அண்ணனும் மாலை அணிந்திருந்தனர்,தந்தையும் தொண்டராக இருந்தார்,நிஷாந்தியின்தந்தையை நாம் அங்கிள் என்றே அழைப்போம்,அங்கிள் இடத்திலும்,மற்றோர்இடத்திலும் நாம் நல்ல பெயர் எடுத்திருந்தோம்,சில பெண் பிள்ளைகளுக்குத்தான்எமது குறும்பு தெரியும்,பஜனை நேரங்களில் சாமியே சரணம் ஐயப்பா என்று சொல்வதுவழக்கம்,நாம் வினோதினி,நிஷாந்தினி ஆகியோரைப்பார்த்து ஸ்ஸ்ஸ் என்போம்அவர்கள் எம்மை நோக்கும்போது,சாமியே சரணம் ஐயப்பா என்போம்,இந்த ஸ்ஸ் ஒலிஅவர்களுக்கு நன்கு புரிந்திருந்தது,(ஐயப்பனிலும் பக்தியாகத்தான் இருந்தோம்)ஒரு நாள் பஜனை நேரம் தேங்காய் துண்டொன்றை நிஷாந்தினியின் தங்கைக்குஎறிந்தேன்,அது அவவின் பக்கத்து பிள்ளைமேல் விழுந்துவிட்டது,அவா தாயிடம்சொல்லிவிட்டா,ஆனாலும் தாயார் எதுவும் சொல்லவில்லை,நாம் திருடர் போல்விழி பிதுங்கி நின்றோம்,சாதாரணமாக உணவு பரிமாறி முடிந்ததும் எனக்கும் லவனுக்கும்வினோதினியும்,நிஷாந்தினியும் உணவு பரிமாறுவார்கள்,பின்னர் நாம் அவர்களுக்குபரிமாறுவோம்,ஒரே ஜாலிதான்,இதே நேரம் இன்னொரு பெண் பிள்ளை என்னை சைட்அடித்துக்கொண்டே இருப்பா எனக்கு கோபம் கோபமாக வரும்,ஏனென்றால் எனதுஇலக்கு வினோதினிதான்,ஒரு நாள் பஜனையின் போது லவன் எறிந்த சிரட்டை துண்டுபெண்களின் நடுவே விழுந்தது,இதை அங்கிள் கண்டுவிட்டார்,ஓடி வந்த அங்கிள் உன்னை நெடுகவும் கவனிக்கிறன் என்று சொல்லிக்கொண்டு எமக்கு பக்கத்தில்இருந்த சிறுவனுக்கு பளாரென கன்னத்தில் விட்டார்,செய்யாத தப்புக்கு அடிவாங்கியசிறுவன் அங்கிளை ஏசி,ஏசியே அழுதான்,வினோதினி,நிஷாந்தினிக்கு உண்மைதெரியுமென்பதால் எம்மை கடைக்கண்ணால் பார்த்து சிரித்தார்கள்,மஞ்சள் தண்ணீர் ஊற்றும் விழா நடைபெற்றது,அப்போ வினோதினி குடத்துடன்மஞ்சள் நீரை என்மேல் ஊற்றியதால் எனது வெள்ளை ஷேர்ட் மஞ்சளாகமாறிப்போனது,ஒருமுறை முன்நாள் அமைச்சர் எம்,எஸ்,செல்லச்சாமி என்முதுகில் தட்டி கோவிலில் நான் செயற்படும் விதம் கண்டு பாராட்டு தெரிவித்தார்.இன்னும் நிறைய கதையளக்கலாம்,மீண்டும் சந்திப்போம்.
18 ஏப்ரல் 2010
படித்ததில் ரசித்தது!

கன்டோஸ் முத்தம்!

காதலில் நகைச்சுவையும் இருக்கும்,ஆனால்
காதலே நகைச்சுவையானது அறிந்திருக்கிறிர்களா?
எனக்கு அந்த சந்தர்ப்பம் கிடைத்தது.
நானும்,எனது நண்பர்கள் மூவரும் ஒரு புற் தரையில்
அமர்ந்து உரையாடிக்கொண்டிருந்தோம்,அப்பொழுது
காதல் அனுபவங்கள் பற்றி,எமக்குள் நடந்த சம்பவங்களை
கதைத்தோம்,ஆனால் காந்தன் என்ற நண்பன் மட்டும்
எதுவும் பேசாதிருந்தான்,உனக்கு காதலி இல்லையா என
நாம் அவனிடம் கேட்டோம்,ஆம் அவா யாழ்ப்பாணத்தில்
இருக்கிறா என அவன் சொன்னான்,மேலும் தொடர்ந்த அவன்,
எனது காதலி இன்னொரு பெடியனை கொஞ்ச்சிக்கொண்டிருந்ததை
நான் கண்டேன் என்றான்,இன்னொருவனை கொஞ்சி கொண்டிருந்தவள்
என்கிற,உனது காதலி என்கிற என்னடா உனது கதை என்றோம்,
அதற்கு அவன் சொன்னான்,அந்தப்பெடியன் அவளுக்கு கண்டோஸ்
கொடுத்தவனாம் அதுக்குதான் முத்தம் கொடுத்தாளாம்,
ஆனால் அவளது தலைக்கு கீழ் எல்லாம் எனக்கு என்று அவனுக்கு
சொன்னாளாம் என்றான்,நாங்கள் விழுந்து விழுந்து சிரித்தோம்,
அப்போ நீ அவளைத்தான் கல்யாணம் செய்வியா என்றோம்,
ஓம்அவளைத்தான் செய்வன்,ஏனென்றால் நானும் முதல் முத்தம்
கொடுத்த நான் தானே என்றான் அவன்.
அடுத்த நண்பன் ராஜு சொன்னான்,டேய் உனது வீட்டுக்கு பக்கத்தில
தானடா நானும் வீடு எடுக்கப்போறன் என்று.
எப்படி காதல் கதை?
ரசித்திருந்தால் எமக்கும் ஒரு வரி எழுதுங்க!
17 ஏப்ரல் 2010
கதையளப்போம்!
