பக்கங்கள்

22 ஜூலை 2016

மகனை சுட்டுக்கொல்லுமாறு குவான்டீலின் தந்தை குமுறல்!

சகோதரியை ஆணவக்கொலை செய்த தன் மகனை சுட்டு கொல்ல வேண்டும் என்று பாகிஸ்தானின் சர்ச்சைக்குரிய பிரபல மாடல் அழகி குவான்டீல் பலூச்சின் தந்தை கூறியுள்ளார். பாகிஸ்தானில் செலிபிரிட்டி மாடல் அழகியாக வலம் வந்தவர் குவாண்டீல் பலூச். இவர் கடந்த 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது பாகிஸ்தான் அணி இந்தியாவை தோற்கடித்தால் நிர்வாண நடனம் ஆடத்தயாராக இருப்பதாக கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார்.தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சியான படங்களையும், வீடியோக்களையும் பகிர்ந்து சலசலப்பை உருவாக்கி வந்தார். மேலும், பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டனாக இருந்த ஷாஹித் அப்ரிதியைத் திட்டுவது, பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிப்பது என தொடர்ந்து செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் ஜூலை 14 ஆம் தேதி அவரது வீட்டில் இறந்து கிடந்தார். இது குறித்து போலீசார் விசாரித்ததில், குடும்பத்திற்கு அவமானம் ஏற்படுத்தும் விதத்தில் நடந்துகொண்டதாக அவரது அண்ணன் வாசிம், பலூச்சை ஆணவக் கொலை செய்தது தெரியவந்தது. தற்போது வாசிம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கொலை செய்வதற்கு முன்பு அவருக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டதாகவும், இதனால் தான்தான் கொலை செய்தேன் என்று தனது தங்கைக்குத் தெரியாது என்றும் அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.இந்நிலையில் குவாண்டீலின் தந்தை அன்வர் ஆசிம், சகோதரியை ஆணவக்கொலை செய்த தன் மகனை சுட்டுக்கொல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில் "அவனை பார்த்தவுடன் சுட்டுக்கொல்ல வேண்டும். எங்களுக்கு போதை மருந்தை கொடுத்துவிட்டு, என் மகளை கொலை செய்து விட்டான். அவளை கழுத்தை நெரித்த போது எங்களை கூப்பிட்டு இருப்பாள் எங்களுக்கு கேட்கவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

16 ஜூலை 2016

பாகிஸ்தானின் பிரபல மொடல் அழகி கொலை!

http://img.vikatan.com/news/2016/03/18/images/5.jpgபாகிஸ்தானின் பிரபல மாடல் மற்றும் சோஷியல் மீடியா பிரபலமுமான குவான்டீல் பலோச், அவரது சொந்த சகோதரனால் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார். அவரின், நடவடிக்கையால் அதிருப்தியடைந்த சகோதரனால், குவான்டீல் 'கவுரவ கொலை' செய்யப்பட்டதாக தெரிகிறது. சோஷியல் மீடியாவான பேஸ்புக் உள்ளிட்டவற்றில் எதிர் கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு அவ்வப்போது பரபரப்பை கிளப்பி வந்தவர் குவான்டீல். மாடல் நடிகையாகவும் பிரபலமானவர்.கடந்த வரும் நடைபெற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியாவை பாகிஸ்தான் வென்றால், நிர்வாணமாக ஓட தயார் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தியவர் இவர். ஆனால், இந்தியா அந்த போட்டியில் வென்றதால், பல ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில், முல்தானில் பெற்றோர் வசித்து வருவதால் ரம்ஜான் கொண்டாக அங்கு சென்றிருந்தார் குவான்டீல். நேற்றிரவு அவர் நன்கு தூங்கிக் கொண்டிருந்த நிலையில் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார் சகோதரர் வசீம். இன்று காலைதான் இதுகுறித்து தெரியவந்தது. போலீசார் தலைமறைவாக உள்ள வசீமை தேடி வருகிறார்கள். ஒரு பெண்ணாக இருந்து கொண்டு குவான்டீல் இதுபோன்று நடந்து கொள்ளக்கூடாது என்று வசீம் பலமுறை எச்சரித்ததாகவும், அதை குவான்டீல் புறம் தள்ளியதால் 'கவுரவ கொலை' செய்யப்பட்டுள்ளதாகவும், பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

26 மே 2016

சிம்பு நயன்தாரா நடிப்பில் இது நம்ம ஆளு!

இது நம்ம ஆளு
சிம்பு,நயன்தாரா நடிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்புவின் தம்பி குறளரசன் இசையமைப்பில் நாளை வெளியாகிறது இது நம்ம ஆளு திரைப்படம். மூன்று வருடமாக இன்று நாளை என இழுத்தடித்து வந்த இந்த திரைப்படம் ஒரு வழியாக நாளை வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிம்புவும், நயன்தாராவும் ஒரு காலத்தில் காதலர்களாக இருந்தவர்கள். பிரிந்து விட்ட பின்னர் படத்திற்காக இருவரும் சேர்ந்து நடித்திருப்பதால் இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. போதா குறைக்கு மூன்று வருட போராட்டத்திற்கு பின்னர் படம் வெளிவருவதால் சிம்பு ரசிகர்கள் அதீத எதிர்பார்ப்பில் உள்ளனர். சிம்பு, நயன்தாரா இருவருமே அதிகமாக கிசுகிசுக்கப்படும் பிரபலங்கள் இருவரும் சேர்ந்து நடித்திருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என கூறப்படுகிறது. சிம்புவுக்கு தற்போது திரைப்படங்கள் தோல்வி முகமாக இருந்தாலும், தொடர் வெற்றிகளை குவித்து வரும் நயன்தாரா இந்த படத்தில் நடித்திருப்பதால் இந்த படம் நிச்சயம் வெற்றி பெற்று சிம்புக்கு புதிய சினிமா பாதையை உருவாக்கும் என கூறுகிறார்கள். காதலை மைய கருத்தாக கொண்டு நான் செதுக்கியுள்ள திரைப்படம் தான் இது நம்ம ஆளு. ஐடி நிறுவனங்களில் வேலைக்கு செல்லும் தம்பதியர்களின் காதல் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என்ற கேள்வி எனக்குள் வெகு நாட்களாக இருந்து வந்தது. எனது அந்த தேடலின் முயற்சி தான் இந்த 50 சதவீத காமெடி மற்றும் 50 சதவீத காதல் திரைப்படம் என்கிறார் இந்த படத்தின் இயக்குனர் பாண்டிராஜ். மேலும், படத்தில் நாயகன், நாயகியாக நடித்த சிம்பு, நயன்தாராவிற்கு நான் காதல் காட்சிகளை சொல்லி தர வேண்டும் என்ற அவசியமே இல்லை. அவர்கள் இருவரின் சிரிப்பு, காதல் பார்வை, செல்ல கோபம் என அனைத்தும் படத்தின் லவ் கெமிஸ்டிரிக்கு முதுகெலும்பாக அமைந்துள்ளது. அவர்களின் காதல் காட்சிகள் யாவும் நடிப்பு போலவே இல்லை. பத்து வருடத்திற்கு பிறகு இவர்கள் இணைந்து நடிக்கும் இந்த படம், எது மாதிரியும் இல்லாம, புது மாதிரியும் இல்லாம, ஒரு மாதிரியா இருக்கும்" என்றார் பாண்டிராஜ். இயக்குனர் பாண்டிராஜ் முன்னாள் காதலர்களை வைத்து இயக்கி இருக்கும் இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. படம் எப்படியோ, சிம்பு, நயன்தாரா இருவரையும் திரையில் சேர்ந்து பார்க்கவே கூட்டம் அள்ளும் என்பதில் சந்தேகம் இல்லை.

16 மே 2016

நிச்சயமாக இது வித்தியாசமான தேர்தல்-ரஜினிகாந்த்

நிச்சயமாக இது வித்தியாசமான தேர்தல்தான் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார். தமிழகத்தில் 232 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இன்று காலை தொடங்கியது. தஞ்சாவூர், அரவக்குறிச்சிக்கு மட்டும் வரும் 23-ம் தேதி தேர்தல் நடக்கவிருக்கிறது. நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் முதல் ஆளாக வாக்குப்பதிவு செய்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அனைவரும் தங்களது கடமையை உணர்ந்து வாக்களிக்க வேண்டும். அது நமது கடமை. நிச்சயமாக இம்முறை வித்தியாசமான தேர்தல் தான்," என்று தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து பணம் பட்டுவாடா குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, "அது குறித்து கருத்துக்கூற விரும்பவில்லை" என்றார் ரஜினி.

05 பிப்ரவரி 2016

காதுக்குள் வாழ்க்கை நடத்திய எறும்புகள்(காணொளி)

இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றான குஜராத்தில் வாழ்ந்து வரும் பன்னிரண்டு வயது சிறுமி ஒருவரின் காதுக்குள் எறும்புகள் குடித்தனம் நடத்தி வந்தமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்தச் சிறுமியின் காதுக்குள் இருந்து ஆயிரம் வரையான எறும்புகள் மருத்துவர்களால் வெளியே எடுக்கப்பட்டுள்ளது.அதன் காணொளியை இங்கே காணலாம்.

11 ஜனவரி 2016

பாரதிராஜாவின் கனவை நனவாக்குகிறார் பாலா!

‘என் வாழ்க்கைக்கு அர்த்தம் தரப்போற விஷயம் அது மட்டும்தான். நானும் இளையராஜாவும் மீண்டும் இணையப் போறோம். சேதுபதிக் கிழவன் மாதிரி நானே நடிக்கிறேன். போலீஸ்காரன் வேஷத்தில் சேரன் நடிக்கிறார். ரத்னகுமார் வசனம் எழுதுகிறார். ‘குற்றப் பரம்பரை’ படம் எடுக்காம என் திரையுலக வாழ்க்கை நிறைவு பெறாது. பிரிட்டிஷ் காலத்துக் கதை. மண்ணைப் பிழிஞ்சு, மனசைக் கரைச்சு செய்திருக்கேன்!’ என்று 2007-ல் வார இதழ் ஒன்றுக்குப் பேட்டி அளித்தார் இயக்குநர் பாரதிராஜா. இந்நிலையில், பாரதிராஜாவின் கனவுப்படத்தை இயக்க முன் வந்துள்ளார் இயக்குநர் பாலா. இதற்காக ஒரு பெரிய நடிகர் பட்டாளத்தை அவர் ஒப்பந்தம் செய்துள்ளார். விஷால், ஆர்யா, அதர்வா, ராணா, அரவிந்த் சாமி ஆகியோர் பாலாவின் இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இந்தக் கூட்டணியில் மனிஷா கொய்ராலாவும் இணைந்துள்ளார் என்று புதிய தகவல் கிடைத்துள்ளது. மேலும் ஓர் இளம் நடிகை இந்தப் படத்தில் நடிக்க உள்ளார். பாரதிராஜாவின் கனவுப் படம் என்று கூறப்படும் குற்றப் பரம்பரை கதையை இயக்குநர் பாலா எப்படி கையாளப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பு இப்போதிருந்தே உருவாகியுள்ளது.

26 செப்டம்பர் 2015

நயன்தாராவால் போக்கு வரத்துத் தடை!

சேலத்தில் புடவைக் கடை திறப்பு விழாவில் கலந்து கொள்ள வந்த நடிகை நயன்தாரவைப் பார்க்க கூட்டம் குவிந்ததால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். சேலம் புதிய பேருந்து நிலையம் எதிரே புடவைக் கடை ஒன்றை நடிகை நயன்தாரா இன்று காலை திறந்து வைத்தார். அப்போது நயன்தாராவை நேரில் பார்த்து விட வேண்டும் என்ற ஆர்வத்தில் ஆயிரக்கணக்கில் இளைஞர்கள், இளம்பெண்கள் மட்டுமின்றி சிறுவர்கள் முதல்
பள்ளி,கல்லூரி மாணவர்கள் வரை கூட்டம் அலைமோதியது.இதனால் சேலம் பேருந்து நிலையத்திற்கு செல்ல வேண்டிய பயணிகள் பெண்கள்,கைக் குழந்தையோடு நெரிசலில் சிக்கி தவித்தனர்.இளம் பெண்கள் நயன் தாரவை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இளைஞர்களின் மேல் விழுந்து நெரிசலில் சிக்கிய கொடுமையும் அரங்கேறியுள்ளது. மேலும் கூட்ட நெரிசலில் பல பெண்களின் நகைகள் களவு போனதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.இதுதான்யா 'தானா'வந்த கூட்டம் என்ற கமெண்டும் கூட்டத்தில் எதிரொலிக்கவே செய்தது.

26 அக்டோபர் 2014

பூஜா ஈழத் தமிழரைக் கரம் பிடிக்கிறார்!

பூஜா
வரும் டிசம்பர் மாதம் நடிகை பூஜாவுக்கு திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் ஜெ.ஜெ. படம் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா. இவரது தாய் பெங்களூர், தந்தை சிங்களர் ஆவார். உள்ளம் கேட்குமே, ஜித்தன், தம்பி, நான் கடவுள், விடியும் முன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். பாலா இயக்கத்தில் ஆர்யா நடித்திருந்த நான் கடவுள் படத்தில் பார்வையற்ற பெண்ணாக நடித்த பூஜாவின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டதஇந்நிலையில், சில காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த பூஜா, மீண்டும் விடியும் முன் படம் மூலம் தமிழில் மறு பிரவேசம் செய்தார்.இனி தொடர்ந்து தமிழ்ப் படங்களில் தோன்றுவார் என எதிர்பார்த்த நிலையில், தற்போது பூஜாவிற்கு திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இது காதல் திருமணம் என்றும், மாப்பிள்ளையின் பெயர் தீபக் சண்முகநாதன் என்றும் கூறப்படுகிறது. ஈழத்தைச் சேர்ந்த தீபக், மாடலிங் மற்றும் பேஷன் டிசைனராக இருக்கிறார்.தீபக் தனது பிறந்தநாளான அக்டோபர் 17ம் தேதி தனது காதலை பூஜாவிடம் தெரிவித்ததாகவும், அதற்கு பூஜா ஓகே சொன்னதாகவும் கூறப்படுகிறது.அடுத்த மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து டிசம்பர் மாதம் அல்லது அடுத்தாண்டு துவக்கத்தில் திருமணம் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.பொதுவாக இது போன்ற திருமணம், காதல் குறித்த தகவல்கள் ஊடகங்களில் வெளிவரும் போது சம்பந்தப்பட்ட பிரபலங்கள் ஆம், இல்லை என விளக்கமளிப்பர். ஆனால், பூஜா தொடர்ந்து மவுனம் சாதிப்பது திருமணத் தகவலை உறுதி செய்யும் விதத்தில் அமைந்துள்ளது.

16 அக்டோபர் 2014

கமலஹாஷனுக்கு ஏற்பட்ட மூச்சுத்திணறலலால் பரபரப்பு!

பாபநாசம் படப்பிடிப்பின் போது நடிகர் கமல்ஹாசன் மூக்கில், நடிகர் கலாபவன் மணி ஓங்கிக் குத்தும் காட்சியின்போது மூக்கில் பொருத்தப்பட்டிருந்த ரப்பர் உள்ளே போய் விட்டதால் கமல்ஹாசனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவரை கன்னியாகுமரிக்குக் கொண்டு சென்று அங்கு மருத்துவமனையில் அனுமதித்து எண்டோஸ்கோப்பி மூலம் ரப்பரை வெளியே எடுத்த பிறகே அவர் அபாய கட்டத்தைத் தாண்டி உயிர் பிழைத்தார்.மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘திரிஷ்யம்' படம் தமிழில் ‘பாபநாசம்' என்ற பெயரில் தயாராகி வருகிறது. தமிழில் கமலஹாசன், கவுதமி ஆகியோர் நடித்து வருகின்றனர்.இந்த படத்தின் படப்பிடிப்பு நெல்லை மாவட்டம் நாங்குநேரி உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது. தொடர்ந்து கேரளாவிலும் படப்பிடிப்பு நடந்து வருகிறது. சமீபத்தில் கமலஹாசனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் ஒருமாதமாக ஒத்திவைக்கப்பட்ட படப்பிடிப்பு கடந்த வாரம் மீண்டும் தொடங்கியது.

கேரளாவில் படப்பிடிப்பு:
தொடுபுழாவில் உள்ள ஒரு வீட்டில் நேற்று இதற்கான படப்பிடிப்பு நடைபெற்றது. போலீசார் தாக்கியதில் மூக்கில் ரத்தம் உறைந்து கட்டியாக இருப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது.

ஓங்கிக் குத்திய கலாபவன் மணி:
இந்தக் காட்சியில் கமல்ஹாசனும், கலாபவன் மணி உள்ளிட்டோரும் நடித்தனர். பாதுகாப்புக்காக கமல்ஹாசன் மூக்கில் ரப்பர் பொருத்தப்பட்டிருந்தது. காட்சியின்போது கலாபவன் மணி ஓங்கிக் குத்தினார். ஆனால் சற்று பலமாக குத்தி விட்டார். இதனால் ரப்பர் கமல்ஹாசனின் மூக்குக்குள் போய் விட்டது. இதனால் அவர் மூச்சு விட முடியாமல் திணறினார். இதனால் படப்பிடிப்பில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ரப்பர் அகற்றம்: 
பதறிப்போன படப்பிடிப்பு குழுவினர் அவரை கன்னியாகுமரிக்குக் கொண்டு சென்றனர். அங்கு மருத்துவமனையில் கமல்ஹாசன் சேர்க்கப்பட்டார். உடனடியாக அவருக்கு எண்டோஸ்கோப்பி மூலம் ஆபரேஷன் செய்து ரப்பரை வெளியே எடுத்தனர். ஒய்வுக்கு பின்னர் சில மணி நேர சிகிச்சைக்கு பின்னர் கமலஹாசன் இயல்புநிலைக்கு திரும்பினார். பின்னர் அங்கேயே சிறிது நேரம் ஓய்வெடுத்தார்.தனக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட பின்னர் அவர் அங்கிருந்து மீண்டும் படப்பிடிப்பு தளத்துக்கு புறப்பட்டுச் சென்றார்.

13 ஆகஸ்ட் 2014

பச்சையாக வலம்வரும் ஸ்ருதி!

நடிகை ஸ்ருதி ஹாசன் பச்சை குத்துவதில் தனி ஆர்வம் கொண்டவர், ஆனந்தம் கொண்டவர். இப்போது இவரது உடலின் 5 இடங்களை விதம் விதமான பச்சை அலங்கரிக்கிறதாம். முதலில் முதுகில் தமிழில் பச்சை குத்தியிருந்தார் ஸ்ருதி ஹாசன். தற்போது மேலும் நான்கு விதமான பச்சைகளைக் குத்தி பச்சை ஹாசனாக மாறியுள்ளார். நடிகைகள் பச்சை குத்துவது பேஷனாகி வருகிறது. ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை விதம் விதமான பச்சைகளுடன் நடமாடும் நடிகைகள் பலர்.ஸ்ருதி ஹாசன் முதலில் பச்சை குத்தியது அவரது முதுகில்தான். தமிழில் அதைக் குத்தியுள்ளார்.பின்னர் கையில் ரோஜா பூவை பச்சை குத்திக் கொண்டார். பின்னர் காலிலும் ஒரு பச்சையைப் பதித்தார். தற்போது 5 ஆவது முறையாக தநது கையில் ஒரு பச்சையைப் பதித்துள்ளார்.திரிஷாதான் இந்த வகையில் முதல்வர், முன்னணியில் இருப்பவர். இவர் தனது மார்பில் நெமோ என்ற மீனைப் பச்சை குத்தி அசத்தியவர். திரிஷாவின் கணக்கு இந்த வகையில் மூன்று பச்சைகளாம்.நடிகை நயன்தாரா பிரபுதேவாவை தீவிரமாக காதலித்தபோது தனது கையில் பிரபு என்று பச்சை குத்தினார். காதல் முறிவுக்குப் பின்னர் அதை அழிக்க முடியாமல் அவஸ்தைப்பட்டார்.நமீதா தனது அகன்ற முதுகில் பச்சை குத்தி வைத்துள்ளார்.ரீமா சென் தனது கவர்ச்சிகரமான வயிற்றுப் பகுதியில் அழகிய பறவையை பச்சை குத்தி வைத்துள்ளார்.தமிழ் சினிமாவில் இப்படி பச்சை நாயகியாக வலம் வருவோர் வரிசையில் குஷ்பு, சிம்ரன், சினேகா, பிரியா மணி என பலரை காணலாம் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

31 ஜூலை 2014

வெற்றி வலம் வரும் ப்ரியா ஆனந்த்!

ப்ரியா ஆனந்த்
அரிமா நம்பியைத் தொடர்ந்து ப்ரியா ஆனந்த் நடித்த இரு படங்கள் அடுத்தடுத்து வெளியாகின்றன. தமிழில் ஒரு காலத்தில் தோல்விப் பட நடிகையாகப் பார்க்கப்பட்டவர் ப்ரியா ஆனந்த். அவர் அறிமுகமான வாமனன் படம் தொடங்கி அடுத்தடுத்து படங்கள் சரியாகப் போகாத நிலையில், அவர் சிவகார்த்திகேயனுடன் நடித்த எதிர்நீச்சல் கைகொடுத்தது. அதைத் தொடர்ந்து அவருக்கு ஏராளமான படங்களில் வாய்ப்பு கிடைத்தது.சமீபத்தில் அவர் விக்ரம் பிரபுவுடன் இணைந்து நடித்த அரிமா நம்பி வெளியானது. இந்தப் படம் வர்த்தக ரீதியாக நல்ல வெற்றிப் படமாக அமைந்துள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து ப்ரியா ஆனந்த் நடித்த இரு படங்கள் வெளியாகின்றன. வரும் ஆகஸ்ட் 29-ம் தேதி இரும்புக் குதிரை படம் வெளியாகிறது. இதில் பிரான்சுக்குப் போகும் பாண்டிச்சேரி பெண்ணாக நடித்துள்ளார். அதர்வா நாயகனாக நடித்துள்ளார். அதைத் தொடர்ந்து செப்டம்பர் 5-ம் தேதி ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படம் வெளியாகிறது. இதில் விமலுக்கு ஜோடியாக, மருத்துவக் கல்லூரி மாணவியாக நடித்துள்ளார் ப்ரியா. இந்தப் படங்களைத் தொடர்ந்து ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் அவர் நடித்துள்ள வை ராஜா வை படம் வெளியாகிறது.

23 ஜூன் 2014

இயக்குநர் ராம நாராயணன் மரணம்!

உலக சாதனை படைத்த இயக்குநர் ராம நாராயணன் மரணம்... அதிர்ச்சியில் தமிழ் சினிமா!பிரபல திரைப்பட இயக்குநரான ராம. நாராயணன் மாரடைப்பால் காலமானார். சிங்கப்பூரில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர் அங்கு மரணமடைந்துள்ளார். 9 மொழிகளில் 125 படங்களை இயக்கி சாதனை படைத்தவர் ராம.நாராயணன். இந்தியாவிலேயே அதிக படங்களை இயக்கிய இயக்குநர் இவர்தான்.குறிப்பாக விலங்குகளை வைத்தும், கிராபிக்ஸ் மூலமும் பல படங்களை இயக்கி அனைவரையும் ரசிக்க வைத்தவர். விஜயகாந்த்துக்கு ஆரம்ப காலத்தில் ஏற்றம் கொடுத்த பல படங்களை இயக்கியவர். சர்க்கரை வியாதி மற்றும் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த அவரை சிகிச்சைக்காக சிங்கப்பூர் அழைத்துச் சென்றிருந்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மாரடைப்பால் மரணமடைந்தார். ராம நாராயணனிடம் உதவியாளராக இருந்தவர்தான் நடிகர் ராமராஜன். ஆரம்பத்தில் உதவி இயக்குநராக இருந்து பின்னர் இயக்குநராக மாறி அதன் பின்னர் ராமராஜன் நடிகரானார் என்பது நினைவிருக்கலாம். இதேபோல இன்னொரு சிஷ்யர் இயக்குநர் பேரரசு. ராம நாராயணனின் 30 படங்களில் பேரரசு உதவி இயக்குநராக இருந்துள்ளார். 1989-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ராம.நாராயணன் காரைக்குடி தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1990-ம் ஆண்டு தமிழக அரசின் `கலைமாமணி' விருது இவருக்கு கிடைத்தது. 1995-ம் ஆண்டு இயல், இசை, நாடக மன்ற தலைவராக பதவி வகித்தார். 2005-ம் ஆண்டு முதல் திரைப்பட தணிக்கை குழு உறுப்பினராக இருந்து வருகிறார். ராம.நாராயணனின் மனைவி பெயர் ராதா. மகன் ராமசாமி. மகள்கள் அன்பு, உமா. அனைவருக்கும் திருமணமாகி விட்டது.

16 ஜூன் 2014

இனியா வீட்டில் திருடி மாட்டிய அக்கா கணவன்!

இனியா
இனியாவின் அக்கா சுவாதிக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையே, அவர் வீட்டில் கொள்ளையடித்தது அம்பலமாகியுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த மாப்பிள்ளையை கைது செய்து 'மாமியார் வீட்டுக்கு' அனுப்பினர் போலீசார். தமிழில் பிரபல நடிகையாகத் திகழும் இனியா, கேரளாவைச் சேர்ந்தவர். இவரது சொந்த ஊர் திருவனந்தபுரம் கரமணை அருகே உள்ள மருதூர்க்க கடவு கிராமம்.இனியாவுக்கு சுவாதி என்ற அக்கா உள்ளார். மலையாள டி.வி. தொடர்களில் நடித்து வருகிறார். நடிகை சுவாதியும் ஷாபின் (வயது 32) என்பவரும் காதலித்து வந்தனர். ஷாபின் தங்கள் அளவுக்கு வசதியான குடும்பத்தை சேர்ந்தவர் அல்ல என்பதால் நடிகை இனியாவின் பெற்றோர் ஆரம்பத்தில் இந்த காதலை ஏற்கவில்லை. ஆனால் ஷாபினைத்தான் திருமணம் செய்வேன் என்று உறுதியாக சுவாதி இருந்ததால் வேறு வழியின்றி கடந்த மே 29 - ந் தேதி, நடிகை சுவாதி - ஷாபின் திருமண நிச்சயதார்த்தம் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு பெரிய நட்சத்திர ஓட்டலில் கோலாகலமாக நடந்தது. இருவருக்கும் இந்த மாத இறுதியில் திருமணம் செய்யவும் முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி நடிகை இனியா குடும்பத்தினர் இரவுக் காட்சி படம் பார்க்க சென்ற போது, அவர்களது வீட்டில் இருந்த ரூ.5 லட்சம் ரொக்கம் மற்றும் 10 பவுன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இதுபற்றி கரமணை போலீசில் புகார் செய்தனர் இனியா குடும்பத்தினர். திருவனந்தபுரம் துறைமுக உதவி போலீஸ் கமிஷனர் ஸ்ரீகுமார் தலைமையிலான போலீஸ் படையினர் இந்த கொள்ளை பற்றி தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது இந்த கொள்ளையில் ஈடுபட்டது நடிகை இனியாவின் அக்கா சுவாதிக்கு நிச்சயிக்கப்பட்ட ஷாபின்தான் என்ற உண்மை வெளியாகி, அதிரவைத்தது. உடனடியாக போலீசார் ஷாபினையும் அவருக்கு உதவிய அவரது நண்பர் சஜியையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க, சுவாதியைப் பயன்படுத்த ஷாபின் முயன்றது தெரிய வந்தது. சுவாதியுடன் நிச்சயதார்த்தம் முடிந்ததுமே, அந்த வீட்டில் பணம், நகையைக் கொள்ளையிட திட்டமிட்டுள்ளார். முதலில் வீட்டுச் சாவியைத் திருடி, அதை வைத்து போலி சாவி தயாரித்துள்ளார். பின்னர் அந்த சாவியை தன் கூட்டாளிகள் சஜி, ராஜன், சஜு ஆகிய மூவரிடமும் கொடுத்து வைத்திருந்தார்.கொள்ளையடிக்க ஒரு நாளைத் தேர்வு செய்தவர், அந்த நாளில் இனியா, சுவாதி மற்றும் குடும்பத்தினர் அனைவருடனும் இரவுக் காட்சி சினிமா பார்க்க சென்றுள்ளார். வீட்டில் யாருமில்லாத அந்த மூன்று மணி நேரத்துக்குள் பக்காவாக திட்டத்தை அரங்கேற்றியுள்ளார். கொள்ளையடித்த பணத்தில் ஷாபினுக்கு வந்த பங்கு ரூ.2 லட்சத்து 51 ஆயிரமாம். மீதியை கூட்டாளிகள் பிரித்துக் கொண்டார்களாம். போலீஸ் விசாரணையில் இந்த உண்மைகளைக் கக்கியுள்ளார் ஷாபின். அவரையும் அவர் கூட்டாளி சஜியையும் கைது செய்துள்ள போலீஸ், தலைமறைவாக உள்ள ராஜன் மற்றும் சஜூவைத் தேடி வருகின்றனர். இந்த கொள்ளை மூலம், நடிகை சுவாதி திருமணம் ரத்தாக வேண்டிய நிலைக்கு வந்துவிட்டது.

13 ஜூன் 2014

ஸ்ருதியின் அறைக்கதவு தட்டப்பட்டதால் பரபரப்பு!

ஸ்ருதி
டேராடூனில் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த நடிகை ஸ்ருதி ஹாஸனின் அறைக் கதவை ரசிகர் ஒருவர் குடிபோதையில் தட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை ஸ்ருதி ஹாஸன் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் திக்மான்ஷு துலியாவின் யாரா என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் நடந்தது.இதற்காக ஸ்ருதி டேராடூனில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கி படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இந்நிலையில் நள்ளிரவில் ஹரியானா மாநிலம் சிர்சா நகரைச் சேர்ந்த ரசிகர் ஒருவர் குடிபோதையில் ஸ்ருதி தங்கிய அறையின் கதவை தட்டிக் கொண்டே இருந்துள்ளார். இதனால் பதட்டமடைந்த ஸ்ருதி இந்த சம்பவம் குறித்து முசோரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். முன்னதாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஸ்ருதியை நீண்ட நாட்களாக பின் தொடர்ந்த ஒருவர் மும்பை பந்த்ரா பகுதியில் இருந்த அவரது வீட்டுக்கே வந்து தாக்கினார். இதையடுத்து ஸ்ருதி மும்பை அந்தேரி பகுதியில் புதிய வீடு ஒன்றை வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

05 ஜூன் 2014

தீவிர சிகிச்சைப் பிரிவில் நடிகை மனோரமா!

மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள மனோரமாவுக்கு, தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நடிகை மனோரமா மூச்சுத்திணறல் காரணமாக, சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இரு தினங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்த நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகை மனோரமாவுக்கு 2 ஆண்டுகளுக்கு முன் முழங்கால் அறுவைச் சிகிச்சை நடந்தது.பின்னர் காளஹஸ்தி கோவிலுக்கு சென்றிருந்தபோது, குளியல் அறையில் தவறி விழுந்தார். அப்போது அவருடைய தலையில் காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றார். ஆனால் இந்த சம்பவத்துக்குப் பிறகு அவருக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்தது. கடந்த மார்ச் மாதம் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அவர், கடந்த மாதம் 26ந் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். இந்த நிலையில், தற்போது மீண்டும் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். டாக்டர்கள் அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். மனோரமா உடல் நிலை ஆபத்தான கட்டத்தில் இல்லை என்றும், இன்னும் இரு தினங்களில் அவர் வீடு திரும்புவார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

07 மே 2014

படுக்கையில் தன்னுடன் பேய் என்கிறார் நடிகை!

பேயுடன் உடலுறவு கொள்வதாக பாலிவுட் நடிகை ஒருவர் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் உக்ரைன் நாட்டை சேர்ந்த நடாஷா பிளாசிக். இவர் லண்டன் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டி நேற்று ஒளிபரப்பானது.அதில் தன்னுடைய படுக்கையறையில் அடிக்கடி கண்களுக்கு புலப்படாத ஒரு உருவம் தன்மீது படுத்துக்கொண்டு இயங்குவதாகவும் அந்த அனுபவம் தனக்கு மிகவும் புதுமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதாக தெரிவித்தார்.தன்னுடன் உடலுறவு கொண்டது ஒரு பேய்தான் என்று தன்னால் அடித்துக் கூற முடியும் என்றும், எப்போதெல்லாம் நான் படுக்கையறையில் இருக்கிறேனோ அப்போதெல்லாம் இதுபோல அடிக்கடி நடக்கிறது என்றும் அவர் கூறினார்.முதன்முறையாக தனக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து அவர் விவரிக்கும்போது "ஒரு நாள் படுக்கையில் இருந்தபோது கதவு திறக்கும் சத்தம் கேட்டது. எட்டிப்பார்த்தபோது அங்கு யாருமே இல்லை. எனது மேல் யாரோ படுப்பது போல கனமாக இருந்தது. ஆனால் உருவத்தை பார்க்க முடியவில்லை. ஒரு அரவணைப்பை, உடலின் கதகதப்பை மட்டும் என்னால் உணர முடிந்தது. அதன்பிறகு நான் அதை அனுபவிக்க தொடங்கிவிட்டேன்" என்று கூறினார்.நடாஷா பிளாசி தற்போது பாராநார்மல் ஆக்டிவிட்டி 2 என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை வித்தியாசமாக விளம்பரப்படுத்த வேண்டும் என்பதற்காக நடிகை தானே திரைக்கதை எழுதி பேய்க்கதை விடுவதாக பாலிவுட்டில் கிசுகிசு எழுந்துள்ளது.இவரை மனநல மருத்துவர்களிடம் அனுப்ப வேண்டும் என்றும் சிலர் குரல் கொடுத்து வருகிறார்கள்.

29 மார்ச் 2014

கனிகா கடும் கோபம்!

கனிகா 
தமிழ் பட இயக்குனர்களுக்கு பக்குவம் இல்லை. திருமணம் ஆன பிறகும் கிளாமர் காட்டச்சொல்கிறார்கள் என்றார் கனிகா. பைவ் ஸ்டார், ஆட்டோகிராப், வரலாறு உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் கனிகா. அவர் கூறியதாவது: சினிமாவுக்கு வந்த புதிதில் எல்லோரும் என்னைப் பற்றி பேச வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் இப்போது அப்படி இல்லை. பெயருக்காக படங்கள் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அர்த்தமுள்ள கதாபாத்திரங்கள் வந்தால் மட்டுமே ஏற்கிறேன். இப்படித்தான் நடிக்க வேண்டும் என்ற கொள்கை எதுவும் வகுத்துக்கொள்ளவில்லை. ஆனால் எனக்கு பொருத்தமான வேடமா என்று பார்க்கிறேன். இல்லாவிட்டால் நடிப்பதில்லை. என் குடும்பத்தினர் எனக்கு ஆதரவாக உள்ளனர். அவர்கள் எனக்கு எந்த நிபந்தனையும் விதிப்பதில்லை. தமிழ் திரையுலகை பொருத்தவரை திருமணம் ஆன நடிகைகள் என்றால் அவர்களை ஓரம்கட்டவே பார்க்கிறார்கள். எனக்கு திருமணம் ஆனபிறகும் ஆடை குறைத்து கிளாமராக நடிக்க வேண்டும் என்று சொன்னார்கள். கிளாமர் காட்டாமல் சேலை கட்டி நடிப்பதாக கூறினேன். அதற்கு பதில் எதுவும் அவர்களிடம் இல்லை. மலையாள திரையுலகில் அப்படி இல்லை. ஹீரோயின்களை ஓரம்கட்ட மாட்டார்கள். வயதானவராக இருந்தாலும் அவரை நாயகியாக நடிக்க வைப்பார்கள். அதற்கு காரணம் மலையாள இயக்குனர்கள் பக்குவப்பட்டவர்கள் என்று  தெரிவித்துள்ளார்.

20 மார்ச் 2014

ஸ்ருதிஹாசனின் ஆபாச போஸ்டர் கிழிப்பு!

நடிகை ஸ்ருதிஹாசன் அல்லி அர்ஜூனாவுடன் நடித்துள்ள ரேஸ் குரோம் படத்தில் படுகவர்ச்சியாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் விளம்பரத்திற்காக ஐதராபாத் உட்பட ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. வானத்தை நிறுத்திவிட்டு இந்த போஸ்டர்களை கண்ட வாகன ஓட்டிகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து சில மனித உரிமை ஆர்வலர்கள் ஆபாச போஸ்டர்கள் ஒட்டபட்ட இடங்களில் போராட்டம் நடத்தியதாதவும், இதனை கண்ட போலீஸார் போஸ்டர்களை கிழித்து எரிந்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இது போன்ற போஸ்டர்களை ஒட்ட கூடாது என்று அந்த படநிறுவனத்திற்கு போலீஸார் எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.

21 பிப்ரவரி 2014

குத்து ரம்யாவிற்கு எதிர்ப்பு!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேரை விடுவிக்கும் தமிழக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த நடிகை 'குத்து' ரம்யாவுக்கு இந்து மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.இது குறித்து இந்து மக்கள் கட்சியின் மண்டல செயலாளர் சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,நடிகைகள் பலர் தமிழர்களுக்கு எதிரான உணர்வுகளை கொண்டுள்ளனர். அசின் எதிர்ப்பை மீறி இலங்கைக்கு சென்று வந்தார். பாவனா தமிழ் படங்களை டப்பிங் செய்யக் கூடாது என்று கன்னட நடிகர்கள் நடத்திய போராட்டத்தில் பங்கேற்றார். தற்போது குத்து ரம்யா ராஜீவ் கொலை கைதிகள் விடுதலையை எதிர்க்கிறார்.ஆயுள் கைதிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்வது அரசின் வழக்கமான நடைமுறை. பிரதமராக இருந்தவருக்கும் சாதாரண மனிதருக்கும் சட்டம் என்பது சமமானதுதான். கைதிகளை விடுதலை செய்யக் கூடாது என்று அரசின் முடிவை எதிர்ப்பது ஏற்புடையது அல்ல. குத்து ரம்யாவை தமிழ் திரையுலகம் நிரந்தரமாக புறக்கணிக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

13 ஜனவரி 2014

த்ரிஷாவின் அம்மா உமாவுக்கு பிடிவாரண்டு!

நடிகை த்ரிஷா நிர்வாண குளியல் போட்டதாக வெளியான வீடியோ தொடர்பான வழக்கில் ஆஜராகாததால் அவரது அம்மா உமாவுக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.நடிகை த்ரிஷாவைப் போன்ற ஒரு பெண் ஓட்டல் அறை ஒன்றில் குளிப்பது போன்ற காட்சியொன்று 2004-ல் இணைய தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.பாத்ரூமில் ரகசிய கேமராவை பொருத்தி இக்காட்சியை படமாக்கியதாகவும் கூறப்பட்டது. இந்த படத்தை வார பத்திரிகையொன்றும் வெளியிட்டது.ஆனால் த்ரிஷாவும், அவரது தாய் உமாவும் இதனை மறுத்தனர். படத்தில் இருப்பது த்ரிஷா இல்லை என்றும் மார்பிங்கில் போலியாக இப்படத்தை உருவாக்கியாதாகவும் கூறினர்.படத்தை வெளியிட்ட ஒரு வார பத்திரிகையிடம் நஷ்டஈடு கேட்டு உமா கிருஷ்ணன் எழும்பூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு விசாரணை கடந்த 8 ஆண்டுகளாக நடந்து வந்தது. விசாரணைக்கு வருமாறு உமாகிருஷ்ணனுக்கு கோர்ட்டு பல தடவை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் ஆஜராகவில்லை.இதையடுத்து நீதிபதி கோபாலகிருஷ்ணன் த்ரிஷாவுக்கும், உமாகிருஷ்ணனுக்கும் கைது வாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டதாக செய்திகள் வெளியாகின. இதனை உமாகிருஷ்ணன் வக்கீல் மறுத்து விளக்கம் அளித்துள்ளார்.அவர் கூறும்போது, ‘‘நீதிமன்றம் த்ரிஷாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கவில்லை. அவரது தாய் உமாகிருஷ்ணனுக்கு மட்டுமே வாரண்டு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதை சட்ட ரீதியில் எதிர்கொள்வோம்," என்றார்.

14 டிசம்பர் 2013

அஞ்சலி ஆந்திராவில் தரிசனம்!

அஞ்சலி 
அஞ்சலி இந்த நாட்டில்தான் இருக்கிறாரா, வெளிநாட்டில் போய் ரகசியத் திருமணம் செய்து கொண்டாரா என சூடான விவாதமே நடந்து வரும் வேளையில், ஆந்திர மாநில சிவன் கோயில் ஒன்றில் அஞ்சலி சாமி கும்பிட்ட தகவல் பரவியதால் ரசிகர்கள் அங்கு திரண்டனர். சென்னையிலிருந்து வெளியேறி மாதக் கணக்கில் ஆந்திராவிலேயே தங்கியுள்ளார் அஞ்சலி. சென்னையிலிருந்த தன் புதிய வீட்டை சித்தி அபகரித்துக் கொண்டதால், அதை மீட்க சட்டரீதியான நடவடிக்கைகளை எடுத்துள்ளார். வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. அவருக்கு எதிராக சித்தி பாரதிதேவியும், இயக்குநர் களஞ்சியமும் வெவ்வேறு வழக்குகளைத் தொடர்ந்துள்ளனர். ஆனால் இவற்றில் எதிலும் அஞ்சலி ஆஜராகவில்லை. தமிழ்ப் படங்களிலும் நடிக்க மறுத்துவிட்டார். தெலுங்கிலும் அவருக்குப் படமில்லை. எனவே அஞ்சலி வெளிநாட்டில், ஒரு பெரும் புள்ளியுடன் செட்டிலாகிவிட்டார் என்று கூறப்பட்டது. ஆனால் அவர் ஆந்திராவில்தான் இருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் ஸ்ரீ சைலத்தில் உள்ள மல்லிகார்ஜூனா சுவாமி கோவிலில் அவர் நேற்று சாமி கும்பிட்டார். அங்கு சிவபெருமானுக்கு ருத்ராபிஷேகமும், தாயார் பிரமராம்பிகாவிற்கு குங்கும அர்ச்சனையும் செய்து வழிபட்டார். அஞ்சலியை காண ரசிகர்கள் முண்டியடித்தனர். பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தினார்கள். சித்தியிடம் ஏற்பட்ட மோதல் குறித்து அஞ்சலியிடம் கேட்டபோது, நான் சாமி கும்பிட வந்தேன். இங்கு எதுவும் பேசவிரும்பவில்லை. நான் இங்குதான் இருக்கிறேன். விரைவில் செய்தியாளர்களைச் சந்தித்து விவரமாகப் பேசுவேன், என்று கூறிவிட்டு காரில் ஏறிப் பறந்தார்.

30 நவம்பர் 2013

நடன இயக்குனர் ரகுராம் காலமானார்!

மகள் காயத்ரியுடன் ரகுராம் மாஸ்ரர் 
பிரபல சினிமா நடன இயக்குனர் ரகுராம் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 69. நடன குடும்பத்தில் இருந்து வந்தவர் ரகுராம். அதன் வெளிப்பாடாக இவரும் சினிமாவில் நடன இயக்குனராக களம் இறங்கினார். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு நடனம் அமைத்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட பல மொழி படங்களிலும் நடன இயக்குனராக சுமார் 1000 பாடல்களுக்கு மேல் நடனம் அமைத்துள்ளார். சென்னை, மகாலிங்கபுரத்தில் தனது வீட்டில் வசித்து வந்த ரகுராமிற்கு இன்று(நவ., 30ம் தேதி) மதியம் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மாரடைப்பால் காலமானார். மறைந்த ரகுராமிற்கு கிரிஜா என்ற மனைவியும், காயத்ரி ரகுராம், சுஜா ரகுராம் என்ற இரு மகள்களும் உள்ளனர். கிரிஜாவும் நடன இயக்குனர் தான். இவர் பிரபல நடன இயக்குனர் கலாவின் சகோதரி ஆவார். மகள்கள் காயத்ரியும், சுஜாவும் நடன இயக்குநர்களாக உள்ளனர். இதில் காயத்ரி ரகுராம் சார்லி சாப்ளின் உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். மறைந்த ரகுராமின் உடல் சென்னை, மகாலிங்கபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. காயத்ரி ரகுராம், வை ராஜா வை படத்தின் பாடல் ஷூட்டிங்கிற்காக பாங்காக் சென்றுள்ளார். தந்தை மறைவுக்கு குறித்து அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் வந்த பிறகு, ரகுராமின் இறுதிசடங்கு திங்களன்று(டிச. 2ம் தேதி) நடைபெறுகிறது.

23 நவம்பர் 2013

ஸ்ருதியை தாக்கியது பிரபல நடிகரின் மனைவி?

  • பாலிவுட்டின் பிரபல நடிகர் ஒருவரின் மனைவி ஏற்பாட்டில்தான் ஸ்ருதி ஹாஸன் தாக்கப்பட்டதாக பரபரப்பாக தகவல்கள் வெளியாகியுள்ளன மும்பை மீடியாவில்.ஸ்ருதி ஹாஸன் வீட்டிலிருந்த போது அவரை மர்ம மனிதன் தாக்கிவிட்டு ஓடியது தெரிந்ததே. ஸ்ருதிஹாஸன் தாக்கப்பட்டதன் பின்னணியில் பிரபல நடிகர் மனைவி? இதுகுறித்து ஸ்ருதிஹாஸன் முதலில் போலீசில் புகார் செய்யவில்லை. காரணம், அந்த தாக்குதல் நடந்தபோது, அவர் வீட்டில் ஒரு பிரபல இந்தி நடிகர் இருந்ததாகவும், புகார் செய்தால இந்த விவகாரம் வெளியில் வந்துவிடும் என்று அஞ்சியதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தாக்குதல் குறித்து நேற்றுதான் போலீசில் புகார் செய்தார் ஸ்ருதிஹாஸன். ஆனால் இப்போது வெளியாகியுள்ள ஒரு தகவல் அதிர வைத்துள்ளது. கொடுத்த புகாரை திரும்பப் பெற்றுக் கொண்டார் ஸ்ருதி என்றும் இதற்கு ஒரு பிரபல கான் நடிகர்தான் காரணம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.இதைவிட அதிர வைக்கும் விஷயம், ஸ்ருதியைத் தாக்க இந்த நபரை ஏவியவர் அந்த நடிகரின் மனைவிதானாம். ஸ்ருதி புகார் தந்ததுமே, அந்த நடிகர் ஸ்ருதியைத் தொடர்பு கொண்டு, இந்த புகாரை வாபஸ் பெற்றுக் கொள். இல்லாவிட்டால் என் பெயர் நாறிவிடும், என வற்புறுத்தினாராம்.அபார்ட்மென்ட்டில் உள்ள அனைவரும் பார்க்கும் வகையில் ஸ்ருதியுடன் பிரச்சினை செய்ய வேண்டும் என்று சொல்லித்தான் அந்த நபரை நடிகரின் மனைவி ஏற்பாடு செய்திருந்தாராம். அவர் நினைத்தது கிட்டத்தட்ட இப்போது நடந்துவிட்டது. ஸ்ருதி தாக்கப்பட்டதை விட, அதன் பின்னணி பற்றித்தான் அதிகம் பேச ஆரம்பித்துள்ளனர்.முக்கிய பத்திரிகைகளின் நிருபர்களுக்கு இந்த விஷயத்தை நடிகரின் மனைவியே போன் போட்டு சொன்னதும் அம்பலமாகியுள்ளது."நடிகருடனான தொடர்பை ஸ்ருதி இத்துடன் நிறுத்திக் கொள்ளாவிட்டால், நிச்சயம் அடுத்தமுறை நானே நேரில் வந்து அனைவருக்கும் தெரியும் வகையில் சண்டை போடவும் தயங்கமாட்டேன்... என் கணவருடன் சேர்ந்து அவரது கள்ளத் தொடர்புகளும் அம்பலமாகட்டும்," என்றும் எச்சரித்துள்ளாராம் நடிகர் மனைவி.இந்தத் விவரங்கள் இப்போது தமிழ்ப் பத்திரிகைகள் மத்தியிலும் பரவ ஆரம்பித்துள்ளது.

    20 நவம்பர் 2013

    ஷ்ருதி ஹாசனை பலாத்காரம் செய்ய முயற்சி!

    கமல் ஹாஸன் மகளும் முன்னணி நடிகையுமான ஸ்ருதி ஹாஸனின் மும்பை வீட்டுக்குள் புகுந்து அவரை பலாத்காரம் செய்ய முயன்ற நபரை காவலாளிகள் விரட்டியுள்ளனர். ஸ்ருதி ஹாஸன் அவரிடமிருந்து விலகி, அந்த நபரை பாதுகாவலர்கள் துணையுடன் விரட்டினார். இதுகுறித்து போலீசில் புகார் எதுவும் இன்னும் பதிவாகவில்லை. வீடு புகுந்து ஸ்ருதி ஹாஸனை தாக்கி பலாத்காரம் செய்ய முயன்ற நபர்... பாலிவுட்டில் பரபரப்பு! ஆனால் இந்த சம்பவத்தால் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளாராம் ஸ்ருதி. இந்தியில் பிஸியான நடிகையாக உள்ளார் ஸ்ருதி ஹாஸன். அவரை கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கும் மேலாக ஒரு நபர் பின்தொடர்ந்து வந்தாராம். ராமய்யா வஸ்தாவய்யா படப்பிடிப்பின்போது ஸ்ருதியை அவர் நெருங்க முயன்றுள்ளார். ஆனால் படக்குழுவினர் விரட்டியடித்துவிட்டனர். இந் நிலையில் செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு பாந்த்ராவில் ஸ்ருதி தங்கியுள்ள வீட்டு அழைப்பு மணி ஒலிக்க, பாதி தூக்க கலக்கத்துடன் கதவைத் திறந்துள்ளார் ஸ்ருதி ஹாஸன். உடனே சட்டென்று உள்ளே நுழைந்த அந்த நபர், ஸ்ருதியை கட்டிப்பிடித்து, கழுத்தை நெறிக்க முயன்றாராம். உடனே சுதாரித்துக் கொண்ட ஸ்ருதி, அந்த நபரை பலமாக வெளியில் தள்ளி கதவை தாழிட முயன்றாராம். அதே நேரம் பலமாகக் குரலெழுப்பி செக்யூரிட்டிகளை அழைத்துள்ளார். அவர்கள் வந்து அந்த நபரைப் பிடித்து இழுத்து விரட்டியடித்துள்ளனர். ஸ்ருதியின் மும்பை ஏஜென்ட் இத்தகவல்களை உறுதிப்படுத்தியுள்ளார். அந்த நபர் யார், ஸ்ருதியைக் காதலித்த ரசிகரா... ஸ்ருதியின் மீதான தனிப்பட்ட பகை காரணமா என்பது குறித்து எதுவும் தெரியாது என அந்த ஏஜென்ட் தெரிவித்தார். ஆனால் தங்களுக்கு இதுபற்றி எந்த புகாரும் வரவில்லை என்று மும்பை போலீஸ் துணை கமிஷனர் செர்ரிங் டோர்ஜ் தெரிவித்தார்.

    14 நவம்பர் 2013

    இளையதளபதி எல்லாம் சும்மா!

    என் வாழ்க்கையில் அப்பா அம்மா மனைவி குழந்தைக்குப் பிறகு எனக்கு எல்லாமே என் நண்பன் விஷால்தான். இளையதளபதி அது இதெல்லாம் சும்மா, என்று கண்கலங்கினார் நடிகரும் விஜய்யின் தம்பியுமான விக்ராந்த். விக்ராந்த்... நடிகர் விஜய்யின் ரத்த சொந்தம். சித்தி மகன். அவர் கற்க கசடற படத்தில் அறிமுகமான போதே, விஜய்யின் தம்பி என்றுதான் தன்னை காட்டிக் கொண்டார். படத்திலும் விஜய்க்கு ஏக பில்டப் தரும் காட்சிகள் உண்டு. அதன் பிறகு, எங்கள் ஆசான், முத்துக்கு முத்தாக, கோரிப்பாளையம் உள்ளிட்ட பல படங்களில் நாயகனாக நடித்தார். நட்சத்திர கிரிக்கெட்டில் செஞ்சுரி அடிக்க முடிந்த அவரால், சினிமா நட்சத்திரமாக திரையில் ஜெயிக்க முடியவில்லை. இந்த நேரத்தில்தான் விஷால் அவருக்குக் கைகொடுத்தார். தான் மிகுந்த நெருக்கடியில் இருந்த போதும், தன்னைவிட மிகவும் நெருக்கடியில், கிட்டத்தட்ட பூஜ்யத்திலிருந்த விக்ராந்துக்கு தன் சொந்தப் படமான பாண்டிய நாட்டில் சிறு வேடம் கொடுத்தார். அதன் விளைவு இன்று விக்ராந்துக்கு நல்ல பெயர். அத்துடன் நிற்கவில்லை விஷால். தன் சொந்தப் பட நிறுவனம் அடுத்து தயாரிக்கும் படத்தில் முழு ஹீரோவாக விக்ராந்தையே நடிக்க வைக்கிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் நேற்று வெளியிட்டார். இத்தனையும் சேர்த்து விக்ராந்தை நெக்குருக வைத்துவிட்டது. உங்க சொந்த அண்ணன் இளையதளபதி செய்யாததை, இந்த அண்ணன் விஷால் செய்திருப்பது குறித்து? என கேட்டபோது, "நான் உண்மையிலேயே சொல்றேன். விஷால் என்னை ஹீரோவா வெச்சு படம் பண்றார்ங்கிறதுக்காக சொல்லல. நானும் விஷாலும் 12 வருஷமா ப்ரெண்ட்டா இருக்கோம். என்னோட அப்பா, அம்மா, என்னோட மனைவி, குழந்தைக்கப்புறம் அவனுக்குத்தான் எனக்கு ஏதாவது செய்யணும்னு தோணிருக்கு. அதனால தான் என்னை வெச்சி படம் பண்றேன்னு சொல்றாப்ல. மத்தபடி ‘இளையதளபதி' அது இதெல்லாம் சும்மா... அதையெல்லாம் பேச விரும்பல," என்றார்.