நடிகை ரம்யா கிருஷ்ணன் வீட்டில் நகை திருடியது ஏன் என, கைது செய்யப்பட்டுள்ள வேலைக்கார பெண் ஜோதி, பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார்.
சென்னை ஈச்சம்பாக்கத்தில் வசிக்கும், சினிமா நடிகை ரம்யா கிருஷ்ணனின் தாய் நித்யா, 64. படுக்கை அறை அலமாறியில் வைக்கப்பட்டு இருந்த, வைர வளையல் உள்பட, 35 சவரன் திருடு போயிருப்பதாக கொடுத்த புகாரின் பேரில், நீலாங்கரை போலீசார் , வேலைக்கார பெண் ஜோதி, 22.யை நேற்று கைது செய்துள்ளனர்.
அவர் போலீசில் அளித்துள்ள வாக்குமூலம்:ஆந்திர மாநிலம் குண்டூரில் பெற்றோர் வசிக்கின்றனர். எனக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வாலிபருக்கும் திருமணம் நிச்சயமாகியிருந்தது.வரதட்சணையாக, 50 சவரன் கேட்டனர். ஏழ்மை நிலையில் இருக்கும், என் தந்தையால் அவ்வளவு நகை போட முடியாது
என்பதால், என்ன செய்வதென்று தவித்தேன்.வேலைக்கார பெண்ணாக இருந்த போதிலும், சினிமா நடிகை ரம்யா கிருஷ்ணன் குடும்பத்தாரின் நம்பிக்கையை பெற்று இருந்தேன்.அந்த வீட்டில் இருக்கும் பொருட்கள் அனைத்தும் எனக்கு அத்துபடி. படுக்கை அறை அலமாரியில் வைக்கப்பட்டு இருந்த வைர வளையல், தங்க வளையல், சிவப்பு, பச்சை கல் பதித்த நெக்லஸ், தங்க நாணயங்கள் என, சிறுக சிறுக திருடினேன். 35 சவரன் மட்டும் திருடியிருந்ததால், மீதிதேவைப்பட்ட, 15 சவரனையும் திருடும் வேலையை துவங்கினேன்.பச்சை கல் பதித்த வைர வளையலை, நடிகை ரம்யா கிருஷ்ணன், விரும்பி அணிவார். அந்த நகையை, நான் திருடிவிட்டதால், காணாமல், வீடு முழுக்க தேடினர். மாட்டிக் கொள்வோம் என, பயந்து, ஆந்திராவுக்கு தப்ப முயன்ற போது போலீசில் மாட்டிக் கொண்டேன். இவ்வாறு ஜோதி, போலீசில் தெரிவித்து உள்ளார்.நாம் அன்பு செலுத்தும் உள்ளங்கள் நல்லுள்ளங்களாக இருப்பின், துன்பங்களில் கூட இன்பங்களை காணலாம்.
24 நவம்பர் 2012
ரம்யா கிருஷ்ணன் வீட்டில் நகை திருடியது ஏன்?
நடிகை ரம்யா கிருஷ்ணன் வீட்டில் நகை திருடியது ஏன் என, கைது செய்யப்பட்டுள்ள வேலைக்கார பெண் ஜோதி, பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார்.
சென்னை ஈச்சம்பாக்கத்தில் வசிக்கும், சினிமா நடிகை ரம்யா கிருஷ்ணனின் தாய் நித்யா, 64. படுக்கை அறை அலமாறியில் வைக்கப்பட்டு இருந்த, வைர வளையல் உள்பட, 35 சவரன் திருடு போயிருப்பதாக கொடுத்த புகாரின் பேரில், நீலாங்கரை போலீசார் , வேலைக்கார பெண் ஜோதி, 22.யை நேற்று கைது செய்துள்ளனர்.
அவர் போலீசில் அளித்துள்ள வாக்குமூலம்:ஆந்திர மாநிலம் குண்டூரில் பெற்றோர் வசிக்கின்றனர். எனக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வாலிபருக்கும் திருமணம் நிச்சயமாகியிருந்தது.வரதட்சணையாக, 50 சவரன் கேட்டனர். ஏழ்மை நிலையில் இருக்கும், என் தந்தையால் அவ்வளவு நகை போட முடியாது
என்பதால், என்ன செய்வதென்று தவித்தேன்.வேலைக்கார பெண்ணாக இருந்த போதிலும், சினிமா நடிகை ரம்யா கிருஷ்ணன் குடும்பத்தாரின் நம்பிக்கையை பெற்று இருந்தேன்.அந்த வீட்டில் இருக்கும் பொருட்கள் அனைத்தும் எனக்கு அத்துபடி. படுக்கை அறை அலமாரியில் வைக்கப்பட்டு இருந்த வைர வளையல், தங்க வளையல், சிவப்பு, பச்சை கல் பதித்த நெக்லஸ், தங்க நாணயங்கள் என, சிறுக சிறுக திருடினேன். 35 சவரன் மட்டும் திருடியிருந்ததால், மீதிதேவைப்பட்ட, 15 சவரனையும் திருடும் வேலையை துவங்கினேன்.பச்சை கல் பதித்த வைர வளையலை, நடிகை ரம்யா கிருஷ்ணன், விரும்பி அணிவார். அந்த நகையை, நான் திருடிவிட்டதால், காணாமல், வீடு முழுக்க தேடினர். மாட்டிக் கொள்வோம் என, பயந்து, ஆந்திராவுக்கு தப்ப முயன்ற போது போலீசில் மாட்டிக் கொண்டேன். இவ்வாறு ஜோதி, போலீசில் தெரிவித்து உள்ளார்.11 நவம்பர் 2012
ஸ்ரீரம்யா தமிழுக்கு வருகிறார்!
தெலுங்குப் படம் ஒன்றுக்காக, காட்சி தத்ரூபமாக வர வேண்டும் என்பதற்காக நிஜமாகவே மொட்டை போட்டுக் கலக்கிய நடிகை ஸ்ரீரம்யா தற்போது தமிழுக்கு வந்துள்ளார். யமுனா படத்தின் நாயகிதான் இந்த ஸ்ரீரம்யா.மணிரத்தினத்தின் ராவணன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் கணேஷ்பாபு. இவர் இப்போது இயக்குநராகியுள்ளார். இவரது முதல் படம்தான் யமுனா. இந்தப் படத்தில் நாயகியாக நடித்துள்ள தெலுங்கு நடிகை ஸ்ரீரம்யா குறித்து மிகப் பெருமையாக பேசுகிறார் கணேஷ் குமார்.
ஏன் கணேஷ் என்று கேட்டால் அவர் சொன்ன பதிலைப் பாருங்கள்.
பல முன்னணி நாயகிகளை நான் இப்படத்திற்காக அணுகினேன். ஆனால் அவர்கள் நடிக்க மறுத்து விட்டார்கள்.சிலர் நடிக்க முன்வந்தபோதும் அவர்கள் பாத்திரத்திற்கு சரியாகப் பொருந்தவில்லை.இந்த நிலையில்தான் ஸ்ரீரம்யாவை நான் அணுகினேன்.
ஸ்ரீரம்யா 1940 ல ஒக கிராமம் என்ற படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான ஆந்திர மாநில அரசின் நந்தி விருதை வென்றவர். மிகச் சிறப்பான நடிகை.அந்தப் படத்தில் நிஜமாகவே மொட்டை போட்டு அதிர வைத்தவர்.அவ்வளவு சிறிய வயதில் தலையை மொட்டை அடிக்க ஒரு பெண்ணுக்கு மனசே வராது. ஆனால் பாத்திரம் சிறப்பாக வர வேண்டும் என்பதற்காக மொட்டை போட்டுக் கொண்டு நடித்தவர் ரம்யா. இதனால்தான் அவரையே எனது படத்தின் நாயகியாக்கினேன் என்றார் கணேஷ் குமார்.யமுனா படத்தின் கதையைச் சொன்னதுமே டக்கென்று நான் இதில் நடிக்கிறேன் என்று சொல்லி விட்டாராம் ஸ்ரீரம்யாவும்.
எனவே இதனால் தமிழ் கூறும் நல்லுலகுக்குத் தெரிய வருவது என்னவெனில் தெலுங்குத் திரையுலகிலிருந்து மேலும் ஒரு நல்ல நடிகை வருகிறார் என்பதே....04 நவம்பர் 2012
சர்ச்சையை ஏற்படுத்திய பிரேசில் அழகி.
பிரேசில் நாட்டைச் சேர்ந்த கவர்ச்சி மாடல் அழகியான நானா கோவியா, சாண்டி புயலால் பாதிக்கப்பட்ட நியூயோர்க் நகரில், சேதத்திற்கு மத்தியில் நின்று புகைப்படமெடுத்து அதை பேஸ்புக்கில் போட்டு புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். அமெரிக்கா சோகத்தில் மூழ்கிக் கிடக்கும்போது இப்படியா அதை வைத்து விளம்பரம் தேடிக்கொள்வது என்று பலரும் அவரை கிண்டலடிக்கிறார்களாம்.
விழுந்து கிடக்கும் மரம், சேதாரங்களுக்கு மத்தியில் நின்றபடி விதம் விதமாக போஸ் கொடுத்துள்ளார் நானா. இந்த நிலையில் நானாவை விமர்சிக்கும் வகையிலும், அவரைத் திட்டுவதற்காகவும் ஏராளமானோர் பேஸ்புக் கணக்குகளைத் தொடங்கி அவரை சரமாரியாக திட்டி வருகின்றனராம்.
30 வயதான நானா, பிளேபாய் பத்திரிக்கைக்காக நிர்வாண போஸ் கொடுத்து முன்பு கலக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சாண்டி புயல் சோகத்தை ஏற்படுத்திச் சென்ற ஒன்று. ஆனால் அதைக் கொண்டாடும் வகையில் போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்துள்ளார் நானா. இது கண்டனத்துக்குரியது மட்டுமல்லாமல், மலிவான செயலுமாகும் என்று பலரும் நானாவைத் திட்டி வருகின்றனர்.
அவரைக் கேலி செய்யும் விதமாக உருவாக்கப்பட்ட பேஸ்புக் பக்கங்களில் கடலில் மூழ்கும் டைட்டானிக் கப்பல் அருகே நானா நிற்பது போலவும், உலகின் பல்வேறு அசம்பாவித சம்பவங்களைப் பார்த்து நானா இரசிப்பது போலவும் அவரது படத்தைப் போட்டுள்ளனராம்.29 அக்டோபர் 2012
பிரியாணியால் விலகினாராம் ரிச்சா!
பிரியாணி படத்தின் கதையை திடீரென இயக்குநர் வெங்கட் பிரபு மாற்றியதால் தான் அந்தப் படத்திலிருந்து விலகி விட்டாராம் ரிச்சா கங்கோபாத்யாயா.
சிம்பு, தனுஷ் என அடுத்தடுத்து ஜோடி போட்டு பட்டையைக் கிளப்பியவர் ரிச்சா. ஆனால் அதற்குப் பின்னர் பார்ட்டியை ஆளைக் காணோம். இடையில் திடீரென வெங்கட் பிரபுவின் பிரியாணி படத்தில் கார்த்தியுடன் சேர்ந்து நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதே வேகத்தில் அப்படத்தில் ஹன்சிகா மோத்வானி புக் ஆனதாகவும் செய்திகள் வந்ததால் ரிச்சா மேட்டர் குழப்பமானது.23 அக்டோபர் 2012
சுபா திடீர் மரணம்!
மாலைப்பொழுதின் மயக்கத்திலே என்ற படத்தில் நடித்து வந்த நடிகை சுபா புத்தெலா திடீரென மரணமடைந்துள்ளார். சிறுநீரக கோளாறு இதற்குக் காரணமாக கூறப்பட்டுள்ளது.சமீபத்தில் செம்பட்டை என்ற படத்தின் ஹீரோ திலீபன் அகால மரணமடைந்தார். இந்த நிலையில் இன்னொரு முக்கியப் படத்தின் நாயகி மரணமடைந்திருப்பது கோலிவுட்டை அதிர வைத்துள்ளது.
மாலைப்பொழுதின் மயக்கத்திலே என்று ஒரு படம் தயாராகி வந்தது. இதில் நாயகியாக நடித்திருந்தவர் சுபா புத்தெல்லா. இன்று காலை அவர் திடீரென மரணமடைந்தார்.
அவருக்கு சிறுநீரக கோளாறு இருந்ததாகவும், அதனால் அவதிப்பட்டு வந்த அவர் சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 அக்டோபர் 2012
அதிர வைக்கும் அஞ்சலி!
அங்காடித்தெரு அஞ்சலியை கலகலப்பு படம் மாஸ் நடிகையாக்கி விட்டது. அதுவரையில் அவரை கண்டுகொள்ளாதிருந்த அண்டை மாநில இயக்குனர்கள் அந்த படத்தில் அவர் நறுக் ஆட்டம் போட்டதைப்பார்த்து ஆடிப்போனார்கள். இந்த குடும்ப நடிகைக்குள் இப்படியும் ஒரு அயிட்டம் நடிகை குடியிருக்கிறாரா? என்று அசந்து போனார்கள்.
அதனால் அதே மூடில் அஞ்சலியை ஆந்திராவுக்கு வரவைத்து கேட்ட சம்பளத்தை கொடுத்து கால்சீட்டையும், அஞ்சலியையும் கேட்ச் பண்ணி விட்டனர். என்னதான் தமிழ் சினிமா தன்னை வளர்த்தது என்றாலும், தெலுங்கு தாய் மொழியாயிற்றே அதனால் அடுத்து அங்கு முகாம்போட்டு கல்லாக்கட்ட தீர்மானித்து விட்டார் அஞ்சலி. அதனால் தமிழில் நடித்து வரும் சேட்டை உள்ளிட்ட சில படங்களை முடித்துக்கொடுத்துவிட்டு ஆந்திர கரையோரம் முழுநேரமும் ஒதுங்க இருக்கிறார் அம்மணி.14 அக்டோபர் 2012
நடிக்க வந்தார் ஆக்ஷன் கிங் மகள் ஐஸ்வர்யா!
நடிகர் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா புதிய படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். படத்தின் தலைப்பு பட்டத்து யானை.
பூபதி பாண்டியன் இந்தப் படத்தை இயக்குகிறார்.
இந்தப் படத்தின் ஹீரோ விஷால். அர்ஜுனிடம் ஏழுமலை உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் விஷால் என்பது நினைவிருக்கலாம்.
எத்தனையோ ஹீரோக்கள் கேட்டபோதும் தன் மகளை நடிக்க அனுமதிக்காத அர்ஜுன், ஹீரோ விஷால் என்றதும் சந்தோஷத்துடன் ஒப்புக் கொண்டாராம்.
அர்ஜூனிடம் நேரில் போய் ஐஸ்வர்யாவை நடிக்க வைக்க வேண்டும் என்று கேட்டவரே விஷால்தானாம்.
"என்ன நினைப்பாரோ என்ற சந்தேகத்துடன்தான் அர்ஜுனிடம் போய் கேட்டேன். ஆனால் அவர் எடுத்த எடுப்பிலேயே ஒப்புக் கொண்டார். இந்த கேரக்டருக்கு ஐஸ்வர்யா தவிர பொருத்தமான ஒருவர் கிடைப்பது கஷ்டம்," என்கிறார் ஹீரோ விஷால்.
விஷுவல் கம்யூனிகேஷன்ஸ் படித்துள்ள ஐஸ்வர்யாவுக்கு நடிப்பு மீது ரொம்பவே ஆர்வமாம்.08 அக்டோபர் 2012
சுஜிபாலா வேணாம் முறுக்கிக் கொண்ட இயக்குநர்!
நடிகை சுஜிபாலா எனக்கு வேண்டாம்... திருமணத்தை ரத்து செய்கிறேன் என்று அறிமுக இயக்குநர் ரவிக்குமார் கூறியுள்ளார்.
'உண்மை' என்ற தலைப்பில் படம் இயக்கி வரும் புதிய இயக்குநர் ரவிக்குமாருக்கும் அந்தப் படத்தில் ஹீரோயினாக நடித்த சுஜிபாலாவுக்கும் காதல் மலர்ந்தது.
இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர். நாகர்கோவிலில் நிச்சயதார்த்தம் நடந்தது.
பிறகு இருவருக்கும் திடீர் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் சுஜிபாலா தற்கொலைக்கு முயன்றார். ஆனால் இதை மறுத்து சுஜிபாலா, நிச்சயிக்கப்பட்டபடி ரவிக்குமாரை திருமணம் செய்வேன் என்றார்.
இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன் நாகர்கோவில் வைத்தியநாதபுரத்தில் உள்ள சுஜிபாலா வீட்டுக்கு ரவிக்குமார் திடீரென்று சென்றார். அப்போது சுஜிபாலாவுக்கும் அவருக்கும் சண்டை ஏற்பட்டதாம்.
திருமணத்துக்கு மறுத்ததுடன் சுஜிபாலைவை பிடித்து தள்ளிவிட்டு வீட்டை விட்டு அவர் வெளியேறிவிட்டதாக கூறப்பட்டது. அப்போது வீட்டில் இருந்த சில ஆவணங்களை எடுத்துச் சென்றுவிட்டாராம்.
இந்த நிலையில் இயக்குனர் பி.ரவிக்குமார் சொந்த ஊரான காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து, திருமணம் ரத்தாகிவிட்டதாக கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், "எனக்கும் சுஜிபாலாவுக்கும் இரு வீட்டு பெற்றோர் சம்மதத்துடன் நாகர்கோவிலில் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் தற்போது எங்கள் இருவருக்குமே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் பிரிந்துவிட்டோம். திருமணம் ரத்தாகிவிட்டது. இனி எனக்கும் சுஜிபாலாவுக்கும் எந்த உறவோ தொடர்போ இல்லை," என்றார்.05 அக்டோபர் 2012
போதையில் இளைஞர்கள்:சரண்யா வேதனை
போதை என்ற குறும்படத்தில் போதைக்கு அடிமையான இளைஞர்களை திருத்தும் பாத்திரத்தில் நடித்த நடிகை காதல் சரண்யா மிகுந்த மனவேதனை அடைந்தாராம். இதனை அந்த படத்தை இயக்கிய இயக்குநர் செல்வகணேஷ் கூறியுள்ளார்.
வெண்ணிலா கபடி குழு, குள்ளநரிக் கூட்டம், துரோகி படங்களுக்கு இசை அமைத்த செல்வகணேஷ் தற்போது போதை என்ற குறும்படத்தை இயக்கியுள்ளார். இதற்கு அவரே இசையும் அமைத்துள்ளார்.
போதைக்கு அடிமையாகும் இளைஞர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் இந்தப் படத்தில், போதை இளைஞர்களை திருத்தி, நல்ல பாதைக்கு மாற்றும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சரண்யா.
போதையின் பாதையில் செல்லும் இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம், சர்வதேச அளவில் நடக்கும் குறும்பட விழாவுக்கு செல்ல உள்ளது.
இந்த படத்திற்காக நிஜத்திலேயே போதைக்கு அடிமையான இளைஞர்களை சந்தித்த சரண்யா அவர்களின் எதிர்காலம் பற்றி மிகவும் கவலைப்பட்டார் என்று இயக்குநர் செல்வகணேஷ் கூறியுள்ளார். இந்த கதாபாத்திரம் சரண்யாவுக்கு பெரிய சவாலாக இருந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.
30 செப்டம்பர் 2012
வீதியில் தவித்த ஸ்ரேயா!
தோழிகளை அழைத்து வர சென்றபோது நடிகை ஸ்ரேயாவின் கார் பஞ்சரானதால் மும்பையில் பெரும் ட்ராபிக் நெரிசல் ஏற்பட்டது. ஸ்ரேயாவை மக்கள் திட்டித் தீர்த்தனர்.
ஸ்ரேயாவின் சொந்த ஊர் மும்பைதான். அவரைப் பார்க்க வெளிநாட்டிலிருந்து சில தோழிகள் வந்துள்ளனர்.
இவர்களை நேரில் வரவேற்க விமான நிலையத்துக்கே கிளம்பினார் ஸ்ரேயா. தோழிகளை ஏற்றிக் கொண்டு உற்சாகமாக வீடு திரும்பிக் கொண்டிருந்தார் ஸ்ரேயா. அப்போது மும்பை மெயின் ரோடில் அவர் கார் பஞ்சராகி நின்றது.
இதனால் பெரும் ட்ராபிக் ஜாம் ஏற்பட்டது. மிகுந்த பதட்டத்துடன் தன் தந்தை மற்றும் உறவினர்களை அழைத்தார் ஸ்ரேயா. அதற்குள் வாகன ஓட்டிகள் ஸ்ரேயாவை சூழ்ந்து கொண்டு திட்ட ஆரம்பித்தனர். வெகு சிலர் மட்டும் வேடிக்கைப் பார்த்தனர்.
வேதனை மற்றும் ஆத்திரத்தில் கண்கலங்க நின்று கொண்டிருந்தார் ஸ்ரேயா.
சற்று நேரத்தில் அவர் தந்தை போலீசாருடன் வந்து சேர, பிரச்சினையை சமாளித்து வீடு திரும்பினார்.
தோழிகள் முன்னிலையில் தனக்கு நேர்ந்த இந்த சங்கடம் குறித்து கருத்து தெரிவித்த ஸ்ரேயா, மிக மோசமான அனுபவம் அது என்றார்.
27 செப்டம்பர் 2012
நயன்தாராவால் தவிக்கும் ஜெய்!
நடிகை நயன்தாராவால் சுப்பிரமணியபுரம் ஹீரோ ஜெய் தூக்கமில்லாமல் இருக்கிறாராம்.
நயன்தாரா, ஆர்யா நடிக்கும் படத்தில் சுப்பிரமணியபுரம் ஹீரோ ஜெய் நடிக்கிறார். அதிலும் படத்தில் நயனை காதலிக்கிறார். படத்தில் அவர்களுக்கு ஒரு டூயட் கூட இருக்கிறது. நயனுடன் காதல் காட்சிகளில் எப்படி நடிப்பது, அவருடன் எப்படி டூயட் பாடுவது என்று ஜெய்க்கு ஒரே படபடப்பாக உள்ளதாம்.
இரவில் கண்ணை மூடினாலும் அந்த படப்படப்பு அடங்காமல் இருக்கிறதாம். அதனால் மனிதர் தூக்கமில்லாமல் தவித்து வருகிறாராம். அட்லீ எடுக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் வரும் அக்டோபர் மாதத்தில் துவங்குகிறது. முக்கோண காதல் கதை கொண்டது இப்படம். ஆர்யா இரண்டாம் உலகத்தில் பிசியாக இருப்பதால் அவர் வரும் வரை ஜெய், நயன்தாரா வரும் காட்சிகளை படமாக்கத் திட்டமிட்டுள்ளனர்.
அவ்வளவு பெரிய நடிகையுடன் நடிக்கப் போகிறோமே என்று ஜெய் ஒருவித டென்ஷனில் உள்ளார். கவலைப்படாதீங்க ஜெய், நயன் ரொம்பவே நல்லவர். தைரியமா போய் நடிங்க. ஜெய் நடித்து கடைசியாக வந்த படம் எங்கேயும் எப்போதும் என்பது குறிப்பிடத்தக்கது.16 செப்டம்பர் 2012
சதைப்பிடிப்பான பெண்களைத்தான் பிடிக்கும்!
![]() |
| வித்யா பாலன் |
14 செப்டம்பர் 2012
பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்ளும் தேவை எனக்கு இல்லை!
பிரியங்கா சோப்ரா பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டதாக பாலிவுட்டில் தகவல் பரவியது. இது பற்றி அவர் கூறியதாவது: என்றைக்குமே பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்ளும் தேவை எனக்கு ஏற்படவில்லை. இறைவன் எனக்கு எத்தகைய அழகை கொடுத்தானோ அதில் திருப்தியாக இருக்கிறேன். என்னைப்பற்றி பலர் பலவிதமாக எண்ணுகிறார்கள். நான் நிறம் சற்று குறைந்திருப்பதாகவும், சாதாரண தோற்றம் கொண்டவளாக இருப்பதாகவும் பரவலாக பேசுகிறார்கள். ஆனாலும் எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்துகொண்டுதான் இருக்கிறது. தொடக்க காலங்களில் மேக்கப் போடுவது எப்படி என்பதுகூட எனக்கு தெரியாது. பல்வேறு படங்களில் நடித்த பிறகே அதுபற்றி புரிந்துகொண்டேன். பல நடிகைகளின் நிலைமை இதுதான்.
நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டதாக கூறுகிறார்கள். பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்வதற்கு நான் எதிரி அல்ல. அழகையும் நம்பிக்கையையும் அதிகப்படுத்தும் என்ற நிலையில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்வதில் தவறு இல்லை. ஆனால் அதுவே மனதை ஆட்டிப் படைக்கும் என்ற நிலை ஏற்பட் டால் அது தவறு. எனக்கு நம்பிக்கை தருவது என்னுடைய படங்களின் வெற்றிதான். நடிகையாக இருப்பது எனக்கு பிடித்திருக்கிறது. ஆனால் மேம்போக்கான தோற்றங்களை பார்த்து என்னை எடைபோடுவது பிடிக்காது. எனது பல வயதில் பல்வேறு தோற்றங்களில் நான் மாற்றம் அடைந்திருக்கிறேன். அதற்கு காரணம் என் தோற்றத்தில் நான் செலுத்திய கவனம்தான். இப்போது எப்படி இருக்கிறேனோ அந்த தோற்றம் எனக்கு பிடித்தவகையில் இருக்கிறது.
12 செப்டம்பர் 2012
நானியின் ஜோடி ப்ரணீதா!
![]() |
| ப்ரணீதா. |
07 செப்டம்பர் 2012
'மைதிலி'க்காக 'பிகினி'க்குத் தாவிய சதா!
சுத்தமாக ஓய்ந்து போய்க் கிடக்கிறது சதாவின் சினிமா மார்க்கெட். எந்த சினிமாவை எடுத்தாலும் அங்கு சதாவுக்கு இடமில்லை என்ற நிலை. இந்த நிலையில்தான் தமிழ் தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவாகும் மைதிலி என்ற படத்தில் வரலாறு காணாத கவர்ச்சியைக் கட்டவிழ்த்து விட்டுள்ளாராம் சதா.
பெருகி வரும் இளம் நடிகைகளுக்கு இணையாக தானும் கவர்ச்சிக் களத்தில் இறங்க தீர்மானித்த சதா, அதை மைதிலியில் அரங்கேற்றியுள்ளார். இப்படத்தில் நாயகன் நவ்தீப்புடன் இணைந்து பின்னிப் பிணைந்து ரசிகர்களை மெய் சிலிர்க்க வைக்கும் அளவுக்கு கவர்ச்சியில் பிரளயம் செய்துள்ளாராம்.
நவ்தீப்புடன் இணைந்து நடித்துள்ள ஒரு பாடல் காட்சியில் பிகினியிலும் பின்னி எடுத்திருக்கிறார் சதா.
படம் முழுக்க சதாவின் கவர்ச்சி மழைதானாம். அந்த அளவுக்கு சதாவை புதிய உருவத்தில் காட்டியுள்ளாராம் இயக்குநர் சூரிய ராஜா. சும்மா சொல்லக் கூடாது, கவர்ச்சி உடையிலும், பிகினியிலும் பிரமாதமாகவே இருக்கிறார் சதா.
ஒரு இளம் பெண்ணுக்கும், ஆணுக்கும் இடையிலான உறவு குறித்த கதையாம் இது.... அதைச் சொல்லுங்க முதல்ல!04 செப்டம்பர் 2012
முகத்தை காட்டாமல் ஓடிய பிரீத்தி ஜிந்தா!
பிராக்கில் இருந்து மும்பை திரும்பிய பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தா விமான நிலையத்தில் தனது கையாலும், முடியாலும் முகத்தை மறைத்துக் கொண்டே சென்று காரில் ஏறினார்.
பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தா பிராக்கில் நடந்த ஷூட்டிங்கை முடித்துக் கொண்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மும்பை வந்தார். விமான நிலையத்தில் அவரைப் பார்க்க ஏராளமான ரசிகர்கள் கூடியிருந்தனர். மேலும் செய்தியாளர்களும் அங்கு கூடியிருந்தனர். வழக்கமாக சிரித்தபடியே போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு, ரசிகர்களைப் பார்த்து கை ஆட்டிவி்ட்டுப் போகும் அவர் இம்முறை யாருக்குமே முகத்தை காட்டவில்லை.
தனது கையாலும், முடியாலும் முகத்தை மறைத்தபடியே அங்கிருந்து வெளியேறினார். இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் பிரீத்திக்கு என்னாச்சு, இப்படி முகத்தை மறைத்துக் கொண்டே போய்விட்டார் என்று முணுமுணுத்தனர். அவரது தாடை வீங்கியிருந்ததை அங்கிருந்தவர்கள் பார்ததுவிட்டனர். அது கீழே விழுந்து அடிபட்டதா அல்லது ஏதாவது லடாயா என்று தெரியவில்லை.
அவர் முகத்தை மறைத்தாலும் புகைப்படக்காரர்கள் அதையும் விடாமல் போட்டோ எடுத்துத் தள்ளினர். அந்த போட்டோக்கள் இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. பிரீத்திக்கு என்னாச்சு என்பது தான் அனைவரின் கேள்வியும்.
02 செப்டம்பர் 2012
பணத்துக்காக பலருடனும் உறவு கொண்டுள்ளேன்... !
முன்பு பணத் தேவைக்காக பலருடனும் உடலுறவு வைத்துள்ளேன் என்று பகிரங்கமாக கூறியுள்ளார் நடிகை ஷெர்லின் சோப்ரா.
சில நடிகைகள் வாயைத் திறந்தாலே பலானதாகவே இருக்கும். அந்த வரிசையில் ஷெர்லினும் ஒருவர். டிவிட்டரில் இவர் லேட்டஸ்டாக சொல்லியிருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பணத்துக்காக பலருடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்டதாக வெகு ஓப்பனாக கூறியுள்ளார் ஷெர்லின்.
இதுகுறித்து அவர் டிவிட்டர் பக்கத்தில் கூறுகையில், எனக்கு பலமுறை டிவிட்டரில் உங்களுடன் படுக்க வேண்டும். என்ன ரேட் என்று சொல்லுங்கள் என்று கேட்டு பலரும் தொடர்பு கொண்டு வருகிறார்கள்.
கடந்த காலத்தில் நான் பலமுறை பணத்திற்காக உறவு வைத்துக் கொண்டுள்ளேன். பணம் எனக்கு அப்போது நிறைய தேவைப்பட்டது. இதற்காக நான் இதில் ஈடுபட்டேன். அதில் எனக்கு வருத்தமோ, தயக்கமோ ஏற்படவில்லை. ஒரு முறை கூட நான் ஓசியில் யாருடனும் படுத்ததில்லை. எல்லாமே பணத்திற்காகத்தான். எல்லாவற்றுக்கும் ஒரு விலை வைத்திருந்தேன்.
ஆனால் இப்போது நான் அப்படியில்லை. என்னுடைய வாழ்க்கைத் தரத்தின் அளவு மாறி விட்டது. இப்போது அப்படி இருக்க வேண்டிய அவசியமில்லை என்று உணர்கிறேன் என்று கூறியுள்ளார் ஷெர்லின்.
31 ஆகஸ்ட் 2012
"நான் அக்காவா?" கோபத்தில் ரீமா
தனது திருமணத்திற்கு பிறகு அக்கா, அண்ணி வேடங்களில் நடிக்க வந்து இருப்பதாக கிண்டல் செய்கிறார்கள் என்று ரீமா சென் கோபப்படுகிறார்.
'மின்னலே', 'தூள்', 'செல்லமே' உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்தவர் ரீமா சென். 1982ல் வெளிவந்த 'சட்டம் ஒரு இருட்டறை' படம் ரீமேக்காகி வருகிறது. எஸ்.ஏ.சந்திரசேகரன் தயாரிப்பில் அவரது உறவுக்காரப் பெண் சினேஹா இயக்கி வருகிறார். தமன்குமார், பியா, பிந்து மாதவி நடிக்கிறார்கள். இதில் ரீமா சென் முக்கிய பாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக, ஹீரோவின் அக்காவாக நடிக்கிறார்.
'சட்டம் ஒரு இருட்டறை' ரீமேக்கில் நடிப்பது குறித்து ரீமா சென் தெரிவித்து இருப்பது " எனக்கு திருமணமாகிவிட்டதால் அக்கா அண்ணி கேரக்டரில் நடிக்க வந்துவிட்டதாக சிலர் கிண்டல் செய்கிறார்கள். திருமணம் ஆகிவிட்டால் வயது கூடிவிடுமா? இல்லை அழகுதான் குறைந்துவிடுமா?.
நான் இப்போதும் அழகாக, கிளாமராக இருக்கிறேன். அதனால் அக்கா அண்ணி கேரக்டரில் நடிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்தப் படத்தை பொறுத்தவரை இந்தியில் ஹேமமாலினி நடித்த பவர்ஃபுல் கேரக்டர் என்பதால் நடித்தேன்.
ரீமேக்கில் எனது கேரக்டரை விரிவுபடுத்தி, காட்சிகளை அதிகப்படுத்தியிருக்கிறார்கள். 18 வயது சின்ன பெண் இயக்குகிறார் அவரை ஊக்கப்படுத்த வேண்டியது சீனியர் என்கிற முறையில் எனது கடமை.
எனக்கு கிளாமர் நடிகை என்று பெயர் இருப்பது சந்தோஷம்தான். ஆனால் எந்தப் படத்திலும் உடம்பை காட்டி நடிக்கவில்லை. நான் முழுக்க சேலை அணிந்து வந்தாலும் கிளாமராக தெரிவேன். இது கடவுள் கொடுத்த வரம். " என்று தெரிவித்து இருக்கிறார்.
27 ஆகஸ்ட் 2012
நடிகை சுஜிபாலா திடீரென தற்கொலை முயற்சி!
நடிகை சுஜிபாலா அதிக அளவு தூக்க மாத்திரை தின்று தற்கொலைக்கு முயன்று உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
இயக்குநர் தங்கபர்ச்சானின் பள்ளிக்கூட்டம், இயக்குநர் ராசு மதுரவனின் முத்துக்கு முத்தாக, கோரிப்பாளையம் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை சுஜிபாலா. தற்போது உண்மை என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தை ரவிக்குமார் இயக்கி நாயகனாக நடித்து வருகிறார். சுஜிபாலாவை ரவிக்குமார் திருமணம் செய்ய விரும்பி அவரது பெற்றோரிடம் கேட்டிருக்கிறார். இதைத் தொடர்ந்து ஜூலை 5-ந் தேதியன்று ரவிக்குமாருக்கும் சுஜிபாலாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இந்நிலையில் திடீரென சுஜிபாலா அதிக அளவில் தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவருக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருமணத்துக்கு விருப்பம் இல்லாதநிலையில்தான் சுஜிபாலா தற்கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
தற்போது உடல்நிலை தேறியுள்ள சுஜிபாலா விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.25 ஆகஸ்ட் 2012
ஹன்ஸிகா தமன்னா அக்கப்போர்!
வேட்டை படத்தின் தெலுங்குப் பதிப்பில் ஒப்பந்தமான ஹன்ஸிகா நீக்கப்பட்டு, அவருக்கு பதில் தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனால் இரண்டு முன்னணி நடிகைகளுக்கும் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.
மாதவன், ஆர்யா நடித்து தமிழில் ரிலீசான வேட்டை படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இதில் கதாநாயகிகளாக நடிக்க ஹன்சிகா, ஆண்ட்ரியா ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.
தமிழில் அமலாபால் நடித்த கேரக்டரில் ஹன்சிகாவும், சமீரா ரெட்டி நடித்த வேடத்தில் ஆண்ட்ரியாவும் நடிப்பதாக இருந்தது.
ஆன்ட்ரியாவும் ஹன்ஸிகாவும் அக்கா தங்கை போல போஸ் கொடுத்து மகிழ்ச்சியை வெளியிட்டிருந்தனர். ஆனால் அது புஸ்ஸாகிவிட்டது.
இப்போது திடீரென படத்திலிருந்து ஹன்ஸிகா நீக்கப்பட்டார். அவருக்கு பதில் தமன்னாவை தேர்வு செய்துள்ளனர். இன்றைய தேதிக்கு தமன்னா தெலுங்கில் ஹாட். அவரது சமீபத்திய படம் '100 பர்சன்ட் லவ்' படம் செம ஹிட் என்பதால் இந்த முடிவு என்றும் படக் குழுவினர் தெரிவித்திருந்தனர்.
ஆனால் ஹன்ஸிகாவோ, தனது பட வாய்ப்பை தமன்னா பறித்து விட்டதாக ஆத்திரத்தில் உள்ளாராம்.
தமன்னாவை மிகக் கடுமையாகத் திட்டி தனக்கு நெருக்கமானவர்களிடம் கருத்து தெரிவித்து வருகிறாராம் ஹன்ஸிகா.19 ஆகஸ்ட் 2012
ஆன்ட்ரியாவை கிஸ் அடித்தது நிஜம்தான்!

ஆன்ட்ரியாவை கிஸ் அடித்தது நிஜம்தான். ஆனால் அது என் பர்சனல் விஷயம். யாரோ என் செல்போனிலிருந்து அந்தப் படங்களை எடுத்து வெளியிட்டுவிட்டனர் என்று இசையமைப்பாளர் அனிருத் கூறியுள்ளார். நடிகை ஆண்ட்ரியாவும், இசை அமைப்பாளர் அனிருத்தும் முத்தமிட்ட படங்கள் சமீபத்தில் வெளியாயின. இந்த படங்கள் 18 மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டவை என்றும், அப்போது இருவருக்கும் நெருக்கமான உறவு இருந்தது என்றும் ஆன்ட்ரியா கூறினார். இப்போது அனிருத்துடன் அந்த உறவு முறிந்துவிட்டது என்று ஒப்புக் கொண்டார். இப்போது அனிருத்தும் தன் பங்குக்கு விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், "ஆன்ட்ரியாவும், நானும் முத்தமிட்ட படங்கள் எனது செல்போனில்தான் இருந்தன. அது பழைய படம். இப்போது வெளிவந்து இருக்கிறது. அதை யாரோ எனக்கு தெரியாமல் டவுன் லோடு செய்து வெளியிட்டுள்ளனர். இது எனக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. எனக்கென்று தனிப்பட்ட சொந்த வாழ்க்கை இருக்கிறது. அதை இப்படி பகிரங்கப்படுத்தி விமர்சிப்பது வருத்தம் அளிக்கிறது. நான் பார்க்கிற பெண்களையெல்லாம் முத்தமிடுகிறவன் அல்ல. ஏற்கனவே நடந்த தவறுகள் மறுபடியும் நடக்காமல் பார்த்துக் கொள்வேன். நான் பெண்களை மிகவும் மதிப்பவன். இந்த இக்கட்டான நேரத்தில் எனது குடும்பத்தினர் எனக்கு துணையாக இருந்தனர்," என்றார்.
02 ஆகஸ்ட் 2012
விருந்தில் நடந்த விஷயங்களை சொல்ல முடியுமா?
![]() |
| தமன்னா |
28 ஜூலை 2012
தனுஷின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சிம்பு!
ஆனாலும் புதுசாக, அநியாயத்துக்கு செயற்கையாக நட்பை விளம்பரப்படுத்தி வரும் ஜோடி என்றால் அது தனுஷும் சிம்புவும்தான்!
நாம் இப்படிக் குறிப்பிடுவதற்குக் காரணம், இந்த இருவரும் கடந்த காலங்களில் எவ்வளவு முடியுமோ அந்த அளவு ஒருவரையொருவர் கேவலமாக விமர்சித்துக் கொண்டிருந்தார்கள். அதற்கு அவரவர் ரசிகர்களையும் பயன்படுத்தத் தவறியதில்லை. குறிப்பாக கொலவெறி பாட்டு வெளியான சமயத்தில் பேஸ்புக் போன்ற சமூக வலைத் தளங்களில் சிம்புவின் கமெண்டுகள், அது பற்றி தனுஷ் தந்த பதில்களைப் படித்தவர்களுக்கு நினைவிருக்கலாம்.
இப்போதோ, நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க... எங்களைப் போல நண்பர்கள் உண்டா என்றெல்லாம் பேட்டி கொடுத்து வருகிறார்கள். கூடவே இதெல்லாம் மீடியா வேலை என்று வேறு பிட்டைப் போட்டிருக்கிறார்கள்.
இருக்கட்டும்.
இன்று தனுஷுக்குப் பிறந்த நாள். இந்த பிறந்த நாளையொட்டி நேற்று இரவு ஏகப்பட்ட நட்சத்திரங்களை அழைத்து மெகா தண்ணி பார்ட்டி கொடுத்திருக்கிறார் தனுஷ். அதில் சிம்புவும் ஆஜர். கூடவே அவர்கள் வயது 'தோழிகள்' ராதிகா போன்றவர்களும் தவறாமல் ஆஜராகியிருந்தனர். தமன்னா, பிரேம்ஜி என பார்ட்டிகளுக்கென்றே பிறந்தவர்களும் வந்திருந்தனர்.
சேவல் வடிவில் (ஆடுகளம் ஹீரோல்ல...) கேக்கெல்லாம் வெட்டி கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட இந்த பிறந்த நாள் விழா விருந்தில், தனுஷ் மனைவி ஐஸ்வர்யா இல்லை!!25 ஜூலை 2012
அமலா பால் அமெரிக்காவில் சிகிச்சை?
22 ஜூலை 2012
காஜலுடன் இணையத் துடிக்கும் கோவிந்தா...!
வயதானாலும் இன்னும் குஷியும், கும்மாளமுமாக இருக்கும் கோவிந்தாவுக்கு புது ஆசை வந்துள்ளது. அதாவது சிக்கென்று இருக்கும் காஜல் அகர்வாலுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசைதான் அது.
கோவிந்தாவுக்கு இப்போது பாலிவுட்டில் பெரிய மார்க்கெட் இல்லை. கடைசியாக அவர் சல்மான் கானுடன் இணைந்து நடித்தார். இந்த நிலையில் மறுபடியும் ஒரு ரவுண்டு வர ஆர்வமாக உள்ள கோவிந்தா, இந்த முறை பக்கா இளம் நாயகி ஒருவருடன் இணைந்து காட்சி தர தீர்மானித்துள்ளாராம். இதற்காக அவர் குறி வைத்திருப்பது காஜல் அகர்வாலையாம்.
சிங்கம் இந்திப் படத்தில் நடித்திருந்தார் காஜல். தமிழ், தெலுங்கில் பிசியாக நடித்துக் கொண்டிருப்பவர். இவருடன் இணைய இப்போது துடியாத் துடிக்கிறாராம் கோவிந்தா.
இதுகுறித்து கோவிந்தா தரப்பில் கூறுகையில், துரந்தர் என்ற பெயரில் ஒரு புதிய படத்தை உருவாக்கப் போகிறார் கோவிந்தா. இதற்கான டைக்டரை தேடி வந்தார். இறுதியில் ரஜ்னிஷ் ராஜ் தாக்கூரை அவர் முடிவு செய்துள்ளார். மேலும் தனக்கு ஜோடியாக காஜல் அகர்வாலைப் போட வேண்டும் என்றும் தீர்மானமாக உள்ளார் கோவிந்தா. இதுதொடர்பாக அவரை பார்த்தும் பேசியுள்ளார். காஜல் இன்னும் ஒன்றும் சொல்ல்வில்லை. அவர் ஓ.கே. சொல்லிவிட்டால் சுறுசுறுப்பாக படப்பிடிப்பைத் தொடங்கி விடுவார் கோவிந்தா என்கிறார்கள்.
காஜல் கோவிந்தாவுடன் சேருவாரா...?
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)







