பக்கங்கள்

05 ஜூலை 2012

முத்தம் ஓகே! - அஞ்சலி

Actress Anjali Photo Galleryசேட்டை படத்தில் இரண்டு நாயகிகள். ஒருவர் அஞ்சலி. இன்னொருவர் ஹன்ஸிகா. இந்தப் படம் இந்தியில் வெளியான டெல்லி பெல்லியின் ரீமேக் என்பது தெரிந்திருக்கும். ஒரிஜினல் கதைப்படி, ஹீரோ ஹீரோயினுக்கு ஒரு நெருக்கமான படுக்கையறைக் காட்சி உண்டு. அந்தக் காட்சியை அப்படியே எடுப்பதா... அல்லது கொஞ்சம் மாற்றுவதா என்று யோசித்த இயக்குநர், கதாநாயகி அஞ்சலியிடம், படுக்கையறைக் காட்சியில் நடிக்கிறீர்களா.. அல்லது உதட்டோடு உதடு முத்தம் தரும் காட்சியாக அதை மாற்றிவிடலாமா என்று சாய்ஸ் வைத்திருக்கிறார். அஞ்சலி சற்றும் தயங்காமல், எனக்கு லிப் டு லிப் சீன் ஓகே என்றாராம். ஆர்யாவுடன் படு ரொமான்டிக்காக அந்த முத்தக் காட்சியில் நடித்தும் கொடுத்தாராம். இதுகுறித்து பின்னர் அவர் அளித்த விளக்கம்: படுக்கயறைக் காட்சியில் நடித்தால் பெயர் கெட்டுப் போகும். அதான் முத்தக்காட்சி பரவால்லேன்னு ஒத்துக்கிட்டேன் என்றாராம். அப்போ மங்காத்தாவில் படுக்கையறைக் காட்சியில் வந்தது அஞ்சலியின் டூப்போ!

04 ஜூலை 2012

மனோஜுக்கும் எனக்கும் காதல் இல்லை!

Tapsee Denies Affair With Manoj தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான மோகன் பாபுவின் மகன் நடிகர் மனோஜுடன் தனக்கு காதல், இருவரும் ஒன்றாக வசிக்கிறார்கள் என்று வரும் செய்திகளில் உண்மையில்லை என்கிறார் நடிகை டாப்ஸி. ஆடுகளம் படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமான டாப்ஸி, இப்போது அஜீத் படத்தில் நடித்து வருகிறார். டாப்ஸிக்கும் தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகனான நடிகர் மஞ்சு மனோஜ் குமாருக்கும் காதல் மலர்ந்துள்ளதாக செய்தி பரவியுள்ளது. இருவரும் தாலி கட்டாமலேயே ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்வதாகவும் கூறப்படுகிறது. இருவரும் விழாக்களில் ஒன்றாக பங்கேற்றும் வருகிவதை வழக்கமாக வைத்துள்ளனர். இதுகுறித்து வரும் செய்திகள் பற்றி கோபமடைந்துள்ள டாப்ஸி கூறுகையில், "மனோஜையும் என்னையும் இணைத்து அடிக்கடி கிசுகிசுக்கள் வருகின்றன. இதை பரப்புவது யார் என்று எனக்கு தெரியும். மனோஜுக்கும் எனக்கும் காதல் இல்லை. மஞ்சு மனோஜ் அவரது குடும்பத்துடன் வசிக்கிறார். நான் மாதாபூரில் உள்ள எனது வீட்டில் வகிக்கிறேன். ஹாலிவுட்டில் நடிகர், நடிகைகள் நண்பர்களாக இருக்கின்றனர். ஆண், பெண் டாக்டர்களும் நண்பர்களாக உள்ளனர். நாங்கள் ஏன் இருக்கக் கூடாது?" என்றார்.

29 ஜூன் 2012

அமலா போட்ட சம்பளச்சண்டை!

Amala Paul Photosமைனா படம் மூலம் பிரபலமானவர் அமலாபால். விக்ரமுடன் “தெய்வத் திருமகள்” படத்தில் நடித்தார். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்தார். அமலாபாலை வெளிநாட்டில் நடந்த திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவொன்றில் நடனம் ஆடுவதற்காக சமீபத்தில் அழைத்து சென்றனர். அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டார். விழா துவங்கியதும் அவரை நடனமாட அழைத்தனர். ஆனால் சம்பளம் தராததால் ஆட மறுத்து விட்டார். ஓட்டல் லாபியில் நின்று பேசியபடி சம்பளம் தராதது ஏன்? என்று விழா அழைப்பாளர்களிடம் ஆவேசமாக பாய்ந்து ரகளையில் ஈடுபட்டார். முழு தொகையும் கொடுத்தால்தான் ஆடுவேன் என அடம் பிடித்தார். அமலாபால் தகராறு செய்வதை ஓட்டலுக்கு வந்து போனவர்கள் வேடிக்கை பார்த்தனர். விழா அமைப்பாளர்களிடம் இதுகுறித்து கேட்டபோது, அமலாபால் ரகளை செய்தது உண்மைதான் என்று ஒப்புக் கொண்டனர். சம்பளத்துக்காக அவர் தகராறு செய்யவில்லை. விமான டிக்கெட் எடுத்து கொடுக்கும் பிரச்சினையில் தான் அவர் சண்டை போட்டார் என்றனர். அவர் கேட்டபடி டிக்கெட் எடுத்து கொடுத்த பிறகு அவரது அம்மா மற்றும் உறவினருடன் விமானத்தில் புறப்பட்டார் என்றனர்.

20 ஜூன் 2012

துப்பட்டாவால் மறைக்கும் நயன்தாரா!

Nayantara Hides Prabhu Deva Tatto நயன்தாரா தன் கையில் உள்ள பிரபுதேவாவின் பெயரை துப்பட்டாவால் மறைத்துக் கொண்டிருக்கிறார். நயன்தாராவும், பிரபுதோவாவும் உருகி, உருகி காதலித்தனர். கடைசியில் பார்த்தால் ஆளுக்கொரு பக்கமாக பிரிந்து சென்றுவிட்டனர். காதலித்த காலத்தில் பிரபுதேவாவின் பெயரை நயன்தாரா தனது இடது கையில் பச்சை குத்தினார். காதல் முறிந்த பிறகும் அவர் அந்த பச்சையை இன்னும் அழிக்கவில்லை. இந்நிலையில் அவர் தனது கையில் உள்ள பச்சையை அழிக்க வெளிநாடு சென்றார் என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால் அது உண்மையில்லை என்று நயன் தெரிவித்தார். இந்நிலையில் அண்மையில் ஹைதராபாத்தில் நடந்த விருது வழங்கும் விழாவில் நயன் கலந்து கொண்டார். அவர் கையில் உள்ள பிரபு தேவாவின் பெயரை எப்படியாவது போட்டோ எடுத்துவிட வேண்டும் என்று புகைப்படக்காரர்கள் முயன்றார்கள். அவர் முக்கால் கை உள்ள சுடிதார் அணிந்து துப்பட்டாவால் தன் கையில் உள்ள பச்சையை மறைத்துச் சென்றார். புகைப்படக்காரர்கள் முட்டி மோதி ஒரு வழியாக அந்த பச்சையை போட்டோ எடுத்துவிட்டனர். பிரபுதேவா என்னவென்றால் நயன் முடிந்து போன விஷயம் என்கிறார். ஆனால் நயன்தாராவோ பிரபுதேவாவின் பெயரை இன்னும் அழிக்காமல் வைத்துள்ளார்.

16 ஜூன் 2012

அமெரிக்காவில் தேன்நிலவு கொண்டாட்டம்!

Sneha Prasanna Fly Off Us சினேகாவுக்கும் பிரசன்னாவுக்கும் காதல் ஆரம்பமானது, இருவரும் ஜோடி சேர்ந்த அச்சமுண்டு அச்சமுண்டு படத்திலிருந்துதான். இந்தப் படத்தில் நடிக்க ஒத்திகை பார்க்க, இருவரும் அமெரிக்காவில் ஒரே வீட்டில் தங்கியிருந்தனர். கணவன் - மனைவியாக நடிக்க ஒத்திகை பார்த்தனர். அப்போதுதான் இருவருக்கும் காதல் பூத்தது. இரண்டு ஆண்டுகளுக்குமேல் காதலித்து, கடந்த மாதம் தம்பதிகளாகினர். திருமணமாகிவிட்டாலும் அவர்களால் ஹனிமூனை உடனடியாகக் கொண்டாட முடியவில்லை. தான் நடிக்க வேண்டிய பட வேலைகளில் பிஸியாகிவிட்டார் சினேகா. ஒருவழியாக இரவு பகல் பார்க்காமல் அந்த வேலைகளை முடித்துக் கொடுத்துவிட்டு, இப்போதுதான் இல்லற வேலைகளை ஆரம்பித்துள்ளனர் புதுமணத் தம்பதிகள். தேனிலவுக்காக எங்கே போகலாம் என்ற குழப்பமே இருவருக்கும் இல்லையாம். காரணம், தங்கள் காதல் ஆரம்பித்த அமெரிக்காவுக்கே செல்ல முடிவெடுத்திருந்தார்களாம். தங்கள் முடிவை இரு தினங்களுக்கு முன் அமைதியாக செயல்படுத்தினர் சினேகாவும் பிரசன்னாவும். இருவரும் நேற்று முன்தினம் ஹனிமூனுக்காக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றனர்!

13 ஜூன் 2012

த்ரிஷாவின் குத்துச்சண்டை!

trisha0011.jpgபூலோகம் படத்தில் த்ரிஷாவின் நடிப்பை பார்த்து வியந்து போன இயக்குநர் கல்யாண கிருஷ்ணன் ‘லேடி பாக்ஸர்' என்று த்ரிஷாவிற்கு பெயர் சூட்டியுள்ளாராம். இதை பத்திரிக்கையாளர் சந்திப்பில் த்ரிஷாவே கூறியுள்ளார். உனக்கும் எனக்கும் படத்திற்குப் பிறகு ஜெயம் ரவி, த்ரிஷா இணையும் படம் பூலோகம். இதில் ஜெயம் ரவி குத்துச்சண்டை வீரராக நடிக்கிறார். கதாநாயகி த்ரிசாவிற்கு வலுவான பாத்திரமாம். இதுகுறித்து பத்திரிக்கையாளர்களிடம் த்ரிஷா கூறியுள்ளதாவது, பூலோகத்தில் ஜெயம் ரவி குத்துச்சண்டை வீரராக நடிக்கிறார். படத்தில் என்னுடைய ரோல் ரொம்ப வெயிட்டானது. ஜெயம் ரவியின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் பெண்ணாக இப்படத்தில் நடிக்கிறேன். இப்படத்தில் ஜெயம் ரவியின் கேரக்டருக்கு பலமே நான் தான். படத்தில் என்னுடைய கேரக்டரை பார்த்து டைரக்டர் என்னை குத்துச்சண்டை வீராங்கனை என்று தான் அழைக்கிறார் என்று கூறியுள்ளார். ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விறுவிறுப்பாக படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. பூலோகம் படத்தை நவம்பர் 15ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

10 ஜூன் 2012

முகத்தை திருப்பும் அசின்!


Asin%20Reallife%20%281%29.jpgமும்பையில் கோலிவுட் ஹீரோயின்களைப் பார்த்தால் நடிகை அசின் முகத்தை திருப்பிக் கொள்கிறார் என்று கூறப்படுகிறது.
அசின் மலையாளத்தில் அறிமுகமானாலும் தமிழில் தான் பெரிய நடிகையாகி கொடிகட்டிப் பறந்தார். இங்குள்ள முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீர் என்று பாலிவுட் ஆசை வந்து அங்கு சென்றார். அவர் என்றைக்கு பாலிவுட் சென்றாரோ அன்றில் இருந்து அவரைப் பற்றி ஏராளமான வதந்திகள், செய்திகள் வெளி வருகின்றன.
பாலிவுட் படங்களில் வாய்ப்பு பெறுவதற்காக அசின் தான் தன்னைப் பற்றி தானே வதந்திகளைப் பரப்புவகாக பாலிவுட் ஹீரோயின்கள் கூறுகிறார்களாம். யார் என்ன கூறினாலும் சளைக்காமல் இருக்கும் அசின் தானே பாலிவுட்டின் நம்பர் 1 ஹீரோயின் என்று கூறிக் கொள்கிறார். அங்கு அவர் மூன்று ஹிட் படங்கள் கொடுத்துவிட்டாராம் அதனால் தான் இப்படி சொல்லியிருக்கிறார்.
இனி தமிழ் படங்களில் எல்லாம் நடிக்க மாட்டேன் என்று அவர் கூறியதாக செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில் அவரைப் பற்றி புதிய செய்தி கிடைத்துள்ளது. நம்ம கோலிவுட் ஹீரோயின்கள் யாரையாவது மும்பையில் பார்த்தால் அசின் ஒரு வார்த்தை கூட பேசமால் முகத்தை திருப்பிக் கொள்கிறாராம். கோலிவுட் ஹீரோயின்கள் இது ஏன் இவர் இப்படி நடந்து கொள்கிறார் என்று கேட்கிறார்களாம்.

09 ஜூன் 2012

கவர்ச்சிக்கு முக்கியத்துவம்!

கற்றது தமிழ் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நடிகை அஞ்சலி அங்காடித்தெரு படம் மூலம் ஹிட் நாயகி ஆனார். அந்த படத்தை தொடர்ந்து பல இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் அஞ்சலியிடம் கால்ஷீட் கேட்டு அணுகியும் கொடுக்க முடியாத நிலை உருவாகின.அங்காடித்தெருவுக்கு முந்தைய காலகட்டத்தில் ஒப்புக் கொண்ட படங்கள். ஏற்கனவே கமிட் ஆகியிருந்த சின்ன பட்ஜெட் படங்கள் சிலவற்றில் நடித்துக் கொடுக்க வேண்டிய கட்டாய சூழ்நிலையில் இருந்த அஞ்சலி புதிய படங்களில் ஒப்பந்தமாகாமல் இருந்தார். இப்போது பழைய கமிட்மெண்ட்கள் அனைத்தையும் முடித்து விட்ட அஞ்சலி, இனி முன்னணி ஹீரோக்களுடன் மட்டுமே நடிப்பது என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம். கலகலப்பு கவர்ச்சிக்கு ரசிகர்களின் ஆதரவு பெருகி வருவதால் இதுவரை நடிப்புக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வந்த அஞ்சலி இனிமேல் கவர்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுக்கவும் திட்டமிட்டிருக்கிறார்.

07 ஜூன் 2012

ஈர்ப்பு இல்லையே...!

Veena Malikதி டர்ட்டி பிக்சர்ஸ்-சில்க் சக்கத் ஹாட் மகா என்ற கனனடப் படத்தில் சி்ல்க் ஸ்மிதா வேடத்தில் நடித்து வரும் வீணா மாலிக்கின் கவர்ச்சி ஸ்டில்கள் உலா வர ஆரம்பித்துள்ளன. ஆனால் வித்யா பாலன் அளவுக்கு வீணாவிடம் ஈர்ப்பில்லையே என்ற உச்சுக் கொட்டும் குரல்களும் கூடவே கிளம்பியுள்ளன. வித்யா பாலன் நடிப்பில் இந்தியில் வெளியாகி பெரும் வெற்றியையும், வித்யாவுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றுத் தந்த படமான டர்ட்டி பிக்சர்ஸ் தற்போது பல மொழிகளிலும் ரீமேக் ஆகிறது. கன்னடத்தில் திரிஷூல் இயக்கத்தில் இப்படம் ரீமேக் செய்யப்படுகிறது. பாகிஸ்தானைச் சேர்ந்த வீணா மாலிக் இதில் நாயகியாக நடிக்கிறார். அவர இடம் பெற்றுள்ள பட ஸ்டில்கள் ரவுண்டு அடிக்க ஆரம்பித்துள்ளன. வித்யா பாலனின் டர்ட்டி பிக்சர் படங்கள் வெளியானபோது அது காட்டுத் தீ போல படு வேகமாக பரவியது. மேலும் வித்யாவின் கவர்ச்சி அழகுணர்வுடன் ரசிக்கப்பட்டது. இருப்பினும் வீணாவின் படங்களுக்கு அந்த அளவுக்கு கெளரவம் கிடைக்கவி்ல்லை என்ற பேச்சு எழுந்துள்ளது. படத்தைப் பார்த்துட்டு உங்க கமெண்ட்டைச் சொல்லுங்க...Veena Malik

03 ஜூன் 2012

த்ரிஷா, ராணா காதல் முறிவு!

Bipasha Behind Rana Daggubati Trisha Split தெலுங்கு நடிகர் ராணா டக்குபாத்தியும், த்ரிஷாவும் பிரிய பாலிவுட் கவர்ச்சிக் கன்னி பிபாஷா பாசு தான் காரணம் என்று கூறப்படுகிறது. தெலுங்கு நடிகர் ராணா டக்குபாத்தி பாலிவுட்டிலும் நடித்து வருகிறார். ஜான் ஆபிரகாமை பிரிந்த பாலிவுட் நடிகை பிபாஷா பாசுவுக்கும், ராணாவுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளதாக செய்திகள் பரவின. இதைக் கேட்டு பதறிய ராணா ச்சே, ச்சே நானும் பிபாஷாவும் காதலர்கள் எல்லாம் கிடையாது நல்ல நண்பர்கள் மட்டுமே என்றார். மேலும் தனது நீண்ட நாள் காதலியான த்ரிஷாவுடனான உறவு நன்றாக இருப்பதாகவும், அவரை பிரியும் எண்ணம் இல்லை என்றும் தெரிவித்தார். இந்நிலையில் ராணா, த்ரிஷா காதல் முறிந்துவிட்டதாகவும், அதற்கு காரணம் பிபாஷா என்றும் பேச்சு அடிபடுகிறது. இது குறித்து ராணாவுக்கு நெருக்கமான ஒருவர் கூறுகையில், பிபாஷாவுடன் ராணா நெருக்கமானது த்ரிஷாவை கடுப்பாக்கியுள்ளது. மேலும் ராணா பாலிவுட்டில் பிசியாக இருப்பதால் அவர் ஹைதராபாத் வர நேரம் கிடைப்பதில்லை. அதே சமயம் கட்டா, மீட்டாவில் நடித்தாலும் த்ரிஷாவின் பாலிவுட் கனவு நிறைவேறவில்லை என்றார். த்ரிஷாவுக்கு முன்பு ஸ்ரேயாவை டேட் செய்தார் ராணா. த்ரிஷா என்ட்ரியால் ஸ்ரேயா காதல் முறிந்தது. தற்போது பிபாஷாவால் த்ரிஷா காதல் முறிந்துள்ளது என்று கூறப்படுகிறது.

01 ஜூன் 2012

அஜித்திற்கு ஜோடி அனுஷ்கா?

சிறுத்தை பட இயக்குனர் சிவா எடுக்கும் படத்தில் தல அஜீத் குமார் நடிக்கவிருக்கிறார். அவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடிப்பார் என்று கூறப்படுகிறது. கார்த்தியை வைத்து சிறுத்தை படம் எடுத்த சிவா தற்போது அஜீத் குமாரை வைத்து ஒரு படத்தை எடுக்கவிருக்கிறார். இந்த படத்தை விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கவிருக்கிறது. இதில் அஜீத் குமாருக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கவிருக்கிறாராம். அவரை சந்தித்து கதை சொன்னவுடன் அவருக்கு கதை மிகவும் பிடித்துவிட்டதாம். தான் இந்த படத்தில் நடிக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் வெறும் பேச்சு, பேச்சாகத் தான் இருக்கிறது. விருப்பம் தெரிவி்த்த அவர் கால்ஷீட் பற்றி மூச்சு விடவில்லையாம். இருப்பினும் அவர் விரைவில் கால்ஷீட் தருவார் என்று சிவா மலை போல் நம்புகிறாராம். அப்படி அனுஷ்கா ஒப்புக் கொண்டால் அஜீத்துடன் அவர் ஜோடி சேரும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அஜீத் விஷ்ணுவர்தனின் படத்தில் பிசியாக இருக்கிறார். அனுஷ்கா கார்த்தியுடன் அலெக்ஸ் பாண்டியன், விக்ரமுடன் தாண்டவம், ஆர்யாவுடன் இரண்டாம் உலகம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அவர் விரைவில் அஜீத் படத்தில் நடிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

30 மே 2012

நீ தமிழில் பாடக்கூடாது....!

Premgi Miffed With Singer Girish ஐபிஎல் இன்னும் என்னென்ன சண்டையை 'வலித்து'க் கொண்டு வருமோ... இந்த முறை இரு கோலிவுட் நட்சத்திரங்கள் மோதிக் கொண்டுள்ளனர். அவர்கள் பிரபல நடிகர் பிரேம்ஜி மற்றும் பாடகர் கிரிஷ். சென்னையை தோற்கடித்து கொல்கத்தா அணி கோப்பையை வென்றதையடுத்து, இயக்குநரும் நடிகருமான பிரபுதேவா வீட்டில் ஒரு பார்ட்டி நடந்தது. விடிய விடிய நடந்த இந்த மது விருந்தில் கொல்கத்தா அணி உரிமையாளர் ஷாரூக்கான், அவர் மனைவி கவுரி, நடிகர் அக்ஷய் குமார், உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தமிழ் சினிமா பாடகரும் நடிகை சங்கீதாவின் கணவருமான கிரிஷும் இதில் கலந்து கொண்டு, விருந்துக்கு வந்தவர்களுடன் போஸ் கொடுத்து அதை ட்விட்டரில் வெளியிட்டிருந்தார். இதைப் பார்த்ததும் கோபமடைந்த பிரேம்ஜி, "சென்னை அணியை தோற்கடித்த கொல்கத்தா அணி ஓனர்கூட விருந்தில் கலந்து கொண்டது சரியா... இனி நீ தமிழில் பாடக்கூடாது. போய் கொல்கத்தால பாடித்தான் பிழைக்கணும்," என ட்வீட் செய்தார். உடனே கிரிஷ், "டேய்... அது பிரபு தேவா கொடுத்த விருந்துடா... நான் அவர்கூட தான் போட்டோ எடுத்துக்கிட்டேன். அந்த விருந்துக்கு ஷாரூக் வந்திருந்தார் அவ்வளவுதான்," என பதில் கூறியிருந்தார். பிரேம்ஜியும் கிரிஷும் நண்பர்களும்கூட. எனவே இந்த ட்விட்டர் சண்டை பற்றிக் கேட்டதற்கு, "எங்களுக்குள் சண்டை எதுவும் இல்லை. பிரேம்ஜியின் கமெண்டை நான் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை," என்றார். பிரேம்ஜி கூறுகையில், "சும்மா வாய் சண்டைதான். ஐபிஎல் வேற முடிஞ்சிடுச்சா.. ஒரே போர்.. அதான் கிரிஷை கலாய்ச்சேன்," என்றார் தன் பாணியில்...

28 மே 2012

அப்படியெல்லாம் நடிக்க மாட்டேன்... நமீதா உறுதி!

namitha kapoorஓரினச்சேர்க்கையாளராக நடிக்க வேண்டும் என்று ஒரு இயக்குநர் விடுத்த வேண்டுகோளை ஒரேயடியாக நிராகரித்து விட்டாராம் நமீதா. நடிப்புக்காக கூட அதை நான் விரும்பவில்லை, ஆதரிக்க விரும்பவில்லை என்று ஒரே போடாக போட்டு விட்டாராம் நமீதா. கவர்ச்சிக்குப் பெயர் போனவர் நமீதா. ஆனால் இப்போதெல்லாம் தனது கவர்ச்சியில் ஆபாசமோ, அசிங்கமோ இல்லாதவாறு பார்த்துக்கொள்வதில் சற்று கவனமாகவே இருக்கிறார். நடிப்பதிலும் கூட சில பாலிசிகளை வைத்துக் கொண்டு தேர்வு செய்து வேடங்களை ஒப்புக் கொண்டு வருகிறார். முன்பு போல படங்கள் அவர் கையில் இல்லாவிட்டாலும் கூட நிறைந்த மனதுடன்தான் இருக்கிறாராம். சமீபத்தில் அவரிடம் ஒரு இயக்குநர் கதை சொல்லியுள்ளார். படத்தின் ஒரு வரிக் கதையைக் கேட்ட அவர் இம்ப்ரஸ் ஆகி, பரவாயில்லையே, நல்லாருக்கே நடிக்கலாமே என்று கூறி கதையை விரிவாக சொல்லுமாறு கேட்டுக் கொண்டார். அது ஒரு ஆவிக் கதையாகும். இயக்குநரும் ஆர்வத்துடன் கதையை விவரிக்க ஆரம்பித்தார். சீன் பை சீனாக விழி விரிய கேட்டுக் கொண்டு வந்த நமீதா கதையை அவர் சொல்லி முடித்தவுடன், சாரிப்பா, இதில் நடிக்க முடியாது என்று கூறி விட்டாராம். என்னங்க இது நல்லாத்தானே போய்ட்டிருந்துச்சுச என்று இயக்குநர் குழப்பமாகி, ஏன் மேடம் என்று கேட்டுள்ளார். அதில் ஆவி ஒன்று என்னுடன் செக்ஸ் வைத்துக் கொள்வது போல சீன் வருகிறதே அதனால்தான் வேண்டாம் என்கிறேன் என்றார். ஏன் மேடம் கனவில்தானே அப்படி வருகிறது என்று கேட்க, அது குறித்துக் கூட எனக்குப் பிரச்சினையில்லை, உறவு வைத்துக் கொள்வது போல நடிக்கவும் நான் தயார்தான். ஆனால் அது பெண் ஆவி ஆச்சே... எப்படி முடியும் என்றாராம். எனக்கு ஓரினச் சேர்க்கை என்பது பிடிக்கவே பிடிக்காது. அதை நான் ஆதரிக்க மாட்டேன். நடிப்புக்காகவோ அல்லது விளையாட்டுக்காகவோ கூட அதை நான் ஆதரிக்க மாட்டேன் என்று கூறி விட்ட நமீதா, இந்தப் படத்தில் நடிக்க முடியாது, தப்பா நினைச்சுக்காதீங்க என்று கூறி அனுப்பி வைத்து விட்டாராம்.

25 மே 2012

கார்த்திக்கு 35வது பிறந்தநாள்!

கார்த்தி சிவகுமார் இன்று தனது 35வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
நடிகர் சிவகுமாரின் இளைய மகன், சூர்யாவின் தம்பி என்பதையும் தாண்டி திரையிலகில் கார்த்தி தனக்கென்று ஒரு பெயரை எடுத்துள்ளார். அவர் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலும் அவரது நடிப்பு பேசப்படுகிறது.
இப்படி நடிப்பில் வெளுத்து வாங்கி ரசிகர்கள் மனதில் நாற்காலி போட்டு உட்கார்ந்திருக்கும் கார்த்தி இன்று தனது 35வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். திருமணத்திற்கு பிறகும் வரும் முதல் பிறந்தநாள் இது. அதனால் அவர் மனைவியுடன் ஸ்பெஷலாக பிறந்தநாள் கொண்டாடுகிறார் என்று எதிர்பார்க்க வேண்டாம். அவர் சாலக்குடியில் அலெக்ஸ் பாண்டியன் படப்பிடிப்பில் உள்ளார்.
சின்சியரான கார்த்திக்கு இன்று இரவு கேக் வெட்டி பிரம்மாண்டமான பிறந்தநாள் பார்ட்டி கொடுக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அது மட்டுமி்ன்றி அவரது பிறந்தநாளையொட்டி அவரது ரசிகர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். புளியந்தோப்பில் ரத்ததான முகாம் நடத்தப்படுகிறது. வால்டாக்ஸ் ரோட்டில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு உணவு, உடை வழங்கப்படுகிறது. மேலும் வட சென்னையில் கால்பந்து போட்டி மற்றும் கபடி போட்டி ஆகியவை நடத்தப்படுகின்றன.
கார்த்தி ரசிகர்களுக்காக அவரது சகுணி படத்தில் இருந்து 2 காட்சிகள் இன்று வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சகுணி அடுத்த மாதம் ரிலீஸ் ஆகிறது. அலெக்ஸ் பாண்டியன் படத்தை அடுத்து அவர் ஆல் இன் ஆல் அழகு ராஜாவில் நடிக்கிறார்.
பிறந்தநாள் வாழ்த்துக்கள் கார்த்தி...

23 மே 2012

இலங்கை கடற்கரையை சூடாக்கிய சன்னி லியோன்!

Sunny Leoneஆபாச படங்களில் இருந்து பாலிவுட்டுக்கு வந்துள்ள நடிகை சன்னி லியோன் ஜிஸ்ம் 2 படத்திற்காக இலங்கையின் ரம்மியமான கடற்கரைகளில் பிகினி அணிந்து நடித்துள்ளாராம்.
பாலிவுட்டுக்கும், பிகினிக்கும் அவ்வளவு ராசியாகிவிட்டது. முன்பெல்லாம் ஹாலிவுட் நடிகைகள் தான் பிகினி அணிந்து சன் பாத் எடுப்பார்கள். ஆனால் இப்போது பாலிவுட் படங்களில் பிகினி உடையில் வர நடிகைகளிடையே போட்டி நிலவும் நிலை உள்ளது. பிகினி அணிந்து நடிப்பதற்காகவே சில நடிகைகள் உடலை குறைக்கின்றனர் என்றால் பாருங்களேன்.
ஆபாச படங்களில் நடிக்கும் சன்னி லியோன் பாலிவுட் இயக்குனர் மகேஷ் பட்டின் ஜிஸ்ம் 2 படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் ஷூட்டிங் தற்போது இலங்கையில் நடந்து வருகிறது. அங்குள்ள அழகான கடற்கரைகளில் சன்னி பிகினி அணிந்து வரும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. அந்த படங்களை இயக்குனர் மகேஷ் பட் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
ஜிஸ்ம் 2 படத்தில் பிகினி காட்சி தவிர ரந்தீப் ஹூடாவுடன் படுக்கையறைக் காட்சிகளிலும் சன்னி லியோன் நடித்துள்ளார். அவ்வாறு படுக்கையறைக் காட்சிகளில் நடிக்கும் போது அவர் மிகவும் கூச்சப்பட்டதாக இயக்குனர் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
நாலு சுவருக்குள் வெட்கப்படுகிறார் சன்னி, ஆனால் வெட்ட வெளியில் படு குஷாலாக நடிக்க வெட்கப்பட மாட்டாராம்...

20 மே 2012

அசினை நடிக்க வைக்கக் கூடாது!

 இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் விருந்து சாப்பிட்ட அசினை தன் படத்தில் ஷங்கர் நடிக்க வைக்கக் கூடாது என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது.
இலங்கைக்கு எந்த நடிகர் நடிகையும் செல்லக் கூடாது என்ற தடையை மீறி இலங்கை சென்ற நடிகை அசின், ரெடி படப்பிடிப்பில் பங்கேற்றார். அங்கு ராஜபக்சேவுடன் விருந்து சாப்பிட்டார்.
இதனால் அவருக்கு தமிழகத்தில் எதிர்ப்புகள் கிளம்பின. ஆனால் அதைக் கண்டு கொள்ளவில்லை அசின். சினிமா உலகினரும் இதெல்லாம் சகஜம் என்று மறந்துவிட்டனர்.
அதற்குப் பிறகு தமிழில் விஜய்க்கு ஜோடியாக அசின் நடித்த காவலன் படம் கூட வெளியாகிவிட்டது.
இந்த நிலையில் ஷங்கர் இயக்கப் போகும் புதுப்படத்தில் விக்ரம் ஜோடியாக நடிக்க அசின் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அக்கட்சியின் மாநில செயலாளர் பி.ஆர்.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இலங்கையில் ராஜபக்சே அரசு ஈழத் தமிழர்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்தது. அதன் மூன்றாம் ஆண்டு துக்க தினத்தை உலக தமிழர்கள் இப்போது கடை பிடிக்கின்றனர்.ராஜபக்சே மீது போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்ற குரல்கள் ஒலித்து வருகின்றன.
இந்த நிலையில் தமிழர் உணர்வுகளுக்கு எதிராக நடந்து கொண்ட அசினை தனது புதுப்படத்தில் நடிக்க வைக்க இயக்குனர் ஷங்கர் முடிவெடுத்திருப்பதாக வெளியான தகவல் தமிழர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி யுள்ளது. திரையுலகினரின் தடையை மீறி அசின் இலங்கை சென்றது மட்டு மின்றி ராஜபக்சேயுடன் விருந்தும் சாப்பிட்டார்.
ஒன்றரை லட்சம் தமிழர்களை கொன்றவர்களோடு கைகுலுக்கி விட்டு வந்த அசினை படத்தில் ஷங்கர் நடிக்க வைக்கக்கூடாது. மீறி நடிக்க வைத்தால் ஷங்கர் வீட்டு முன் முற்றுகை போராட்டம் நடத்துவோம்," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

16 மே 2012

அடுத்த சண்டையை ஆரம்பித்தார் வனிதா!

Vanitha Fights With Her 2nd Husband For Daughter நடிகை வனிதா விஜயகுமார் இப்போது தனது அடுத்த சண்டையை ஆரம்பித்துள்ளார். இந்த முறை இரண்டாவது கணவர் ஆனந்த ராஜனுடன்!
வனிதாவுக்கும் நடிகர் ஆகாஷூக்கும் முதலில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஸ்ரீஹரி என்ற மகனும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.
பின்னர் ஆகாஷூகும் வனிதாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து, விவாகரத்து பெற்றனர். ஆனந்தராஜ் என்பவரை வனிதா இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஜெய் நிதா என்ற பெண் குழந்தை பிறந்தது.
வனிதாவுக்கும் முதல் கணவர் ஆகாஷூக்கும் பிறந்த குழந்தை ஸ்ரீஹரியை யார் வைத்துக் கொள்வது என்பதில் தகராறு ஏற்பட்டது. இருவரும் நீதிமன்றம் சென்றனர். தாயாருடன்தான் அந்த சிறுவன் இருக்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தாலும், தந்தையுடன்தான் இருப்பேன் என்று அந்தப் பையன் அடம் பிடித்ததால் வழக்கில் திருப்பம் ஏற்பட்டது.
மகனுக்காக ஆனந்தராஜை பிரிந்தார். மீண்டும் முதல் கணவர் ஆகாஷூடனேயே சேர்ந்து விட்டார் வனிதா. இருவரும் சேத்துப்பட்டில் உள்ள வீட்டில் ஒன்றாக வசிக்கின்றனர். ஆனந்தராஜுக்குப் பிறந்த ஜெய் நிதாவையும் தன்னுடனே வைத்திருந்தார் வனிதா.
இதற்கிடையில் ஆனந்தராஜ் நேற்று நள்ளிரவு வனிதா வீட்டில் புகுந்து தனது மகள் ஜெய் நிதாவை அழைத்துச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. மகளை காணாமல் வனிதா திடுக்கிட்டார். பிறகு ஆனந்தராஜ் வீட்டில் இருப்பது அவருக்கு தெரிய வந்தது.
உடனேயே அவர் வீட்டுக்கு சென்று மகளை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். ஆனால் ஆனந்தராஜ் கொடுக்க மறுத்தார். மகளை கவனிக்காமல் ஒதுக்குவதாக வனிதா மேல் அவர் குற்றம்சாட்டியதாக கூறப்படுகிறது.
ஆனாலும் வனிதா அங்கிருந்து போகாமல் ஆனந்தராஜ் வீட்டுக் கதவை தட்டி நீண்ட நேரம் ரகளை செய்ததாக கூறப்படுறது. அக்கம் பக்கத்தினர் திரண்டு தகராறை வேடிக்கை பார்த்தார்கள்.
அடுத்து ஒருவர் மீது ஒருவர் புகார் கொடுக்கத் தயாராகி வருகிறார்கள். நீதிமன்றம் செல்லவும் முடிவு செய்துள்ளனர்.

14 மே 2012

திரிஷாவும் அன்னையர் தினமும்!

விளம்பர பட ஷூட்டிங்கில் நடிக்க மைசூர் சென்றதால் த்ரிஷாவால் அன்னையர் தினத்தை அம்மாவுடன் கொண்டாட முடியாமல் போனது.
நடிகை த்ரிஷா அம்மா உமாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அம்மா, மகள் பாசம் அனைவரும் அறிந்ததே. த்ரிஷா இந்த அளவுக்கு வளர்ந்ததற்கு காரணம் யார் என்று யாரைக் கேட்டாலும் உமா என்பார்கள். த்ரிஷாவும் அடிக்கடி இதைத் தான் கூறி வருகிறார். நான் இந்த நிலைமைக்கு வந்துள்ளேன் என்றால் அதற்கு என் அம்மா தான் காரணம் என்று பெருமையாக சொல்வார்.
நேற்று அன்னையர் தினமாச்சே த்ரிஷா எப்படி கொண்டாடினார் என்று கேட்காதீர்கள். ஏனென்றால் விளம்பர பட ஷூட்டிங்கில் நடிப்பதற்காக த்ரிஷா மைசூருக்கு சென்றுவிட்டாராம். இதனால் அம்மாவுடன் அன்னையர் தினம் கொண்டாட முடியவில்லையாம். இருப்பினும் டுவிட்டரில் அவர் தனது அம்மாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நான் அதிகம் நேசிக்கும் மற்றும் நான் இன்றைக்கு நானாக இருக்க காரணமான எனது அம்மாவுக்கு இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள். ஐ லவ் யூ அம்மா.
மேலும் செல்போனில் தொடர்பு கொண்டும் அம்மாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜூனியர் என்.டி.ஆருடன் நடித்த தம்மு படம் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. தமிழில் சமர், என்றென்றும் புன்னகை மற்றும் பூலோகம் ஆகிய 3 படங்களில் நடிக்கிறார் த்ரிஷா.

11 மே 2012

தி டர்ட்டி பிக்சரில் நயன்தாரா!

இந்தியில் பெரும் வெற்றிப் பெற்ற தி டர்ட்டி பிக்சர் படத்தின் தமிழ் ரீமேக்கில் நயன்தாரா நடிக்கிறார்.
மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா வாழ்க்கை 'த டர்டி பிக்சர்' என்ற பெயரில் இந்தியில் தயாராகி ரிலீசானது. சில்க் ஸ்மிதா வேடத்தில் வித்யாபாலன் நடித்தார். இப்படம் வெற்றிகரமாக ஓடி வசூலை வாரி குவித்தது. இதில் நடித்ததற்காக வித்யாபாலனுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது.
சில்க் ஸ்மிதா குடும்பத்தினர் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தாலும், அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
டர்டி பிக்சர் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு அப்படத்தை வேறு மொழிகளில் படமாக்க தயாரிப்பாளர்களை தூண்டி உள்ளது. அதன்படி தமிழ், தெலுங்கு மொழிகளில் இப்படம் ரீமேக் ஆகிறது.
இதில் சில்க் ஸ்மிதா வேடத்தில் நடிக்க நடிகை தேர்வு நடந்தது. அனுஷ்கா, நிகிதா, ரிச்சா ஆகியோர் பரிசீலிக்கப்பட்டனர். இறுதியாக நயன்தாராவை தேர்வு செய்துள்ளனர்.
அதிக கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்பதால் நயன்தாரா கேட்கும் சம்பளத்தைக் கொட்டித் தர தயாரிப்பாளர்கள் தயாராகவே உள்ளார்களாம்.

06 மே 2012

அஜீத் என்றால் சம்பளம் வேண்டாம்!

Bindu Madhaviஅஜீத் குமாருடன் நடிப்பது என்றால் பைசா சம்பளம் வேண்டாம் என்கிறார் நடிகை பிந்து மாதவி.
ஒவ்வொரு நடிகைக்கும் ஒரு ஹீரோவுடன் நடிப்பது வாழ்க்கையின் லட்சியமாக இருக்கும். அந்த வகையில் நடிகை பிந்து மாதவிக்கு அஜீத் குமாருடன் நடிப்பதே லட்சியமாம். ஒரு படத்திலாவது 'தல' கூட நடித்துவிட வேண்டும் என்று விரும்புகிறார்.
அது மட்டுமல்ல அஜீத் கூட நடிப்பது என்றால் பைசா சம்பளம் வேண்டாம் என்கிறார். இது மட்டுமல்ல பிந்து மாதவி பள்ளியில் படித்த காலத்தில் இருந்து அஜீத்தின் தீதீதீவிர ரசிகையாம். அஜீத்தின் எந்த படம் வந்தாலும் முதல் நாளே அடித்துபிடித்து போய் பார்த்துவிட்டு தான் மறு வேலையாம்.
இந்தியில் சக்கைப்போடு போட்ட தி டர்ட்டி பிக்சரை தமிழில் ரீமேக் செய்தால் சில்க் வேடத்தில் நடிக்கத் தயார் என்று அவர் அறிவித்திருந்தார். ஆனால் தற்போது ட்ர்ட்டியாக நடிக்கவிருப்பது உயர்ந்த மனுஷி அனுஷ்கா.
ஆந்திராவில் பிறந்தவராக இருந்தாலும் பிந்து படித்தது எல்லாம் வேலூர் விஐடியில்தான். அப்போதுதான் மாடலிங்கில் நுழைந்தார், அப்படியே சினிமாவிலும் விழுந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

04 மே 2012

திரிஷாவிற்கு 29!

trisha-krishnan-hot-photo-stills _11_.jpgநடிகை த்ரிஷா இன்று தனது 29வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். இதன் மூலம் 'மூத்த' நடிகைகள் வரிசையில் திரிஷாவும் இணைகிறார்.
மிஸ் மெட்ராஸ் பட்டம் வென்ற த்ரிஷா பிரஷாந்த், சிம்ரன் நடித்த ஜோடி படத்தில் ஒரு சில சீன்களில் வந்து சென்றார். அதன் பிறகு பிரியதர்ஷனின் லேசா லேசா படம் மூலம் அவருக்கு நல்ல பெயர் கிடைத்தது. தொடர்ந்து கோலிவுட்டில் உள்ள பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். கோலிவுட் தவிர்த்து அவர் தெலுங்கு படங்களிலும் ஒரு கலக்கு கலக்கியவர். அண்மையில் அவர் ஜூனியர் என்.டி.ஆருடன் சேர்ந்து நடித்த தம்மு சூப்பர் ஹிட்டாகியுள்ளது.
தமிழில் நண்பர் விஷாலுடன் சமர், அடுத்து ஜெயம் ரவியுடன் பூலோகம் மற்றும் என்றென்றும் புன்னகை என்று அவர் பிசியாகவே உள்ளார். சொல்ல மறந்துட்டோம் பிரியதர்ஷனின் கட்டா மீட்டா படம் மூலம் அவர் பாலிவுட்டுக்கும் சென்று வந்துள்ளார். இப்படி ஓடி, ஓடி உழைக்கும் த்ரிஷா இன்று தனது 29வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
பிறந்தநாள் என்றால் பார்ட்டி இல்லாமலா. அதுவும் நடிக்க வந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் அதே பொலிவுடன் இருக்கும் த்ரிஷா பிறந்தநாளுக்கு பார்ட்டி இல்லாமலா? எல்லாம் இருக்காம்..
பிறந்தநாள் வாழ்த்துக்கள் த்ரிஷா!

01 மே 2012

பிரசன்னா, ஸ்னேகா தனிக்குடித்தனம்!


Sneha and Prasannaநடிகர் பிரசன்னாவுக்கும், நடிகை ஸ்னேகாவுக்கும் வரும் 11ம் தேதி காலை 9 மணிக்கு சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் திருமணம் நடக்கிறது.

இது குறித்து இருவரும் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அதன் விவரம்:

கேள்வி: திருமணத்துக்குப் பிறகு ஸ்னேகா நடிப்பாரா?

பிரசன்னா பதில்: திருமணத்திற்குப் பிறகும் ஸ்னேகா தொடர்ந்து நடிக்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். அவர் ஒரு நல்ல நடிகை. திருமணத்திற்குப் பிறகு அவர் விரும்பினால் நடிக்கலாம், நடிக்காமலும் இருக்கலாம். அவருக்கு நான் முழு சுதந்திரம் கொடுத்துள்ளேன்.

கேள்வி: உண்மையிலேயே நீங்கள் இருவரும் எத்தனை ஆண்டுகளாக காதலித்தீர்கள்?

பிரசன்னா பதில்: கடந்த 2 ஆண்டுகளாக காதலித்தோம். எங்கள் வீடுகளில் சம்மதம் கிடைத்த பிறகே அது பற்றி வெளியே சொன்னோம்.

கேள்வி: உங்களில் யார் முதலில் காதலைச் சொன்னது?

பிரசன்னா பதில்: நாங்கள் முதலில் நண்பர்களாக இருந்தோம். பின்பு காதல் வந்த பிறகு திருமணம் செய்து கொண்டால் என்ன என்று நினைத்தோம். நான் அவருக்கு கணவராகவும், அவர் எனக்கு மனைவியாகவும் வந்தால் எப்படி இருக்கும் என்பது பரஸ்பரம் புரிந்து கொண்டோம். வாழ்க்கை பற்றி எங்களுக்கு ஒரே மாதிரியான அபிப்ராயம் இருந்தது.

கேள்வி: உங்கள் திருமணம் எந்த முறைப்படி நடக்கும்?

பிரசன்னா பதில்: ஸ்னேகா நாயுடு வகுப்பைச் சேர்ந்தவர். அதனால் முதலில் நாயுடு முறைப்படியும் பிறகு எங்கள் பிராமண முறைப்படியும் நடக்கும். நான் ஸ்னேகா கழுத்தில் 2 முறை வலுவாக தாலி கட்டுவேன்.

கேள்வி: திருமணத்திற்குப் பிறகு தனிக்குடித்தனமா, கூட்டு குடித்தனமா?

பிரசன்னா பதில்: ஸ்னேகாவுக்கு சாதாரண பெண் போன்று சமையல் எல்லாம் செய்ய ஆசை. அதனால் நிச்சயம் தனிக்குடித்தனம் தான் என்றார்.

அதன் பிறகு ஸ்னேகா கூறுகையில்,

நான் கடந்த 12 ஆண்டுகளாக திரையுலகில் உள்ளேன். இத்தனை ஆண்டுகளும் எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். திருமணத்திற்குப் பிறகு தொடர்ந்து நடிப்பதா, வேண்டாமா என்று இன்னும் முடிவு செய்யவில்லை. திருமணம் முடிந்த பிறகு அதைப் பார்க்கலாம் என்றார்.

29 ஏப்ரல் 2012

ரீமா விரும்பும் வேடம்!

Reema Senகல்யாணத்திற்குப் பின்னர் மீண்டும் தமிழில் ரீவிசிட் அடிக்கும் ரீமா சென் தான் நடிக்கப் போகும் புதிய படத்தில் கிளாமர் பகுதி நிறைய இருக்குமாறு பார்த்துக் கொள்ளுமாறு வேண்டி விரும்பி கேட்டுக் கொண்டுள்ளாராம்.
ரீமா சென்னுக்கு தமிழ் உள்பட எந்த மொழியிலும் வாய்ப்பில்லாமல் போனதால் அவர் தான் நீண்ட நாட்களாக காதலித்து வந்தவரை கல்யாணம் செய்து கொண்டு சற்றே ஒதுங்கியிருந்தார். இந்த நிலையில் தற்போது ஹனிமூன் டிரிப்பை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு மீண்டும் நடிக்க வந்துள்ளார்.
விஜய் தான் உருவாக்கியுள்ள கில்லி பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரின் இயக்கத்தில் உருவான சட்டம் ஒரு இருட்டறை படத்தை ரீமேக் செய்யப் போகிறார். இதுதான் விஜய் தயாரிப்பில் உருவாகும் முதல் படம். இபப்படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் ரீமா சென் வருகிறார்.
இந்த கேரக்டர் தனக்கு தமிழில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் உள்ளார் ரீமா சென். இப்படத்தின் கதாநாயகி ரீமா சென் அல்ல என்றாலும் கூட படத்தின் கதையோட்டத்தில் ரீமாவுக்கும் முக்கிய இடம் உண்டு. இந்த நிலையில் இந்த கேரக்டரிலும் தன்னால் கவர்ச்சியாக நடிக்க முடியும் என்று கூறியுள்ள ரீமா, அதற்கேற்றார்போல கிளாமரான முறையில் கேரக்டரை வடிவமைக்குமாறு இயக்குநரிடம் அன்புக் கோரிக்கை வைத்துள்ளாராம்.
இயக்குநர் 'சரீமா' என்று சொன்னாரா என்பது தெரியவில்லை...!

24 ஏப்ரல் 2012

பிரசன்னா,சினேகா திருமண அழைப்பு!

Prasanna and Snehaநடிகை சினேகாவுக்கும் பிரசன்னாவுக்கும் மே 11-ந்தேதி திருமணம் நடக்கிறது. இருவரும் அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் ஜோடியாக நடித்த போது காதலாகி, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்கின்றனர்.

முகூர்த்த ஆடைகள், நகைகள் வாங்குதல் என இத்தனை நாள் தீவிரமாக இருந்தவர்கள், இப்போது திருமண அழைப்பிதழ் கொடுக்கும் வேலையில் மும்முரமாகியுள்ளனர்.
சக நடிகர், நடிகைகள், உறவினர்கள், நண்பர்களுக்கு தனித்தனியாக சென்று அழைப்பிதழ் கொடுத்து வருகிறார்கள்.
கடந்த சில தினங்களில் கமல், அஜீத், விஜய் போன்றோருக்கு பிரசன்னா நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்து திருமணத்துக்கு அழைத்தார்.
இதுகுறித்து பிரசன்னா கூறுகையில், "விஜய், அஜீத் போன்றோரை சந்தித்து அழைப்பிதழ் கொடுத்து திருமணத்துக்கு அழைத்தேன். இருவரும் குடும்பத்தினருடன் என்னை சந்தித்தனர். வாழ்த்தும் சொன்னார்கள். சினேகாவிடம் டெலிபோனில் வாழ்த்து கூறினார்கள். கமல்ஹாசனை ஏற்கனவே சந்தித்து அழைப்பிதழ் கொடுத்தோம்," என்றார்.
ரஜினிக்காக காத்திருக்கிறோம்..
அடுத்து ரஜினிக்கும் அழைப்பிதழ் கொடுக்க காத்திருக்கிறார்கள் சினேகாவும் பிரசன்னாவும். கேரளாவில் கோச்சடையான் படப்பிடிப்பு முடிந்து ரஜினி வந்ததும் சந்தித்து அழைப்பு தருகின்றனர்.
கோச்சடையானில் ரஜினி தங்கையாக நடிக்கவிருந்து, பின்னர் நீக்கப்பட்டார் சினேகா என்பது குறிப்பிடத்தக்கது.

20 ஏப்ரல் 2012

தமன்னாவிற்காக குடியுங்க!

Tamannaahஃபேண்டா கூல்டிரிங்க்ஸ் குடித்தால் நடிகை தமன்னாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

கொக கோலா நிறுவனத்தின் கூல்டிரிங்கான ஃபேண்டாவின் தென்னிந்திய பிராண்டு அம்பாசிடராக நடிகை தமன்னா நியமிக்கப்பட்டுள்ளார். நடிகை ஜெனிலியா திருமணமாகிப் போனதையடுத்து தான் தமன்னா பிராண்டு அம்பாசிடராகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தனது வாடிக்கையாளர்களைக் கவர ஃபேண்டா புது முயற்சியில் இறங்கியுள்ளது. தமிழகம் மற்றும் கர்நாடகாவில் விற்கப்படும் ஃபேண்டா பாட்டில்களின் லேபிலுக்குப் பின்னால் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் பரிசுகள் அறிவிக்கப்பட்டுருக்கும். நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருந்தால் தமன்னாவை சந்தி்ககும் வாய்ப்பு கிடைக்கும்.
ஃபேண்டா விளம்பர நிகழ்ச்சிகளில் தமன்னா கலந்துகொள்கிறார். அவர் தனது ரசிகர்களை விளம்பர நிகழ்ச்சிகளுக்கு அழைத்து பேசவிருக்கிறார். தமன்னாவை பார்ப்பதோடு மட்டுமல்லாமல் அழகிய செல்போன்கள் உள்பட பல பரிசுகளை வெல்லலாம்.
என்ன ஃபேண்டா வாங்கியாச்சா?