பக்கங்கள்

11 நவம்பர் 2011

சினேகாவிடம் இப்படித்தான் காதல் வந்தது.

ஸ்னேகா பழக இனிமையானவர். அவரது எளிமையும் யதார்த்தமும் அவரை என் மனைவியாக்கிக் கொள்ளத் தூண்டியது. அதனால்தான் காதலித்தேன், என நடிகர் பிரசன்னா கூறினார்.
ஸ்னேகாவுடன் காதல் மலர்ந்தது எப்படி என்பது குறித்து பிரசன்னா அளித்த பேட்டி:
அச்சமுண்டு அச்சமுண்டு படம பண்ண போது ஸ்னேகாவுக்கும் எனக்கும் ஆரம்பத்தில் தொழில் ரீதியான நட்புதான் இருந்தது. நாளடைவில் ஸ்னேகா நடவடிக்கையில் ஈர்ப்பானேன். அவர் பெரிய நடிகை. ஆனாலும் அந்த தலைக்கனம் கொஞ்சமும் இல்லை. பந்தா இல்லாமல் பழகுவார். எளிமையாக நடந்து கொள்வார். அந்த குணங்கள் எனக்கு பிடித்தது.
ஸ்னேகா என் மனைவியாக வாழ்க்கை முழுக்க என்னுடன் இருக்கவேண்டும் என்று ஆசைப்பட்டேன். மூன்றரை வருடம் எங்களுக்குள் காதல் இருந்தது. ஆனாலும், அவசரப்படாமல் ஒருவரையொருவர் முழுமையாக புரிந்து கொள்ள கால அவகாசம் எடுத்தோம். நிறைய யோசித்தோம். விவாதித்தோம். அதன் பிறகு திருமணம் செய்து கொள்வதென முடிவு எடுத்தோம்.
காதலின் அடையாளமாக முதலில் ஸ்னேகாவுக்கு புடவை வாங்கி கொடுத்தேன். அது அவருக்கு ரொம்ப பிடித்தது. எனக்கு ஸ்னேகா விலை உயர்ந்த கைக்கடிகாரம் வாங்கி கொடுத்தார்.
நாங்கள் ரொம்ப நெருக்கமான பிறகு ஸ்னேகாவுக்கு அவரது பிறந்த நாளில் 'ஐ பேட்' வாங்கி கொடுத்தேன். இரு குடும்பத்தாரும் திருமணத்துக்கு சம்மதித்து விட்டனர். விரைவில் நிச்சயதார்த்தம் நடைபெறும்," என்றார்.
நடிகை ஸ்னேகா இன்னமும் இந்த திருமணம் குறித்து பேசவில்லை. ஸ்னேகா அனுமதியுடன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக பிரசன்னா தெரிவித்தார்.
விரைவில் இருவரும் கூட்டாக பிரஸ் மீட் வைக்கப் போகிறார்களாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக