நடிகை சுஜிபாலா அதிக அளவு தூக்க மாத்திரை தின்று தற்கொலைக்கு முயன்று உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
இயக்குநர் தங்கபர்ச்சானின் பள்ளிக்கூட்டம், இயக்குநர் ராசு மதுரவனின் முத்துக்கு முத்தாக, கோரிப்பாளையம் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை சுஜிபாலா. தற்போது உண்மை என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தை ரவிக்குமார் இயக்கி நாயகனாக நடித்து வருகிறார். சுஜிபாலாவை ரவிக்குமார் திருமணம் செய்ய விரும்பி அவரது பெற்றோரிடம் கேட்டிருக்கிறார். இதைத் தொடர்ந்து ஜூலை 5-ந் தேதியன்று ரவிக்குமாருக்கும் சுஜிபாலாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இந்நிலையில் திடீரென சுஜிபாலா அதிக அளவில் தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவருக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருமணத்துக்கு விருப்பம் இல்லாதநிலையில்தான் சுஜிபாலா தற்கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
தற்போது உடல்நிலை தேறியுள்ள சுஜிபாலா விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக