நடிகை சுஜிபாலா எனக்கு வேண்டாம்... திருமணத்தை ரத்து செய்கிறேன் என்று அறிமுக இயக்குநர் ரவிக்குமார் கூறியுள்ளார்.
'உண்மை' என்ற தலைப்பில் படம் இயக்கி வரும் புதிய இயக்குநர் ரவிக்குமாருக்கும் அந்தப் படத்தில் ஹீரோயினாக நடித்த சுஜிபாலாவுக்கும் காதல் மலர்ந்தது.
இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர். நாகர்கோவிலில் நிச்சயதார்த்தம் நடந்தது.
பிறகு இருவருக்கும் திடீர் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் சுஜிபாலா தற்கொலைக்கு முயன்றார். ஆனால் இதை மறுத்து சுஜிபாலா, நிச்சயிக்கப்பட்டபடி ரவிக்குமாரை திருமணம் செய்வேன் என்றார்.
இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன் நாகர்கோவில் வைத்தியநாதபுரத்தில் உள்ள சுஜிபாலா வீட்டுக்கு ரவிக்குமார் திடீரென்று சென்றார். அப்போது சுஜிபாலாவுக்கும் அவருக்கும் சண்டை ஏற்பட்டதாம்.
திருமணத்துக்கு மறுத்ததுடன் சுஜிபாலைவை பிடித்து தள்ளிவிட்டு வீட்டை விட்டு அவர் வெளியேறிவிட்டதாக கூறப்பட்டது. அப்போது வீட்டில் இருந்த சில ஆவணங்களை எடுத்துச் சென்றுவிட்டாராம்.
இந்த நிலையில் இயக்குனர் பி.ரவிக்குமார் சொந்த ஊரான காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து, திருமணம் ரத்தாகிவிட்டதாக கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், "எனக்கும் சுஜிபாலாவுக்கும் இரு வீட்டு பெற்றோர் சம்மதத்துடன் நாகர்கோவிலில் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் தற்போது எங்கள் இருவருக்குமே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் பிரிந்துவிட்டோம். திருமணம் ரத்தாகிவிட்டது. இனி எனக்கும் சுஜிபாலாவுக்கும் எந்த உறவோ தொடர்போ இல்லை," என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக