பக்கங்கள்

31 ஜூலை 2010

சாந்தி பட படுக்கையறை காட்சி வெளியானதால் அதிர்ச்சி!


'ஏ ஒன் என்டர்டெயின்மென்ட்' நிறுவனம் சார்பாக தயாரிக்கப்பட்டு வரும் படம் 'சாந்தி'. எதார்த்தமான கதையம்சம் கொண்ட படமாகவும், அதே சமயம் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படமாகவும் உருவாகிவரும் இப்படத்தை முரளி விஷ்வா இயக்குகிறார்.கடந்த சில வாரங்களுக்கு முன்பு இப்படத்தின் நாயகி அர்ச்சனா, கதாநாயகன் மஹா ஆதித்யாவுடன் இணைந்து நடித்த படுக்கையறை காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. அப்போது லிப் கிஸ் கொடுக்க மறுத்த அர்ச்சனாவிடம், இயக்குநர் அந்த காட்சியின் முக்கியத்துவத்தை விளக்கி எப்படியோ சம்மதிக்க வைத்து அந்த காட்சியை படமாக்கினார். இந்த நிலையில் பரபரப்பான அந்த காட்சியை படக்குழுவை சேர்ந்த யாரோ சிலர் அனுமதியில்லாமல் 'யூ ட்யூப்' இணையதளத்தில் (youtube.com) வெளியிட்டு குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.இன்னும் ரீரெக்கார்டிங் செய்யப்படாத நிலையில், வெளியிடப்பட்டிருக்கும் அந்த காட்சிகளில் குறிப்பிட்ட இரண்டு நிமிடக் காட்சி மட்டும் வெளியானதால் படத்தின் இயக்குநரும், தயாரிப்பு நிறுவனமும் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறார்கள். ஆனால் யூ ட்யூப்பில் இந்த காட்சியை பார்த்த சிலர், 'படம் எப்போது வெளிவரும்' என்று படத்தின் மீது உள்ள தங்களது ஆவலை கமெண்டாக தெரிவித்திருப்பது ஆச்சர்யமளித்திருக்கிறது.

29 ஜூலை 2010

அசினுடன் கூட்டு,விஜய்க்கு விழுந்தது ஆப்பு.

விஜய் என்றாலே வெற்றி என்று இருந்த தமிழ் சினிமா தற்போது விஜய் என்றாலே சிக்கல் என்ற நிலைக்கு மாறிவிட்டது. சுறா படத்தின் தோல்வி சூடு தணியும் முன்னரே ரசிகர்களைக் கூட்டி "வேலாயுதம்' படத்தின் பூஜையை வெற்றிகரமாக நடத்திய விஜய்க்கு, சிரந்தி ராஜபக்க்ஷவின் நெருங்கிய தோழி அசின் மூலம் மறுபடியும் ஒரு பிரச்சனை முளைத்திருக்கிறது.


30 தமிழ் அமைப்புகளை கொண்ட தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு ஒன்று அமெரிக்காவில் உள்ளது. இலங்கைக்கு செல்லும் தமிழ் நடிகர், நடிகைகளின் படங்களை அமெரிக்காவில் திரையிட விடமாட்டோ ம் என்று, இந்த கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளது. பிரிட்டன், கனடா நாடுகளிலுள்ள தமிழ் அமைப்புகளும் இதே முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் நடிகர், நடிகைகள் படப்பிடிப்பிற்காகவோ அல்லது சொந்த காரணங்களுக்காகவோ இலங்கைக்கு செல்லக்கூடாது என்ற பிரச்சனையில் தீர்க்கமான முடிவு எட்டாத நிலையில் தமிழ் திரையுலகம் இருக்கும்போது, இந்த விசயத்தில் வெளிநாடுகளில் வாழும் இலங்கை தமிழர்கள் தீர்க்கமான முடிவு ஒன்றை எடுத்திருக்கிறார்கள்.


இலங்கை செல்லும், நடிகர், நடிகைகளின் படங்களை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். இதன் முதல் கட்டமாக அசின் நடித்து வெளியாக உள்ள 'காவல் காதல்' படத்தை புறக்கணிப்போம் என அமெரிக்க தமிழ் அமைப்புகளின் தலைவர் பழனி சுந்தரம் தெரிவித்திருக்கிறார். ஆனால் இந்த முடிவு அசினை காட்டிலும் விஜக்கு தான் தலைவலியை கொடுத்திருக்கிறது.



விஜய் நடித்திருக்கும் இப்படத்தை சித்திக் இயக்கி இருக்கிறார். இவர்களின் கூட்டணி ஏற்கனவே வெற்றிப் படத்தை கொடுத்திருப்பதால். இந்த படத்தின் மீது ரசிகர்கள் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளோடு இருக்கிறார்கள். அதுமட்டும் இன்றி தமிழ்ப் படங்கள் வெளிநாடுகளில் அதிக வசூல் ஈட்டும் இந்நிலையில் தமிழ் அமைப்புகளின் முடிவால் விஜய் படத்தை அங்கு திரையிட சிக்கல் ஏற்பட்டுள்ளது.

27 ஜூலை 2010

விளம்பரத்தில் கலக்கும் த்ரிஷா.


தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் நம்பர் 1 நடிகையாக இருந்த திரிஷா அக் காலத்தில் ஒரு குறிப்பிட பிரசித்தி பெற்ற நிறுவங்களின் விளம்பரப் படங்களிலேயே கவர்ச்சி காட்டாமல் நடித்து வந்தார்.
பின் பல கதாநாயகிகளின் வருகையைத் தொடர்ந்து நம்பர் 1 நடிகை என்ற இடத்தை இழந்ததுடன் பட வாய்ப்புக்களும் முற்றிலுமாக குறைந்து தற்போது ஒரு சில படங்களிலேயே நடித்து வருகின்றார்.
ஆனால் இப்போது பல சிறிய நிறுவனங்களின் விளம்பரப் படங்களிலேயே மிகவும் கவர்ச்சி காட்டி நடித்து வருகின்றார்.
இதன் மூலம் இழந்த மார்க்கெட்டை பிடிக்க முயல்கின்றார் திரிஷா.

18 ஜூலை 2010

அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதைபோல அசினின் நிலைமை.


அரசனை நம்பிப் புருஷனை விட்ட கதையாகி விட்டிருக்கிறது அசினின் நிலைமை. பாலிவுட்டில் யாருக்கும் வேண்டாதவராகிவிட்டாராமே.... சங்கதி கேள்விப்பட்டீர்களா?
அமீர்கானின் ஜோடியாக "கஜினி'யில் வெற்றிநடை போட்டதுடன் சரி. அதற்குப் பிறகு வந்த "லண்டன் ட்ரீம்ஸ்' தோல்வியடைந்தது முதல் புதிய பட வாய்ப்பும் கிடைக்காமல், கோடம்பாக்கத்துக்குத் திரும்ப மனமும் இல்லாமல் இருதலைக் கொல்லி எறும்பாக பம்பாயில் தவியாய்த் தவிப்பதாகக் கேள்வி.
"காக்க.. காக்க..' படத்தை இந்தியில் எடுக்க முடிவெடுத்ததும் முதலில் அசினைத்தான் ஒப்பந்தம் செய்வதாக இருந்தது. கதாநாயகன் ஜானி ஆப்ரஹாம் தனக்கு ஜோடியாக அசின் நடிப்பதை விரும்பாததால், வாய்ப்பு நழுவியது. ரன்பீர் கபூர், பிரியங்கா சோப்ரா ஜோடியை வைத்து அனுராக் பாசு தயாரிக்கும் படத்தில் முதலில் அசின்தான் நடிப்பதாக இருந்தது. உயரம் போதவில்லை என்று நீக்கிவிட்டார்கள்.
இப்போதைக்கு சல்மான்கானின் தயவால் "ரெடி' என்கிற படத்தில் மட்டும் நடித்துக் கொண்டிருக்கும் அசின் வாய்ப்புக்குக் காத்துக் கொண்டிருக்கிறார். முன்பெல்லாம் சென்னையிலிருந்து நிருபர்கள் கூப்பிட்டால் தொலைபேசியை எடுக்காத அசின் இப்போது அவரே வலிய அழைத்துப் பேட்டி கொடுக்க முன்வருகிறாராமே...
தயாரிப்பாளர்களின் கவனத்திற்கு... அசின் என்றொரு நடிகை தமிழ்ப் படங்களில் நடிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிகிறது. புதுமுகங்கள் சலித்து விட்டதாகக் கருதும் தயாரிப்பாளர்கள், இந்தப் பழைய, அனுபவசாலி முகத்தை பயன்படுத்திக் கொள்ளவும்!

01 ஜூலை 2010

திருமணமான பெண் கள்ளக் காதலனுடன் தலைமறைவு.

திருவண்ணாமலை அருகே திருமணமான பெண்ணை கடத்தி சென்ற கள்ளக்காதலனை போலீஸார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை அடுத்த சேர்ப்பாப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகள் கல்பனா (23). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தர்மராஜ் என்பவருக்கும் கடந்த நான்கு ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். கடந்த 20ம் தேதி முதல் கல்பனா திடீரென மாயமானார். இது குறித்து வாணாபுரம் போலீஸார் விசாரித்து வந்தனர். விசாரணையில், கல்பனா வீட்டுக்கு அருகே வசித்து வரும் செந்தில் (22) என்பவருக்கும் கல்பனாவுக்கும் இடையே கள்ளக்காதல் இருந்ததும், கல்பனாவை செந்தில் கடத்தி சென்றதும் தெரிய வந்தது. இவர்களுக்கு உடந்தையாக செந்திலின் தந்தை பச்சமுத்து, அவரது தாய் ரோஸ் ஆகியோர் இருந்துள்ளனனர். இது தொடர்பாக செந்தில், பச்சமுத்து, மற்றும் ரோஸ் ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.