தனது திருமணத்திற்கு பிறகு அக்கா, அண்ணி வேடங்களில் நடிக்க வந்து இருப்பதாக கிண்டல் செய்கிறார்கள் என்று ரீமா சென் கோபப்படுகிறார்.
'மின்னலே', 'தூள்', 'செல்லமே' உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்தவர் ரீமா சென். 1982ல் வெளிவந்த 'சட்டம் ஒரு இருட்டறை' படம் ரீமேக்காகி வருகிறது. எஸ்.ஏ.சந்திரசேகரன் தயாரிப்பில் அவரது உறவுக்காரப் பெண் சினேஹா இயக்கி வருகிறார். தமன்குமார், பியா, பிந்து மாதவி நடிக்கிறார்கள். இதில் ரீமா சென் முக்கிய பாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக, ஹீரோவின் அக்காவாக நடிக்கிறார்.
'சட்டம் ஒரு இருட்டறை' ரீமேக்கில் நடிப்பது குறித்து ரீமா சென் தெரிவித்து இருப்பது " எனக்கு திருமணமாகிவிட்டதால் அக்கா அண்ணி கேரக்டரில் நடிக்க வந்துவிட்டதாக சிலர் கிண்டல் செய்கிறார்கள். திருமணம் ஆகிவிட்டால் வயது கூடிவிடுமா? இல்லை அழகுதான் குறைந்துவிடுமா?.
நான் இப்போதும் அழகாக, கிளாமராக இருக்கிறேன். அதனால் அக்கா அண்ணி கேரக்டரில் நடிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்தப் படத்தை பொறுத்தவரை இந்தியில் ஹேமமாலினி நடித்த பவர்ஃபுல் கேரக்டர் என்பதால் நடித்தேன்.
ரீமேக்கில் எனது கேரக்டரை விரிவுபடுத்தி, காட்சிகளை அதிகப்படுத்தியிருக்கிறார்கள். 18 வயது சின்ன பெண் இயக்குகிறார் அவரை ஊக்கப்படுத்த வேண்டியது சீனியர் என்கிற முறையில் எனது கடமை.
எனக்கு கிளாமர் நடிகை என்று பெயர் இருப்பது சந்தோஷம்தான். ஆனால் எந்தப் படத்திலும் உடம்பை காட்டி நடிக்கவில்லை. நான் முழுக்க சேலை அணிந்து வந்தாலும் கிளாமராக தெரிவேன். இது கடவுள் கொடுத்த வரம். " என்று தெரிவித்து இருக்கிறார்.
நாம் அன்பு செலுத்தும் உள்ளங்கள் நல்லுள்ளங்களாக இருப்பின், துன்பங்களில் கூட இன்பங்களை காணலாம்.
31 ஆகஸ்ட் 2012
27 ஆகஸ்ட் 2012
நடிகை சுஜிபாலா திடீரென தற்கொலை முயற்சி!
நடிகை சுஜிபாலா அதிக அளவு தூக்க மாத்திரை தின்று தற்கொலைக்கு முயன்று உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
இயக்குநர் தங்கபர்ச்சானின் பள்ளிக்கூட்டம், இயக்குநர் ராசு மதுரவனின் முத்துக்கு முத்தாக, கோரிப்பாளையம் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை சுஜிபாலா. தற்போது உண்மை என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தை ரவிக்குமார் இயக்கி நாயகனாக நடித்து வருகிறார். சுஜிபாலாவை ரவிக்குமார் திருமணம் செய்ய விரும்பி அவரது பெற்றோரிடம் கேட்டிருக்கிறார். இதைத் தொடர்ந்து ஜூலை 5-ந் தேதியன்று ரவிக்குமாருக்கும் சுஜிபாலாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இந்நிலையில் திடீரென சுஜிபாலா அதிக அளவில் தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவருக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருமணத்துக்கு விருப்பம் இல்லாதநிலையில்தான் சுஜிபாலா தற்கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
தற்போது உடல்நிலை தேறியுள்ள சுஜிபாலா விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.25 ஆகஸ்ட் 2012
ஹன்ஸிகா தமன்னா அக்கப்போர்!
வேட்டை படத்தின் தெலுங்குப் பதிப்பில் ஒப்பந்தமான ஹன்ஸிகா நீக்கப்பட்டு, அவருக்கு பதில் தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனால் இரண்டு முன்னணி நடிகைகளுக்கும் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.
மாதவன், ஆர்யா நடித்து தமிழில் ரிலீசான வேட்டை படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இதில் கதாநாயகிகளாக நடிக்க ஹன்சிகா, ஆண்ட்ரியா ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.
தமிழில் அமலாபால் நடித்த கேரக்டரில் ஹன்சிகாவும், சமீரா ரெட்டி நடித்த வேடத்தில் ஆண்ட்ரியாவும் நடிப்பதாக இருந்தது.
ஆன்ட்ரியாவும் ஹன்ஸிகாவும் அக்கா தங்கை போல போஸ் கொடுத்து மகிழ்ச்சியை வெளியிட்டிருந்தனர். ஆனால் அது புஸ்ஸாகிவிட்டது.
இப்போது திடீரென படத்திலிருந்து ஹன்ஸிகா நீக்கப்பட்டார். அவருக்கு பதில் தமன்னாவை தேர்வு செய்துள்ளனர். இன்றைய தேதிக்கு தமன்னா தெலுங்கில் ஹாட். அவரது சமீபத்திய படம் '100 பர்சன்ட் லவ்' படம் செம ஹிட் என்பதால் இந்த முடிவு என்றும் படக் குழுவினர் தெரிவித்திருந்தனர்.
ஆனால் ஹன்ஸிகாவோ, தனது பட வாய்ப்பை தமன்னா பறித்து விட்டதாக ஆத்திரத்தில் உள்ளாராம்.
தமன்னாவை மிகக் கடுமையாகத் திட்டி தனக்கு நெருக்கமானவர்களிடம் கருத்து தெரிவித்து வருகிறாராம் ஹன்ஸிகா.19 ஆகஸ்ட் 2012
ஆன்ட்ரியாவை கிஸ் அடித்தது நிஜம்தான்!

ஆன்ட்ரியாவை கிஸ் அடித்தது நிஜம்தான். ஆனால் அது என் பர்சனல் விஷயம். யாரோ என் செல்போனிலிருந்து அந்தப் படங்களை எடுத்து வெளியிட்டுவிட்டனர் என்று இசையமைப்பாளர் அனிருத் கூறியுள்ளார். நடிகை ஆண்ட்ரியாவும், இசை அமைப்பாளர் அனிருத்தும் முத்தமிட்ட படங்கள் சமீபத்தில் வெளியாயின. இந்த படங்கள் 18 மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டவை என்றும், அப்போது இருவருக்கும் நெருக்கமான உறவு இருந்தது என்றும் ஆன்ட்ரியா கூறினார். இப்போது அனிருத்துடன் அந்த உறவு முறிந்துவிட்டது என்று ஒப்புக் கொண்டார். இப்போது அனிருத்தும் தன் பங்குக்கு விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், "ஆன்ட்ரியாவும், நானும் முத்தமிட்ட படங்கள் எனது செல்போனில்தான் இருந்தன. அது பழைய படம். இப்போது வெளிவந்து இருக்கிறது. அதை யாரோ எனக்கு தெரியாமல் டவுன் லோடு செய்து வெளியிட்டுள்ளனர். இது எனக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. எனக்கென்று தனிப்பட்ட சொந்த வாழ்க்கை இருக்கிறது. அதை இப்படி பகிரங்கப்படுத்தி விமர்சிப்பது வருத்தம் அளிக்கிறது. நான் பார்க்கிற பெண்களையெல்லாம் முத்தமிடுகிறவன் அல்ல. ஏற்கனவே நடந்த தவறுகள் மறுபடியும் நடக்காமல் பார்த்துக் கொள்வேன். நான் பெண்களை மிகவும் மதிப்பவன். இந்த இக்கட்டான நேரத்தில் எனது குடும்பத்தினர் எனக்கு துணையாக இருந்தனர்," என்றார்.
02 ஆகஸ்ட் 2012
விருந்தில் நடந்த விஷயங்களை சொல்ல முடியுமா?
![]() |
| தமன்னா |
28 ஜூலை 2012
தனுஷின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சிம்பு!
ஆனாலும் புதுசாக, அநியாயத்துக்கு செயற்கையாக நட்பை விளம்பரப்படுத்தி வரும் ஜோடி என்றால் அது தனுஷும் சிம்புவும்தான்!
நாம் இப்படிக் குறிப்பிடுவதற்குக் காரணம், இந்த இருவரும் கடந்த காலங்களில் எவ்வளவு முடியுமோ அந்த அளவு ஒருவரையொருவர் கேவலமாக விமர்சித்துக் கொண்டிருந்தார்கள். அதற்கு அவரவர் ரசிகர்களையும் பயன்படுத்தத் தவறியதில்லை. குறிப்பாக கொலவெறி பாட்டு வெளியான சமயத்தில் பேஸ்புக் போன்ற சமூக வலைத் தளங்களில் சிம்புவின் கமெண்டுகள், அது பற்றி தனுஷ் தந்த பதில்களைப் படித்தவர்களுக்கு நினைவிருக்கலாம்.
இப்போதோ, நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க... எங்களைப் போல நண்பர்கள் உண்டா என்றெல்லாம் பேட்டி கொடுத்து வருகிறார்கள். கூடவே இதெல்லாம் மீடியா வேலை என்று வேறு பிட்டைப் போட்டிருக்கிறார்கள்.
இருக்கட்டும்.
இன்று தனுஷுக்குப் பிறந்த நாள். இந்த பிறந்த நாளையொட்டி நேற்று இரவு ஏகப்பட்ட நட்சத்திரங்களை அழைத்து மெகா தண்ணி பார்ட்டி கொடுத்திருக்கிறார் தனுஷ். அதில் சிம்புவும் ஆஜர். கூடவே அவர்கள் வயது 'தோழிகள்' ராதிகா போன்றவர்களும் தவறாமல் ஆஜராகியிருந்தனர். தமன்னா, பிரேம்ஜி என பார்ட்டிகளுக்கென்றே பிறந்தவர்களும் வந்திருந்தனர்.
சேவல் வடிவில் (ஆடுகளம் ஹீரோல்ல...) கேக்கெல்லாம் வெட்டி கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட இந்த பிறந்த நாள் விழா விருந்தில், தனுஷ் மனைவி ஐஸ்வர்யா இல்லை!!25 ஜூலை 2012
அமலா பால் அமெரிக்காவில் சிகிச்சை?
22 ஜூலை 2012
காஜலுடன் இணையத் துடிக்கும் கோவிந்தா...!
வயதானாலும் இன்னும் குஷியும், கும்மாளமுமாக இருக்கும் கோவிந்தாவுக்கு புது ஆசை வந்துள்ளது. அதாவது சிக்கென்று இருக்கும் காஜல் அகர்வாலுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசைதான் அது.
கோவிந்தாவுக்கு இப்போது பாலிவுட்டில் பெரிய மார்க்கெட் இல்லை. கடைசியாக அவர் சல்மான் கானுடன் இணைந்து நடித்தார். இந்த நிலையில் மறுபடியும் ஒரு ரவுண்டு வர ஆர்வமாக உள்ள கோவிந்தா, இந்த முறை பக்கா இளம் நாயகி ஒருவருடன் இணைந்து காட்சி தர தீர்மானித்துள்ளாராம். இதற்காக அவர் குறி வைத்திருப்பது காஜல் அகர்வாலையாம்.
சிங்கம் இந்திப் படத்தில் நடித்திருந்தார் காஜல். தமிழ், தெலுங்கில் பிசியாக நடித்துக் கொண்டிருப்பவர். இவருடன் இணைய இப்போது துடியாத் துடிக்கிறாராம் கோவிந்தா.
இதுகுறித்து கோவிந்தா தரப்பில் கூறுகையில், துரந்தர் என்ற பெயரில் ஒரு புதிய படத்தை உருவாக்கப் போகிறார் கோவிந்தா. இதற்கான டைக்டரை தேடி வந்தார். இறுதியில் ரஜ்னிஷ் ராஜ் தாக்கூரை அவர் முடிவு செய்துள்ளார். மேலும் தனக்கு ஜோடியாக காஜல் அகர்வாலைப் போட வேண்டும் என்றும் தீர்மானமாக உள்ளார் கோவிந்தா. இதுதொடர்பாக அவரை பார்த்தும் பேசியுள்ளார். காஜல் இன்னும் ஒன்றும் சொல்ல்வில்லை. அவர் ஓ.கே. சொல்லிவிட்டால் சுறுசுறுப்பாக படப்பிடிப்பைத் தொடங்கி விடுவார் கோவிந்தா என்கிறார்கள்.
காஜல் கோவிந்தாவுடன் சேருவாரா...?18 ஜூலை 2012
கார்த்திக்கு சம்பளம் ரூ 14 கோடி!
ஆறே ஆறு படங்கள்தான் நடித்திருக்கிறார்... அதிலும கடைசி படம் பெரிய வெற்றி என்று கூட சொல்ல முடியாது. ஆனால் இன்று அவர் வாங்கும் சம்பளம் படத்துக்கு ரூ 14 கோடிக்கு கிர்ரென்று உயர்ந்திருக்கிறது.
இது கிட்டத்தட்ட விஜய், அஜீத், சூர்யாவுக்கு இணையானதாகும்.
'பருத்தி வீரன்', 'ஆயிரத்தில் ஒருவன்', 'நான் மகான் அல்ல', 'பையா', 'சிறுத்தை', 'சகுனி' ஆகிய 6 படங்கள்தான் கார்த்தி நடித்தவை.
இவற்றில் ஆயிரத்தில் ஒருவன் மற்றும் சகுனி பாக்ஸ் ஆபீஸில் சுமாராகப் போயின. பருத்தி வீரன் க்ளாஸிக் என்ற அந்தஸ்தைப் பெற்றது. நான் மகான் அல்ல நல்ல பெயரைக் கொடுத்தது.
சிறுத்தை ஒரு ரீமேக். ஆனாலும் நல்ல வசூல். கடைசியாக வந்த சகுனிக்கு நல்ல ஓபனிங். ஆனாலும் எதிர்ப்பார்த்த மாதிரி படம் இல்லாததால், அந்த ஓபனிங்கை தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை.
அடுத்து அலெக்ஸ் பாண்டியன், பிரியாணி என பெரிய படங்களைக் கையில் வைத்துள்ள கார்த்திக்கிடம் அடுத்த பட கால்ஷீட்டுக்கு ரூ 14 கோடி பேசியுள்ளாராம் ஒரு தயாரிப்பாளர். கார்த்திக் மேலும் யோசித்தால், மேலும் ஒரு கோடி தரவும் தயார் என்கிறாராம்.
விஜய், அஜீத், சூர்யா போன்றோர் பல படங்களில் நடித்த பிறகுதான் ரூ 10 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அலெக்ஸ் பாண்டியனுக்குப் பிறகு இந்த சம்பளம் ரூ 20 கோடியில் போய் நின்றாலும் ஆச்சர்யமில்லை என்கிறார்கள்.
13 ஜூலை 2012
காதலனுக்குப் (முன்னாள்?) போட்டியாக களமிறங்கும் நயன்தாரா!
![]() |
| நயன்தாரா |
10 ஜூலை 2012
ஒரு சப்ப பிகருக்கே இந்த சண்டையாடா?
டாப்சியை காதலிக்கும் போட்டியில் நடிகர்கள் மனோஜ் மஞ்சுவும், மகத்தும் விருந்தில் ஒருவரோடு ஒருவர் அடித்து சண்டை போட்டுக் கொண்டனர்.
மங்காத்தா படத்தில் நடித்தவர் மகத். என்னைத் தெரியுமா படத்தில் அறிமுகமானவர் மஞ்ச் மனோஜ். தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகன். தமிழில் அடுத்து வருவான் தலைவன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
மகத்துக்கும், டாப்சிக்கும் ஏற்கனவே நெருங்கிய தொடர்பு இருந்தது. படப்பிடிப்புக்காக டாப்சி சென்னை வரும்போதெல்லாம் அவரை பிக்கப் செய்வது மகத்தானாம்.
ஆனாலஸ் மஞ்ச் மனோஜை சந்தித்த பிறகு மகத்தை தொங்கலில் விட்டாராம் டாப்ஸி.
மனோஜும், டாப்சியும் ஒன்றாக குடித்தனம் நடத்துகிறார்கள் எனும் அளவுக்கு தெலுங்குப் படவுலகில் செய்திகள் றெக்கை கட்டிப் பறக்கின்றன.
டாப்சியை தன்னிடம் இருந்து அபகரித்து கொண்டதாக மனோஜ் மீது மகத் ஆத்திரத்தில் இருந்தார்.
இந்த நிலையில் சனிக்கிழமை இரவு சென்னை நட்சத்திர ஹோட்டலில் விருந்து நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் தெலுங்கு, தமிழ், நடிகர்-நடிகைகள் பங்கேற்றனர். இதுவும் சரக்குப் பார்ட்டிதான். அப்போது மகத்தும் - மனோஜும் சந்தித்துக் கொண்டனர்.
உடனே, டேய் டாப்ஸி என் ஆளு.. நீ அவகிட்ட பேசாதே என ஒருவருக்கொருவர் சவுண்ட் விட ஆரம்பித்துள்ளனர்.
ஆவேசப் பேச்சு சீக்கிரமே ஆபாசப் பேச்சாக மாற, ஒரு கட்டத்தில் கைகலப்பில் இறங்கினர். மகத் சட்டையை பிடித்து இழுத்து மனோஜ் அடித்து உதைத்தார். பதிலுக்கு மகத்தும் தாக்கினார். விருந்துக்கு வந்திருந்தவர்கள் இருவரையும் பிடித்து இழுத்துச் சென்றனர்.
இதுகுறித்து மகத்திடம் கேட்டபோது, தகராறு நடந்தது உண்மைதான் என ஒப்புக்கொண்டார். என் முழு கவனமும் சினிமாவில் இருக்கிறது. மனோஜ் என்மேல் ஏன் கோபமாக இருக்கிறார் என்று புரியவில்லை. இந்த சண்டைக்கு நான் காரணமில்லை, என்றார்.
ஆனால் மனோஜ் மஞ்சுவின் சகோதரி, லட்சுமி மஞ்சு இருவருக்கும் தகராறு நடைபெறவில்லை என்று மறுத்துள்ளார். தகராறு நடந்த இடத்தில் லட்சுமியும் இருந்தார் என சண்டையை விலக்கிவிட்டவர்கள் தெரிவித்தனர்.
இந்த சண்டையை விட மகா சுவாரஸ்யம்., சண்டையை விலக்கிவிட்ட ஒரு இளம் இயக்குநர் விட்ட கமெண்ட்: 'ஒரு சப்ப பிகருக்கே இந்த சண்டையாடா?'05 ஜூலை 2012
முத்தம் ஓகே! - அஞ்சலி
சேட்டை படத்தில் இரண்டு நாயகிகள். ஒருவர் அஞ்சலி. இன்னொருவர் ஹன்ஸிகா.
இந்தப் படம் இந்தியில் வெளியான டெல்லி பெல்லியின் ரீமேக் என்பது தெரிந்திருக்கும். ஒரிஜினல் கதைப்படி, ஹீரோ ஹீரோயினுக்கு ஒரு நெருக்கமான படுக்கையறைக் காட்சி உண்டு.
அந்தக் காட்சியை அப்படியே எடுப்பதா... அல்லது கொஞ்சம் மாற்றுவதா என்று யோசித்த இயக்குநர், கதாநாயகி அஞ்சலியிடம், படுக்கையறைக் காட்சியில் நடிக்கிறீர்களா.. அல்லது உதட்டோடு உதடு முத்தம் தரும் காட்சியாக அதை மாற்றிவிடலாமா என்று சாய்ஸ் வைத்திருக்கிறார்.
அஞ்சலி சற்றும் தயங்காமல், எனக்கு லிப் டு லிப் சீன் ஓகே என்றாராம்.
ஆர்யாவுடன் படு ரொமான்டிக்காக அந்த முத்தக் காட்சியில் நடித்தும் கொடுத்தாராம்.
இதுகுறித்து பின்னர் அவர் அளித்த விளக்கம்:
படுக்கயறைக் காட்சியில் நடித்தால் பெயர் கெட்டுப் போகும். அதான் முத்தக்காட்சி பரவால்லேன்னு ஒத்துக்கிட்டேன் என்றாராம்.
அப்போ மங்காத்தாவில் படுக்கையறைக் காட்சியில் வந்தது அஞ்சலியின் டூப்போ!
04 ஜூலை 2012
மனோஜுக்கும் எனக்கும் காதல் இல்லை!
தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான மோகன் பாபுவின் மகன் நடிகர் மனோஜுடன் தனக்கு காதல், இருவரும் ஒன்றாக வசிக்கிறார்கள் என்று வரும் செய்திகளில் உண்மையில்லை என்கிறார் நடிகை டாப்ஸி.
ஆடுகளம் படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமான டாப்ஸி, இப்போது அஜீத் படத்தில் நடித்து வருகிறார்.
டாப்ஸிக்கும் தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகனான நடிகர் மஞ்சு மனோஜ் குமாருக்கும் காதல் மலர்ந்துள்ளதாக செய்தி பரவியுள்ளது. இருவரும் தாலி கட்டாமலேயே ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்வதாகவும் கூறப்படுகிறது. இருவரும் விழாக்களில் ஒன்றாக பங்கேற்றும் வருகிவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இதுகுறித்து வரும் செய்திகள் பற்றி கோபமடைந்துள்ள டாப்ஸி கூறுகையில், "மனோஜையும் என்னையும் இணைத்து அடிக்கடி கிசுகிசுக்கள் வருகின்றன. இதை பரப்புவது யார் என்று எனக்கு தெரியும். மனோஜுக்கும் எனக்கும் காதல் இல்லை. மஞ்சு மனோஜ் அவரது குடும்பத்துடன் வசிக்கிறார். நான் மாதாபூரில் உள்ள எனது வீட்டில் வகிக்கிறேன்.
ஹாலிவுட்டில் நடிகர், நடிகைகள் நண்பர்களாக இருக்கின்றனர். ஆண், பெண் டாக்டர்களும் நண்பர்களாக உள்ளனர். நாங்கள் ஏன் இருக்கக் கூடாது?" என்றார்.29 ஜூன் 2012
அமலா போட்ட சம்பளச்சண்டை!
மைனா படம் மூலம் பிரபலமானவர் அமலாபால். விக்ரமுடன் “தெய்வத் திருமகள்” படத்தில் நடித்தார். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்தார். அமலாபாலை வெளிநாட்டில் நடந்த திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவொன்றில் நடனம் ஆடுவதற்காக சமீபத்தில் அழைத்து சென்றனர்.
அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டார். விழா துவங்கியதும் அவரை நடனமாட அழைத்தனர். ஆனால் சம்பளம் தராததால் ஆட மறுத்து விட்டார். ஓட்டல் லாபியில் நின்று பேசியபடி சம்பளம் தராதது ஏன்? என்று விழா அழைப்பாளர்களிடம் ஆவேசமாக பாய்ந்து ரகளையில் ஈடுபட்டார். முழு தொகையும் கொடுத்தால்தான் ஆடுவேன் என அடம் பிடித்தார்.
அமலாபால் தகராறு செய்வதை ஓட்டலுக்கு வந்து போனவர்கள் வேடிக்கை பார்த்தனர். விழா அமைப்பாளர்களிடம் இதுகுறித்து கேட்டபோது, அமலாபால் ரகளை செய்தது உண்மைதான் என்று ஒப்புக் கொண்டனர்.
சம்பளத்துக்காக அவர் தகராறு செய்யவில்லை. விமான டிக்கெட் எடுத்து கொடுக்கும் பிரச்சினையில் தான் அவர் சண்டை போட்டார் என்றனர். அவர் கேட்டபடி டிக்கெட் எடுத்து கொடுத்த பிறகு அவரது அம்மா மற்றும் உறவினருடன் விமானத்தில் புறப்பட்டார் என்றனர்.20 ஜூன் 2012
துப்பட்டாவால் மறைக்கும் நயன்தாரா!
நயன்தாரா தன் கையில் உள்ள பிரபுதேவாவின் பெயரை துப்பட்டாவால் மறைத்துக் கொண்டிருக்கிறார்.
நயன்தாராவும், பிரபுதோவாவும் உருகி, உருகி காதலித்தனர். கடைசியில் பார்த்தால் ஆளுக்கொரு பக்கமாக பிரிந்து சென்றுவிட்டனர். காதலித்த காலத்தில் பிரபுதேவாவின் பெயரை நயன்தாரா தனது இடது கையில் பச்சை குத்தினார். காதல் முறிந்த பிறகும் அவர் அந்த பச்சையை இன்னும் அழிக்கவில்லை. இந்நிலையில் அவர் தனது கையில் உள்ள பச்சையை அழிக்க வெளிநாடு சென்றார் என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால் அது உண்மையில்லை என்று நயன் தெரிவித்தார்.
இந்நிலையில் அண்மையில் ஹைதராபாத்தில் நடந்த விருது வழங்கும் விழாவில் நயன் கலந்து கொண்டார். அவர் கையில் உள்ள பிரபு தேவாவின் பெயரை எப்படியாவது போட்டோ எடுத்துவிட வேண்டும் என்று புகைப்படக்காரர்கள் முயன்றார்கள். அவர் முக்கால் கை உள்ள சுடிதார் அணிந்து துப்பட்டாவால் தன் கையில் உள்ள பச்சையை மறைத்துச் சென்றார்.
புகைப்படக்காரர்கள் முட்டி மோதி ஒரு வழியாக அந்த பச்சையை போட்டோ எடுத்துவிட்டனர். பிரபுதேவா என்னவென்றால் நயன் முடிந்து போன விஷயம் என்கிறார். ஆனால் நயன்தாராவோ பிரபுதேவாவின் பெயரை இன்னும் அழிக்காமல் வைத்துள்ளார்.16 ஜூன் 2012
அமெரிக்காவில் தேன்நிலவு கொண்டாட்டம்!
சினேகாவுக்கும் பிரசன்னாவுக்கும் காதல் ஆரம்பமானது, இருவரும் ஜோடி சேர்ந்த அச்சமுண்டு அச்சமுண்டு படத்திலிருந்துதான்.
இந்தப் படத்தில் நடிக்க ஒத்திகை பார்க்க, இருவரும் அமெரிக்காவில் ஒரே வீட்டில் தங்கியிருந்தனர். கணவன் - மனைவியாக நடிக்க ஒத்திகை பார்த்தனர்.
அப்போதுதான் இருவருக்கும் காதல் பூத்தது. இரண்டு ஆண்டுகளுக்குமேல் காதலித்து, கடந்த மாதம் தம்பதிகளாகினர்.
திருமணமாகிவிட்டாலும் அவர்களால் ஹனிமூனை உடனடியாகக் கொண்டாட முடியவில்லை.
தான் நடிக்க வேண்டிய பட வேலைகளில் பிஸியாகிவிட்டார் சினேகா. ஒருவழியாக இரவு பகல் பார்க்காமல் அந்த வேலைகளை முடித்துக் கொடுத்துவிட்டு, இப்போதுதான் இல்லற வேலைகளை ஆரம்பித்துள்ளனர் புதுமணத் தம்பதிகள்.
தேனிலவுக்காக எங்கே போகலாம் என்ற குழப்பமே இருவருக்கும் இல்லையாம். காரணம், தங்கள் காதல் ஆரம்பித்த அமெரிக்காவுக்கே செல்ல முடிவெடுத்திருந்தார்களாம்.
தங்கள் முடிவை இரு தினங்களுக்கு முன் அமைதியாக செயல்படுத்தினர் சினேகாவும் பிரசன்னாவும்.
இருவரும் நேற்று முன்தினம் ஹனிமூனுக்காக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றனர்!13 ஜூன் 2012
த்ரிஷாவின் குத்துச்சண்டை!
பூலோகம் படத்தில் த்ரிஷாவின் நடிப்பை பார்த்து வியந்து போன இயக்குநர் கல்யாண கிருஷ்ணன் ‘லேடி பாக்ஸர்' என்று த்ரிஷாவிற்கு பெயர் சூட்டியுள்ளாராம். இதை பத்திரிக்கையாளர் சந்திப்பில் த்ரிஷாவே கூறியுள்ளார்.
உனக்கும் எனக்கும் படத்திற்குப் பிறகு ஜெயம் ரவி, த்ரிஷா இணையும் படம் பூலோகம். இதில் ஜெயம் ரவி குத்துச்சண்டை வீரராக நடிக்கிறார். கதாநாயகி த்ரிசாவிற்கு வலுவான பாத்திரமாம். இதுகுறித்து பத்திரிக்கையாளர்களிடம் த்ரிஷா கூறியுள்ளதாவது,
பூலோகத்தில் ஜெயம் ரவி குத்துச்சண்டை வீரராக நடிக்கிறார். படத்தில் என்னுடைய ரோல் ரொம்ப வெயிட்டானது. ஜெயம் ரவியின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் பெண்ணாக இப்படத்தில் நடிக்கிறேன். இப்படத்தில் ஜெயம் ரவியின் கேரக்டருக்கு பலமே நான் தான். படத்தில் என்னுடைய கேரக்டரை பார்த்து டைரக்டர் என்னை குத்துச்சண்டை வீராங்கனை என்று தான் அழைக்கிறார் என்று கூறியுள்ளார்.
ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விறுவிறுப்பாக படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. பூலோகம் படத்தை நவம்பர் 15ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர்.10 ஜூன் 2012
முகத்தை திருப்பும் அசின்!
மும்பையில் கோலிவுட் ஹீரோயின்களைப் பார்த்தால் நடிகை அசின் முகத்தை திருப்பிக்
கொள்கிறார் என்று கூறப்படுகிறது.அசின் மலையாளத்தில் அறிமுகமானாலும் தமிழில் தான் பெரிய நடிகையாகி கொடிகட்டிப் பறந்தார். இங்குள்ள முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீர் என்று பாலிவுட் ஆசை வந்து அங்கு சென்றார். அவர் என்றைக்கு பாலிவுட் சென்றாரோ அன்றில் இருந்து அவரைப் பற்றி ஏராளமான வதந்திகள், செய்திகள் வெளி வருகின்றன.
பாலிவுட் படங்களில் வாய்ப்பு பெறுவதற்காக அசின் தான் தன்னைப் பற்றி தானே வதந்திகளைப் பரப்புவகாக பாலிவுட் ஹீரோயின்கள் கூறுகிறார்களாம். யார் என்ன கூறினாலும் சளைக்காமல் இருக்கும் அசின் தானே பாலிவுட்டின் நம்பர் 1 ஹீரோயின் என்று கூறிக் கொள்கிறார். அங்கு அவர் மூன்று ஹிட் படங்கள் கொடுத்துவிட்டாராம் அதனால் தான் இப்படி சொல்லியிருக்கிறார்.
இனி தமிழ் படங்களில் எல்லாம் நடிக்க மாட்டேன் என்று அவர் கூறியதாக செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில் அவரைப் பற்றி புதிய செய்தி கிடைத்துள்ளது. நம்ம கோலிவுட் ஹீரோயின்கள் யாரையாவது மும்பையில் பார்த்தால் அசின் ஒரு வார்த்தை கூட பேசமால் முகத்தை திருப்பிக் கொள்கிறாராம். கோலிவுட் ஹீரோயின்கள் இது ஏன் இவர் இப்படி நடந்து கொள்கிறார் என்று கேட்கிறார்களாம்.
09 ஜூன் 2012
கவர்ச்சிக்கு முக்கியத்துவம்!
கற்றது தமிழ் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நடிகை அஞ்சலி அங்காடித்தெரு படம் மூலம் ஹிட் நாயகி ஆனார்.
அந்த படத்தை தொடர்ந்து பல இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் அஞ்சலியிடம் கால்ஷீட் கேட்டு அணுகியும் கொடுக்க முடியாத நிலை உருவாகின.அங்காடித்தெருவுக்கு முந்தைய காலகட்டத்தில் ஒப்புக் கொண்ட படங்கள்.
ஏற்கனவே கமிட் ஆகியிருந்த சின்ன பட்ஜெட் படங்கள் சிலவற்றில் நடித்துக் கொடுக்க வேண்டிய கட்டாய சூழ்நிலையில் இருந்த அஞ்சலி புதிய படங்களில் ஒப்பந்தமாகாமல் இருந்தார்.
இப்போது பழைய கமிட்மெண்ட்கள் அனைத்தையும் முடித்து விட்ட அஞ்சலி, இனி முன்னணி ஹீரோக்களுடன் மட்டுமே நடிப்பது என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம்.
கலகலப்பு கவர்ச்சிக்கு ரசிகர்களின் ஆதரவு பெருகி வருவதால் இதுவரை நடிப்புக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வந்த அஞ்சலி இனிமேல் கவர்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுக்கவும் திட்டமிட்டிருக்கிறார்.
07 ஜூன் 2012
ஈர்ப்பு இல்லையே...!
தி டர்ட்டி பிக்சர்ஸ்-சில்க் சக்கத் ஹாட் மகா என்ற கனனடப் படத்தில் சி்ல்க் ஸ்மிதா வேடத்தில் நடித்து வரும் வீணா மாலிக்கின் கவர்ச்சி ஸ்டில்கள் உலா வர ஆரம்பித்துள்ளன. ஆனால் வித்யா பாலன் அளவுக்கு வீணாவிடம் ஈர்ப்பில்லையே என்ற உச்சுக் கொட்டும் குரல்களும் கூடவே கிளம்பியுள்ளன.
வித்யா பாலன் நடிப்பில் இந்தியில் வெளியாகி பெரும் வெற்றியையும், வித்யாவுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றுத் தந்த படமான டர்ட்டி பிக்சர்ஸ் தற்போது பல மொழிகளிலும் ரீமேக் ஆகிறது.
கன்னடத்தில் திரிஷூல் இயக்கத்தில் இப்படம் ரீமேக் செய்யப்படுகிறது. பாகிஸ்தானைச் சேர்ந்த வீணா மாலிக் இதில் நாயகியாக நடிக்கிறார். அவர இடம் பெற்றுள்ள பட ஸ்டில்கள் ரவுண்டு அடிக்க ஆரம்பித்துள்ளன.
வித்யா பாலனின் டர்ட்டி பிக்சர் படங்கள் வெளியானபோது அது காட்டுத் தீ போல படு வேகமாக பரவியது. மேலும் வித்யாவின் கவர்ச்சி அழகுணர்வுடன் ரசிக்கப்பட்டது. இருப்பினும் வீணாவின் படங்களுக்கு அந்த அளவுக்கு கெளரவம் கிடைக்கவி்ல்லை என்ற பேச்சு எழுந்துள்ளது.
படத்தைப் பார்த்துட்டு உங்க கமெண்ட்டைச் சொல்லுங்க...
03 ஜூன் 2012
த்ரிஷா, ராணா காதல் முறிவு!
தெலுங்கு நடிகர் ராணா டக்குபாத்தியும், த்ரிஷாவும் பிரிய பாலிவுட் கவர்ச்சிக் கன்னி பிபாஷா பாசு தான் காரணம் என்று கூறப்படுகிறது.
தெலுங்கு நடிகர் ராணா டக்குபாத்தி பாலிவுட்டிலும் நடித்து வருகிறார். ஜான் ஆபிரகாமை பிரிந்த பாலிவுட் நடிகை பிபாஷா பாசுவுக்கும், ராணாவுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளதாக செய்திகள் பரவின. இதைக் கேட்டு பதறிய ராணா ச்சே, ச்சே நானும் பிபாஷாவும் காதலர்கள் எல்லாம் கிடையாது நல்ல நண்பர்கள் மட்டுமே என்றார். மேலும் தனது நீண்ட நாள் காதலியான த்ரிஷாவுடனான உறவு நன்றாக இருப்பதாகவும், அவரை பிரியும் எண்ணம் இல்லை என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் ராணா, த்ரிஷா காதல் முறிந்துவிட்டதாகவும், அதற்கு காரணம் பிபாஷா என்றும் பேச்சு அடிபடுகிறது.
இது குறித்து ராணாவுக்கு நெருக்கமான ஒருவர் கூறுகையில்,
பிபாஷாவுடன் ராணா நெருக்கமானது த்ரிஷாவை கடுப்பாக்கியுள்ளது. மேலும் ராணா பாலிவுட்டில் பிசியாக இருப்பதால் அவர் ஹைதராபாத் வர நேரம் கிடைப்பதில்லை. அதே சமயம் கட்டா, மீட்டாவில் நடித்தாலும் த்ரிஷாவின் பாலிவுட் கனவு நிறைவேறவில்லை என்றார்.
த்ரிஷாவுக்கு முன்பு ஸ்ரேயாவை டேட் செய்தார் ராணா. த்ரிஷா என்ட்ரியால் ஸ்ரேயா காதல் முறிந்தது. தற்போது பிபாஷாவால் த்ரிஷா காதல் முறிந்துள்ளது என்று கூறப்படுகிறது. 01 ஜூன் 2012
அஜித்திற்கு ஜோடி அனுஷ்கா?
சிறுத்தை பட இயக்குனர் சிவா எடுக்கும் படத்தில் தல அஜீத் குமார் நடிக்கவிருக்கிறார். அவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடிப்பார் என்று கூறப்படுகிறது.
கார்த்தியை வைத்து சிறுத்தை படம் எடுத்த சிவா தற்போது அஜீத் குமாரை வைத்து ஒரு படத்தை எடுக்கவிருக்கிறார். இந்த படத்தை விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கவிருக்கிறது. இதில் அஜீத் குமாருக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கவிருக்கிறாராம்.
அவரை சந்தித்து கதை சொன்னவுடன் அவருக்கு கதை மிகவும் பிடித்துவிட்டதாம். தான் இந்த படத்தில் நடிக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் வெறும் பேச்சு, பேச்சாகத் தான் இருக்கிறது. விருப்பம் தெரிவி்த்த அவர் கால்ஷீட் பற்றி மூச்சு விடவில்லையாம். இருப்பினும் அவர் விரைவில் கால்ஷீட் தருவார் என்று சிவா மலை போல் நம்புகிறாராம்.
அப்படி அனுஷ்கா ஒப்புக் கொண்டால் அஜீத்துடன் அவர் ஜோடி சேரும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அஜீத் விஷ்ணுவர்தனின் படத்தில் பிசியாக இருக்கிறார். அனுஷ்கா கார்த்தியுடன் அலெக்ஸ் பாண்டியன், விக்ரமுடன் தாண்டவம், ஆர்யாவுடன் இரண்டாம் உலகம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
அவர் விரைவில் அஜீத் படத்தில் நடிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.30 மே 2012
நீ தமிழில் பாடக்கூடாது....!
ஐபிஎல் இன்னும் என்னென்ன சண்டையை 'வலித்து'க் கொண்டு வருமோ... இந்த முறை இரு கோலிவுட் நட்சத்திரங்கள் மோதிக் கொண்டுள்ளனர்.
அவர்கள் பிரபல நடிகர் பிரேம்ஜி மற்றும் பாடகர் கிரிஷ்.
சென்னையை தோற்கடித்து கொல்கத்தா அணி கோப்பையை வென்றதையடுத்து, இயக்குநரும் நடிகருமான பிரபுதேவா வீட்டில் ஒரு பார்ட்டி நடந்தது. விடிய விடிய நடந்த இந்த மது விருந்தில் கொல்கத்தா அணி உரிமையாளர் ஷாரூக்கான், அவர் மனைவி கவுரி, நடிகர் அக்ஷய் குமார், உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தமிழ் சினிமா பாடகரும் நடிகை சங்கீதாவின் கணவருமான கிரிஷும் இதில் கலந்து கொண்டு, விருந்துக்கு வந்தவர்களுடன் போஸ் கொடுத்து அதை ட்விட்டரில் வெளியிட்டிருந்தார்.
இதைப் பார்த்ததும் கோபமடைந்த பிரேம்ஜி, "சென்னை அணியை தோற்கடித்த கொல்கத்தா அணி ஓனர்கூட விருந்தில் கலந்து கொண்டது சரியா... இனி நீ தமிழில் பாடக்கூடாது. போய் கொல்கத்தால பாடித்தான் பிழைக்கணும்," என ட்வீட் செய்தார்.
உடனே கிரிஷ், "டேய்... அது பிரபு தேவா கொடுத்த விருந்துடா... நான் அவர்கூட தான் போட்டோ எடுத்துக்கிட்டேன். அந்த விருந்துக்கு ஷாரூக் வந்திருந்தார் அவ்வளவுதான்," என பதில் கூறியிருந்தார்.
பிரேம்ஜியும் கிரிஷும் நண்பர்களும்கூட. எனவே இந்த ட்விட்டர் சண்டை பற்றிக் கேட்டதற்கு, "எங்களுக்குள் சண்டை எதுவும் இல்லை. பிரேம்ஜியின் கமெண்டை நான் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை," என்றார்.
பிரேம்ஜி கூறுகையில், "சும்மா வாய் சண்டைதான். ஐபிஎல் வேற முடிஞ்சிடுச்சா.. ஒரே போர்.. அதான் கிரிஷை கலாய்ச்சேன்," என்றார் தன் பாணியில்...28 மே 2012
அப்படியெல்லாம் நடிக்க மாட்டேன்... நமீதா உறுதி!
ஓரினச்சேர்க்கையாளராக நடிக்க வேண்டும் என்று ஒரு இயக்குநர் விடுத்த வேண்டுகோளை ஒரேயடியாக நிராகரித்து விட்டாராம் நமீதா. நடிப்புக்காக கூட அதை நான் விரும்பவில்லை, ஆதரிக்க விரும்பவில்லை என்று ஒரே போடாக போட்டு விட்டாராம் நமீதா.
கவர்ச்சிக்குப் பெயர் போனவர் நமீதா. ஆனால் இப்போதெல்லாம் தனது கவர்ச்சியில் ஆபாசமோ, அசிங்கமோ இல்லாதவாறு பார்த்துக்கொள்வதில் சற்று கவனமாகவே இருக்கிறார். நடிப்பதிலும் கூட சில பாலிசிகளை வைத்துக் கொண்டு தேர்வு செய்து வேடங்களை ஒப்புக் கொண்டு வருகிறார்.
முன்பு போல படங்கள் அவர் கையில் இல்லாவிட்டாலும் கூட நிறைந்த மனதுடன்தான் இருக்கிறாராம்.
சமீபத்தில் அவரிடம் ஒரு இயக்குநர் கதை சொல்லியுள்ளார். படத்தின் ஒரு வரிக் கதையைக் கேட்ட அவர் இம்ப்ரஸ் ஆகி, பரவாயில்லையே, நல்லாருக்கே நடிக்கலாமே என்று கூறி கதையை விரிவாக சொல்லுமாறு கேட்டுக் கொண்டார். அது ஒரு ஆவிக் கதையாகும்.
இயக்குநரும் ஆர்வத்துடன் கதையை விவரிக்க ஆரம்பித்தார். சீன் பை சீனாக விழி விரிய கேட்டுக் கொண்டு வந்த நமீதா கதையை அவர் சொல்லி முடித்தவுடன், சாரிப்பா, இதில் நடிக்க முடியாது என்று கூறி விட்டாராம்.
என்னங்க இது நல்லாத்தானே போய்ட்டிருந்துச்சுச என்று இயக்குநர் குழப்பமாகி, ஏன் மேடம் என்று கேட்டுள்ளார். அதில் ஆவி ஒன்று என்னுடன் செக்ஸ் வைத்துக் கொள்வது போல சீன் வருகிறதே அதனால்தான் வேண்டாம் என்கிறேன் என்றார். ஏன் மேடம் கனவில்தானே அப்படி வருகிறது என்று கேட்க, அது குறித்துக் கூட எனக்குப் பிரச்சினையில்லை, உறவு வைத்துக் கொள்வது போல நடிக்கவும் நான் தயார்தான். ஆனால் அது பெண் ஆவி ஆச்சே... எப்படி முடியும் என்றாராம்.
எனக்கு ஓரினச் சேர்க்கை என்பது பிடிக்கவே பிடிக்காது. அதை நான் ஆதரிக்க மாட்டேன். நடிப்புக்காகவோ அல்லது விளையாட்டுக்காகவோ கூட அதை நான் ஆதரிக்க மாட்டேன் என்று கூறி விட்ட நமீதா, இந்தப் படத்தில் நடிக்க முடியாது, தப்பா நினைச்சுக்காதீங்க என்று கூறி அனுப்பி வைத்து விட்டாராம்.25 மே 2012
கார்த்திக்கு 35வது பிறந்தநாள்!
நடிகர் சிவகுமாரின் இளைய மகன், சூர்யாவின் தம்பி என்பதையும் தாண்டி திரையிலகில் கார்த்தி தனக்கென்று ஒரு பெயரை எடுத்துள்ளார். அவர் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலும் அவரது நடிப்பு பேசப்படுகிறது.
இப்படி நடிப்பில் வெளுத்து வாங்கி ரசிகர்கள் மனதில் நாற்காலி போட்டு உட்கார்ந்திருக்கும் கார்த்தி இன்று தனது 35வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். திருமணத்திற்கு பிறகும் வரும் முதல் பிறந்தநாள் இது. அதனால் அவர் மனைவியுடன் ஸ்பெஷலாக பிறந்தநாள் கொண்டாடுகிறார் என்று எதிர்பார்க்க வேண்டாம். அவர் சாலக்குடியில் அலெக்ஸ் பாண்டியன் படப்பிடிப்பில் உள்ளார்.
சின்சியரான கார்த்திக்கு இன்று இரவு கேக் வெட்டி பிரம்மாண்டமான பிறந்தநாள் பார்ட்டி கொடுக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அது மட்டுமி்ன்றி அவரது பிறந்தநாளையொட்டி அவரது ரசிகர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். புளியந்தோப்பில் ரத்ததான முகாம் நடத்தப்படுகிறது. வால்டாக்ஸ் ரோட்டில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு உணவு, உடை வழங்கப்படுகிறது. மேலும் வட சென்னையில் கால்பந்து போட்டி மற்றும் கபடி போட்டி ஆகியவை நடத்தப்படுகின்றன.
கார்த்தி ரசிகர்களுக்காக அவரது சகுணி படத்தில் இருந்து 2 காட்சிகள் இன்று வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சகுணி அடுத்த மாதம் ரிலீஸ் ஆகிறது. அலெக்ஸ் பாண்டியன் படத்தை அடுத்து அவர் ஆல் இன் ஆல் அழகு ராஜாவில் நடிக்கிறார்.
பிறந்தநாள் வாழ்த்துக்கள் கார்த்தி...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)





