பக்கங்கள்

10 ஏப்ரல் 2013

நான் பத்திரமாக இருக்கேன்-அஞ்சலி

ஹைதராபாத் ஹோட்டலில் இருந்து மாயமான நடிகை அஞ்சலி தனது தாய் பார்வதி தேவிக்கு போன் செய்து தான் பத்திரமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். அஞ்சலி தனது சித்தி பாரதி தேவி மற்றும் இயக்குனர் களஞ்சியம் மீது மோசடி புகார் தெரிவித்தார். இதையடுத்து சென்னையில் இருந்து வெளியேறிய அவர் போல் பச்சன் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க ஹைதராபாத் சென்று அங்கு ஒரு ஹோட்டலில் தங்கி ஷூட்டிங் சென்று வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை முதல் அவரைக் காணவில்லை. அவர் மாயனது குறித்து அவரது அண்ணன் ரவிசங்கர் மீது சந்தேகமாக உள்ளதாக அவரது சித்தி தெரிவித்திருந்தார். இந்நிலையில் அஞ்சலி இன்று தனது அம்மா பார்வதிக்கு போன் செய்து தான் பத்திரமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். தான் இருக்கும் இடத்தை தெரிவிக்காத அவர் தற்போதைய பிரச்சனைகளால் மன உளைச்சல் ஏற்பட்டதாகவும் அதனால் தான் ஹோட்டலில் இருந்து சென்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

08 ஏப்ரல் 2013

'என் உடம்பில் சிறு கீறல் விழுந்தாலும்...!

என் உடம்பில் சிறு கீறல் விழுந்தாலும் அதற்கு என் சித்தியும் அவருக்கு நெருக்கமாக உள்ள டைரக்டர் களஞ்சியமும்தான் பொறுப்பு என்று நடிகை அஞ்சலி தெரிவித்தார். நடிகை அஞ்சலிக்கும், இத்தனை நாளாய் அவரது அம்மா என்று திரையுலகம் நினைத்துக் கொண்டிருந்த பாரதி என்ற பெண்மணிக்கும் கடும் சண்டை மூண்டுள்ளது. பாரதி உண்மையில் தனது தாய் இல்லை என்றும், சித்தி முறை உறவினர் என்றும் அஞ்சலி கூறியுள்ளார். மேலும் தான் சம்பாதித்த பணம் முழுவதையும் சித்தி பாரதியும் அவருக்கு நெருக்கமாக உள்ள இயக்குநர் களஞ்சியமும் அபகரித்துக் கொண்டதாகவும், தன் உயிருக்கு அவர்களால் ஆபத்து நேரக் கூடும் என்றும் அஞ்சலி அச்சம் தெரிவித்துள்ளார். இவர்கள் இருவரின் அச்சுறுத்தலிலிருந்து தப்பிக்கவே ஹைதராபாதில் குடியேறிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், "என் குடும்பத்தினருக்கு செய்யாத பல விஷயங்களை என் சித்தி குடும்பத்தினருக்கு செய்தேன். என் உடன்பிறந்தவர்களைக் கூட நான் பார்ப்பதில்லை. எல்லாமே சித்திக்குத்தான் கொடுத்தேன். ஆனால் அவர் நன்றியில்லாமல் எனக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார். நான் இத்தனை காலமும் நடித்து சம்பாதித்த பணம் முழுவதையும் அவர் சுருட்டிக் கொண்டார். இதற்கு இயக்குநர் களஞ்சியமும் உடந்தை. இனி என் மீது அபாண்டமாக எப்படி வேண்டுமானாலும் பழி போடுவார்கள். என் உயிருக்கே கூட ஆபத்து வரும் வாய்ப்புள்ளது. எனவேதான் சென்னையிலிருந்து ஹைதராபாத் வந்து விட்டேன். என் உடம்பில் சிறு கீறல் விழுந்தாலும் கூட அதற்கு முழு பொறுப்பு என் சித்தியும் இயக்குநர் மு களஞ்சியமும்தான். இன்னும் சில தினங்களில் பத்திரிகையாளர்களை நேரில் சந்தித்து முழு உண்மைகளையும் சொல்லப் போகிறேன்," என்றார்.

31 மார்ச் 2013

நிறைவான வேடம்,நிம்மதியான வாழ்க்கை-திரிஷா

இனி படங்களின் எண்ணிக்கை முக்கியமல்ல. நிறைவான வேடங்கள், நிம்மதியான வாழ்க்கைதான் முக்கியம் என்கிறார் த்ரிஷா. தமிழ் சினிமாவில் 2002-ல் அறிமுகமாகி, பத்தாண்டு காலத்தை முன்னணி கதாநாயகியாகவே வெற்றிகரமாகக் கடந்தவர் த்ரிஷா. இன்றைய சூழலில் இது ஒரு சாதனை என்றுதான் சொல்ல வேண்டும். இப்போது ஜெயம் ரவியுடன் பூலோகம், ஜீவாவுடன் என்றென்றும் புன்னகை, கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட ரம் போன்ற படங்களில் நடிக்கிறார் த்ரிஷா. பத்தாண்டுகள் முன்னணி கதாநாயகியாக நடிப்பது குறித்து அவர் கூறுகையில், "சினிமாவில் கதாநாயகி வாய்ப்பு கிடைப்பது அத்தனை சுலபமல்ல. எனக்குக் கிடைத்த வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள நிறைய போராட வேண்டியிருந்தது. தொடர்ந்து பத்து ஆண்டுகளாக சினிமாவில் அதுவும் முன்னணி கதாநாயகி இடத்தில் இருப்பது பெருமை, என் அதிர்ஷ்டம். ஒரு காலத்தில், ராத்திரி - பகல் என்று பார்க்காமல் ஸ்டுடியோக்களில் முடங்கிக் கிடந்திருக்கிறேன். காரணம், வாய்ப்புகள் பறிபோய்விடக் கூடாதே என்பதால். இன்று என் மனசு விரும்பும் பாத்திரங்களில் நடிக்கிறேன். கதை பிடிக்காவிட்டால் எவ்வளவு பணம் கொடுத்தாலும் நடிக்க மாட்டேன். அந்த பரபரப்பும் நிம்மதியற்ற சூழலும் இல்லாத நிலையில், முன்னணி நாயகி என்ற அந்தஸ்தை அனுபவித்து நடிக்கிறேன். இனி எண்ணிக்கை முக்கியமில்லை. இருக்கிற பெயரை தக்க வைத்துக் கொண்டு, நல்ல படங்களில் நடிக்க வேண்டும்," என்றார்.

26 மார்ச் 2013

என் கனவு ஈடேறவில்லை-காஜல்

நடிகையானதால் படிப்பை தொடர முடியவில்லை என்று காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். தற்போது இவர் தமிழில் இரண்டு படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். அவை கார்த்தியின் ‘ஆல் இன் ஆல் அழகு ராஜா’, விஜய்யின் ‘ஜில்லா’ அடங்கும். இது குறித்து காஜல் அகர்வால் கூறியதாவது: அதிகம் படிக்க வேண்டும் என்பது என்னுடைய சிறுவயது கனவு. ஆனால் அது நனவாகவில்லை. நான் பத்தாம் வகுப்பு படித்த போதே சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்ததால் படிப்பை தொடர முடியவில்லை. மேலும் எம்.பி.ஏ. படிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டதும் நிறைவேறவில்லை. ஆனாலும் அந்த லட்சியத்தை கைவிடுவதாக இல்லை. தபால் மூலம் எம்.பி.ஏ. படிக்க திட்டமிட்டு உள்ளேன். சினிமாவில் கல்லூரி மாணவி வேடங்களில் நடிக்க எனக்கு மிகவும் பிடிக்கும். கல்லூரி மாணவி வேடங்கள் என்றால் உடனே ஒப்புக்கொள்கிறேன். குறிப்பாக எம்.பி.ஏ. மாணவி கதாபாத்திரத்தில் நடிக்க மிகவும் ஆர்வமாக இருக்கிறது. இயக்குனர்களிடம் படத்தில் எம்.பி.ஏ. பட்டம் வாங்குவது போன்று ஒரு காட்சி வைக்கும்படி வற்புறுத்தி வருகிறேன் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

26 பிப்ரவரி 2013

தமிழ் நடிகைகளுடன் போட்டி!

Bollywood heroine comes to competition with Tamil actressesகோலிவுட் ஹீரோயின்களுக்கு போட்டியாக வருகிறார் மற்றொரு பாலிவுட் ஹீரோயின் பிரணிதி சோப்ரா. ‘இஷ்க்ஸாதே என்ற இந்தி படத்தில் நடித்தவர் பிரணித¤ சோப்ரா. இவர் தமிழில் உருவாகும் ‘சும்மா படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். ஹீரோவாக நடிப்பதுடன் ஸ்கிரிப்ட் எழுதி இயக்குகிறார் மதன். இவர் டாக்டர் ராஜசேகரின் தங்கை மகன். மதன் கூறும்போது, ‘காடுகளுக்குள் புதைந்திருக்கும் பல ரகசியம் வெளியுலகுக்கு தெரிவதில்லை. அதை அம்பலமாக்கும் கதைதான் இது. இந்தியில் வெற்றிபடத்தில் நடித்த பிரணிதி சோப்ரா ஹீரோயின். மற்றொரு ஹீரோயினும் நடிக்க உள்ளார். இவர்களுடன் சுமன் ஷெட்டி, சேஷு, டி.பி.கஜேந்திரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஜெய் ஒளிப்பதிவு. ஆர்.தயாளன் இசை. எஸ்.எஸ்.எஸ் தயாரிப்பு. இதன் ஷூட்டிங் தேனி, குரங்கணி மற்றும் அச்சங்கோவில், தலக்கோணம், காளஹஸ்தி என தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா என 3 மாநிலங்களில் உள்ள அடர்ந்த காட்டு பகுதிகளில் ஷூட்டிங் நடந்துள்ளது. இப்படத்துக்கு ‘சும்மா என டைட்டில் வைத்ததற்கு காரணம் காடுகளில் புதைந்திருக்கும் ரகசியம்போல் இந்த டைட்டிலிலும் ஒரு ரகசியம் புதைந்திருக்கிறது என்பதை உணர்த்தத்தான்‘ என்றார்.

19 பிப்ரவரி 2013

மூத்த நடிகர்களை அவமதிக்கவில்லை-அசின்

நடிகை அசின் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் மூத்த நடிகர்களைவிட இளம் ஹீரோக்களுடன் ஜோடியாக நடிப்பதே எனக்கு வசதியாக உள்ளது என்று கூறியிருந்தார். தன்னைவிட வயதில் மூத்தவர்களுடன் நடிப்பது சங்கடமாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டு இருந்தார். அசின் பேட்டி வயதான இந்தி நடிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அமீர்கான், சல்மான்கான், அக்ஷய்குமார், அஜய்தேவ்கான் போன்ற மூத்த நடிகர்களுடன் அவர் நடித்துள்ளார். இவர்கள் அசின் மேல் ஆத்திரத்தில் இருக்கிறார்களாம். அசினுக்கு இந்திப்பட வாய்ப்புகள் கிடைக்காமல் இவர்கள் தடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அசின் படங்கள் இல்லாமல் இருக்கிறார் என்கின்றனர். இதுகுறித்து அசினிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- நான் அளித்த பேட்டியில் எந்த உள்நோக்கமும் இல்லை. இளம் ஹீரோக்களுடன் ஜோடியாக நடிக்க ஆசைப்படுவது தவறு அல்ல. இதற்காக மூத்த நடிகர்களை அவமதிக்கிறேன் என்று வதந்தி பரப்பப்படுகிறது. வயதான கதாநாயகர்களை மதிக்கிறேன். நான் சொன்ன கருத்தை அவர்கள் புரிந்து கொண்டு இருக்கிறார்கள். பத்திரிகைகள்தான் இந்த பிரச்சினையை பூதாகாரமாக்குகின்றன. எனக்கு சினிமா படங்கள் இல்லை என்று யார் சொன்னது இரண்டு பெரிய பட்ஜெட் படங்களில் நடிக்கப் போகிறேன். அதற்கான அறிவிப்பு விரைவில் வரும். இவ்வாறு அசின் கூறினார்.

09 பிப்ரவரி 2013

திரிஷாவின் அதிரடிக் கருத்து!

கதையளப்போம்.கொம் 
பரிசோதனைக் கூடங்களில் முயல், எலி போன்ற அப்பாவி விலங்குகளை பயன்படுத்துவதை விட பாலியல் குற்றவாளிகளை பரிசோதனைக்கு உட்படுத்தலாம் என்று திரிஷா சிபாரிசு செய்துள்ளார். நாடு முழுவதும் புதிய மருந்து கண்டுபிடிப்புக்கான லேப்களில் நிறைய முயல், எலி போன்றவைகளை அடைத்து வைத்து அவற்றுக்கு மருந்தை செலுத்தி பரிசோதனை நடத்துகிறார்கள். இந்த முறையை தடை செய்ய வேண்டும் என்று திரிஷா கண்டித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் ,"நான் பிராணிகள் பாதுகாப்பு அமைப்பில் இருக்கிறேன். பரிசோதனை கூடங்களில் பிராணிகள் பயன்படுத்துவதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். இதற்கு தடை விதிக்கப்பட வேண்டும். ஜெயிலில் நிறைய குற்றவாளிகள் உள்ளனர். குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்தவர்களும் சிறையில் இருக்கிறார்கள். பரிசோதனைக் கூடங்களில் அப்பாவி விலங்குகளுக்கு பதிலாக இந்த குற்றவாளிகளை பரிசோதனைக்கு பயன்படுத்தி தண்டிக்கலாம். "இவ்வாறு திரிஷா கூறினார். நடிகை திரிஷா பிராணிகள் பாதுகாப்பு அமைப்புக்கு உதவியாக இருக்கிறார். தெரிவில் திரியும் நாய்களை பிடித்து வளர்த்து தத்து கொடுக்கவும் செய்கிறார். தற்போது பரிசோதனைக் கூடங்களில் எலி, முயலை பயன்படுத்துவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

05 பிப்ரவரி 2013

தேவைப்பட்டால் பிகினி உடையணிந்து நடிப்பேன்!

 பேட்டி கொடுப்பதற்கு பீஸ் கேட்ட நடிகை இனியாவாகைசூடவா இனியா, என்னிடம் எக்கச்சக்கமாக திறமை உள்ளது. அதனால் எக்காரணம் கொண்டும் உடம்பைக்காட்டி நடிக்க மாட்டேன் என்று ஆரம்பத்தில் ஏகத்துக்கு எடுத்து விட்டு வந்தார். அதன்காரணமாக, முன்னணி நடிகர்களுடன் நடிக்க வாய்ப்புகள் வரும் என்று எதிர்நோக்கியிருந்த இனியாவை டி.வி நடிகர்களுடன் ஜோடி சேர்த்து விட்டனர். இதனால் அவரது நிலைமை படுமோசமாகி விட்டது. ஸ்பாட்டில்கூட ஒரு கதாநாயகி என்பதை மறந்து விட்டு சின்னத்திரை நடிகைகளுக்கு செய்து கொடுக்கும் வசதிகளைத்தான் இனியாவுக்கும் செய்து தருகிறார்களாம். அவர் கேரளத்தில் இருந்து சென்னை வந்தால், தங்குவதற்கு மிகச்சிறிய ஓட்டல்களில்தான் அறை எடுத்து கொடுக்கிறார்களாம். சாப்பாடு வசதியும் பெரிதாக கிடையாதாம். இப்படி வேகமாக எகிறிய தனது மார்க்கெட் அதே வேகத்தில் இப்போது இறங்கி விட்டதால், மனசொடிந்து போயிருந்தார் இனியா. அதனால் தனது கொள்கைகளை தளர்த்தினால் ஒழிய இனி ஏறுமுகத்தில் தனது மார்க்கெட் செல்ல வாய்ப்பில்லை என்பதை புரிந்து கொண்ட நடிகை, இப்போது சின்னத்திரை நடிகர் செந்திலுடன் நடித்துள்ள கண்பேசும் வார்த்தைகள் படத்தில் சில காட்சிகளில் கவர்ச்சியை தூவியிருக்கிறார். அதோடு, இதையடுத்து கதைக்கு அவசியம் என்றால் பிகினி நடிகையாகவும் மாறுவேன் என்று கிக்கான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனால் இதுவரை இனியாவை கண்டுகொள்ளால் இருந்த படாதிபதிகள்வட இப்போது இந்த கேரள குட்டியும், நயன்தாராவுக்கு தங்கை மாதிரிதான் இருக்கிறார். இவரையும் பில்லா நயன்தாராவாட்டம் கவர்ச்சி நடிகையாக்கி விடுவோம் என்று முற்றுகையிட்டு வருகின்றனர். இதனால் முழுநேர கவர்ச்சிக்கோதாவில் இறங்க தனது உடல்கட்டை உரம்பாய்ச்சும் வேலைகளில் படுதீவிரமாகியிருக்கிறார் இனியா.

12 ஜனவரி 2013

நீச்சல் உடையை காட்டி பயமுறுத்துகிறார்கள்!

நீச்சல் உடையை காட்டி பயமுறுத்துகிறார்கள் என்று அட்டக்கத்தி பட நாயகி நந்திதா கூறியுள்ளார். அடுத்தடுத்து கிளாமர் பட வாய்ப்புகள் வந்ததால் அவற்றையெல்லாம் ஒப்புக் கொள்ளாமல் ஒதுங்கியிருக்கிறார் நந்திதா. இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், நான் ஒன்றும் பெரிய மாடர்ன் பொண்ணு கிடையாது. இதை பலரிடம் பலமுறை சொல்லியும் உங்களுக்கு கிளாமர் வேடம்தான் சரியாக வரும் என்கிறார்கள். சிலர் கதையை சொல்லிவிட்டு, நீச்சல் உடையிலும் நடிக்க வேண்டியிருக்கும் என்று கூறி பயமுறுத்துகிறார்கள். இதில் எனக்கு துளியும் சம்மதம் இல்லை. கதை பிடித்துப்போய், கதைக்கு தேவையான கிளாமர் தேவைப்பட்டால் கவர்ச்சியாக நடிப்பது குறித்து முடிவெடுப்பேன், என்று கூறியுள்ளார். தற்போது நந்திதா புதுமுக இயக்குனர் வெங்கடேஷ் இயக்கும் நளனும் நந்தியும் என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது கூடுதல் தகவல்.

06 ஜனவரி 2013

நயன்தாராவை போட்டியாக நினைக்கவில்லை- த்ரிஷா

த்ரிஷா
த்ரிஷாவும், நயன்தாராவும் சமகாலத்து நடிகைகள். நயன்தாரா ஐயா படத்தில் அறிமுகமானார் என்றால், த்ரிஷா லேசா லேசா படத்தில் அறிமுகமானார். இருவருமே விஜய், அஜீத் என இரண்டு நடிகர்களுடன் ஒரே காலகட்டங்களில் டூயட் பாடி வந்தனர். இதனால் அந்த சமயத்தில் தனக்கு வர இருந்த சில வாய்ப்புகளை நயன்தாரா அபேஸ் பண்ணி விட்டதாக அப்போது திரைக்குப்பின்னால் த்ரிஷா கொடி பிடித்ததும் நடந்திருக்கிறது. ஆனால், இப்போது மீண்டும் நயன்தாரா பீல்டுக்குள் வந்திருப்பதால் அவர்களது தொழில் போட்டி தொடர்ந்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இதுபற்றி த்ரிஷாவைக் கேட்டால், நயன்தாராவுக்கும், எனக்குமிடையே தொழில் போட்டி ஒரு சமயத்தில் நடந்தது உண்மைதான். ஆனால் இப்போது நான் யாரையுமே போட்டியாக நினைக்கவில்லை. காரணம், நானும் சினிமாவுக்கு வந்து 10 ஆண்டுகளாகி விட்டது. அதனால் இனி போட்டி என்பதை தவிர்த்து இன்னும் எனக்குள் இருக்கிற திறமையை வெளிக்கொண்டு வரக்கூடிய கதைகளில் நடிக்க வேண்டும் என்பதில்தான் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. மேலும், இப்போது நயன்தாரா, தமன்னா உள்ளிட்ட நடிகைளெல்லாம் எனது உயிர்த்தோழிகளாகி விட்டனர். அதனால் எங்களுக்குள் போட்டி பொறாமை என்கிற பேச்சுக்கே இடமில்லை என்கிறார் த்ரிஷா.

27 டிசம்பர் 2012

பாரம் தாங்காமல் விழுந்த ஜோடிகள்!

உனக்கு 20 எனக்கு 40
தடதடவென்று ஓடிவந்த ஹீரோயின், ஹீரோ இடுப்பின் மீது டக்கென்று ஏறினார். ஆனால் நடிகையின் பாரம் தாங்காமல் நிலை குலைந்த ஹீரோ பொத்தென்று விழுந்தார்.அவர் மீ்து ஹீரோயினும் விழுந்தார். ரெண்டு பேருக்கும் லேசான காயமாம். உனக்கு 20 எனக்கு 40 என்ற படத்தின் ஷூட்டிங்கின்போதுதான் இந்தக் கூத்து நடந்ததாம். கொடைக்கானலில் வைத்து இந்த விபத்து நேர்ந்துள்ளது. இடுப்பு ஒடிந்து விழுந்த ஹீரோவின் பெயர் அக்ஷய். அவர் மீது ஏறிய நடிகையின் பெயர் ஷாலினி.இப்படத்தின் கதை ஏடாகூடமானது. அதாவது கிட்டத்தட்ட அபூர்வ ராகங்கள் கதை போலத்தான். ஹீரோயினின் தந்தை மீது ஹீரோயினின் தோழிக்கு காதல் வருகிறதாம். அது என்னாகிறது, எங்கு போய் முடிகிறது என்பதுதான் படத்தின் கதையாம்.படத்தின் ஹீரோயின்களாக ஷாலினியும், அம்ருதாவும் நடிக்கிறார்கள்.இதில் ஷாலினியின் தந்தை மீதுதான் அம்ருதா காதல் கொள்கிறார்.இப்படத்தின் ஒரு பாடல் காட்சியை சமீபத்தில் கொடைக்கானலில் படமாக்கினர். அப்போதுதான் ஹீரோ அக்ஷயின் இடுப்பின் மீது ஷாலினி ஓடி வந்து ஏறுவது போன்ற காட்சியைச் சுட்டனர்.ரிஹர்சல் பார்த்த பின்னரே காட்சிக்குப் போனார்கள். ஷாலினி வேகமாக ஓடி வந்து அக்ஷய்இடுப்பின் மீது தவ்வி உட்கார்ந்தார். ஆனால் அப்போது பாரம் தாங்க முடியாமல் அக்ஷய் கீழே விழ, அவர் மீது ஷாலினியும் விழுந்தார்.விழுந்த வேகத்தில்இரண்டு பேருக்குமே அடிபட்டு விட்டது. படக்குழுவினர் ஓடி வந்து இருவரையும் தூக்கி விட்டனர். காலை உதறச் செய்தனர். பின்னர் முதலுதவிக்குப் பின்னர் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றனர்.ஹீரோ கூட லேசான காயத்துடன் தப்பி விட்டார். ஆனால் ஹீரோயின் ஷாலினிக்குத்தான் இடுப்பில் பலத்த அடிபட்டு காயமாகி விட்டதாம்.

26 டிசம்பர் 2012

தமன்னாவின் சம்பளம் 1.5கோடி!

விஷ்ணுவர்த்தன் திரைப்படத்தை தொடர்ந்து அஜீத் அடுத்ததாக சிறுத்தை இயக்குனர் சிவா படத்தில் நடிக்கிறார். இப்படத்தை விஜய வாஹினி நிறுவனம் தயாரிக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். முதன் முறையாக இந்தப் படத்தின் மூலம் அஜீத்துடன் ஜோடி சேருகிறார் நடிகை தமன்னா. இதற்காக அவர் ரூ. 1.5 கோடி சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது. வேங்கை படத்துக்குப் பிறகு தெலுங்கு திரையுலகிற்கு முக்கியம் கொடுத்து வரும் தமன்னா தற்போது அஜீத்துடன் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

20 டிசம்பர் 2012

கூவத்தில் குதித்து நித்யஸ்ரீ மகாதேவன் கணவர் தற்கொலை!

 Nithyasri Mahadevan S Husband Commits Suicide பிரபல கர்நாடக இசைப்பாடகி நித்யஸ்ரீ மகாதேவன் கணவர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதை அறிந்து நித்யஸ்ரீயும் தற்கொலைக்கு முயற்சித்ததால் கர்நாடக இசையுலகம் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது. பிரபல பின்னணிப் பாடகி டி.கே. பட்டம்மாளின் பேத்தி நித்யஸ்ரீ மகாதேவன். கர்நாடக இசைப் பாடகியான இவர் பெரும்பாலான திரைப்படங்களில் பின்னணி பாடியுள்ளார். இவரது கணவர் மகாதேவன் இன்று காலையில் சென்னை கோட்டூர் பாலத்தில் காரில் வந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் கூறியுள்ளனர்.. இன்று காலை மகாதேவன் ஒரு சொகுசுக் காரில் கோட்டூர்புரம் வந்ததாகவும். அங்கு பாலத்தில் வண்டியைநிறுத்தி விட்டு கூவம் ஆற்றில் குதித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதைப் பார்த்த சாலையில் சென்றோர் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அவர்கள் தீயணைப்புப் படையினருடன் விரைந்து வந்தனர். நீண்ட நேர முயற்சிக்குப் பின்னர் இறந்த உடலே சிக்கியது. அவரது உடலை சோதனை செய்ததில் அவர் பின்னணிப் பாடகி நித்யஸ்ரீயின் கணவர் மகாதேவன் என்று தெரியவந்தது. அவரது தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை நித்யஸ்ரீ தற்கொலை முயற்சி இதனிடைய கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேள்விப்பட்ட உடன் நித்யஸ்ரீயும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். இதனையடுத்து அவரை உறவினர்கள் காப்பாற்றி உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

13 டிசம்பர் 2012

கவர்ச்சியில் பைரவி கோஸ்வாமி..!

ஏற்கனவே கவர்ச்சி லட்டுகளின் திணிப்பாலும், குவிப்பாலும் திக்குமுக்காடிக் கொண்டிருக்கும் த சிட்டி தட் நெவர் ஸ்லீப்ஸ் படத்தில் மேலும் ஒரு கவர்ச்சி கொடிமுந்திரியைக் கோர்த்து விட்டுள்ளனர். அவர்தான் பைரவி கோஸ்வாமி. இசை என் வாழ்க்கை, அதுதான் என் மூச்சு என்று கூறி வருபவர் பைரவி கோஸ்வாமி, போல்டு அன்டு ப்யூட்டிபுல் என்று கவர்ச்சிக்குப் பஞ்சமில்லாமல் இருக்கும் கோஸ்வாமி ஏற்கனவே மாடலாக இருந்தபோதும், இந்திப் படங்களில் நடித்த போதும் கவர்ச்சியை கலந்து கட்டி அடித்தவர். ஏற்கனவே பீஜா, மை ஃப்ரண்ட் கணேசா படத்தில் கவர்ச்சியில் கலக்கியவர்தான் பைரவி. பட்டி ஆன் சுட்டி படத்திலும் கலக்கியவர். இப்போது சிட்டி தட் நெவர் ஸ்லீப்ஸ் படத்தில் என்ன செய்யப்போகிறார் என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.தமிழ் சினிமாவில் எப்படி பாபு கணேஷ் அந்த சாதனை, இந்த சாதனை என்று பயமுறுத்தி கலக்குகிறாரோ அதேபோலத்தான் இந்த சதீஷ் ரெட்டியும். இவரது படம்தான் த சிட்டி தட் நெவர் ஸ்லீப்ஸ். வீணா மாலிக் முக்கிய ரோலில் நடிக்கிறார்.இப்படத்தில் கவர்ச்சிக்கே முக்கியப் பாத்திரம் தரப்படுவதாக தெரிகிறது. காரணம், வீணா மாலிக் உள்பட பல கவர்ச்சி நடிகைகளை அடுத்தடுத்து புக் செய்து கொண்டிருக்கிறார் தயாரிப்பாளரான ரெட்டியும், இயக்குநரான ஹாரூன் ரஷீத்தும்.அந்த வரிசையில் லேட்டஸ்டாக வந்துள்ளார் பைரவி கோஸ்வாமி. இவரது பெயரைச் சொன்னாலே புல்லரித்துப் போகும். அப்படி ஒரு கவர்ச்சிக்குச் சொந்தக்காரப் பெண்ணாம் இவர்.த சிட்டி தட் நெவர் ஸ்லீப்ஸ் படத்தில் இப்போது பைரவியையும் சேர்த்து விட்டனர். இப்படத்தில் அவர் செக்ஸியான போஸ்கள், பிகினி உடை நடனங்கள் என தனது அழகை அள்ளிக் கொட்டப் போகிறாராம்.பைரவி கவர்ச்சியில் மட்டுமல்லாமல் பேச்சிலும் கூட செம தில்லாகத்தான் இருக்கிறார். அவர் கூறுகையில், நான் ரொம்ப போல்டானா ஆள். எனவே போல்டான சீன்களில் நடிக்க நான் தயங்கியதே கிடையாது. ரசிகர்களை மகிழ்விப்பது மட்டுமே எனது ஒரே வேலை. எதைக் காட்டினால் ரசிகர்கள் மகிழ்வார்களோ அதைக் காட்ட நான் தயங்கவே மாட்டேன்.எனக்கு இசை என்றால் கொள்ளைப் பிரியம். இசைக்கு அடிமை நான். இசை இல்லாமல் இருக்க முடியாது. அதுதான் எனது வாழ்க்கையும் கூட என்றார் பைரவி.பைரவிக்கு கவர்ச்சி புதிய விஷயமே இல்லை. மிஸ்டர் பட்டி ஆன் சுட்டி என்ற படத்தில் கவர்ச்சியில் ரசிகர்களை நனைய விட்டிருந்தார் பைரவி. அப்படத்தில் அனுபம் கெரும், அமிதாப் பச்சனும் நடித்திருந்தனர். என்னென்ன பண்ணத் திட்டமிட்டிருக்கிறாரோ பைரவி...!

09 டிசம்பர் 2012

மனம் கோணாதபடி கவனித்துக் கொள்ளுங்கள்!

அடிதடி, மிரட்டிப் பறித்தல், அச்சுறுத்தல் என கிரிமினல் வழக்குகளில் சிக்கியுள்ள கவர்ச்சி நடிகை புவனேஸ்வரி, “எனக்கு எதிராக பெரிய சதியே நடைபெறுகிறது. அதனால்தான் என் மீது அடுத்தடுத்து வழக்குகள் போடப்படுகின்றன. அதை சட்டப்படி சந்திப்பேன்” என்று கூறியுள்ளார். தற்போது, 3 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார் புவனேஸ்வரி. அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டமும் பாயவுள்ளதாக கூறப்படுகிறது. சைதாப்பேட்டை கோர்ட்டில் அவரை ஆஜர்படுத்திய போலீஸார், சிறையில் அடைத்துள்ளனர். புவனேஸ்வரி தொடர்பாக, சிறை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு பேசிய ஒரு உயர் போலீஸ் அதிகாரி, “அவரை சிறையில் மனம் கோணாதபடி கவனித்துக் கொள்ளுங்கள்” என கேட்டுக் கொண்டதாக, ஒரு தகவல் அடிபடுகிறது. தமக்கு எதிரான சதித்திட்டத்தை போட்டிருப்பது யார் என்பதை புவனேஸ்வரி வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.

03 டிசம்பர் 2012

ஆறுதல் தருகிறது நீர்ப்பறவை!

ராமேஸ்வரம் பகுதி மீனவ மக்களின் வாழ்க்கையை அப்படியே பிரதிபலிக்கிறது நீர்ப்பறவை. கிளிநொச்சிப் பகுதியில் இருந்து ராமேஸ்வரம் கரைக்கு வந்த சிறுவன், அவன் வாழ்வு, காதல், கண்ணீர், மதம், குடும்பம் கடைசியாக எப்படி சாகடிக்கப்படுகிறான் என்பதை நீர்ப்பறவை காட்சிபடுத்துகிறது. ஆழமான கதாபாத்திரங்கள், அசரவைக்கும் நடிப்பு, அற்புதமான லொகேஷன், நெகிழவைக்கும் காட்சியமைப்புகள் என அனைத்து விதத்திலும் நீர்ப்பறவை பிரமிக்கவைக்கிறது. 80களில் இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட ஒரு மீனவனின் கதை. ராமேஸ்வரக் கடலில் தத்தளிக்கும் ஒரு படகு, தன் குடும்பம் சுடப்பட்ட நிலையில் கிடக்க, அந்த பிணங்களைப் பார்த்தபடி ஒரு சிறுவன் அழுதுகொண்டே இருக்கிறான். அந்த படகு தமிழகத்தின் கரைவந்து சேர தமிழகத்தின் கிறிஸ்தவ மீனவர் குடும்பத்தில் மகனாய் வாழ்கிறான் அந்த சிறுவன். அம்மா அதிக செல்லம் கொடுத்து வளர்க்க, குடிபோதைக்கு அடிமையாகிறான். கைநடுக்கம் எடுத்தால் சாராயம் குடிக்க ஓடிவிடுவான். இப்படி மீன்பிடி தொழிலுக்குப் போகாமல் சாராயம் குடித்து ஊருக்குள் கெட்ட பேரை சம்பாதித்து வைத்தபடியே சுற்றித்திருகிறான் அருளப்பசாமி (விஷ்ணு). இந்த குடிகார அருளப்பசாமியின் வாழ்க்கையில் அதிசயமாய் வந்து சேர்கிறாள் எஸ்தர் (சுனைனா). குடிப்பதற்கு எஸ்தரிடம் அருளப்பசாமி போய் சொல்லி காசு கேட்க, அவன் சொன்னது பொய் என்பது எஸ்தருக்கு பின்னர் தான் தெரியவருகிறது. ஊரே திட்டித்தீர்க்கும் அருளப்பசாமியின் தலையில் கைவைத்து ‘ஆண்டவரே இவரை மன்னியும், இவரை மாற்றும், இந்த மகனை உம்மிடம் ஒப்படைக்கிறோம்’ என்று ஜெபம் பண்ணுகிறாள், அந்த நொடி ஏதோ ஒரு மாற்றத்தை தனக்குள் உண்ர்கிறான் அருளப்பசாமி. அவன் திருந்தி வாழவும், சொந்தமாக ஒரு படகு வாங்கி தொழில் செய்யவும் காரணமாய் இருக்கிறாள் எஸ்தர். சிறுவயதிலிருந்தே தேவாலயத்தில் வளர்ந்த எஸ்தருக்கும், அருளப்பசாமிக்கும் காதல் மலர்கிறது. உருகி உருகி காதலித்தவர்கள் திருமணம் செய்துகொள்கிறார்கள். அவர்களுக்கு ஒரு மகனும் பிறக்கிறான். ஒரு நாள் அதிகாலையில் தன் மனைவியிடம் இன்னொரு குழந்தைக்கு அனுமதி கேட்க, அதெல்லாம் இப்ப முடியாது முதல்ல கடலுக்கு போங்க என்று வம்படியாக மீன்பிடிக்க கடலுக்கு அனுப்பிவைக்கிறாள். சிரித்துக்கொண்டே கடலுக்குள் சென்ற அருளப்பசாமி திரும்ப கரைக்கு வரவே இல்லை! அடுத்து என்ன நடக்கும் என்பதை நாம் ஊகிக்க முடிந்தாலும், அந்த காட்சிகள் பார்க்கும் போது இதயம் கனக்கிறது. தன் கணவருக்கு நடந்த இந்த சோகத்தை பிளாஷ் பேக்-காக சொல்கிறார் நிகழ்கால எஸ்தர் நந்திதாதாஸ். தன் கணவரை தானே கொன்று தன் வீட்டில் புதைத்துவிட்டார் என்று நந்திதாதாஸ் குற்றம் சாட்டப்படுவதிலிருந்து துவங்குகிறது திரைக்கதை. இலங்கை கடற்படையினறால் தமிழக மீனவர் சுட்டு கொலை என்ற செய்தி நமக்கு பழக்கப்பட்டுப் போய்யிருக்கலாம். ஒரு மீனவன் சுட்டுக்கொல்லப்பட்டான் என்ற செய்திக்குள் இவ்வளவு உணர்வுபூர்வமான ஒரு வாழ்க்கை இருப்பதை இயக்குனர் சீனுராமசாமி நமக்கு உணர்த்துகிறார். தமிழன் என்கிற ஒரே காரணத்திற்காக சுட்டுக்கொல்லப்படும் அந்த ஜீவன்களுக்கு நாம் ஒரு துளி கண்ணீர் விட நீர்ப்பறவை ஒரு வாய்ப்பாக இருக்கும் என்பதில் ஆச்சரியம் இல்லை. படத்தில் நடித்த எல்லா கதாபாத்திரங்களுமே அப்படியே வாழ்ந்திருக்கிறார்கள் என்றே சொல்லத் தோன்றுகிறது. நல்ல நடிகர்களை தேர்வு செய்த இயக்குனருக்கு இன்னொரு சபாஷ். சரண்யா, தம்பி ராமைய்யா, நந்திதா தாஸ், சமுத்திரக்கனி, வடிவுக்கரசி, அழகம்பெருமாள், ப்ளாக் பாண்டி, ’பூ’ராம் என அனைவரும் நடிப்பில் வெளுத்துவாங்குகிறார்கள். இந்தக் கதாபாத்திரத்தை விஷ்ணுவை தவிர வேறு யாராவது இவ்வளவு நேர்த்தியாக நடித்திருப்பார்களா என்பது சந்தேகம் தான். சுனைனா அமைதியான கிறிஸ்துவப் பெண்ணாக அசத்துகிறார். கரைக்கு கொண்டுவரப்பட்ட சிறுவனிடம் நீ எந்த ஊருப்பா என்று கேட்க, அவன் கிளிநொச்சி என்று பதில் சொன்னதும் ‘யார் வீட்டு மகனோ மகனோ, தாய்வீடு வந்தது பிள்ளை...’ என்று வைரமுத்துவின் வரிகள் இசையாய் வந்து விழும் நேரம் இதயத்தில் மழையடிக்கிறது. மதம் வெவ்வேறாக இருந்தாலும் மனிதர்கள் ஒற்றுமையாய் இருக்கிறார்கள் என்பதை மிகவும் நேர்த்தியாக காண்பித்திருக்கிறார் இயக்குனர். இஸ்லாமியராக இருக்கும் சமுத்திரக்கனியிடம் ‘நான் கும்பிடுகிற ஏசய்யாவா உங்கள நெனைகிறேன்’ என்று விஷ்ணுவின் அப்பா உதவி கேட்பதும், விஷ்ணுவுக்கு படகு செய்துகொடுக்கும் சமுத்திரக்கனி அதில் ‘தேவனுக்கே மகிமை’ என்று எழுதி வைப்பதும் எதார்த்தங்களாக இருந்தாலும் பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. விஷ்ணுவின் குடிபழக்கத்தை குணமாக்கும் மருத்துவர் நெற்றியில் விபூதி வைத்திருப்பதையும், அந்த மருத்துவமனையில் காஞ்சி சங்கராச்சாரியாரின் போட்டோ இருப்பதையும் நாம் கவனிக்கமுடிகிறது. அவருக்கு விஷ்ணுவின் அப்பா ஒரு பெரிய மீனை பரிசாக கொடுக்கும் காட்சி நெகிழவைக்கிறது. ஜெயமோகனின் வசனங்கள் பல இடங்களில் பளிச்சிடுகிறது. மீனவன சுட்டுக் கொன்னுடா, பத்திரிக்கையில கூட இந்திய மீனவன்னு போடாம தமிழக மீனவன்னு தலைப்பப் போட்டு மேட்டரை முடிச்சுடறாங்க என்பதும், என் கணவர் உடம்பு மட்டும் தான் கரைக்கு வந்தது, உயிர் கடலுக்குள்ள தான் இருக்கு என்று நந்திதாதாஸ் சொல்வதும் நச் வசனங்கள். குடிப்பழக்கத்தை ஒருத்தன் நிறுத்திட்டான்னா, ஒன்னு அவனுக்கு அல்சர் வந்திருக்கும் இல்ல, காதல் வந்திருக்கும் என்று ஜோசப் பாரதி என்ற கதாபாத்திரத்தில் வரும் தம்பி ராமைய்யா அடிக்கடி காமெடி வெடி போடுகிறார். நிறம் மாறும் கடலை நிஜம் மாறாமல் படம்பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம். எத்தனையோ மசாலா படங்களை தயாரித்திருந்தாலும் ‘நீர்ப்பறவை’ படத்தை தயாரித்ததால் உதயநிதியின் மேல் மரியாதை அதிகரிக்கிறது. எந்தக் குற்றச்சாட்டும் இல்லாமல் தமிழன் என்ற காரணத்திற்காக சுடப்படும் மீனவர்களுக்கு ஒரு நிரந்தர தீர்வை அரசாங்கமே எடுக்க முடியாத நிலையில், நீர்ப்பறவை திரைப்படத்தில் என்ன சொல்லிவிட முடியும். இருந்தாலும் தமிழ் சினிமாவின் பார்வை இதன் மீது திரும்பி இருப்பது பாராட்டுக்குறியது. எவ்வளவோ ரத்தம் பார்த்துவிட்ட தமிழனுக்கு ஒரு துளி கண்ணீராய் ஆறுதல் தருகிறது நீர்ப்பறவை!

24 நவம்பர் 2012

ரம்யா கிருஷ்ணன் வீட்டில் நகை திருடியது ஏன்?

நடிகை ரம்யா கிருஷ்ணன் வீட்டில் நகை திருடியது ஏன் என, கைது செய்யப்பட்டுள்ள வேலைக்கார பெண் ஜோதி, பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார். சென்னை ஈச்சம்பாக்கத்தில் வசிக்கும், சினிமா நடிகை ரம்யா கிருஷ்ணனின் தாய் நித்யா, 64. படுக்கை அறை அலமாறியில் வைக்கப்பட்டு இருந்த, வைர வளையல் உள்பட, 35 சவரன் திருடு போயிருப்பதாக கொடுத்த புகாரின் பேரில், நீலாங்கரை போலீசார் , வேலைக்கார பெண் ஜோதி, 22.யை நேற்று கைது செய்துள்ளனர். அவர் போலீசில் அளித்துள்ள வாக்குமூலம்:ஆந்திர மாநிலம் குண்டூரில் பெற்றோர் வசிக்கின்றனர். எனக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வாலிபருக்கும் திருமணம் நிச்சயமாகியிருந்தது.வரதட்சணையாக, 50 சவரன் கேட்டனர். ஏழ்மை நிலையில் இருக்கும், என் தந்தையால் அவ்வளவு நகை போட முடியாது என்பதால், என்ன செய்வதென்று தவித்தேன்.வேலைக்கார பெண்ணாக இருந்த போதிலும், சினிமா நடிகை ரம்யா கிருஷ்ணன் குடும்பத்தாரின் நம்பிக்கையை பெற்று இருந்தேன்.அந்த வீட்டில் இருக்கும் பொருட்கள் அனைத்தும் எனக்கு அத்துபடி. படுக்கை அறை அலமாரியில் வைக்கப்பட்டு இருந்த வைர வளையல், தங்க வளையல், சிவப்பு, பச்சை கல் பதித்த நெக்லஸ், தங்க நாணயங்கள் என, சிறுக சிறுக திருடினேன். 35 சவரன் மட்டும் திருடியிருந்ததால், மீதிதேவைப்பட்ட, 15 சவரனையும் திருடும் வேலையை துவங்கினேன்.பச்சை கல் பதித்த வைர வளையலை, நடிகை ரம்யா கிருஷ்ணன், விரும்பி அணிவார். அந்த நகையை, நான் திருடிவிட்டதால், காணாமல், வீடு முழுக்க தேடினர். மாட்டிக் கொள்வோம் என, பயந்து, ஆந்திராவுக்கு தப்ப முயன்ற போது போலீசில் மாட்டிக் கொண்டேன். இவ்வாறு ஜோதி, போலீசில் தெரிவித்து உள்ளார்.

11 நவம்பர் 2012

ஸ்ரீரம்யா தமிழுக்கு வருகிறார்!

தெலுங்குப் படம் ஒன்றுக்காக, காட்சி தத்ரூபமாக வர வேண்டும் என்பதற்காக நிஜமாகவே மொட்டை போட்டுக் கலக்கிய நடிகை ஸ்ரீரம்யா தற்போது தமிழுக்கு வந்துள்ளார். யமுனா படத்தின் நாயகிதான் இந்த ஸ்ரீரம்யா.மணிரத்தினத்தின் ராவணன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் கணேஷ்பாபு. இவர் இப்போது இயக்குநராகியுள்ளார். இவரது முதல் படம்தான் யமுனா. இந்தப் படத்தில் நாயகியாக நடித்துள்ள தெலுங்கு நடிகை ஸ்ரீரம்யா குறித்து மிகப் பெருமையாக பேசுகிறார் கணேஷ் குமார். ஏன் கணேஷ் என்று கேட்டால் அவர் சொன்ன பதிலைப் பாருங்கள். பல முன்னணி நாயகிகளை நான் இப்படத்திற்காக அணுகினேன். ஆனால் அவர்கள் நடிக்க மறுத்து விட்டார்கள்.சிலர் நடிக்க முன்வந்தபோதும் அவர்கள் பாத்திரத்திற்கு சரியாகப் பொருந்தவில்லை.இந்த நிலையில்தான் ஸ்ரீரம்யாவை நான் அணுகினேன். ஸ்ரீரம்யா 1940 ல ஒக கிராமம் என்ற படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான ஆந்திர மாநில அரசின் நந்தி விருதை வென்றவர். மிகச் சிறப்பான நடிகை.அந்தப் படத்தில் நிஜமாகவே மொட்டை போட்டு அதிர வைத்தவர்.அவ்வளவு சிறிய வயதில் தலையை மொட்டை அடிக்க ஒரு பெண்ணுக்கு மனசே வராது. ஆனால் பாத்திரம் சிறப்பாக வர வேண்டும் என்பதற்காக மொட்டை போட்டுக் கொண்டு நடித்தவர் ரம்யா. இதனால்தான் அவரையே எனது படத்தின் நாயகியாக்கினேன் என்றார் கணேஷ் குமார்.யமுனா படத்தின் கதையைச் சொன்னதுமே டக்கென்று நான் இதில் நடிக்கிறேன் என்று சொல்லி விட்டாராம் ஸ்ரீரம்யாவும். எனவே இதனால் தமிழ் கூறும் நல்லுலகுக்குத் தெரிய வருவது என்னவெனில் தெலுங்குத் திரையுலகிலிருந்து மேலும் ஒரு நல்ல நடிகை வருகிறார் என்பதே....

04 நவம்பர் 2012

சர்ச்சையை ஏற்படுத்திய பிரேசில் அழகி.

பிரேசில் நாட்டைச் சேர்ந்த கவர்ச்சி மாடல் அழகியான நானா கோவியா, சாண்டி புயலால் பாதிக்கப்பட்ட நியூயோர்க் நகரில், சேதத்திற்கு மத்தியில் நின்று புகைப்படமெடுத்து அதை பேஸ்புக்கில் போட்டு புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். அமெரிக்கா சோகத்தில் மூழ்கிக் கிடக்கும்போது இப்படியா அதை வைத்து விளம்பரம் தேடிக்கொள்வது என்று பலரும் அவரை கிண்டலடிக்கிறார்களாம். விழுந்து கிடக்கும் மரம், சேதாரங்களுக்கு மத்தியில் நின்றபடி விதம் விதமாக போஸ் கொடுத்துள்ளார் நானா. இந்த நிலையில் நானாவை விமர்சிக்கும் வகையிலும், அவரைத் திட்டுவதற்காகவும் ஏராளமானோர் பேஸ்புக் கணக்குகளைத் தொடங்கி அவரை சரமாரியாக திட்டி வருகின்றனராம். 30 வயதான நானா, பிளேபாய் பத்திரிக்கைக்காக நிர்வாண போஸ் கொடுத்து முன்பு கலக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சாண்டி புயல் சோகத்தை ஏற்படுத்திச் சென்ற ஒன்று. ஆனால் அதைக் கொண்டாடும் வகையில் போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்துள்ளார் நானா. இது கண்டனத்துக்குரியது மட்டுமல்லாமல், மலிவான செயலுமாகும் என்று பலரும் நானாவைத் திட்டி வருகின்றனர். அவரைக் கேலி செய்யும் விதமாக உருவாக்கப்பட்ட பேஸ்புக் பக்கங்களில் கடலில் மூழ்கும் டைட்டானிக் கப்பல் அருகே நானா நிற்பது போலவும், உலகின் பல்வேறு அசம்பாவித சம்பவங்களைப் பார்த்து நானா இரசிப்பது போலவும் அவரது படத்தைப் போட்டுள்ளனராம்.

29 அக்டோபர் 2012

பிரியாணியால் விலகினாராம் ரிச்சா!

richa on briyani confusion பிரியாணி படத்தின் கதையை திடீரென இயக்குநர் வெங்கட் பிரபு மாற்றியதால் தான் அந்தப் படத்திலிருந்து விலகி விட்டாராம் ரிச்சா கங்கோபாத்யாயா. சிம்பு, தனுஷ் என அடுத்தடுத்து ஜோடி போட்டு பட்டையைக் கிளப்பியவர் ரிச்சா. ஆனால் அதற்குப் பின்னர் பார்ட்டியை ஆளைக் காணோம். இடையில் திடீரென வெங்கட் பிரபுவின் பிரியாணி படத்தில் கார்த்தியுடன் சேர்ந்து நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதே வேகத்தில் அப்படத்தில் ஹன்சிகா மோத்வானி புக் ஆனதாகவும் செய்திகள் வந்ததால் ரிச்சா மேட்டர் குழப்பமானது.

23 அக்டோபர் 2012

சுபா திடீர் மரணம்!

maalai pozhuthin mayakathile heroine subha dies மாலைப்பொழுதின் மயக்கத்திலே என்ற படத்தில் நடித்து வந்த நடிகை சுபா புத்தெலா திடீரென மரணமடைந்துள்ளார். சிறுநீரக கோளாறு இதற்குக் காரணமாக கூறப்பட்டுள்ளது.சமீபத்தில் செம்பட்டை என்ற படத்தின் ஹீரோ திலீபன் அகால மரணமடைந்தார். இந்த நிலையில் இன்னொரு முக்கியப் படத்தின் நாயகி மரணமடைந்திருப்பது கோலிவுட்டை அதிர வைத்துள்ளது. மாலைப்பொழுதின் மயக்கத்திலே என்று ஒரு படம் தயாராகி வந்தது. இதில் நாயகியாக நடித்திருந்தவர் சுபா புத்தெல்லா. இன்று காலை அவர் திடீரென மரணமடைந்தார். அவருக்கு சிறுநீரக கோளாறு இருந்ததாகவும், அதனால் அவதிப்பட்டு வந்த அவர் சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

18 அக்டோபர் 2012

அதிர வைக்கும் அஞ்சலி!

19 Actress Anjali Is Strict Diet Aid0128அங்காடித்தெரு அஞ்சலியை கலகலப்பு படம் மாஸ் நடிகையாக்கி விட்டது. அதுவரையில் அவரை கண்டுகொள்ளாதிருந்த அண்டை மாநில இயக்குனர்கள் அந்த படத்தில் அவர் நறுக் ஆட்டம் போட்டதைப்பார்த்து ஆடிப்போனார்கள். இந்த குடும்ப நடிகைக்குள் இப்படியும் ஒரு அயிட்டம் நடிகை குடியிருக்கிறாரா? என்று அசந்து போனார்கள். அதனால் அதே மூடில் அஞ்சலியை ஆந்திராவுக்கு வரவைத்து கேட்ட சம்பளத்தை கொடுத்து கால்சீட்டையும், அஞ்சலியையும் கேட்ச் பண்ணி விட்டனர். என்னதான் தமிழ் சினிமா தன்னை வளர்த்தது என்றாலும், தெலுங்கு தாய் மொழியாயிற்றே அதனால் அடுத்து அங்கு முகாம்போட்டு கல்லாக்கட்ட தீர்மானித்து விட்டார் அஞ்சலி. அதனால் தமிழில் நடித்து வரும் சேட்டை உள்ளிட்ட சில படங்களை முடித்துக்கொடுத்துவிட்டு ஆந்திர கரையோரம் முழுநேரமும் ஒதுங்க இருக்கிறார் அம்மணி.

14 அக்டோபர் 2012

நடிக்க வந்தார் ஆக்ஷன் கிங் மகள் ஐஸ்வர்யா!

Arjun Daughter Make Her Debut நடிகர் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா புதிய படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். படத்தின் தலைப்பு பட்டத்து யானை. பூபதி பாண்டியன் இந்தப் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தின் ஹீரோ விஷால். அர்ஜுனிடம் ஏழுமலை உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் விஷால் என்பது நினைவிருக்கலாம். எத்தனையோ ஹீரோக்கள் கேட்டபோதும் தன் மகளை நடிக்க அனுமதிக்காத அர்ஜுன், ஹீரோ விஷால் என்றதும் சந்தோஷத்துடன் ஒப்புக் கொண்டாராம். அர்ஜூனிடம் நேரில் போய் ஐஸ்வர்யாவை நடிக்க வைக்க வேண்டும் என்று கேட்டவரே விஷால்தானாம். "என்ன நினைப்பாரோ என்ற சந்தேகத்துடன்தான் அர்ஜுனிடம் போய் கேட்டேன். ஆனால் அவர் எடுத்த எடுப்பிலேயே ஒப்புக் கொண்டார். இந்த கேரக்டருக்கு ஐஸ்வர்யா தவிர பொருத்தமான ஒருவர் கிடைப்பது கஷ்டம்," என்கிறார் ஹீரோ விஷால். விஷுவல் கம்யூனிகேஷன்ஸ் படித்துள்ள ஐஸ்வர்யாவுக்கு நடிப்பு மீது ரொம்பவே ஆர்வமாம்.

08 அக்டோபர் 2012

சுஜிபாலா வேணாம் முறுக்கிக் கொண்ட இயக்குநர்!

New Director Cancels His Marriage With Sujibala நடிகை சுஜிபாலா எனக்கு வேண்டாம்... திருமணத்தை ரத்து செய்கிறேன் என்று அறிமுக இயக்குநர் ரவிக்குமார் கூறியுள்ளார். 'உண்மை' என்ற தலைப்பில் படம் இயக்கி வரும் புதிய இயக்குநர் ரவிக்குமாருக்கும் அந்தப் படத்தில் ஹீரோயினாக நடித்த சுஜிபாலாவுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர். நாகர்கோவிலில் நிச்சயதார்த்தம் நடந்தது. பிறகு இருவருக்கும் திடீர் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் சுஜிபாலா தற்கொலைக்கு முயன்றார். ஆனால் இதை மறுத்து சுஜிபாலா, நிச்சயிக்கப்பட்டபடி ரவிக்குமாரை திருமணம் செய்வேன் என்றார். இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன் நாகர்கோவில் வைத்தியநாதபுரத்தில் உள்ள சுஜிபாலா வீட்டுக்கு ரவிக்குமார் திடீரென்று சென்றார். அப்போது சுஜிபாலாவுக்கும் அவருக்கும் சண்டை ஏற்பட்டதாம். திருமணத்துக்கு மறுத்ததுடன் சுஜிபாலைவை பிடித்து தள்ளிவிட்டு வீட்டை விட்டு அவர் வெளியேறிவிட்டதாக கூறப்பட்டது. அப்போது வீட்டில் இருந்த சில ஆவணங்களை எடுத்துச் சென்றுவிட்டாராம். இந்த நிலையில் இயக்குனர் பி.ரவிக்குமார் சொந்த ஊரான காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து, திருமணம் ரத்தாகிவிட்டதாக கூறினார். அவர் மேலும் கூறுகையில், "எனக்கும் சுஜிபாலாவுக்கும் இரு வீட்டு பெற்றோர் சம்மதத்துடன் நாகர்கோவிலில் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் தற்போது எங்கள் இருவருக்குமே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் பிரிந்துவிட்டோம். திருமணம் ரத்தாகிவிட்டது. இனி எனக்கும் சுஜிபாலாவுக்கும் எந்த உறவோ தொடர்போ இல்லை," என்றார்.

05 அக்டோபர் 2012

போதையில் இளைஞர்கள்:சரண்யா வேதனை

போதை என்ற குறும்படத்தில் போதைக்கு அடிமையான இளைஞர்களை திருத்தும் பாத்திரத்தில் நடித்த நடிகை காதல் சரண்யா மிகுந்த மனவேதனை அடைந்தாராம். இதனை அந்த படத்தை இயக்கிய இயக்குநர் செல்வகணேஷ் கூறியுள்ளார். வெண்ணிலா கபடி குழு, குள்ளநரிக் கூட்டம், துரோகி படங்களுக்கு இசை அமைத்த செல்வகணேஷ் தற்போது போதை என்ற குறும்படத்தை இயக்கியுள்ளார். இதற்கு அவரே இசையும் அமைத்துள்ளார். போதைக்கு அடிமையாகும் இளைஞர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் இந்தப் படத்தில், போதை இளைஞர்களை திருத்தி, நல்ல பாதைக்கு மாற்றும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சரண்யா. போதையின் பாதையில் செல்லும் இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம், சர்வதேச அளவில் நடக்கும் குறும்பட விழாவுக்கு செல்ல உள்ளது. இந்த படத்திற்காக நிஜத்திலேயே போதைக்கு அடிமையான இளைஞர்களை சந்தித்த சரண்யா அவர்களின் எதிர்காலம் பற்றி மிகவும் கவலைப்பட்டார் என்று இயக்குநர் செல்வகணேஷ் கூறியுள்ளார். இந்த கதாபாத்திரம் சரண்யாவுக்கு பெரிய சவாலாக இருந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.