பக்கங்கள்

20 மே 2012

அசினை நடிக்க வைக்கக் கூடாது!

 இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் விருந்து சாப்பிட்ட அசினை தன் படத்தில் ஷங்கர் நடிக்க வைக்கக் கூடாது என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது.
இலங்கைக்கு எந்த நடிகர் நடிகையும் செல்லக் கூடாது என்ற தடையை மீறி இலங்கை சென்ற நடிகை அசின், ரெடி படப்பிடிப்பில் பங்கேற்றார். அங்கு ராஜபக்சேவுடன் விருந்து சாப்பிட்டார்.
இதனால் அவருக்கு தமிழகத்தில் எதிர்ப்புகள் கிளம்பின. ஆனால் அதைக் கண்டு கொள்ளவில்லை அசின். சினிமா உலகினரும் இதெல்லாம் சகஜம் என்று மறந்துவிட்டனர்.
அதற்குப் பிறகு தமிழில் விஜய்க்கு ஜோடியாக அசின் நடித்த காவலன் படம் கூட வெளியாகிவிட்டது.
இந்த நிலையில் ஷங்கர் இயக்கப் போகும் புதுப்படத்தில் விக்ரம் ஜோடியாக நடிக்க அசின் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அக்கட்சியின் மாநில செயலாளர் பி.ஆர்.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இலங்கையில் ராஜபக்சே அரசு ஈழத் தமிழர்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்தது. அதன் மூன்றாம் ஆண்டு துக்க தினத்தை உலக தமிழர்கள் இப்போது கடை பிடிக்கின்றனர்.ராஜபக்சே மீது போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்ற குரல்கள் ஒலித்து வருகின்றன.
இந்த நிலையில் தமிழர் உணர்வுகளுக்கு எதிராக நடந்து கொண்ட அசினை தனது புதுப்படத்தில் நடிக்க வைக்க இயக்குனர் ஷங்கர் முடிவெடுத்திருப்பதாக வெளியான தகவல் தமிழர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி யுள்ளது. திரையுலகினரின் தடையை மீறி அசின் இலங்கை சென்றது மட்டு மின்றி ராஜபக்சேயுடன் விருந்தும் சாப்பிட்டார்.
ஒன்றரை லட்சம் தமிழர்களை கொன்றவர்களோடு கைகுலுக்கி விட்டு வந்த அசினை படத்தில் ஷங்கர் நடிக்க வைக்கக்கூடாது. மீறி நடிக்க வைத்தால் ஷங்கர் வீட்டு முன் முற்றுகை போராட்டம் நடத்துவோம்," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக