பக்கங்கள்

02 நவம்பர் 2011

சிம்பு எனக்கு தடை போடவில்லை.

ஜீவா படத்தில் நடிக்க வேண்டாம் என்று சிம்பு என்னிடம் கூறவில்லை. நான் எப்பொழுதும் சுயமாக முடிவு எடுப்பவள் என்று நடிகை ரிச்சா தெரிவித்துள்ளார்.
நடிகை ரிச்சா சிம்புவுடன் ஒஸ்தி படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் ஜீவாவின் புதிய படத்தில் நடிக்க ரிச்சா முதலில் சம்மதித்ததாகவும், பிறகு சிம்பு சொன்னதால் நடிக்க மறுத்ததாகவும் செய்திகள் வந்தது.
சிம்பு-ஜீவா மோதல் தமிழகமே அறிந்தது. கோ படத்தில் முதலில் சிம்பு நடிப்பதாக இருந்தது. பின்னர் அவரை மாற்றி விட்டு ஜீவா நடித்தார். அதிலிருந்து இருவருக்குள்ளும் முட்டிக்கொள்ள ஆரம்பித்தது. சிம்பு ஏதாவது சொல்ல பதிலுக்கு ஜீவா ஏதாவது சொல்ல என்று அவர்களின் வார்த்தை விளையாட்டு முடிவின்றிப் போய்க் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தான் இயக்குனர் அகமது இயக்கத்தில் ஜீவா படத்தில நடிக்க வேண்டாம் என்று ரிச்சாவிடம் சிம்பு தெரிவித்ததாக செய்தி வந்தது.
இது குறித்து ரிச்சா கூறியதாவது,
ஜீவா ஜோடியாக நடிக்குமாறு யாருமே என்னைக் கேட்கவில்லை. அப்படி இருக்கையில் ஜீவாவுடன் நடிக்கக் கூடாது என்று சிம்பு கூறியதாக செய்தி வந்தது. அது வெறும் வதந்தி தான். என் படம் தொடர்பான விஷயங்களில் யாரும் தலையிடுவதில்லை என்றார்.
இதற்கிடையே, நான் எப்பங்க ரிச்சாகிட்ட ஜீவா கூட நடிக்கக் கூடாதுன்னு சொன்னேன் என்று சிம்புவும் தெரிவித்துள்ளார்.
எங்கு 'வம்பு' என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் வம்பு வலுத்து வருவது மட்டும் தெரிகிறது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக