பக்கங்கள்

30 செப்டம்பர் 2012

வீதியில் தவித்த ஸ்ரேயா!

தோழிகளை அழைத்து வர சென்றபோது நடிகை ஸ்ரேயாவின் கார் பஞ்சரானதால் மும்பையில் பெரும் ட்ராபிக் நெரிசல் ஏற்பட்டது. ஸ்ரேயாவை மக்கள் திட்டித் தீர்த்தனர். ஸ்ரேயாவின் சொந்த ஊர் மும்பைதான். அவரைப் பார்க்க வெளிநாட்டிலிருந்து சில தோழிகள் வந்துள்ளனர். இவர்களை நேரில் வரவேற்க விமான நிலையத்துக்கே கிளம்பினார் ஸ்ரேயா. தோழிகளை ஏற்றிக் கொண்டு உற்சாகமாக வீடு திரும்பிக் கொண்டிருந்தார் ஸ்ரேயா. அப்போது மும்பை மெயின் ரோடில் அவர் கார் பஞ்சராகி நின்றது. இதனால் பெரும் ட்ராபிக் ஜாம் ஏற்பட்டது. மிகுந்த பதட்டத்துடன் தன் தந்தை மற்றும் உறவினர்களை அழைத்தார் ஸ்ரேயா. அதற்குள் வாகன ஓட்டிகள் ஸ்ரேயாவை சூழ்ந்து கொண்டு திட்ட ஆரம்பித்தனர். வெகு சிலர் மட்டும் வேடிக்கைப் பார்த்தனர். வேதனை மற்றும் ஆத்திரத்தில் கண்கலங்க நின்று கொண்டிருந்தார் ஸ்ரேயா. சற்று நேரத்தில் அவர் தந்தை போலீசாருடன் வந்து சேர, பிரச்சினையை சமாளித்து வீடு திரும்பினார். தோழிகள் முன்னிலையில் தனக்கு நேர்ந்த இந்த சங்கடம் குறித்து கருத்து தெரிவித்த ஸ்ரேயா, மிக மோசமான அனுபவம் அது என்றார்.

27 செப்டம்பர் 2012

நயன்தாராவால் தவிக்கும் ஜெய்!

நடிகை நயன்தாராவால் சுப்பிரமணியபுரம் ஹீரோ ஜெய் தூக்கமில்லாமல் இருக்கிறாராம். நயன்தாரா, ஆர்யா நடிக்கும் படத்தில் சுப்பிரமணியபுரம் ஹீரோ ஜெய் நடிக்கிறார். அதிலும் படத்தில் நயனை காதலிக்கிறார். படத்தில் அவர்களுக்கு ஒரு டூயட் கூட இருக்கிறது. நயனுடன் காதல் காட்சிகளில் எப்படி நடிப்பது, அவருடன் எப்படி டூயட் பாடுவது என்று ஜெய்க்கு ஒரே படபடப்பாக உள்ளதாம். இரவில் கண்ணை மூடினாலும் அந்த படப்படப்பு அடங்காமல் இருக்கிறதாம். அதனால் மனிதர் தூக்கமில்லாமல் தவித்து வருகிறாராம். அட்லீ எடுக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் வரும் அக்டோபர் மாதத்தில் துவங்குகிறது. முக்கோண காதல் கதை கொண்டது இப்படம். ஆர்யா இரண்டாம் உலகத்தில் பிசியாக இருப்பதால் அவர் வரும் வரை ஜெய், நயன்தாரா வரும் காட்சிகளை படமாக்கத் திட்டமிட்டுள்ளனர். அவ்வளவு பெரிய நடிகையுடன் நடிக்கப் போகிறோமே என்று ஜெய் ஒருவித டென்ஷனில் உள்ளார். கவலைப்படாதீங்க ஜெய், நயன் ரொம்பவே நல்லவர். தைரியமா போய் நடிங்க. ஜெய் நடித்து கடைசியாக வந்த படம் எங்கேயும் எப்போதும் என்பது குறிப்பிடத்தக்கது.

16 செப்டம்பர் 2012

சதைப்பிடிப்பான பெண்களைத்தான் பிடிக்கும்!

வித்யா பாலன்
சற்றே சதைப்பிடிப்பான, இயல்பான வளைவு நெளிவுகளுடன் கூடிய பெண்கள்தான் அழகு. ஆண்களைக் கேட்டுப் பாருங்கள், அவர்கள் அதைத்தான் சொல்வார்கள் என்று கூறியுள்ளார் நடிகை வித்யா பாலன். இதுகுறித்து வித்யா கூறுகையில், பெண்களைப் பொறுத்தவரை ஒல்லிக்குச்சியாக இருந்தால் அழகு கிடையாது. சற்றே சதைப்பிடிப்புடன் இருக்க வேண்டும். இயல்பான வளைவு நெளிவுகள் இருக்க வேண்டும். அதுதான் அழகு. ஆண்களைக் கேட்டுப் பாருங்கள், உங்களுக்கே தெரியும். இந்தியப் பெண்களுக்கு மட்டுமே இயல்பான வளைவு நெளிவுகள் அழகாக அமைந்துள்ளன. அவர்களின் உடல்அமைப்பே கவர்ச்சிகரமானதுதான். என்னைப் பொறுத்தவரை எனது உடல் அழகு மீது எனக்கு அபார நம்பிக்கை உண்டு, பெருமை உண்டு. என்னை நானே ரசித்துக் கொள்வேன், அதில் தவறேதும் இல்லை. டர்ட்டி பிக்சர்ஸ் படத்துக்காக நான் சற்றே சதை போட்டேன். தற்போது அது குறைந்து விட்டது. இதற்காக நான் அதிகம் மெனக்கெடவில்லை. எனது சதைப் பிடிப்பு சற்று குறைந்திருந்தாலும், அது வெளியில் தெரியாத வகையில்தான் எனது உடல் வாகு அமைந்துள்ளது. டர்ட்டி பிக்சர்ஸ் முடிந்தவுடனேயே எனது உடல் எடை குறைய ஆரம்பித்து விட்டது. எனக்கு பனாரசி சேலைகள் என்றால் உயிர். எங்காவது போவதாக இருந்தால் அந்த சேலையைத்தான் நான் உடுத்திக் கொள்வேன். சேலைதான் பெண்களுக்கு கூடுதல் அழகு தெரியுமா என்று அழகாக சிரித்தபடி கூறுகிறார் வித்யா பாலன். சரி கல்யாணம் எப்போ என்று கேட்டால். அதுகுறித்து நான் சிந்திக்கவே இல்லையே. அவசரமும் இல்லை. அவசரம் காட்டவும் நான் விரும்பவில்லை. நடக்கும்போது எல்லோருக்கும் தெரிவித்து விட்டுத்தான் செய்வேன், போதுமா என்று கூறி விடை பெற்றார் வித்யா.

14 செப்டம்பர் 2012

பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்ளும் தேவை எனக்கு இல்லை!

பிரியங்கா சோப்ரா பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டதாக பாலிவுட்டில் தகவல் பரவியது. இது பற்றி அவர் கூறியதாவது: என்றைக்குமே பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்ளும் தேவை எனக்கு ஏற்படவில்லை. இறைவன் எனக்கு எத்தகைய அழகை கொடுத்தானோ அதில் திருப்தியாக இருக்கிறேன். என்னைப்பற்றி பலர் பலவிதமாக எண்ணுகிறார்கள். நான் நிறம் சற்று குறைந்திருப்பதாகவும், சாதாரண தோற்றம் கொண்டவளாக இருப்பதாகவும் பரவலாக பேசுகிறார்கள். ஆனாலும் எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்துகொண்டுதான் இருக்கிறது. தொடக்க காலங்களில் மேக்கப் போடுவது எப்படி என்பதுகூட எனக்கு தெரியாது. பல்வேறு படங்களில் நடித்த பிறகே அதுபற்றி புரிந்துகொண்டேன். பல நடிகைகளின் நிலைமை இதுதான். நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டதாக கூறுகிறார்கள். பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்வதற்கு நான் எதிரி அல்ல. அழகையும் நம்பிக்கையையும் அதிகப்படுத்தும் என்ற நிலையில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்வதில் தவறு இல்லை. ஆனால் அதுவே மனதை ஆட்டிப் படைக்கும் என்ற நிலை ஏற்பட் டால் அது தவறு. எனக்கு நம்பிக்கை தருவது என்னுடைய படங்களின் வெற்றிதான். நடிகையாக இருப்பது எனக்கு பிடித்திருக்கிறது. ஆனால் மேம்போக்கான தோற்றங்களை பார்த்து என்னை எடைபோடுவது பிடிக்காது. எனது பல வயதில் பல்வேறு தோற்றங்களில் நான் மாற்றம் அடைந்திருக்கிறேன். அதற்கு காரணம் என் தோற்றத்தில் நான் செலுத்திய கவனம்தான். இப்போது எப்படி இருக்கிறேனோ அந்த தோற்றம் எனக்கு பிடித்தவகையில் இருக்கிறது.

12 செப்டம்பர் 2012

நானியின் ஜோடி ப்ரணீதா!

Pranitha
ப்ரணீதா.
நான் ஈ புகழ் நானி தனது அடுத்த படத்தை தமிழில் செய்கிறார். அவருடன் ஜோடி சேர்கிறார் ப்ரணீதா. நானியின் முதல் நேரடி தமிழ்ப் படம் வெப்பம். கவுதம் மேனன் உதவியாளர் இயக்கிய அந்தப் படம் பெரிதாகப் போகவில்லை. அடுத்த படம் நான் ஈ. தமிழ் - தெலுங்கில் வெளியாகி மிகப் பெரிய வெற்றியை இந்தப் படம் பெற்றது. விரைவில் நூறாவது நாளைத் தொடவிருக்கிறது. இவர் அடிப்படையில் தெலுங்கு நடிகராக இருந்தாலும், தனது அடுத்த படம் தமிழில் இருக்க வேண்டும் என விரும்புகிறாராம். பாலிவுட் படம் ஒன்றினை இதற்காக தமிழில் ரீமேக் செய்கிறார்கள். விஷ்ணுவர்தனின் உதவியாளர் கோகுல் இந்தப் படத்தை இயக்குகிறார். அதேநேரம் இப்போது நானியின் கைவசம் 3 தெலுங்குப் படங்கள் இருப்பதால், இந்தப் படத்தை உடனடியாகத் தொடங்க முடியாது என்று தெரிவித்துள்ளாராம்.

07 செப்டம்பர் 2012

'மைதிலி'க்காக 'பிகினி'க்குத் தாவிய சதா!

Sadaசுத்தமாக ஓய்ந்து போய்க் கிடக்கிறது சதாவின் சினிமா மார்க்கெட். எந்த சினிமாவை எடுத்தாலும் அங்கு சதாவுக்கு இடமில்லை என்ற நிலை. இந்த நிலையில்தான் தமிழ் தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவாகும் மைதிலி என்ற படத்தில் வரலாறு காணாத கவர்ச்சியைக் கட்டவிழ்த்து விட்டுள்ளாராம் சதா. பெருகி வரும் இளம் நடிகைகளுக்கு இணையாக தானும் கவர்ச்சிக் களத்தில் இறங்க தீர்மானித்த சதா, அதை மைதிலியில் அரங்கேற்றியுள்ளார். இப்படத்தில் நாயகன் நவ்தீப்புடன் இணைந்து பின்னிப் பிணைந்து ரசிகர்களை மெய் சிலிர்க்க வைக்கும் அளவுக்கு கவர்ச்சியில் பிரளயம் செய்துள்ளாராம். நவ்தீப்புடன் இணைந்து நடித்துள்ள ஒரு பாடல் காட்சியில் பிகினியிலும் பின்னி எடுத்திருக்கிறார் சதா. படம் முழுக்க சதாவின் கவர்ச்சி மழைதானாம். அந்த அளவுக்கு சதாவை புதிய உருவத்தில் காட்டியுள்ளாராம் இயக்குநர் சூரிய ராஜா. சும்மா சொல்லக் கூடாது, கவர்ச்சி உடையிலும், பிகினியிலும் பிரமாதமாகவே இருக்கிறார் சதா. ஒரு இளம் பெண்ணுக்கும், ஆணுக்கும் இடையிலான உறவு குறித்த கதையாம் இது.... அதைச் சொல்லுங்க முதல்ல!

04 செப்டம்பர் 2012

முகத்தை காட்டாமல் ஓடிய பிரீத்தி ஜிந்தா!

What Was Preity Zinta Hiding பிராக்கில் இருந்து மும்பை திரும்பிய பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தா விமான நிலையத்தில் தனது கையாலும், முடியாலும் முகத்தை மறைத்துக் கொண்டே சென்று காரில் ஏறினார். பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தா பிராக்கில் நடந்த ஷூட்டிங்கை முடித்துக் கொண்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மும்பை வந்தார். விமான நிலையத்தில் அவரைப் பார்க்க ஏராளமான ரசிகர்கள் கூடியிருந்தனர். மேலும் செய்தியாளர்களும் அங்கு கூடியிருந்தனர். வழக்கமாக சிரித்தபடியே போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு, ரசிகர்களைப் பார்த்து கை ஆட்டிவி்ட்டுப் போகும் அவர் இம்முறை யாருக்குமே முகத்தை காட்டவில்லை. தனது கையாலும், முடியாலும் முகத்தை மறைத்தபடியே அங்கிருந்து வெளியேறினார். இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் பிரீத்திக்கு என்னாச்சு, இப்படி முகத்தை மறைத்துக் கொண்டே போய்விட்டார் என்று முணுமுணுத்தனர். அவரது தாடை வீங்கியிருந்ததை அங்கிருந்தவர்கள் பார்ததுவிட்டனர். அது கீழே விழுந்து அடிபட்டதா அல்லது ஏதாவது லடாயா என்று தெரியவில்லை. அவர் முகத்தை மறைத்தாலும் புகைப்படக்காரர்கள் அதையும் விடாமல் போட்டோ எடுத்துத் தள்ளினர். அந்த போட்டோக்கள் இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. பிரீத்திக்கு என்னாச்சு என்பது தான் அனைவரின் கேள்வியும்.Actress Preity Zinta

02 செப்டம்பர் 2012

பணத்துக்காக பலருடனும் உறவு கொண்டுள்ளேன்... !

முன்பு பணத் தேவைக்காக பலருடனும் உடலுறவு வைத்துள்ளேன் என்று பகிரங்கமாக கூறியுள்ளார் நடிகை ஷெர்லின் சோப்ரா. சில நடிகைகள் வாயைத் திறந்தாலே பலானதாகவே இருக்கும். அந்த வரிசையில் ஷெர்லினும் ஒருவர். டிவிட்டரில் இவர் லேட்டஸ்டாக சொல்லியிருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பணத்துக்காக பலருடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்டதாக வெகு ஓப்பனாக கூறியுள்ளார் ஷெர்லின். இதுகுறித்து அவர் டிவிட்டர் பக்கத்தில் கூறுகையில், எனக்கு பலமுறை டிவிட்டரில் உங்களுடன் படுக்க வேண்டும். என்ன ரேட் என்று சொல்லுங்கள் என்று கேட்டு பலரும் தொடர்பு கொண்டு வருகிறார்கள். கடந்த காலத்தில் நான் பலமுறை பணத்திற்காக உறவு வைத்துக் கொண்டுள்ளேன். பணம் எனக்கு அப்போது நிறைய தேவைப்பட்டது. இதற்காக நான் இதில் ஈடுபட்டேன். அதில் எனக்கு வருத்தமோ, தயக்கமோ ஏற்படவில்லை. ஒரு முறை கூட நான் ஓசியில் யாருடனும் படுத்ததில்லை. எல்லாமே பணத்திற்காகத்தான். எல்லாவற்றுக்கும் ஒரு விலை வைத்திருந்தேன். ஆனால் இப்போது நான் அப்படியில்லை. என்னுடைய வாழ்க்கைத் தரத்தின் அளவு மாறி விட்டது. இப்போது அப்படி இருக்க வேண்டிய அவசியமில்லை என்று உணர்கிறேன் என்று கூறியுள்ளார் ஷெர்லின்.

31 ஆகஸ்ட் 2012

"நான் அக்காவா?" கோபத்தில் ரீமா

தனது திருமணத்திற்கு பிறகு அக்கா, அண்ணி வேடங்களில் நடிக்க வந்து இருப்பதாக கிண்டல் செய்கிறார்கள் என்று ரீமா சென் கோபப்படுகிறார். 'மின்னலே', 'தூள்', 'செல்லமே' உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்தவர் ரீமா சென். 1982ல் வெளிவந்த 'சட்டம் ஒரு இருட்டறை' படம் ரீமேக்காகி வருகிறது. எஸ்.ஏ.சந்திரசேகரன் தயாரிப்பில் அவரது உறவுக்காரப் பெண் சினேஹா இயக்கி வருகிறார். தமன்குமார், பியா, பிந்து மாதவி நடிக்கிறார்கள். இதில் ரீமா சென் முக்கிய பாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக, ஹீரோவின் அக்காவாக நடிக்கிறார். 'சட்டம் ஒரு இருட்டறை' ரீமேக்கில் நடிப்பது குறித்து ரீமா சென் தெரிவித்து இருப்பது " எனக்கு திருமணமாகிவிட்டதால் அக்கா அண்ணி கேரக்டரில் நடிக்க வந்துவிட்டதாக சிலர் கிண்டல் செய்கிறார்கள். திருமணம் ஆகிவிட்டால் வயது கூடிவிடுமா? இல்லை அழகுதான் குறைந்துவிடுமா?. நான் இப்போதும் அழகாக, கிளாமராக இருக்கிறேன். அதனால் அக்கா அண்ணி கேரக்டரில் நடிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்தப் படத்தை பொறுத்தவரை இந்தியில் ஹேமமாலினி நடித்த பவர்ஃபுல் கேரக்டர் என்பதால் நடித்தேன். ரீமேக்கில் எனது கேரக்டரை விரிவுபடுத்தி, காட்சிகளை அதிகப்படுத்தியிருக்கிறார்கள். 18 வயது சின்ன பெண் இயக்குகிறார் அவரை ஊக்கப்படுத்த வேண்டியது சீனியர் என்கிற முறையில் எனது கடமை. எனக்கு கிளாமர் நடிகை என்று பெயர் இருப்பது சந்தோஷம்தான். ஆனால் எந்தப் படத்திலும் உடம்பை காட்டி நடிக்கவில்லை. நான் முழுக்க சேலை அணிந்து வந்தாலும் கிளாமராக தெரிவேன். இது கடவுள் கொடுத்த வரம். " என்று தெரிவித்து இருக்கிறார்.

27 ஆகஸ்ட் 2012

நடிகை சுஜிபாலா திடீரென தற்கொலை முயற்சி!

Actress Sujibala Suicide Attempt நடிகை சுஜிபாலா அதிக அளவு தூக்க மாத்திரை தின்று தற்கொலைக்கு முயன்று உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. இயக்குநர் தங்கபர்ச்சானின் பள்ளிக்கூட்டம், இயக்குநர் ராசு மதுரவனின் முத்துக்கு முத்தாக, கோரிப்பாளையம் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை சுஜிபாலா. தற்போது உண்மை என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தை ரவிக்குமார் இயக்கி நாயகனாக நடித்து வருகிறார். சுஜிபாலாவை ரவிக்குமார் திருமணம் செய்ய விரும்பி அவரது பெற்றோரிடம் கேட்டிருக்கிறார். இதைத் தொடர்ந்து ஜூலை 5-ந் தேதியன்று ரவிக்குமாருக்கும் சுஜிபாலாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் திடீரென சுஜிபாலா அதிக அளவில் தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவருக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருமணத்துக்கு விருப்பம் இல்லாதநிலையில்தான் சுஜிபாலா தற்கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. தற்போது உடல்நிலை தேறியுள்ள சுஜிபாலா விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

25 ஆகஸ்ட் 2012

ஹன்ஸிகா தமன்னா அக்கப்போர்!


வேட்டை படத்தின் தெலுங்குப் பதிப்பில் ஒப்பந்தமான ஹன்ஸிகா நீக்கப்பட்டு, அவருக்கு பதில் தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனால் இரண்டு முன்னணி நடிகைகளுக்கும் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. மாதவன், ஆர்யா நடித்து தமிழில் ரிலீசான வேட்டை படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இதில் கதாநாயகிகளாக நடிக்க ஹன்சிகா, ஆண்ட்ரியா ஒப்பந்தம் செய்யப்பட்டனர். தமிழில் அமலாபால் நடித்த கேரக்டரில் ஹன்சிகாவும், சமீரா ரெட்டி நடித்த வேடத்தில் ஆண்ட்ரியாவும் நடிப்பதாக இருந்தது. ஆன்ட்ரியாவும் ஹன்ஸிகாவும் அக்கா தங்கை போல போஸ் கொடுத்து மகிழ்ச்சியை வெளியிட்டிருந்தனர். ஆனால் அது புஸ்ஸாகிவிட்டது. இப்போது திடீரென படத்திலிருந்து ஹன்ஸிகா நீக்கப்பட்டார். அவருக்கு பதில் தமன்னாவை தேர்வு செய்துள்ளனர். இன்றைய தேதிக்கு தமன்னா தெலுங்கில் ஹாட். அவரது சமீபத்திய படம் '100 பர்சன்ட் லவ்' படம் செம ஹிட் என்பதால் இந்த முடிவு என்றும் படக் குழுவினர் தெரிவித்திருந்தனர். ஆனால் ஹன்ஸிகாவோ, தனது பட வாய்ப்பை தமன்னா பறித்து விட்டதாக ஆத்திரத்தில் உள்ளாராம். தமன்னாவை மிகக் கடுமையாகத் திட்டி தனக்கு நெருக்கமானவர்களிடம் கருத்து தெரிவித்து வருகிறாராம் ஹன்ஸிகா.

19 ஆகஸ்ட் 2012

ஆன்ட்ரியாவை கிஸ் அடித்தது நிஜம்தான்!

kolaveri anirudh actress andria lip lock goes viral
ஆன்ட்ரியாவை கிஸ் அடித்தது நிஜம்தான். ஆனால் அது என் பர்சனல் விஷயம். யாரோ என் செல்போனிலிருந்து அந்தப் படங்களை எடுத்து வெளியிட்டுவிட்டனர் என்று இசையமைப்பாளர் அனிருத் கூறியுள்ளார். நடிகை ஆண்ட்ரியாவும், இசை அமைப்பாளர் அனிருத்தும் முத்தமிட்ட படங்கள் சமீபத்தில் வெளியாயின. இந்த படங்கள் 18 மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டவை என்றும், அப்போது இருவருக்கும் நெருக்கமான உறவு இருந்தது என்றும் ஆன்ட்ரியா கூறினார். இப்போது அனிருத்துடன் அந்த உறவு முறிந்துவிட்டது என்று ஒப்புக் கொண்டார். இப்போது அனிருத்தும் தன் பங்குக்கு விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், "ஆன்ட்ரியாவும், நானும் முத்தமிட்ட படங்கள் எனது செல்போனில்தான் இருந்தன. அது பழைய படம். இப்போது வெளிவந்து இருக்கிறது. அதை யாரோ எனக்கு தெரியாமல் டவுன் லோடு செய்து வெளியிட்டுள்ளனர். இது எனக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. எனக்கென்று தனிப்பட்ட சொந்த வாழ்க்கை இருக்கிறது. அதை இப்படி பகிரங்கப்படுத்தி விமர்சிப்பது வருத்தம் அளிக்கிறது. நான் பார்க்கிற பெண்களையெல்லாம் முத்தமிடுகிறவன் அல்ல. ஏற்கனவே நடந்த தவறுகள் மறுபடியும் நடக்காமல் பார்த்துக் கொள்வேன். நான் பெண்களை மிகவும் மதிப்பவன். இந்த இக்கட்டான நேரத்தில் எனது குடும்பத்தினர் எனக்கு துணையாக இருந்தனர்," என்றார்.

02 ஆகஸ்ட் 2012

விருந்தில் நடந்த விஷயங்களை சொல்ல முடியுமா?

தமன்னா
சமீபத்தில் நடந்த தனுஷின் பிறந்த நாள் விழாவில் செம குஜாலாக ஆட்டம் போட்டவர் நடிகை தமன்னா. தனுஷுக்கும் ஸ்ருதிக்கும் மட்டுமல்ல, தனுஷுக்கும் தமன்னாவுக்கும் கூட கெமிஸ்ட்ரி, பிஸிக்ஸெல்லாம் ஏகத்துக்கும் ஒர்க் அவுட் ஆனதால், இருவரும் தங்கள் நட்பை 'மெட்ராஸ் சிமெண்ட்' போடாத குறையாக இறுக்கமாக்கிக் கொண்டுள்ளார்களாம். அந்த உறவின் உரிமையில், ஐஸ்வர்யாவை விட ஒரு படி அதிகமாகப் போய் பார்ட்டியில் அன்பைப் பொழிந்தாராம் அம்மணி. இருவரும் அடிக்கடி காதருகில் கிசுகிசுப்பாக தெலுங்கில்தான் மாட்லாடிக் கொண்டார்களாம். அப்படி என்னதான் பேசினீர்கள்... தனுஷ் அப்படியென்ன ஸ்பெஷல் என்று சிலர் கேட்டதற்கு தமன்னா கூறிய பதில் இது: தனுஷ் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ரொம்ப சுதந்திரமாக உணர்ந்தேன். மறக்கமுடியாத விருந்து அது. ‘வேங்கை' படத்தில் இருந்து நானும் தனுஷும் நெருக்கமான நண்பர்கள் (அதைச் சொல்லணுமா!) தனுஷ் அற்புதமான சிறந்த மனிதர். எந்த வேலையாக இருந்தாலும், அதை மீறி கலந்து கொள்வேன். அவர் பிறந்த நாளில் என்னால் பங்கேற்காமல் இருக்க முடியாது. இருவரும் நிறைய விஷயங்கள் பற்றி பேசினோம். ரொம்ப உணர்வுப் பூர்வமான நிகழ்வுகள் அவை. விருந்தில் நடந்த விஷயங்கள் பற்றி சொல்ல முடியுமா?," என்றார். பார்றா... உடம்பெல்லாம் மச்சம்ங்கிறது இதானா?!

28 ஜூலை 2012

தனுஷின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சிம்பு!

Aishwarya Not Attended Dhanush Birthday ஆனாலும் புதுசாக, அநியாயத்துக்கு செயற்கையாக நட்பை விளம்பரப்படுத்தி வரும் ஜோடி என்றால் அது தனுஷும் சிம்புவும்தான்! நாம் இப்படிக் குறிப்பிடுவதற்குக் காரணம், இந்த இருவரும் கடந்த காலங்களில் எவ்வளவு முடியுமோ அந்த அளவு ஒருவரையொருவர் கேவலமாக விமர்சித்துக் கொண்டிருந்தார்கள். அதற்கு அவரவர் ரசிகர்களையும் பயன்படுத்தத் தவறியதில்லை. குறிப்பாக கொலவெறி பாட்டு வெளியான சமயத்தில் பேஸ்புக் போன்ற சமூக வலைத் தளங்களில் சிம்புவின் கமெண்டுகள், அது பற்றி தனுஷ் தந்த பதில்களைப் படித்தவர்களுக்கு நினைவிருக்கலாம். இப்போதோ, நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க... எங்களைப் போல நண்பர்கள் உண்டா என்றெல்லாம் பேட்டி கொடுத்து வருகிறார்கள். கூடவே இதெல்லாம் மீடியா வேலை என்று வேறு பிட்டைப் போட்டிருக்கிறார்கள். இருக்கட்டும். இன்று தனுஷுக்குப் பிறந்த நாள். இந்த பிறந்த நாளையொட்டி நேற்று இரவு ஏகப்பட்ட நட்சத்திரங்களை அழைத்து மெகா தண்ணி பார்ட்டி கொடுத்திருக்கிறார் தனுஷ். அதில் சிம்புவும் ஆஜர். கூடவே அவர்கள் வயது 'தோழிகள்' ராதிகா போன்றவர்களும் தவறாமல் ஆஜராகியிருந்தனர். தமன்னா, பிரேம்ஜி என பார்ட்டிகளுக்கென்றே பிறந்தவர்களும் வந்திருந்தனர். சேவல் வடிவில் (ஆடுகளம் ஹீரோல்ல...) கேக்கெல்லாம் வெட்டி கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட இந்த பிறந்த நாள் விழா விருந்தில், தனுஷ் மனைவி ஐஸ்வர்யா இல்லை!!

25 ஜூலை 2012

அமலா பால் அமெரிக்காவில் சிகிச்சை?

மீடியா முழுக்க அமலா பால் புராணம்தான் கடந்த நான்கு நாட்களாய். அம்மணி அமெரிக்கா போய் வந்தாராம். அந்தப் புராணத்தை தனக்கு தெரிந்த நாலு மீடியாக்காரர்களிடம் சொல்லி வைக்க, அவர்கள் கொஞ்சம் சுமாரான அமலா பாலுக்கு அசத்தலாக அலங்காரம் பண்ணி அம்சமான செய்தியாக உலாவ விட்டுவிட்டார்கள்... அதுவும் எப்படி? 'முப்பொழுதும் உன் கற்பனைகள், வேட்டை போன்ற வெற்றிப் படங்களில் (??!!) நடித்த அமலா பால்' என்றுதான் அடைமொழியே கொடுத்திருந்தனர்! செய்தியைப் படித்துவிட்டு, அமலாபால் லேட்டஸ்ட் புகைப்படங்களைப் பார்க்கும் கோடம்பாக்கவாசிகள், 'நண்பா தெரியுமா சேதி... அம்மணி அங்கே போய் விழாவில் சும்மா ஒப்புக்கு இரண்டு நாள் இருந்துவிட்டு, அடுத்து கமுக்கமாக ஒரு வேலை செய்திருக்கிறார். அமெரிக்காவில் ஒரு மருத்துவமனையில் அழகை எடுப்பாகக் காட்ட சிகிச்சை செய்தாராம்...", என்று கிசுகிசுக்கிறார்கள். ஆனால் அமலா பாலே, அமெரிக்காவில் புது மேக்கப், புது சிகை அலங்காரம் மட்டும்தான் பண்ணிக்கொண்டேன் என்று விளக்கம் வேறு அளித்துள்ளார். எப்படியோ... இந்த சாக்கில் முப்பொழுதும் உன் கற்பனைகள், வேட்டை போன்றவற்றை பெரிய வெற்றிப் படமாக்கிவிட்டனர், அமலா பாலின் 'நிருப(அன்)பர்கள்'!

22 ஜூலை 2012

காஜலுடன் இணையத் துடிக்கும் கோவிந்தா...!

வயதானாலும் இன்னும் குஷியும், கும்மாளமுமாக இருக்கும் கோவிந்தாவுக்கு புது ஆசை வந்துள்ளது. அதாவது சிக்கென்று இருக்கும் காஜல் அகர்வாலுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசைதான் அது. கோவிந்தாவுக்கு இப்போது பாலிவுட்டில் பெரிய மார்க்கெட் இல்லை. கடைசியாக அவர் சல்மான் கானுடன் இணைந்து நடித்தார். இந்த நிலையில் மறுபடியும் ஒரு ரவுண்டு வர ஆர்வமாக உள்ள கோவிந்தா, இந்த முறை பக்கா இளம் நாயகி ஒருவருடன் இணைந்து காட்சி தர தீர்மானித்துள்ளாராம். இதற்காக அவர் குறி வைத்திருப்பது காஜல் அகர்வாலையாம். சிங்கம் இந்திப் படத்தில் நடித்திருந்தார் காஜல். தமிழ், தெலுங்கில் பிசியாக நடித்துக் கொண்டிருப்பவர். இவருடன் இணைய இப்போது துடியாத் துடிக்கிறாராம் கோவிந்தா. இதுகுறித்து கோவிந்தா தரப்பில் கூறுகையில், துரந்தர் என்ற பெயரில் ஒரு புதிய படத்தை உருவாக்கப் போகிறார் கோவிந்தா. இதற்கான டைக்டரை தேடி வந்தார். இறுதியில் ரஜ்னிஷ் ராஜ் தாக்கூரை அவர் முடிவு செய்துள்ளார். மேலும் தனக்கு ஜோடியாக காஜல் அகர்வாலைப் போட வேண்டும் என்றும் தீர்மானமாக உள்ளார் கோவிந்தா. இதுதொடர்பாக அவரை பார்த்தும் பேசியுள்ளார். காஜல் இன்னும் ஒன்றும் சொல்ல்வில்லை. அவர் ஓ.கே. சொல்லிவிட்டால் சுறுசுறுப்பாக படப்பிடிப்பைத் தொடங்கி விடுவார் கோவிந்தா என்கிறார்கள். காஜல் கோவிந்தாவுடன் சேருவாரா...?

18 ஜூலை 2012

கார்த்திக்கு சம்பளம் ரூ 14 கோடி!

ஆறே ஆறு படங்கள்தான் நடித்திருக்கிறார்... அதிலும கடைசி படம் பெரிய வெற்றி என்று கூட சொல்ல முடியாது. ஆனால் இன்று அவர் வாங்கும் சம்பளம் படத்துக்கு ரூ 14 கோடிக்கு கிர்ரென்று உயர்ந்திருக்கிறது. இது கிட்டத்தட்ட விஜய், அஜீத், சூர்யாவுக்கு இணையானதாகும். 'பருத்தி வீரன்', 'ஆயிரத்தில் ஒருவன்', 'நான் மகான் அல்ல', 'பையா', 'சிறுத்தை', 'சகுனி' ஆகிய 6 படங்கள்தான் கார்த்தி நடித்தவை. இவற்றில் ஆயிரத்தில் ஒருவன் மற்றும் சகுனி பாக்ஸ் ஆபீஸில் சுமாராகப் போயின. பருத்தி வீரன் க்ளாஸிக் என்ற அந்தஸ்தைப் பெற்றது. நான் மகான் அல்ல நல்ல பெயரைக் கொடுத்தது. சிறுத்தை ஒரு ரீமேக். ஆனாலும் நல்ல வசூல். கடைசியாக வந்த சகுனிக்கு நல்ல ஓபனிங். ஆனாலும் எதிர்ப்பார்த்த மாதிரி படம் இல்லாததால், அந்த ஓபனிங்கை தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை. அடுத்து அலெக்ஸ் பாண்டியன், பிரியாணி என பெரிய படங்களைக் கையில் வைத்துள்ள கார்த்திக்கிடம் அடுத்த பட கால்ஷீட்டுக்கு ரூ 14 கோடி பேசியுள்ளாராம் ஒரு தயாரிப்பாளர். கார்த்திக் மேலும் யோசித்தால், மேலும் ஒரு கோடி தரவும் தயார் என்கிறாராம். விஜய், அஜீத், சூர்யா போன்றோர் பல படங்களில் நடித்த பிறகுதான் ரூ 10 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அலெக்ஸ் பாண்டியனுக்குப் பிறகு இந்த சம்பளம் ரூ 20 கோடியில் போய் நின்றாலும் ஆச்சர்யமில்லை என்கிறார்கள்.

13 ஜூலை 2012

காதலனுக்குப் (முன்னாள்?) போட்டியாக களமிறங்கும் நயன்தாரா!

நயன்தாரா
நடிகை என்ற எல்லையைத் தாண்டி, அடுத்த கட்டத்துக்கும் பயணிக்க தயாராகிவிட்டார் போலிருக்கிறது நயன்தாரா. விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத்துக்கு ஜோடியாக அவர் நடித்துவரும் புதிய படத்தில், நடிகையாக மட்டுமல்ல... உதவி இயக்குநராகவும் பணியாற்றி வருகிறாராம். அதிலும் நடிப்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பதைவிட உதவி இயக்குனர் வேலைக்கே முக்கியத்துவம் அளித்து வருகிறாராம். படப்பிடிப்புகளில் கிளாப் போர்டு அடிப்பது, படப்பிடிப்பு தளத்திற்கு முதல் ஆளாக வருவது, படப்பிடிப்பு முடிந்தபின் எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு கடைசி ஆளாக போவது என உதவி இயக்குனருக்கான அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வருகிறாராம் நயன்தாரா. இப்படத்தில் உதவி இயக்குனர் பட்டியலில் நயன்தாரா பெயரும் இடம்பெறப் போகிறதாம். விரைவில் புதுப்படமொன்றை இயக்கும் திட்டம் உள்ளதாகவும் நயன்தாரா தரப்பில் கூறப்படுகிறது. நயன்தாராவுக்கு இயக்குநர் ஆகும் ஆசை வந்துவிட்டது போலிருக்கிறது. தாடிக்குப் போட்டியாக இருக்குமோ!

10 ஜூலை 2012

ஒரு சப்ப பிகருக்கே இந்த சண்டையாடா?

Magath Manoj Fight Tapsi Public டாப்சியை காதலிக்கும் போட்டியில் நடிகர்கள் மனோஜ் மஞ்சுவும், மகத்தும் விருந்தில் ஒருவரோடு ஒருவர் அடித்து சண்டை போட்டுக் கொண்டனர். மங்காத்தா படத்தில் நடித்தவர் மகத். என்னைத் தெரியுமா படத்தில் அறிமுகமானவர் மஞ்ச் மனோஜ். தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகன். தமிழில் அடுத்து வருவான் தலைவன் என்ற படத்தில் நடித்து வருகிறார். மகத்துக்கும், டாப்சிக்கும் ஏற்கனவே நெருங்கிய தொடர்பு இருந்தது. படப்பிடிப்புக்காக டாப்சி சென்னை வரும்போதெல்லாம் அவரை பிக்கப் செய்வது மகத்தானாம். ஆனாலஸ் மஞ்ச் மனோஜை சந்தித்த பிறகு மகத்தை தொங்கலில் விட்டாராம் டாப்ஸி. மனோஜும், டாப்சியும் ஒன்றாக குடித்தனம் நடத்துகிறார்கள் எனும் அளவுக்கு தெலுங்குப் படவுலகில் செய்திகள் றெக்கை கட்டிப் பறக்கின்றன. டாப்சியை தன்னிடம் இருந்து அபகரித்து கொண்டதாக மனோஜ் மீது மகத் ஆத்திரத்தில் இருந்தார். இந்த நிலையில் சனிக்கிழமை இரவு சென்னை நட்சத்திர ஹோட்டலில் விருந்து நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் தெலுங்கு, தமிழ், நடிகர்-நடிகைகள் பங்கேற்றனர். இதுவும் சரக்குப் பார்ட்டிதான். அப்போது மகத்தும் - மனோஜும் சந்தித்துக் கொண்டனர். உடனே, டேய் டாப்ஸி என் ஆளு.. நீ அவகிட்ட பேசாதே என ஒருவருக்கொருவர் சவுண்ட் விட ஆரம்பித்துள்ளனர். ஆவேசப் பேச்சு சீக்கிரமே ஆபாசப் பேச்சாக மாற, ஒரு கட்டத்தில் கைகலப்பில் இறங்கினர். மகத் சட்டையை பிடித்து இழுத்து மனோஜ் அடித்து உதைத்தார். பதிலுக்கு மகத்தும் தாக்கினார். விருந்துக்கு வந்திருந்தவர்கள் இருவரையும் பிடித்து இழுத்துச் சென்றனர். இதுகுறித்து மகத்திடம் கேட்டபோது, தகராறு நடந்தது உண்மைதான் என ஒப்புக்கொண்டார். என் முழு கவனமும் சினிமாவில் இருக்கிறது. மனோஜ் என்மேல் ஏன் கோபமாக இருக்கிறார் என்று புரியவில்லை. இந்த சண்டைக்கு நான் காரணமில்லை, என்றார். ஆனால் மனோஜ் மஞ்சுவின் சகோதரி, லட்சுமி மஞ்சு இருவருக்கும் தகராறு நடைபெறவில்லை என்று மறுத்துள்ளார். தகராறு நடந்த இடத்தில் லட்சுமியும் இருந்தார் என சண்டையை விலக்கிவிட்டவர்கள் தெரிவித்தனர். இந்த சண்டையை விட மகா சுவாரஸ்யம்., சண்டையை விலக்கிவிட்ட ஒரு இளம் இயக்குநர் விட்ட கமெண்ட்: 'ஒரு சப்ப பிகருக்கே இந்த சண்டையாடா?'

05 ஜூலை 2012

முத்தம் ஓகே! - அஞ்சலி

Actress Anjali Photo Galleryசேட்டை படத்தில் இரண்டு நாயகிகள். ஒருவர் அஞ்சலி. இன்னொருவர் ஹன்ஸிகா. இந்தப் படம் இந்தியில் வெளியான டெல்லி பெல்லியின் ரீமேக் என்பது தெரிந்திருக்கும். ஒரிஜினல் கதைப்படி, ஹீரோ ஹீரோயினுக்கு ஒரு நெருக்கமான படுக்கையறைக் காட்சி உண்டு. அந்தக் காட்சியை அப்படியே எடுப்பதா... அல்லது கொஞ்சம் மாற்றுவதா என்று யோசித்த இயக்குநர், கதாநாயகி அஞ்சலியிடம், படுக்கையறைக் காட்சியில் நடிக்கிறீர்களா.. அல்லது உதட்டோடு உதடு முத்தம் தரும் காட்சியாக அதை மாற்றிவிடலாமா என்று சாய்ஸ் வைத்திருக்கிறார். அஞ்சலி சற்றும் தயங்காமல், எனக்கு லிப் டு லிப் சீன் ஓகே என்றாராம். ஆர்யாவுடன் படு ரொமான்டிக்காக அந்த முத்தக் காட்சியில் நடித்தும் கொடுத்தாராம். இதுகுறித்து பின்னர் அவர் அளித்த விளக்கம்: படுக்கயறைக் காட்சியில் நடித்தால் பெயர் கெட்டுப் போகும். அதான் முத்தக்காட்சி பரவால்லேன்னு ஒத்துக்கிட்டேன் என்றாராம். அப்போ மங்காத்தாவில் படுக்கையறைக் காட்சியில் வந்தது அஞ்சலியின் டூப்போ!

04 ஜூலை 2012

மனோஜுக்கும் எனக்கும் காதல் இல்லை!

Tapsee Denies Affair With Manoj தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான மோகன் பாபுவின் மகன் நடிகர் மனோஜுடன் தனக்கு காதல், இருவரும் ஒன்றாக வசிக்கிறார்கள் என்று வரும் செய்திகளில் உண்மையில்லை என்கிறார் நடிகை டாப்ஸி. ஆடுகளம் படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமான டாப்ஸி, இப்போது அஜீத் படத்தில் நடித்து வருகிறார். டாப்ஸிக்கும் தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகனான நடிகர் மஞ்சு மனோஜ் குமாருக்கும் காதல் மலர்ந்துள்ளதாக செய்தி பரவியுள்ளது. இருவரும் தாலி கட்டாமலேயே ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்வதாகவும் கூறப்படுகிறது. இருவரும் விழாக்களில் ஒன்றாக பங்கேற்றும் வருகிவதை வழக்கமாக வைத்துள்ளனர். இதுகுறித்து வரும் செய்திகள் பற்றி கோபமடைந்துள்ள டாப்ஸி கூறுகையில், "மனோஜையும் என்னையும் இணைத்து அடிக்கடி கிசுகிசுக்கள் வருகின்றன. இதை பரப்புவது யார் என்று எனக்கு தெரியும். மனோஜுக்கும் எனக்கும் காதல் இல்லை. மஞ்சு மனோஜ் அவரது குடும்பத்துடன் வசிக்கிறார். நான் மாதாபூரில் உள்ள எனது வீட்டில் வகிக்கிறேன். ஹாலிவுட்டில் நடிகர், நடிகைகள் நண்பர்களாக இருக்கின்றனர். ஆண், பெண் டாக்டர்களும் நண்பர்களாக உள்ளனர். நாங்கள் ஏன் இருக்கக் கூடாது?" என்றார்.

29 ஜூன் 2012

அமலா போட்ட சம்பளச்சண்டை!

Amala Paul Photosமைனா படம் மூலம் பிரபலமானவர் அமலாபால். விக்ரமுடன் “தெய்வத் திருமகள்” படத்தில் நடித்தார். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்தார். அமலாபாலை வெளிநாட்டில் நடந்த திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவொன்றில் நடனம் ஆடுவதற்காக சமீபத்தில் அழைத்து சென்றனர். அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டார். விழா துவங்கியதும் அவரை நடனமாட அழைத்தனர். ஆனால் சம்பளம் தராததால் ஆட மறுத்து விட்டார். ஓட்டல் லாபியில் நின்று பேசியபடி சம்பளம் தராதது ஏன்? என்று விழா அழைப்பாளர்களிடம் ஆவேசமாக பாய்ந்து ரகளையில் ஈடுபட்டார். முழு தொகையும் கொடுத்தால்தான் ஆடுவேன் என அடம் பிடித்தார். அமலாபால் தகராறு செய்வதை ஓட்டலுக்கு வந்து போனவர்கள் வேடிக்கை பார்த்தனர். விழா அமைப்பாளர்களிடம் இதுகுறித்து கேட்டபோது, அமலாபால் ரகளை செய்தது உண்மைதான் என்று ஒப்புக் கொண்டனர். சம்பளத்துக்காக அவர் தகராறு செய்யவில்லை. விமான டிக்கெட் எடுத்து கொடுக்கும் பிரச்சினையில் தான் அவர் சண்டை போட்டார் என்றனர். அவர் கேட்டபடி டிக்கெட் எடுத்து கொடுத்த பிறகு அவரது அம்மா மற்றும் உறவினருடன் விமானத்தில் புறப்பட்டார் என்றனர்.

20 ஜூன் 2012

துப்பட்டாவால் மறைக்கும் நயன்தாரா!

Nayantara Hides Prabhu Deva Tatto நயன்தாரா தன் கையில் உள்ள பிரபுதேவாவின் பெயரை துப்பட்டாவால் மறைத்துக் கொண்டிருக்கிறார். நயன்தாராவும், பிரபுதோவாவும் உருகி, உருகி காதலித்தனர். கடைசியில் பார்த்தால் ஆளுக்கொரு பக்கமாக பிரிந்து சென்றுவிட்டனர். காதலித்த காலத்தில் பிரபுதேவாவின் பெயரை நயன்தாரா தனது இடது கையில் பச்சை குத்தினார். காதல் முறிந்த பிறகும் அவர் அந்த பச்சையை இன்னும் அழிக்கவில்லை. இந்நிலையில் அவர் தனது கையில் உள்ள பச்சையை அழிக்க வெளிநாடு சென்றார் என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால் அது உண்மையில்லை என்று நயன் தெரிவித்தார். இந்நிலையில் அண்மையில் ஹைதராபாத்தில் நடந்த விருது வழங்கும் விழாவில் நயன் கலந்து கொண்டார். அவர் கையில் உள்ள பிரபு தேவாவின் பெயரை எப்படியாவது போட்டோ எடுத்துவிட வேண்டும் என்று புகைப்படக்காரர்கள் முயன்றார்கள். அவர் முக்கால் கை உள்ள சுடிதார் அணிந்து துப்பட்டாவால் தன் கையில் உள்ள பச்சையை மறைத்துச் சென்றார். புகைப்படக்காரர்கள் முட்டி மோதி ஒரு வழியாக அந்த பச்சையை போட்டோ எடுத்துவிட்டனர். பிரபுதேவா என்னவென்றால் நயன் முடிந்து போன விஷயம் என்கிறார். ஆனால் நயன்தாராவோ பிரபுதேவாவின் பெயரை இன்னும் அழிக்காமல் வைத்துள்ளார்.

16 ஜூன் 2012

அமெரிக்காவில் தேன்நிலவு கொண்டாட்டம்!

Sneha Prasanna Fly Off Us சினேகாவுக்கும் பிரசன்னாவுக்கும் காதல் ஆரம்பமானது, இருவரும் ஜோடி சேர்ந்த அச்சமுண்டு அச்சமுண்டு படத்திலிருந்துதான். இந்தப் படத்தில் நடிக்க ஒத்திகை பார்க்க, இருவரும் அமெரிக்காவில் ஒரே வீட்டில் தங்கியிருந்தனர். கணவன் - மனைவியாக நடிக்க ஒத்திகை பார்த்தனர். அப்போதுதான் இருவருக்கும் காதல் பூத்தது. இரண்டு ஆண்டுகளுக்குமேல் காதலித்து, கடந்த மாதம் தம்பதிகளாகினர். திருமணமாகிவிட்டாலும் அவர்களால் ஹனிமூனை உடனடியாகக் கொண்டாட முடியவில்லை. தான் நடிக்க வேண்டிய பட வேலைகளில் பிஸியாகிவிட்டார் சினேகா. ஒருவழியாக இரவு பகல் பார்க்காமல் அந்த வேலைகளை முடித்துக் கொடுத்துவிட்டு, இப்போதுதான் இல்லற வேலைகளை ஆரம்பித்துள்ளனர் புதுமணத் தம்பதிகள். தேனிலவுக்காக எங்கே போகலாம் என்ற குழப்பமே இருவருக்கும் இல்லையாம். காரணம், தங்கள் காதல் ஆரம்பித்த அமெரிக்காவுக்கே செல்ல முடிவெடுத்திருந்தார்களாம். தங்கள் முடிவை இரு தினங்களுக்கு முன் அமைதியாக செயல்படுத்தினர் சினேகாவும் பிரசன்னாவும். இருவரும் நேற்று முன்தினம் ஹனிமூனுக்காக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றனர்!

13 ஜூன் 2012

த்ரிஷாவின் குத்துச்சண்டை!

trisha0011.jpgபூலோகம் படத்தில் த்ரிஷாவின் நடிப்பை பார்த்து வியந்து போன இயக்குநர் கல்யாண கிருஷ்ணன் ‘லேடி பாக்ஸர்' என்று த்ரிஷாவிற்கு பெயர் சூட்டியுள்ளாராம். இதை பத்திரிக்கையாளர் சந்திப்பில் த்ரிஷாவே கூறியுள்ளார். உனக்கும் எனக்கும் படத்திற்குப் பிறகு ஜெயம் ரவி, த்ரிஷா இணையும் படம் பூலோகம். இதில் ஜெயம் ரவி குத்துச்சண்டை வீரராக நடிக்கிறார். கதாநாயகி த்ரிசாவிற்கு வலுவான பாத்திரமாம். இதுகுறித்து பத்திரிக்கையாளர்களிடம் த்ரிஷா கூறியுள்ளதாவது, பூலோகத்தில் ஜெயம் ரவி குத்துச்சண்டை வீரராக நடிக்கிறார். படத்தில் என்னுடைய ரோல் ரொம்ப வெயிட்டானது. ஜெயம் ரவியின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் பெண்ணாக இப்படத்தில் நடிக்கிறேன். இப்படத்தில் ஜெயம் ரவியின் கேரக்டருக்கு பலமே நான் தான். படத்தில் என்னுடைய கேரக்டரை பார்த்து டைரக்டர் என்னை குத்துச்சண்டை வீராங்கனை என்று தான் அழைக்கிறார் என்று கூறியுள்ளார். ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விறுவிறுப்பாக படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. பூலோகம் படத்தை நவம்பர் 15ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர்.