பக்கங்கள்

29 ஜூலை 2010

அசினுடன் கூட்டு,விஜய்க்கு விழுந்தது ஆப்பு.

விஜய் என்றாலே வெற்றி என்று இருந்த தமிழ் சினிமா தற்போது விஜய் என்றாலே சிக்கல் என்ற நிலைக்கு மாறிவிட்டது. சுறா படத்தின் தோல்வி சூடு தணியும் முன்னரே ரசிகர்களைக் கூட்டி "வேலாயுதம்' படத்தின் பூஜையை வெற்றிகரமாக நடத்திய விஜய்க்கு, சிரந்தி ராஜபக்க்ஷவின் நெருங்கிய தோழி அசின் மூலம் மறுபடியும் ஒரு பிரச்சனை முளைத்திருக்கிறது.


30 தமிழ் அமைப்புகளை கொண்ட தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு ஒன்று அமெரிக்காவில் உள்ளது. இலங்கைக்கு செல்லும் தமிழ் நடிகர், நடிகைகளின் படங்களை அமெரிக்காவில் திரையிட விடமாட்டோ ம் என்று, இந்த கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளது. பிரிட்டன், கனடா நாடுகளிலுள்ள தமிழ் அமைப்புகளும் இதே முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் நடிகர், நடிகைகள் படப்பிடிப்பிற்காகவோ அல்லது சொந்த காரணங்களுக்காகவோ இலங்கைக்கு செல்லக்கூடாது என்ற பிரச்சனையில் தீர்க்கமான முடிவு எட்டாத நிலையில் தமிழ் திரையுலகம் இருக்கும்போது, இந்த விசயத்தில் வெளிநாடுகளில் வாழும் இலங்கை தமிழர்கள் தீர்க்கமான முடிவு ஒன்றை எடுத்திருக்கிறார்கள்.


இலங்கை செல்லும், நடிகர், நடிகைகளின் படங்களை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். இதன் முதல் கட்டமாக அசின் நடித்து வெளியாக உள்ள 'காவல் காதல்' படத்தை புறக்கணிப்போம் என அமெரிக்க தமிழ் அமைப்புகளின் தலைவர் பழனி சுந்தரம் தெரிவித்திருக்கிறார். ஆனால் இந்த முடிவு அசினை காட்டிலும் விஜக்கு தான் தலைவலியை கொடுத்திருக்கிறது.



விஜய் நடித்திருக்கும் இப்படத்தை சித்திக் இயக்கி இருக்கிறார். இவர்களின் கூட்டணி ஏற்கனவே வெற்றிப் படத்தை கொடுத்திருப்பதால். இந்த படத்தின் மீது ரசிகர்கள் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளோடு இருக்கிறார்கள். அதுமட்டும் இன்றி தமிழ்ப் படங்கள் வெளிநாடுகளில் அதிக வசூல் ஈட்டும் இந்நிலையில் தமிழ் அமைப்புகளின் முடிவால் விஜய் படத்தை அங்கு திரையிட சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக