பக்கங்கள்

18 ஜூலை 2010

அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதைபோல அசினின் நிலைமை.


அரசனை நம்பிப் புருஷனை விட்ட கதையாகி விட்டிருக்கிறது அசினின் நிலைமை. பாலிவுட்டில் யாருக்கும் வேண்டாதவராகிவிட்டாராமே.... சங்கதி கேள்விப்பட்டீர்களா?
அமீர்கானின் ஜோடியாக "கஜினி'யில் வெற்றிநடை போட்டதுடன் சரி. அதற்குப் பிறகு வந்த "லண்டன் ட்ரீம்ஸ்' தோல்வியடைந்தது முதல் புதிய பட வாய்ப்பும் கிடைக்காமல், கோடம்பாக்கத்துக்குத் திரும்ப மனமும் இல்லாமல் இருதலைக் கொல்லி எறும்பாக பம்பாயில் தவியாய்த் தவிப்பதாகக் கேள்வி.
"காக்க.. காக்க..' படத்தை இந்தியில் எடுக்க முடிவெடுத்ததும் முதலில் அசினைத்தான் ஒப்பந்தம் செய்வதாக இருந்தது. கதாநாயகன் ஜானி ஆப்ரஹாம் தனக்கு ஜோடியாக அசின் நடிப்பதை விரும்பாததால், வாய்ப்பு நழுவியது. ரன்பீர் கபூர், பிரியங்கா சோப்ரா ஜோடியை வைத்து அனுராக் பாசு தயாரிக்கும் படத்தில் முதலில் அசின்தான் நடிப்பதாக இருந்தது. உயரம் போதவில்லை என்று நீக்கிவிட்டார்கள்.
இப்போதைக்கு சல்மான்கானின் தயவால் "ரெடி' என்கிற படத்தில் மட்டும் நடித்துக் கொண்டிருக்கும் அசின் வாய்ப்புக்குக் காத்துக் கொண்டிருக்கிறார். முன்பெல்லாம் சென்னையிலிருந்து நிருபர்கள் கூப்பிட்டால் தொலைபேசியை எடுக்காத அசின் இப்போது அவரே வலிய அழைத்துப் பேட்டி கொடுக்க முன்வருகிறாராமே...
தயாரிப்பாளர்களின் கவனத்திற்கு... அசின் என்றொரு நடிகை தமிழ்ப் படங்களில் நடிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிகிறது. புதுமுகங்கள் சலித்து விட்டதாகக் கருதும் தயாரிப்பாளர்கள், இந்தப் பழைய, அனுபவசாலி முகத்தை பயன்படுத்திக் கொள்ளவும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக