
இதற்கான காரணம் குறித்து அவர் கூறியிருப்பதாவது, நிறைய வரன்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் வரும் வரன்கள் எல்லாம், திருமணத்திற்கு பின்பு சினிமாவில் நடிக்க கூடாது என்று நிபந்தனை விதிக்கிறார்கள். திருமணத்திற்கு பின்ன நல்ல வாழ்க்கை அமைந்தால் நடிக்காமல் இருக்கலாம், ஆனால் அப்படி ஒரு வாழ்க்கை அமையவில்லை என்றால் என்ன செய்வது. என்னை பெண் பார்க்க வருபவர்களிடம் பரந்த மனப்பான்மை இல்லை. அப்படி இல்லாதவர்களிடம் நான் எப்படி குடும்பம் நடத்த முடியும்.
சினிமாவிற்கு முன்பு வரை சினிமாவை பற்றி நிறைய பயம் இருந்தது. ஆனால் சினிமாவிற்கு வந்தபின்னர், அதில் ஒரு நம்பிக்கையும், ஒரு பக்தியும் ஏற்பட்டது. சினிமாவை தேடி நான் வரவில்லை. சினிமா தான் என்னை தேடி வந்தது. சினிமாவை ரொம்பவே மதிக்கிறேன். அதனால், திருமணத்துக்குப்பின் நடிக்க மாட்டேன் என்று ஒருபோதும் சொல்ல மாட்டேன். 25 வருடங்களாக நான் சினிமாவில் இருக்க வேண்டும் என்று எழுதப்பட்டிருக்கிறது.
நான் யாரையும் காதலிக்கவில்லை என்று பொய் சொல்ல மாட்டேன். காதலித்து இருக்கிறேன். அது, கல்யாணம் வரை போகவில்லை. காதலித்துதான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். என்னை புரிந்துகொண்டு, நீ எப்பவும் போல நடிக்கலாம் என்று சொல்கிற கணவர் தான் வரவேண்டும். அப்படி ஒருவருக்காக காத்திருக்கிறேன் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக