பக்கங்கள்

25 அக்டோபர் 2011

விக்ரமின் கனவுக்கன்னிகள்!

ராஜபாட்டை படத்தில் ஹீரோ விக்ரம் கனவில் வரும் குத்துப் பாட்டில் ரீமா சென்னும் ஸ்ரேயாவும் குத்தாட்டம் போடுவதாக ஒரு காட்சியை வைத்துள்ளார் இயக்குநர் சுசீந்திரன்.
இதுகுறித்து இயக்குநர் சுசீந்திரன் கூறுகையில், "ராஜபாட்டை பக்கா கமர்சியல் படம். விக்ரம் ஜிம்பாய் கேரக்டரில் வருகிறார். மெகா பட்ஜெட்டில் தயாராகியுள்ளது. நான் சொன்னதை உள்வாங்கி விக்ரம் மிக பிரமாதமாக நடித்துள்ளார். அவருடன் பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவம். அவருக்கு இன்னும் ஒரு கதை சொல்லி உள்ளேன். கண்டிப்பாக மீண்டும் படம் செய்யலாம் என்று கூறியுள்ளார்.
விக்ரம் கனவு காண்பது போன்ற பாடல் காட்சியொன்று உள்ளது. இதில் ஸ்ரேயா, ரீமாசென் இருவரும் நடிகைகளாகவே வந்து நடனம் ஆடுகின்றனர். இப்பாடல் காட்சி இத்தாலியில் படமாக உள்ளது.
அடுத்து விஷ்ணுவை வைத்து படம் இயக்குகிறேன். இது தெலுங்கிலும் தயாராகிறது. தெலுங்கில் வேறு ஹீரோ.
எனக்கென்று தனி பாணி கிடையாது. வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல என்று வித்தியாசமான கதைகளை படமாக்குவதே திட்டம்," என்றார் சுசீந்திரன்.
ராஜபாட்டையில் ரீமா - ஸ்ரேயா இணைந்து குத்தாட்டம் போடுகின்றனர் என முதலில் செய்தி வெளியாகியிருந்தது ஆனால் அப்போது இயக்குநர் சுசீந்திரன் இதை மறுத்து பேட்டியளித்திருந்தார். இப்போது அவரே அந்த செய்தியை ஒப்புக் கொண்டுள்ளார்!

23 அக்டோபர் 2011

சந்தர்ப்பத்தை பயன்படுத்திய காஜல்!

தம்மு தெலுங்குப் படத்தில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக ஒப்பந்தமாகி பின்னர் திடீரென கழன்று கொண்டார் ஸ்ருதி. காரணம், அவருக்கு வந்த இந்திப்பட வாய்ப்பு.
விஷயம் வெளியான உடனே, ஜூனியர் என்.டி.ஆரை பல நடிகைகளும் மொய்க்க ஆரம்பித்தனராம். இவர்களில் தமன்னா, த்ரிஷா என டாப் ஸ்டார்களும் உண்டாம்.
ஆனால் என்.டி.ஆர், காஜல் அகர்வாலை ஒப்பந்தம் செய்தார். உடனே சந்தோஷமாக நடிக்க ஒப்புக் கொண்டாராம் காஜல்.
காரணம், ஏற்கெனவே நான் வட இந்தியப் பெண் என்று பேசி தெலுங்கு நடிகர்-இயக்குநர்களிடம் கெட்டப் பெயர் சம்பாதித்துள்ளார் காஜல்.
இந்த நிலையில் ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைத்தால், மீண்டும் தெலுங்கில் ஒட்டிக் கொள்ளலாம் என காத்திருந்தபோது, இந்த லட்டு வாய்ப்பு வந்தது.
விடுவாரா... அதே நேரம் தனக்கு சம்பளமாக பெரும் தொகையைக் கேட்டாராம் காஜல். வேறு வழியில்லை என்பதால், கேட்ட தொகையைக் கொடுத்துவிட்டாராம் ஜூனியர் என்.டி.ஆர்.

21 அக்டோபர் 2011

காத்திருக்கும் சித்தாரா!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்இந்திய மொழி படங்கள் அனைத்திலும் நடித்தவர் நடிகை சி்த்தாரா. தமிழில் "புது புது ராகங்கள்", "புது வசந்தம்", "உன்னை சொல்லி குற்றமில்லை", "புதுப்புது அர்த்தங்கள்" உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாகவும், "நட்புக்காக", "படையப்பா" உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர கேரக்டரிலும் நடித்துள்ளார். இந்நிலையில் சினிமாவுக்கு வந்து 25 வருடங்கள் ஆகியும் இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கிறார்.
இதற்கான காரணம் குறித்து அவர் கூறியிருப்பதாவது, நிறைய வரன்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் வரும் வரன்கள் எல்லாம், திருமணத்திற்கு பின்பு சினிமாவில் நடிக்க கூடாது என்று நிபந்தனை விதிக்கிறார்கள். திருமணத்திற்கு பின்ன நல்ல வாழ்க்கை அமைந்தால் நடிக்காமல் இருக்கலாம், ஆனால் அப்படி ஒரு வாழ்க்கை அ‌மையவில்லை என்றால் என்ன செய்வது. என்னை பெண் பார்க்க வருபவர்களிடம் பரந்த மனப்பான்மை இல்லை. அப்படி இல்லாதவர்களிடம் நான் எப்படி குடும்பம் நடத்த முடியும்.
சினிமாவிற்கு முன்பு வரை சினிமாவை பற்றி நிறைய பயம் இருந்தது. ஆனால் சினிமாவிற்கு வந்தபின்னர், அதில் ஒரு நம்பிக்கையும், ஒரு பக்தியும் ஏற்பட்டது. சினிமாவை தேடி நான் வரவில்லை. சினிமா தான் என்னை தேடி வந்தது. சினிமாவை ரொம்பவே மதிக்கிறேன். அதனால், திருமணத்துக்குப்பின் நடிக்க மாட்டேன் என்று ஒருபோதும் சொல்ல மாட்டேன். 25 வருடங்களாக நான் சினிமாவில் இருக்க வேண்டும் என்று எழுதப்பட்டிருக்கிறது.
நான் யாரையும் காதலிக்கவில்லை என்று பொய் சொல்ல மாட்டேன். காதலித்து இருக்கிறேன். அது, கல்யாணம் வரை போகவில்லை. காதலித்துதான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். என்னை புரிந்துகொண்டு, நீ எப்பவும் போல நடிக்கலாம் என்று சொல்கிற கணவர் தான் வரவேண்டும். அப்படி ஒருவருக்காக காத்திருக்கிறேன் என்றார்.

18 அக்டோபர் 2011

பிரபுதேவாவை விட்டு பிரியமாட்டேன்!

"பிரபுதேவாவின் குழந்தைகள் எனக்குப் பிரச்சினையாக இருப்பதாகக் கூறுவதில் உண்மையில்லை. அவர்கள் இருப்பது எனக்கு முதலிலேயே தெரியுமே. எனவே அதற்காக, அவரை விட்டு பிரிவது என்ற எண்ணத்துக்கே இடமில்லை," என்று நடிகை நயன்தாரா கூறினார்.
நயன்தாரா மீதுள்ள காதலால் மனைவியை திட்டமிட்டு விவாகரத்து செய்துவிட்டவர் பிரபு தேவா. ஆனால் இப்போது நயன்தாரா - பிரபுதேவா இருவருக்குமே பிரச்சினை வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. முதல் மனைவி மற்றும் குழந்தைகளை அவர் ரகசியமாக பார்த்ததால் கோபித்துக் கொண்ட நயன்தாரா, பிரபு தேவாவை நடுத்தெருவில் நிறுத்திவிட்டதாக செய்திகள் வெளியாகின.
இதை மறுத்து நயன்தாரா மட்டும் கடந்த இரு தினங்களாக பேட்டி கொடுத்து வருகிறார். ஆனால் பிரபு தேவா செல்போனைக் கூட அணைத்துவிட்டு, மும்பையில் ஷூட்டிங்கில் மூழ்கிவிட்டாராம்.
இந்த நிலையில், பிரபுதேவா தன் குழந்தைகளை முழுமையாக விலகி வந்தால்தான் திருமணம் என்று நயன்தாரா பிடிவாதமாக இருப்பதாகக் கூறப்பட்டது.
ஆனால் அதையும் நயன்தாரா மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், "எனக்கும், பிரபுதேவாவுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. எங்களுக்கு இடையே உறவு முன்பைவிட பலமாக இருக்கிறது. நாங்கள் ஒன்றாகத்தான் இருக்கிறோம்.
அவருக்கு குழந்தைகள் இருப்பது எனக்கு முன்பே தெரியும். குழந்தைகள் எனக்கு பிரச்சினை இல்லை. பிரபுதேவாவை விட்டு நான் ஒருபோதும் பிரிய மாட்டேன்.
எங்களை பற்றி வதந்திகள் பரவுவது புதிது அல்ல. நிறைய பார்த்து விட்டோம். இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில், எங்கள் திருமண தேதியை விரைவில் அறிவிப்போம்,'' என்றார்.

15 அக்டோபர் 2011

பிரபுதேவா நயன் திருமணம் நிறுத்தம்?

நடிகை நயன்தாரா மலையாள நடிகர் மோகன்லாலை காதலித்து பின்னர் பிரிந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து நடிகர் சிம்புவை காதலித்து பிரிந்தார். இதையடுத்து நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவை காதலித்து திருமணம் வரை வந்தது. இப்போதும் அந்த காதலும் முறிந்துவிட்டதாக கூறப்படுகிறது.
நயன்தாரா -பிரபுதேவா காதலுக்கு பிரபுதேவாவின் முதல் மனைவி ரமலத் எதிர்ப்பு தெரிவித்தார். தனது கணவரை நயன்தாராவிடமிருந்து மீட்டு தாருங்கள் என்று போராட்டம் எல்லாம் நடத்தி, கடைசியாக கோர்ட் படியேறினார் ரமலத்.
இறுதியில் ரமலத்தையே சமாதனம் செய்து விவாகரத்துக்கு சம்மதிக்க வைத்த பிரபுதோ, ரமலத்திற்கு பலகோடி மதிப்பிலான சொத்துக்களையும் எழுதி கொடுத்தார்.
இதனையடுத்து நயன்-பிரபுதேவா காத‌லுக்கான சிக்கல் தீர்ந்தது. இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்து, திருமண ஏற்பாடுகளும் நடந்து வருகிறது.
இதனிடையே தன்மீது கொண்ட காதலுக்காக முதல் மனைவி ரமலத்தையே விவாகரத்து செய்துவிட்டு வந்த பிரபுதேவாவுக்காக இந்து மதத்துக்கு மாறினார் நயன்தாரா. மும்பையில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் வேளையில், இவர்கள் காதலில் திடீர் விரிசல் ‌ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் திருமணத்தை ரத்து செய்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த அதிரடி மாற்றம் குறித்து சொல்லப்படும் காரணம் : முதல் மனைவியை பிரிந்தாலும் தனது குழந்தைகள் மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளாராம் பிரபுதேவா.
சென்னை வரும் போதெல்லாம் குழந்தைகளை சந்திக்கிறாராம். ஆனால் இது நயன்தாராவுக்கு பிடிக்கவில்லை. குழந்தைகளை சந்திக்க நயன்தாரா தடை போட்டதாக தெரிகிறது. இருந்தும் நயன்தாராவுக்கு தெரியாமல் குழந்தைகளை சந்தித்து வருகிறார் பிரபுதேவா.
சமீபத்தில் கேரளா சென்ற பிரபுதேவா, நயன்தாராவிடம் வெளியூர் சூட்டிங்குக்கு போவதாக பொய் சொல்லிவிட்டு சென்னை வந்தாராம். இங்கு குழந்தைகளுடன் தங்கி இருந்துள்ளார். இந்த விஷயம் நயன்தாரா காதுக்கு எட்ட ஆத்திரமானார்.
பிரபுதேவாவுக்காக சினிமா, குடும்பம் என எல்லாத்தையும் விட்டு வந்த எனக்கு, அவர் துரோகம் செய்துவிட்டார் என்று ஆத்திரப்பட்டுள்ளார். மேலும் குழந்தைகளை விட்டு தன்னால் பிரிய முடியாது என்று பிரபுதேவாவும் உறுதியாக கூறிவிட்டாராம்.
இதையடுத்து பிரபுதேவா - நயன்தாரா காதல் முறிந்து, திருமணம் நின்றுபோனதாக பேசப்படுகிறது.

14 அக்டோபர் 2011

ஆள் வைத்து மிரட்டும் புவனேஸ்வரி!

கொடுத்த கடனை திருப்பிக்கேட்டால் நடிகை புவனேஸ்வரி ஆள் வைத்து மிரட்டுகிறார் என்று சென்னை ஐகோர்ட்டில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கே.கே.நகரை சேர்ந்த குருநாதன் என்பவர் ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், டி.வி. தொடர்களில் நடித்து வருவதாக நடிகை புவனேஸ்வரி என்னிடம் தெரிவித்தார். மேலும் டி.வி. தொடர்களை அவரே தயாரித்து வெளியிட இருப்பதாகவும், அதற்கு தேவையான பணம் தன்னிடம் இல்லை என்றும் கூறினார். எனவே இதற்காக ரூ.1.50 கோடி தொகையை கடனாக தரவேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார். நான் அவர் கேட்ட தொகையை வழங்கினேன். ஆனால் அவர் டி.வி. தொடர் எதையும் தயாரிக்கவில்லை என்று தெரிந்துகொண்டேன். இதனையடுத்து கடனாக கொடுத்த தொகையை திருப்பிக்கேட்டேன். ஆனால் அவர் தரமறுத்துவிட்டார். மேலும் என்னை ஆள்வைத்து மிரட்டினார். இதுபற்றி கே.கே.நகர் போலீசில் புகார் கொடுத்தேன். ஆனால், புவனேஸ்வரி மீது வழக்குப்பதிவு செய்ய போலீசார் மறுத்துவிட்டனர். கடனை தராமல் மிரட்டல் விடுத்த அவர் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசுக்கு உத்தரவிட வேண்டும், என்று தமது மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆறுமுகசாமி, குருநாதனின் மனுவுக்கு இன்னும் ஒரு வார காலத்திற்குள் பதிலளிக்கும்படி கே.கே.நகர் போலீசுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டார்.

11 அக்டோபர் 2011

சினிமாவிலும் அம்மாவாகிறார் சிம்ரன்!

தெலுங்குப் படம் ஒன்றில் அம்மா வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் நடிகை சிம்ரன்.
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் கனவு தேவதையாகத் திகழ்ந்த சிம்ரன், திருமணத்துக்கு பின் பட வாய்ப்புகளை இழந்தார். மீண்டும் கதாநாயகி வேடம் வந்தால் நடிப்பேன் என்று அடம் பிடித்துவந்தார்.
ஆனால் அக்கா, அண்ணி வாய்ப்புகளே வந்தன. அந்த வேடங்களிலும் சில படங்களில் நடித்தார். அப்போது அம்மா வேடத்தில் நடிக்க பலர் அழைத்தனர். அம்மாவாக நடிக்கும் அளவுக்கு எனக்கு வயதாகி விடவில்லை. அம்மா வேடத்தில் நடிக்கவே மாட்டேன் என்று மறுத்து வந்தார்.
தொடர்ந்து வாய்ப்புகளே இல்லாமல் போனதால் தற்போது அவர் பிடிவாதம் தளர்ந்துள்ளது.
தெலுங்கு படமொன்றில்அம்மா வேடத்தில் நடிக்க சம்மதித்துள்ளாராம். இவருக்கு மகனாக நடிப்பவர் உபேந்திரா. இருவரும் ஏற்கனவே சத்யம் படத்தில் நடித்துள்ளனர். உபேந்திராவுக்கு ஐம்பது வயதுக்கு மேல்! அவருக்கு அம்மாவாக நடிக்க சிம்ரன் ஒப்புக்கொண்டது திரையுலகில் ஒரு சின்ன ஆச்சர்யம்தான். ஆனால் பெரிய தொகையை இதற்கு சம்பளமாகப் பேசியுள்ளார் சிம்ரன் என்ற தகவல் தெரியவந்ததும் அந்த ஆச்சர்யமும் காணாமல் போய்விட்டது.
சினிமா உலகில் பணத்துக்குதானே முதலிடம்!

09 அக்டோபர் 2011

மாமனார் கொடுத்த பரிசு!

நடிகை ரம்பாவின் மகள் லான்யாவுக்கு அவரது அண்ணன் வாசு ரூ. 50 லட்சம் மதிப்புள்ள லேண்ட் ரோவர்-ஜாக்குவார் காரை பரிசாகக் கொடுத்து அசத்தியிருக்கிறாராம். ரம்பாவுக்கு என்ன அவ்வளவு பெரிய புள்ளையா இருக்கு என்று நினைக்க வேண்டாம். லான்யா 8 மாதக் குழந்தை.
ஈழத் தமிழர் இந்திரன் பத்மநாதனை திருமணம் செய்து கனடாவில் செட்டிலான ரம்பாவுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் அழகிய பெண் குழந்தை பிறந்தது. அதற்கு லான்யா என்று பெயர் வைத்துள்ளார். சமஸ்கிருதத்தில் லான்யா என்றால் தேவதை என்று பொருளாம்.
குழந்தை நல்லபடியாக பிறந்தால் திருப்பதி கோவிலுக்கு வருவதாக வேண்டிக் கொண்ட ரம்பா, லான்யாவுடன் இந்தியாவுக்கு வந்தார். திருப்பதி உள்பட பல கோவில்களுக்கு சென்று குட்டி தேவதையைத் தந்த இறைவனுக்கு நன்றி தெரிவித்தார்.
ஏற்கனவே குளிருக்குப் பெயர்போன கனடாவில் குளிர்காலம் முடியும் வரை இந்தியாவில் தங்கியிருக்க திட்டமிட்டுள்ளார். அவரது கொலுக், மொலுக் மகளைப் பார்க்க பல திரை நட்சத்திரங்கள் ரம்பா வீட்டுக்கு வந்து செல்கிறார்களாம்.
இந்நிலையில் ரம்பாவின் அண்ணனும், தயாரிப்பாளருமான வாசு ரூ. 50 லட்சம் மதிப்புள்ள லேண்ட் ரோவர்-ஜாக்குவார் காரை 8 மாதக் குழந்தை லான்யாவுக்கு பரிசாகக் கொடுத்துள்ளாராம்.

07 அக்டோபர் 2011

பூச்சியை ருசித்து சாப்பிட்ட அசின்!

நடிகர் சல்மான் கான் அசினிடம் சவால்விட்டு அதில் தோற்றுப்போனார்.
நடிகர் சல்மான் கானும். அசினும் சேர்ந்து ரெடி என்ற சூப்பர்ஹிட் படத்தில் நடித்தனர். அந்த படப்பிடிப்பின்போது சல்மான் அசினிடம் சவால்விட்டார். அந்த சவாலில் இப்போது சல்மான் தோற்றுவிட்டாராம்.
அந்த சுவாரஸ்யமான சவால் பற்றி அசின் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார்.
அது குறித்து அசின் கூறுகையில், "சல்மான் ரெடி படப்பிடிப்பின் போது தான் பாங்காக் வனப்பகுதியில் இருந்து பிடித்து வந்த பூச்சியை வைத்திருந்தார். திடீர் என்று இந்த பூச்சியை நீங்கள் சாப்பிடுங்கள் பார்ப்போம் என்று சவால்விட்டார்.
பொதுவாக பெண்கள் பூச்சிகளைப் பார்த்தாலே ஓடுவார்கள். அதனால் தான் அவர் தைரியமாக சவால்விட்டார். ஆனால் நானோ சிறிதும் பயப்படாமல் அந்தப் பூச்சியை சாப்பிட்டேன். அதைப் பார்த்து அவர் அசந்துவிட்டார். நீங்கள் பூச்சியைப் பார்த்து கத்தி, கூச்சல் போடுவீர்கள் என்று நினைத்தேன் என்றார்.
நான் சல்மான் கானை மதிக்கிறேன். அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால் நான் ஒன்றும் அவரைக் காதலிக்கவில்லை. அவரைக் காதலிக்க வேண்டும் என்ற எண்ணம் கூட எனக்கு வந்ததில்லை. அவர் மீது அளவு கடந்த மரியாதை வைத்துள்ளேன்," என்றார்.

03 அக்டோபர் 2011

முத்தமிட வைத்த நிஷா!

காஜல் அகர்வாலின் தங்கச்சியான நிஷா அகர்வால் இப்போதே படு தெளிவாக இருக்கிறார். ஹீரோக்களுடன் நெருக்கமான நட்பை ஏற்படுத்திக் கொள்வதில் இவர் நல்ல தேர்ச்சியடைந்து வருகிறாராம்.
காஜல் அகர்வாலின் தங்கச்சியான நிஷா அகர்வால்,இஷ்டம் படம் மூலம் தமிழுக்கு வருகிறார். அக்கா வழியில் தமிழில் தனி முத்திரை பதிக்க ஆர்வமாக இருக்கும் இஷா, இஷ்டம் படத்தில் விமலுடன் இணைந்து நடித்து வருகிறார்.
என்னதான் தான் காஜல் அகர்வாலின் தங்கச்சி என்றாலும் அக்காவும் தனக்கு ஒரு போட்டிதான் என்கிறார் இஷா. நடிப்பு என்று வந்து விட்டால் எல்லோருமே போட்டிதான். அந்த வகையில் காஜலும் எனக்குப் போட்டிதான் என்கிறார் இஷா.
சரி மேட்டருக்கு வருவோம், இஷ்டம் படத்தின் ஒரு காட்சியை சென்னை அருகே திரிசூலம் மலையில் வைத்துப் படமாக்கினர். அது ஒரு முத்தக் காட்சி. ஆனால் நிஷா உதட்டோடு உதடு பொருத்தி நடிக்க விமல் ரொம்பவே தயங்கினாராம்.
இதைப் பார்த்த நிஷாதான், ரொம்ப தைரியப்படுத்தி பரவாயில்லை, நடிங்க, முத்தமிடுங்க என்று தெம்பூட்டி விமலை தனது உதட்டில் முத்தமிட வைத்தாராம். இதைப் பார்த்து யூனிட்டே பாராட்டியதாம்.
இதெப்படி இருக்கு...!

29 செப்டம்பர் 2011

நித்யாவிற்கும் தடை!

நடிகை நித்யா மேனனை நேரில் சந்திக்க வந்த பிரபல தயாரிப்பாளரை, நித்யா மேனன் சந்திக்க மறுத்ததால், அவருக்கு நடிக்க தடைவிதித்துள்ளது மலையாள தயாரிப்பாளர்கள் சங்கம். மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை நித்யா மேனன். தமிழில் 180, வெப்பம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் மம்முட்டிக்கு மிக நெருங்கிய நண்பரும், கேரளாவின் முன்னணி தயாரிப்பாளருமான ஆண்டோ ஜோசப், மலையாள படமொன்றில் நடித்துக் கொண்டிருந்த நித்யா மேனனை, புதுப்படம் ஒன்றில் ஒப்பந்தம் செய்வது தொடர்பாக சந்தித்து பேச விரும்பினார். ஆனால் நித்யாவோ, ஆண்டோ ஜோசப்பை சந்திக்க மறுத்துவிட்டார். என்னிடம் பேசுவதற்கு எதுவும் இல்லை. எதுவாக இருந்தாலும் எனது மேனஜரிடம் பேசுங்கள் என்று கூறியுள்ளார். நித்யா‌வின் இந்த பதிலை கேட்ட ஆண்டோ ஜோசப்புக்கு பெரும் அதிர்ச்சியாகிவிட்டது.
உடனே இதுகுறித்து மலையாள தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தார். மூத்த தயாரிப்பாளரை அவமதித்ததற்காக நித்யா மேனனுக்கு தயாரிப்பாளர் சங்கம் நடிக்க தடை விதித்துள்ளது. மேலும் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களிலும் நித்யாவுக்கு நடிக்க தடை விதிக்குமாறு இருமாநில தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளது. இந்த தடை உத்தரவை சங்கத்தின் பொதுச் செயலாளர் சுரேஷ்குமார், பிறப்பித்துள்ளார்.

25 செப்டம்பர் 2011

அப்பாக்களுக்காக ஏங்கிய மகள்கள்!

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும், ஸ்ருதி ஹாசன் நடிக்கும் 3 படப்பிடிப்பிற்கு தங்களது அப்பாக்கள் ரஜினி மற்றும் கமல் வரவலில்லையே என்று அவர்கள் வருத்தம் அடைந்துள்ளனராம்.
ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா தனுஷ் 3 படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். இதில் கதாநாயகனாக அவரது கணவர் தனுஷ் நடிக்கிறார். தனுஷுக்கு ஜோடியாக தனது தோழி ஸ்ருதி ஹாசனை நடிக்க வைத்துள்ளார்.
ஐஸ்வர்யாவும், ஸ்ருதியும் செட்டில் இருப்பதால் அவர்களது தந்தைகள் அதாவது ரஜினியும், கமலும் படப்பிடிப்புக்கு வருவார்கள் அவர்களை ஒன்றாகப் பார்த்துவிடலாம் என்று படக்குழுவினர் ஆர்வமாக உள்ளனர்.
அதேபோல தங்கள் அப்பாக்கள் நிச்சயம் படப்பிடிப்புக்கு வந்து தாங்கள் எப்படி பணிபுரிகிறோம் என்பதைப் பார்ப்பார்கள் என்று ஐஸ்வர்யாவும், ஸ்ருதியும் கூட மிகுந்த எதிர்பார்ப்புடன் தான் உள்ளனர்.
படப்பிடிப்பு துவங்கி இத்தனை நாட்களாகியும் அப்பாக்கள் வராததால் மகள்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.
அட, இதுக்கெல்லாமா வருத்தப்படுவாங்க...!

22 செப்டம்பர் 2011

அவங்களுக்கு பிடித்த உடைதான்!

படத்தில் நடிக்கையில் இயக்குனர் சொல்லும் உடைகளைத் தான் அணிய வேண்டியிருக்கிறது. அதனால் தான் நினைத்தபடி உடைகள் அணிய முடியவில்லை என்று நடிகை தமன்னா கவலை அடைந்துள்ளார்.
இது குறித்து தமன்னா கூறியதாவது,
நான் சிறுபிள்ளையாக இருக்கும் போதே நிறைய படங்கள் பார்த்துள்ளேன். ஒவ்வொரு படத்தில் வரும் கதாபாத்திரங்களோடு என்னை ஒப்பிட்டுப் பார்ப்பேன். கல்லூரிக் கதை என்றால் எனக்கு ரொம்ப இஷ்டம். ஏனென்றால் நான் கல்லூரிக்கு சென்று படித்ததில்லை. நான் நடிக்கும் படத்தில் குறைந்தது ஒரு காட்சியாவது கல்லூரி பின்னணியில் இருக்குமா என்று தான் எதிர்பார்ப்பேன்.
உடைகள் மீது எனக்கு ஆர்வம் அதிகம். கதாநாயகியாக நடிக்கையில் நான் நினைத்த உடைகளை அணிந்து நடிக்க ஆசைப்படுவேன். ஆனால் காட்சி, லைட, கதாபாத்திரத்திற்கு ஏற்ப இயக்குனர் சொல்லும் உடைகளைத் தான் அணிய வேண்டும். நினைத்தபடி உடை அணிய முடியாதது ஏதோ தடைவிதித்தது போன்று இருக்கும். அதனால் வருத்தப்படுவேன்.
ஆனால் ஷூட்டிங் இல்லையென்றால் நான் இஷ்டப்பட்ட உடைகளைத் தான் அணிவேன். எனக்கு லைட் கலர் உடைகள் தான் ரொம்பப் பிடிக்கும் என்றார்.

18 செப்டம்பர் 2011

சோனாவிற்கு மாரடைப்பு!

பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மகனும், தயாரிப்பாளர் மற்றும் பின்னணிப் பாடகருமான எஸ்.பி. சரண் மீது பாலியல் குற்றச்சாட்டுக் கூறியுள்ள கவர்ச்சி நடிகை சோனாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாம். இதனால் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எஸ்.பி.சரண் தன்னிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டார், மானபங்கம் செய்தார் என்பது உள்ளிட்ட பாலியல் குற்றச்சாட்டுக்களை சோனா கூறியுள்ளார். இதையடுத்து அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பதட்டமாக இருந்ததால் சோனாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாம். இதையடுத்து அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் லேசான மாரடைப்பு ஏற்பட்டதை கண்டுபிடித்தனராம். இதையடுத்து அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறதாம்.

14 செப்டம்பர் 2011

நிகிதாவின் தடையை உடை!

தர்ஷன் குடும்பப் பிரச்சினையைக் காரணம் காட்டி கன்னட சினிமாவில் 3 ஆண்டுகள் நடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ள நிகிதாவுக்கு கன்னட, தெலுங்கு சினிமா உலகில் ஆதரவு பெருகுகிறது.
நடிகர் தர்ஷனுடன் நிகிதா தகாத உறவு வைத்திருப்பதாக அவரது மனைவி விஜயலட்சுமி குற்றம் சாட்டினார்.
இதனால் தர்ஷன் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து நிகிதா மீத தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் தஷ்ஷனுடன் தவறான தொடர்பு இல்லை என்று நிகிதா மறுத்துள்ளார்.
தடை காரணமாக நிகிதாவுக்கு படங்களில் நடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அவர் கைவசம் தற்போது 3 கன்னட படங்கள் உள்ளன.
பெருகும் ஆதரவு:
தயாரிப்பாளர்களின் இந்தத் தடையை கன்னடப் பட உலக இயக்குநர்கள், பிலிம்சேம்பர் நிர்வாகிகள் மற்றும் நடிகர்கள் எதிர்த்துள்ளனர்.
நிகிதாவுக்கு விதிக்கப்பட்ட தடை அநீதியானது, தேவையற்றது, சட்டவிரோதமானது என கூறியுள்ளனர்.
கன்னட திரையுலகின் மற்ற பல சங்கங்களும் இந்த முடிவைக் கண்டித்துள்ளன.
நடிகை தாரா:
சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற நடிகை தாரா கூறும் போது, "நிகிதா மீது கடும் நடவடிக்கை எடுத்து இருப்பது துரதிர்ஷ்டவசமானது. இப்பிரச்சினை குறித்து தீவிர ஆலோசனை நடத்தாமல் தடை விதித்துள்ளனர். இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும்," என்றார்.
கன்னட இயக்குனர்கள் சங்கமும் நிகிதாவுக்கு தடை விதித்ததை எதிர்த்துள்ளது.
அச்சங்கத்தின் தலைவர் எம்.எஸ்.ரமேஷ் கூறுகையில், "நிகிதாவுக்கு அளிக்கப்பட்ட தண்டனை அநீதியானது, தேவையற்றது. தடை விதிக்கும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்படவில்லை. யாரோ சிலரின் தனிப்பட்ட விரோதம் இதில் தெரிகிறது," என்றார்.
நிகிதா நடிக்கும் 'காட்டான் பெட்' படத்தை இயக்கி வரும் ஓம்பிரகாஷ்ராவ் கூறும் போது, "தயாரிப்பாளர் சங்கத்தின் தடை உத்தரவுக்கு நான் அடிபணிய மாட்டேன். நிகிதாவை வைத்து படத்தை இயக்குவேன்," என்றார்.
ஜெயமாலா எதிர்ப்பு:
தேசிய விருது பெற்ற பிரபல இயக்குனர்கள் கிரிஷ்கேசர வல்லி, சுரேஷ், நடிகை ஜெயமாலா, கன்னட தயாரிப்பாளர் சங்க முன்னாள் தலைவர் சந்தேஷ் நாகராஜ் ஆகியோரும் நிகிதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தனிப்பட்ட குடும்பப் பிரச்சினைக்காக ஒரு பிரபல நடிகையின் திரைவாழ்க்கையை முடக்குவதை அனுமதிக்க முடியாது என நடிகை ஜெயமாலா தெரிவித்துள்ளார்.

11 செப்டம்பர் 2011

நடிப்புக்கு இலக்கணம் காந்திமதி!

அடியே! அறிவு கெட்டவளே; மானம் கெட்டவளே; ரோசம் கெட்டவளே; வெட்கம் கெட்டவளே;....... உடம்பே கண்டம் துண்டமா வெட்டி உப்பு கண்டம் போட்டுருவேன்... ஏண்டி இந்த குருவம்மா அரும்பாடுபட்டு, கஷ்டப்பட்டு கோழி வளர்த்தா.... அதே வக்கனையா திருடி, வாய்க்கு ருசியா திங்க தெரியுதாடி.... அந்த வாயே கிழிச்சா..... அடியே அளந்து பேசு நாக்கை அறுத்துபுடுவேன் அறுத்து..... இது காந்திமதி 16 வயதினிலே படத்தில் படபடவென பேசும் வசனம்.
இதே போல் பாரதிராஜா இயக்கத்தில் அமைத்த இன்னொரு படமான மண்வாசனை படத்தில் பாட்டி வேஷத்தில் பழமொழிகள் சொல்லி நடிப்பில் சக்கபோடு போட்டிருப்பார். முத்து படத்தில் ரஜினியோடு காந்திமதி செய்யும் ரொமாண்டிக் கலாட்டா அனைவரும் ரசிக்கக் கூடியது.
இதயக் கோளாறு, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காந்திமதி வடபழனியில் உள்ள தனது வீட்டில் (09.09.2011) வெள்ளிக்கிழமை காலமானார். காந்திமதியின் உடல் கண்ணம்மா பேட்டை மின் மயானத்தில் வெள்ளிக்கிழமை மாலை தகனம் செய்யப்பட்டது.
திருமணம் செய்து கொள்ளாத காந்திமதி, தன் தம்பி, தங்கை மகன்களான பாலசுப்பிரமணியன், தீனதயாளன் ஆகியோரை தத்து எடுத்து வளர்த்து வந்தார்.
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த காந்திமதி தொடக்கத்தில் நாடகங்களில் நடித்து வந்தார். எழுத்தாளர் ஜெயகாந்தனின் கதையான ‘யாருக்காக அழுதான்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி ஆகியோர் நடித்த பெரும்பாலான படங்களில் குணச்சித்திர வேடங்கள் ஏற்று புகழ் பெற்றார்.
பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த "16 வயதினிலே', "கிழக்கே போகும் ரயில்', "மண்வாசனை' உள்ளிட்ட படங்கள் அவரது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தின. 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
எம்.ஜி.ஆர்.,சிவாஜி, ஜெமினி கணேசன் உள்ளிட்ட அந்தக் கால சூப்பர் ஸ்டார்கள் முதல் ரஜினி, கமல், விஜயகாந்த் உள்ளிட்ட இந்தக் கால நடிகர்கள் வரை அனைவருடனும் நடித்த பெருமைக்குரியவர் காந்திமதி.
நடிப்பில் நகைச்சுவை, வில்லத்தனம், குணச்சித்திரம் என எந்தக் கேரக்டர் கொடுத்தாலும் அசத்துவார், அது மட்டும் இல்லை... அம்மாவாக நடித்தவர்களில் அம்மாவாகவே எல்லோரிடமும் அன்பை பொழிந்தவர் காந்திமதியம்மா என்று சொல்கிறார்கள் திரை உலகினர்.

06 செப்டம்பர் 2011

ரீமா சென் திருமணம்!

நடிகை ரீமாசென், டெல்லியை சேர்ந்த ஓட்டல் அதிபரை காதல் திருமணம் செய்கிறார். இவர்கள் திருமணம் 2012-ல் நடக்கிறது. இதனை ரீமா சென்னே அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்தார்.
'மின்னலே' படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகமானவர், ரீமாசென். செல்லமே, பகவதி, தூள், கிரி, ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். இவருக்கும், டெல்லியில் ஓட்டல் நடத்தி வரும் ஷிவ்கரன்சிங் என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.
இருவரும் கடந்த 2 வருடங்களாக சேர்ந்து சுற்றி வருகிறார்கள். நட்சத்திர ஓட்டல்களில் நடைபெறும் விருந்துகளுக்கு ஜோடியாக சென்று வருகிறார்கள். ஷிவ்கரன் சிங்கை தனது நண்பர் என்று ரீமாசென் மற்றவர்களிடம் அறிமுகம் செய்து வந்தார்.
இப்போது தனது காதலை பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், "நானும், ஷிவ்கரன்சிங்கும் முதலில் நண்பர்களாகத்தான் பழகி வந்தோம். நாளடைவில் எங்கள் நட்பு, காதலாக மாறிவிட்டது. என்னை அவரும், அவரை நானும் மிக நன்றாக புரிந்து கொண்டோம்.
அழகான ஒரு பஞ்சாபி இளைஞனை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன். என் ஆசை நிறைவேறி இருக்கிறது. ஷிவ்கரன் சின் கிடைத்தது, என் அதிர்ஷ்டம்.
பெற்றோர் சம்மதத்துடன்...
எங்கள் காதலை இரண்டு பேரின் பெற்றோர்களும் ஏற்றுக்கொண்டார்கள். அதைத்தொடர்ந்து நானும், ஷிவ்கரன்சிங்கும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருக்கிறோம். எங்கள் திருமணத்துக்கு பெற்றோர் சம்மதமும் கிடைத்து விட்டது.
அடுத்த வருடம் ஆரம்பத்தில் எங்கள் திருமணம் நடைபெறும். திருமணத்துக்குப்பின் நடிப்பேனா, மாட்டேனா என்பதை முடிவு செய்யவில்லை. ஆனால், என் கணவருடன் டெல்லியில் குடியேறி விடுவேன். டெல்லி, எனக்கு மிகவும் பிடித்த நகரம்,'' என்றார்.

03 செப்டம்பர் 2011

காதலை அழித்தாலும் இது மட்டும் அழியல்லையே!

காதலன் பெயரை முதுகில் பச்சை குத்திய நடிகை திவ்யா, இப்போது காதலில் கசமுசா ஏற்பட்டுள்ளதால் பச்சையை அழிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறாராம். குத்து ரம்யா என்று அழைக்கப்படும் நடிகை திவ்யா, வெளிநாட்டு தொழில் அதிபர் ஒருவரை காதலித்து வந்தார். காதல் விஷயத்தில் இந்த ஜோடி ரகசியம் காத்து வந்த இந்த ஜோடி, சமீபத்தில் பெங்களூரில் நடந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் ஜோடியாக வந்த போது ரகசியம் அம்பலமானது.
ரமேஷ் என்ற தனது காதலரின் பெயரை நடிகை திவ்யா, தன் முதுகில் பச்சை குத்தியிருப்பதுடன். ரமேஷை என் காதலராக பெற்றது இறைவன் கொடுத்த வரம் என்று ட்விட்டரில் கூறியிருந்தார். இந்நிலையில் சமீப காலமாக இந்தக் காதலில் பிரச்னை முளைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. முன்பெல்லாம் திவ்யாவை அடிக்கடி செல்போனில் தொடர்பு கொள்ளும் ரமேஷ், இப்போதெல்லாம் பேசுவதே இல்லையாம். இதனால் கோபமடைந்த திவ்யா, முதுகில் குத்திய பச்சையை அழிக்க முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறாராம்.

31 ஆகஸ்ட் 2011

மீண்டும் சில்க் ஸ்மிதா!

80களில் தென்னிந்தியத் திரையுலகைக் கலக்கிய கவர்ச்சி நாயகி சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து உருவாகி வரும் டர்ட்டி பிக்சர்ஸ் படத்தின் நாயகி வித்யா பாலனின் படு ஹாட்டான படங்கள் வெளியாகியுள்ளன.
சில்க்கின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகி வரும் படம் டர்ட்டி பிக்சர்ஸ். இதில் சில்க் வேடத்தில் வித்யா பாலன் நடிக்கிறார். நஸிருதீன் ஷா உள்ளிட்டோரும் படத்தில் உள்ளனர்.
இதில் வித்யா பாலன் படு கவர்ச்சிகரமாக பல காட்சிகளில் நடித்துள்ளார். அந்த புகைப்படங்களும், சூடான டிரெய்லரும் தற்போது வெளியாகியுள்ளது.
இதில் 80களில் உருவான திரைப்படங்களின் பாணியில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. சில்க் போன்றே கவர்ச்சிகரமான காஸ்ட்யூம்களில் படு கவர்ச்சியாக காட்சியளிக்கிறார் வித்யா பாலன்.
இந்தப் படங்களைப் பார்க்கும்போது சில்க் வேடத்தில் நடிக்க பொருத்தமில்லாதவர் வித்யா என்ற வாதம் அடிபட்டுப் போகும் என்றே தெரிகிறது.

26 ஆகஸ்ட் 2011

திஷாவின் கவர்ச்சிக் கலக்கல்.

தமிழ்ப்படம் பெரிய வெற்றிப்படமாகியும்கூட அந்தப் படத்தின் நாயகி திஷா பாண்டேக்கு நிறைய வாய்ப்புகள் அமையவில்லை. அந்தக் குறையை தீர்த்துவிடும் என அவர் பெரிதும் நம்புவது மயங்கினேன் தயங்கினேன் படத்தைத்தான்.
திருமாவளவனின் ஆசியுடன் தாய்மண் திரையகம் வழங்கும் படம் என கடந்த ஆண்டு பூஜை போடப்பட்ட இந்தப் படத்தின் நாயகன் நிதின் சத்யா.
எஸ்டி வேந்தன் இயக்கும் இந்தப் படத்தில் திஷா பாண்டேயின் கவர்ச்சிதான் ஹைலைட் என்கிறார்கள். போதாக்குறைக்கு தேஜாஸ்ரீயும் படத்தில் உண்டு. போதும் போதும் எனும் அளவுக்கு கவர்ச்சியில் கலக்கியிருக்கிறார்களாம்.
கால் டாக்ஸி டிரைவரான நிதின் சத்யா, டெலிபோன் ஆபரேட்டரான திஷா மீது காதலாவதுதான் கதை. இதில் தமிழ் சினிமாவுக்கே உரிய அத்தனை மசாவலா சமாச்சாரங்களையும் சேர்த்து படமாக்கியிருக்கிறாராம் வேந்தன்.
தமிழ்ப்படம் படத்துக்கு இசையமைத்த கண்ணன்தான் இந்தப் படத்துக்கும் இசை. ஜான் மக்கள் தொடர்பை கவனிக்க சுடர் முருகையா, ராணி ஜீவானந்தனம், எஸ்டி வேந்தன் மற்றும் மகாதேவன் தயாரிக்கிறார்கள்.
படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

24 ஆகஸ்ட் 2011

ஒரு பாட்டுக்கு ஒரு கோடி!

ஒஸ்தி படத்தில் சிம்புவுடன் குத்தாட்டம் போட நடிகை கத்ரீனா கைஃபுக்கு ரூ 1 கோடி சம்பளம் பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த வேடத்தில் நடிக்க நயன்தாராவை இதே தொகைக்கு அணுகி பேசிப் பார்த்தார் இயக்குநர் தரணி. சிம்புவும் தனது பழைய தொடர்புகளை தூதுவிட்டுப் பார்த்தாராம். நயன்தாரா சம்மதிக்காத நிலையில், வேறு சில டாப் நடிகைகளை அணுகிப் பார்த்தனர்.
ஆனால் யாரும் சரியாக வராத நிலையில், கத்ரீனா கைஃபிடம் பேசினர். அவர் 1 கோடி ரூபாய் சம்பளம் கேட்க, உடனே ஓகே சொல்லுமாறு நாயகன் சிம்பு கூறிவிட்டாராம்.
இன்னொரு பக்கம் ரஜினியின் ராணா நாயகி தீபிகா படுகோனேவிடமும் இதே ஆஃபரை வைத்துள்ளனர். அவர் இன்னும் எந்த பதிலும் சொல்லாததால், கத்ரீனாவையே ஒப்பந்தம் செய்துவிடலாம் என்ற முடிவில் உள்ளனராம்.
ஒரு குத்தாட்டப் பாட்டுக்கு தமிழில் அதிக சம்பளம் வாங்கியவர் என்ற பெருமை இதுவரை ஸ்ரேயாவுக்குதான் இருந்தது. அதை தகர்த்துவிட்டார் கத்ரீனா இப்போது!

19 ஆகஸ்ட் 2011

சினேகாவின் கவர்ச்சி!

குடும்ப குத்துவிளக்கு என்ற இமேஜை இன்று வரை பாதுகாத்து வைத்திருக்கும் சினேகா முதல் முறையாக கொஞ்சம் கவர்ச்சி காட்டி நடித்திருக்கிறார்.
ஆனால் இது சினிமாவுக்கு அல்ல, ஒரு அழகு சாதனப் பொருள் விளம்பரத்துக்காக.
சமீபத்தில் இந்த விளம்பரப் படத்துக்கான ஷூட்டிங் ஏவிஎம்மில் நடந்தபோது, சினேகாவைப் பார்த்தவர்கள் பிரமித்து நின்றார்கள்.
வெளிர் ரோஜா நிற லோ கட் சிங்கிள் பீஸ் மிடியில், அசத்தலாக போஸ் கொடுத்தார் சினேகா. இந்த விளம்பரம் மலேஷியாவைச் சேர்ந்த நிஷா அழகு சாதனப் பொருள்களுக்காக எடுக்கப்பட்டது.
இந்த அழகு சாதனத்தை சென்னையில் அறிமுகப்படுத்தியதே சினேகாதான் என்பது குறிப்பிடத்தக்கது.
விரைவில் இந்திய தொலைக்காட்சிகளில், சினிமாவில் கூட பார்த்திராத அழகிய கவர்ச்சி உடையில் 'சினேகா தரிசனம்' காணலாம்.

16 ஆகஸ்ட் 2011

விக்ரமை எனக்கு பிடித்துவிட்டது!

நான் ஜோடியாக நடித்த இரண்டு ஹீரோக்கள் விக்ரம் மற்றும் விஷாலின் படங்கள் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்றார் நடிகை ஸ்ரேயா.
சிவாஜியில் ரஜினியுடன் நடித்த பிறகு, மற்ற முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஒரு ரவுண்ட் நடித்து முடித்துவிட்டார் ஸ்ரேயா. அவர்களில் விக்ரம் மற்றும் விஷாலும் உண்டு.
விகரமுடன் கந்தசாமியில் நடித்தார். விஷாலுடன் தோரணையில் ஜோடி சேர்ந்தார்.
இப்போது ஸ்ரேயா நடித்த ரௌத்திரம் ஓடிக் கொண்டுள்ளது. இந்தப் படம் தொடர்பான ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஸ்ரேயா, தமிழில் சமீபத்தில் அவர் பார்த்த படங்கள் குறித்துப் பேசினார்.
அவர் கூறுகையில், "சமீபத்தில் விக்ரம் நடித்த தெய்வத் திருமகள் படம் பார்த்து பிரமித்துப் போனேன். பிரமாதமாக நடித்திருந்தார். கந்தசாமி படத்தில் விக்ரமுடன் நடித்த அனுபவம் எனக்கு உண்டு. ஆனால் தெய்வத் திருமகள் அவரை இன்னொரு உயர்ந்த இடத்துக்கு கொண்டு போய்விட்டது.
அதில் அவரது கிருஷ்ணா கேரக்டர் அற்புதமாக இருந்தது. அவரை நான் காதலிக்கத் துவங்கி விட்டேன்.
நான் பிரமித்த இன்னொரு ஹீரோ விஷால். அவர் நடித்த அவன் இவன் படம் எனக்கு ரொம்பப் பிடித்துவிட்டது. அவருக்கு நிச்சயம் விருது கிடைக்கும். அந்த அளவு அற்புதமாக நடித்திருந்தார்.
என்னுடைய இன்னொரு ஹீரோ ஜீவா நடித்த கோ படமும் பார்த்தேன். பிரமாதமாக இருந்தது. ஜீவா அசத்தலாக நடித்திருந்தார்", என்றார்.

13 ஆகஸ்ட் 2011

உதட்டோடு உதடு சேர்க்க மறுத்த நாயகன்!

அஜ்மல்-அபர்ணா பாஜ்பாய் நடிக்க, பிரபுராஜ சோழன் டைரக்டு செய்து வரும் படம், `கருப்பம்பட்டி.' இந்த படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. இறுதிக்கட்ட காட்சிகள் பழனியில் படமாக்கப்பட்டன.
காட்சிப்படி, அஜ்மல் தன் காதலை சொல்ல-அபர்ணாவும் ஏற்றுக்கொள்கிறார். அதற்கு பரிசாக அஜ்மல் உதட்டுடன் உதடு சேர்த்து முத்தம் தர வேண்டும். கதாநாயகி அபர்ணாவிடம் டைரக்டர் காட்சியை விவரிக்க, அதன் முக்கியத்துவம் கருதி அபர்ணா நடிக்க சம்மதித்தார்.
அஜ்மலிடம் காட்சியை சொன்னதும், ``உதட்டுடன் உதடு சேர்த்து முத்த காட்சியில் நடிக்க மாட்டேன்'' என்றார். இதனால் படப்பிடிப்பு குழுவினர் மத்தியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது. கதாநாயகிதான் மறுப்பார் என்று எதிர்பார்த்த டைரக்டருக்கு, அஜ்மல் மறுத்தது ஏமாற்றத்தை அளித்தது.
உங்களிடம் கதை சொல்லும்போது கூட இந்த காட்சியை பற்றி விவரித்து இருந்தேனே'' என்று டைரக்டர் வற்புறுத்தி கேட்டும், அஜ்மல் பிடிவாதமாக நடிக்க மறுத்தார்.
இதனால் 2 மணி நேரம் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தயாரிப்பாளர் சுந்தர் கே கதாநாயகன் அஜ்மல், டைரக்டர் பிரபுராஜ சோழன் ஆகிய இருவரையும் சமாதானப் படுத்தினார்.
அதன்பிறகு உதட்டு முத்த காட்சி மாற்றப்பட்டு, கன்னத்தில் முத்தமிடுவது போல் படமாக்கப்பட்டது.
முத்த காட்சியில் நடிக்க மறுத்தது பற்றி அஜ்மலிடம் கேட்டபோது,
நான் சினிமா நடிகர் ஆவதை என் பெற்றோர்கள் விரும்பவில்லை. அவர்கள் விருப்பப்படி ரஷியாவில் டாக்டருக்கு படித்து முடித்து, `டிகிரி'யை அவர்களிடம் கொடுத்துவிட்டு, நடிப்பு துறைக்கு வந்தேன். அப்போது என் பெற்றோர்கள் சில நிபந்தனைகளை எனக்கு விதித்தார்கள்.
நடிகைகளுக்கு முத்தம் கொடுத்து நடிக்கக்கூடாது. விரசமான காட்சிகளில் நடிக்கக்கூடாது. இரட்டை அர்த்த வசனம் பேசக்கூடாது'' என்று அவர்கள் கேட்டுக்கொண்டபடி, இன்று வரை உறுதியுடன் இருந்து வருகிறேன். நான் உதட்டுடன் உதடு சேர்த்து முத்தம் கொடுத்து நடித்தால், வீட்டில் சேர்க்க மாட்டார்கள்’’என்று கூறினார்.

12 ஆகஸ்ட் 2011

இம்ரானை அறைந்த கத்ரீனா!

பாலிவுட் நடிகர் இம்ரான் கானை சக நடிகை கத்ரீனா கைப் பளார் பளான கன்னத்தில் அறைந்துள்ளார். அதுவும் 16 தடவை!
உடனே கற்பனையைத் தட்டிவிடாதீங்க. செப்டம்பர் 9-ம் தேதி வெளியாகும் பாலிவுட் படம் 'மேரே பிரதர் கி துல்ஹன்'. அந்த படத்தில் ஆமீர் கான் மருமகன் இம்ரான் கான், கத்ரீனா கைப், பாகிஸ்தானிய நடிகர் அலி ஜாபர் ஆகியோர் நடிக்கின்றனர். அதில் ஒரு காட்சியில் கத்ரீனா இம்ரானை அறைய வேண்டும்.
கத்ரீனாவுக்கு இம்ரான் மேல் என்ன கடுப்போ என்னவோ தெரியவில்லை. 16 டேக் வாங்கியிருக்கிறார். கன்னம் சிவக்க, சிவக்க அறை வாங்கியிருக்கிறார் இம்ரான்.
16 டேக்குக்கு பிறகு இயக்குனர் ஓகே சொல்ல அன்றைய படபிடிப்பு முடிந்தது.
மறுநாள் படபிடிப்புக்கு வந்த இம்ரானுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. செட்டில் நுழைந்ததும், நுழையாததுமாய் நேற்று எடுத்த காட்சியில் கத்ரீனாவுக்கு திருப்தி இல்லையாம். அதனால் இன்றும் கன்னதில் அறையும் காட்சி தான் என்று சொல்லியிருக்கின்றனர். பாவம் இம்ரான் என்ன சொல்ல முடியும், அமைதியாக அறை வாங்கினார்.
காதல் படங்களுக்குப் புகழ்பெற்ற யாஷ் ராஜ் பிலிம்ஸ்-ன் மேரே பிரதர் கி துல்ஹன் ஒரு முக்கோணக் காதல் கதை. சகோதரனுக்காக பெண் பார்க்கச் சென்றவன் அந்த பெண் மீது காதல் கொள்கிறான். இறுதியில் அந்த பெண் யாருக்கு என்பதுதான் கதை!