இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற திரை நட்சத்திரங்களில் ஒருவரான ஷாருக்கான் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டதற்கு அந்நாட்டு ராஜ்ய உயர் அதிகாரிகள் மன்னிப்பு கேட்டுள்ளனர்.அமெரிக்க வெளியுறவு துணை செயலர் நிஷா பிஸ்வால், அமெரிக்காவின் டெல்லியில் இருக்கும் இந்தியத் தூதர் ரிச்சர்ட் வர்மா ஆகியோர் இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்திருக்கின்றனர்.அமெரிக்காவில் நுழையும் போது பாலிவுட் நட்சத்திரமான ஷாருக்கான் விசாரணைக்கு உட்படுத்தப்படுவது இது மூன்றாவது முறையாகும்.பாதுகாப்பின் அவசியத்தை புரிந்து கொண்டு மதிப்பதாக தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கும் ஷாருக்கான், ஒவ்வொரு முறையும் குடியேற்ற துறை தடுத்து வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று தெரிவித்திருக்கிறார்.முன்னதாக, ஷாருக்கானின் முஸ்லிம் பெயரால் அவர் தனிமைப்படுத்தப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களை அமெரிக்கா மறுத்துள்ளது.
நாம் அன்பு செலுத்தும் உள்ளங்கள் நல்லுள்ளங்களாக இருப்பின், துன்பங்களில் கூட இன்பங்களை காணலாம்.
12 ஆகஸ்ட் 2016
22 ஜூலை 2016
மகனை சுட்டுக்கொல்லுமாறு குவான்டீலின் தந்தை குமுறல்!
சகோதரியை ஆணவக்கொலை செய்த தன் மகனை சுட்டு கொல்ல வேண்டும் என்று பாகிஸ்தானின் சர்ச்சைக்குரிய பிரபல மாடல் அழகி குவான்டீல் பலூச்சின் தந்தை கூறியுள்ளார். பாகிஸ்தானில் செலிபிரிட்டி மாடல் அழகியாக வலம் வந்தவர் குவாண்டீல் பலூச். இவர் கடந்த 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது பாகிஸ்தான் அணி இந்தியாவை தோற்கடித்தால் நிர்வாண நடனம் ஆடத்தயாராக இருப்பதாக கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார்.தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சியான படங்களையும், வீடியோக்களையும் பகிர்ந்து சலசலப்பை உருவாக்கி வந்தார். மேலும், பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டனாக இருந்த ஷாஹித் அப்ரிதியைத் திட்டுவது, பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிப்பது என தொடர்ந்து செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் ஜூலை 14 ஆம் தேதி அவரது வீட்டில் இறந்து கிடந்தார். இது குறித்து போலீசார் விசாரித்ததில், குடும்பத்திற்கு அவமானம் ஏற்படுத்தும் விதத்தில் நடந்துகொண்டதாக அவரது அண்ணன் வாசிம், பலூச்சை ஆணவக் கொலை செய்தது தெரியவந்தது. தற்போது வாசிம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கொலை செய்வதற்கு முன்பு அவருக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டதாகவும், இதனால் தான்தான் கொலை செய்தேன் என்று தனது தங்கைக்குத் தெரியாது என்றும் அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.இந்நிலையில் குவாண்டீலின் தந்தை அன்வர் ஆசிம், சகோதரியை ஆணவக்கொலை செய்த தன் மகனை சுட்டுக்கொல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில் "அவனை பார்த்தவுடன் சுட்டுக்கொல்ல வேண்டும். எங்களுக்கு போதை மருந்தை கொடுத்துவிட்டு, என் மகளை கொலை செய்து விட்டான். அவளை கழுத்தை நெரித்த போது எங்களை கூப்பிட்டு இருப்பாள் எங்களுக்கு கேட்கவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
16 ஜூலை 2016
பாகிஸ்தானின் பிரபல மொடல் அழகி கொலை!
பாகிஸ்தானின் பிரபல மாடல் மற்றும் சோஷியல் மீடியா பிரபலமுமான குவான்டீல் பலோச், அவரது சொந்த சகோதரனால் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார். அவரின், நடவடிக்கையால் அதிருப்தியடைந்த சகோதரனால், குவான்டீல் 'கவுரவ கொலை' செய்யப்பட்டதாக தெரிகிறது. சோஷியல் மீடியாவான பேஸ்புக் உள்ளிட்டவற்றில் எதிர் கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு அவ்வப்போது பரபரப்பை கிளப்பி வந்தவர் குவான்டீல். மாடல் நடிகையாகவும் பிரபலமானவர்.கடந்த வரும் நடைபெற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியாவை பாகிஸ்தான் வென்றால், நிர்வாணமாக ஓட தயார் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தியவர் இவர். ஆனால், இந்தியா அந்த போட்டியில் வென்றதால், பல ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில், முல்தானில் பெற்றோர் வசித்து வருவதால் ரம்ஜான் கொண்டாக அங்கு சென்றிருந்தார் குவான்டீல். நேற்றிரவு அவர் நன்கு தூங்கிக் கொண்டிருந்த நிலையில் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார் சகோதரர் வசீம். இன்று காலைதான் இதுகுறித்து தெரியவந்தது. போலீசார் தலைமறைவாக உள்ள வசீமை தேடி வருகிறார்கள். ஒரு பெண்ணாக இருந்து கொண்டு குவான்டீல் இதுபோன்று நடந்து கொள்ளக்கூடாது என்று வசீம் பலமுறை எச்சரித்ததாகவும், அதை குவான்டீல் புறம் தள்ளியதால் 'கவுரவ கொலை' செய்யப்பட்டுள்ளதாகவும், பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
26 மே 2016
சிம்பு நயன்தாரா நடிப்பில் இது நம்ம ஆளு!
இது நம்ம ஆளு |
16 மே 2016
நிச்சயமாக இது வித்தியாசமான தேர்தல்-ரஜினிகாந்த்
நிச்சயமாக இது வித்தியாசமான தேர்தல்தான் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார். தமிழகத்தில் 232 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இன்று காலை தொடங்கியது. தஞ்சாவூர், அரவக்குறிச்சிக்கு மட்டும் வரும் 23-ம் தேதி தேர்தல் நடக்கவிருக்கிறது. நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் முதல் ஆளாக வாக்குப்பதிவு செய்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அனைவரும் தங்களது கடமையை உணர்ந்து வாக்களிக்க வேண்டும். அது நமது கடமை. நிச்சயமாக இம்முறை வித்தியாசமான தேர்தல் தான்," என்று தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து பணம் பட்டுவாடா குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, "அது குறித்து கருத்துக்கூற விரும்பவில்லை" என்றார் ரஜினி.
05 பிப்ரவரி 2016
காதுக்குள் வாழ்க்கை நடத்திய எறும்புகள்(காணொளி)
இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றான குஜராத்தில் வாழ்ந்து வரும் பன்னிரண்டு வயது சிறுமி ஒருவரின் காதுக்குள் எறும்புகள் குடித்தனம் நடத்தி வந்தமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்தச் சிறுமியின் காதுக்குள் இருந்து ஆயிரம் வரையான எறும்புகள் மருத்துவர்களால் வெளியே எடுக்கப்பட்டுள்ளது.அதன் காணொளியை இங்கே காணலாம்.
11 ஜனவரி 2016
பாரதிராஜாவின் கனவை நனவாக்குகிறார் பாலா!
‘என் வாழ்க்கைக்கு அர்த்தம் தரப்போற விஷயம் அது மட்டும்தான். நானும் இளையராஜாவும் மீண்டும் இணையப் போறோம். சேதுபதிக் கிழவன் மாதிரி நானே நடிக்கிறேன். போலீஸ்காரன் வேஷத்தில் சேரன் நடிக்கிறார். ரத்னகுமார் வசனம் எழுதுகிறார். ‘குற்றப் பரம்பரை’ படம் எடுக்காம என் திரையுலக வாழ்க்கை நிறைவு பெறாது. பிரிட்டிஷ் காலத்துக் கதை. மண்ணைப் பிழிஞ்சு, மனசைக் கரைச்சு செய்திருக்கேன்!’ என்று 2007-ல் வார இதழ் ஒன்றுக்குப் பேட்டி அளித்தார் இயக்குநர் பாரதிராஜா.
இந்நிலையில், பாரதிராஜாவின் கனவுப்படத்தை இயக்க முன் வந்துள்ளார் இயக்குநர் பாலா. இதற்காக ஒரு பெரிய நடிகர் பட்டாளத்தை அவர் ஒப்பந்தம் செய்துள்ளார்.
விஷால், ஆர்யா, அதர்வா, ராணா, அரவிந்த் சாமி ஆகியோர் பாலாவின் இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இந்தக் கூட்டணியில் மனிஷா கொய்ராலாவும் இணைந்துள்ளார் என்று புதிய தகவல் கிடைத்துள்ளது. மேலும் ஓர் இளம் நடிகை இந்தப் படத்தில் நடிக்க உள்ளார்.
பாரதிராஜாவின் கனவுப் படம் என்று கூறப்படும் குற்றப் பரம்பரை கதையை இயக்குநர் பாலா எப்படி கையாளப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பு இப்போதிருந்தே உருவாகியுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)