என் தங்கை நிஷாவுக்குத்தான் உடனடியாக திருமணம் செய்யப் போகிறோம். எனக்கு இன்னும் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகுதான் திருமணம் என்று கூறியுள்ளார் காஜல் அகர்வால்.நடிகை காஜல்அகர்வால் புதிய படங்களில் நடிக்க மறுப்பதாகவும், சினிமாவை விட்டு விலகுவதாகவும் தெலுங்கு திரையுலகில் கடந்த வாரம் பரபரப்பு பேச்சு நிலவியது.இந்த பேச்சு, ஹாட் நியூஸாக தெலுங்கு மீடியாவில் வலம் வந்தது.அதற்கேற்ப, காஜலும் சில தினங்களாக மவுனம் காத்தார்.தமிழில் ஜில்லா என்ற படம் மட்டுமே அவர் கைவசம் உள்ளது. தெலுங்கில் அவர் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை.இந்த நிலையில் இன்று தன் திருமண செய்தி, படங்களில் நடிக்காதது பற்றியெல்லாம் விளக்கமாகக் கூறியுள்ளார் அவரது செய்தித் தொடர்பாளர்.அதில், "காஜல்அகர்வால் உடனடியாக திருமணம் செய்து கொள்ள மாட்டார். தங்கை நிஷா அகர்வாலுக்குதான் இப்போது திருமணம் நடக்கிறது.அந்த திருமண வேலைகளில் காஜல்அகர்வால் பிஸியாக இருக்கிறார்.இப்போது ஜில்லாவில் நடித்து வரும் காஜல்,அடுத்து இரு தெலுங்குப் படங்களுக்கும் ஒரு புதிய தமிழ்ப் படத்துக்கும் கால்ஷீட் கொடுத்துள்ளார். தொடர்ந்து புதிய படங்களில் நடிப்பார்.மூன்று ஆண்டுகளுக்குப் பிறகுதான் காஜல் அகர்வால் திருமணம் நடக்கும். இப்போதைக்கு திருமணம் பற்றிய எண்ணமில்லை அவருக்கு,"என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாம் அன்பு செலுத்தும் உள்ளங்கள் நல்லுள்ளங்களாக இருப்பின், துன்பங்களில் கூட இன்பங்களை காணலாம்.
29 அக்டோபர் 2013
22 அக்டோபர் 2013
அஞ்சலி நடிக்கிறார்!
அஞ்சலி எங்கே இருக்கார்? என்ன பண்றார்? என்பது புரியாத புதிர். ஆனாலும் அக்கட பூமியில் தொடர்ந்து நடித்துக்கொண்டே இருக்கிறார் அஞ்சலி.சீனியர் ஹீரோ வெங்கடேஷூக்கு ஜோடி என்றாலும் அஞ்சலி ஓ.கே சொல்லத் தயங்குவதில்லை.
தெலுங்கில் மகேஷ்பாபு, வெங்கடேஷ் நடித்த படம் தான் 'சீதம்மா வாகிட்லோ சிறுமல்லே செட்டு'.
மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக சமந்தா நடித்தார். அப்போது, அஞ்சலி வெங்கடேஷூக்கு ஜோடியாக நடித்தார்.
மகேஷ்பாபுவுக்கு அண்ணியாக நடிக்க எப்படி சம்மதித்தீர்கள்? என்று அஞ்சலியைக் கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்தனர்.
அதற்கெல்லாம் அசராமல் பதில் சொன்னதால் தான், இப்போது மீண்டும் ஒரு வாய்ப்பு அஞ்சலிக்குக் கிடைத்திருக்கிறது.
இந்தியில் அபிஷேக் பச்சன், அஜய் நடிதத 'போல் பச்சான்' படம் தெலுங்கில் 'மசாலா' என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. அதில் வெங்கடேஷூக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார்.
இப்போது எந்தப் பிரச்னையும் இல்லாமல், டோலிவுட்டில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார் அஞ்சலி.
18 அக்டோபர் 2013
மீண்டும் கைதானார் பவர் ஸ்டார்!

15 அக்டோபர் 2013
சிம்புவுக்கு சரியான ஜோடி!
சிம்புவுக்கு சரியான ஜோடி ஆன்ட்ரியாதான் என்று கூறியுள்ளார் விடிவி கணேஷ். 'விண்ணைத் தாண்டி வருவாயா ' படத்தில் சிம்புவிடம் இங்க என்ன சொல்லுது என்ற கேள்வியை கேட்டுப் பிரபலமானவர் கணேஷ். அந்த படத்தில் துவங்கிய இவர்களது நட்பு , இப்போது கணேஷ் தயாரிக்கும் ' இங்க என்ன சொல்லுது' படம் வரை தொடர்ந்து, சிம்புவின் ஈடுப்பாட்டால் அந்த படத்தை பெரிய படமாக்கும் வரை நீடித்து வருகிறது. இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகையின் தேர்வு நீண்ட நாட்களாக நடைபெற்று வந்தது. இதுவரை வந்திராத ஜோடியாக இருக்க வேண்டும் என்று படத்தின் தயாரிப்பாளரான கணேஷ் எண்ணத்துக்கு ஏற்ப தேர்வு நடந்தது . இறுதியில்சிம்பு ஜோடியாக ஆண்ட்ரியா தேர்ந்து எடுக்கபட்டார். இந்த ஜோடி தேர்வை பற்றி கணேஷ் கூறும் போது, 'சிம்புவும் ஆண்ட்ரியாவும் மிக சரியான ஜோடி. என் கணிப்பில், என் பார்வையில் அவர்களது ஜோடி ஒரு உற்சாகமான ஜோடியாகவே தெரிகிறது . ரசிகர்களுக்கு இந்த ஜோடியை ரொம்பவே பிடிக்கும் . இந்த கதாபாத்திரமும் அவர்களுக்கெனவே படைத்தது போலவே பொருத்தமாக இருக்கிறது . படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்தது , இறுதிகட்ட பணிகள் தொடர்ந்து நடை பெற்றுக் கொண்டு இருக்கிறது .இந்த மாத இறுதியில் படத்தை முடித்து பெரிய அளவில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறேன்," என்கிறார் . இங்க என்ன சொல்லுது படத்தை வின்சென்ட் செல்வா இயக்குகிறார். தமன் இசையமைக்கிறார். மீரா ஜாஸ்மின், சொர்ணமால்யா, சந்தானம், பாண்டியராஜன் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)