பிரியாணி படத்தின் கதையை திடீரென இயக்குநர் வெங்கட் பிரபு மாற்றியதால் தான் அந்தப் படத்திலிருந்து விலகி விட்டாராம் ரிச்சா கங்கோபாத்யாயா.
சிம்பு, தனுஷ் என அடுத்தடுத்து ஜோடி போட்டு பட்டையைக் கிளப்பியவர் ரிச்சா. ஆனால் அதற்குப் பின்னர் பார்ட்டியை ஆளைக் காணோம். இடையில் திடீரென வெங்கட் பிரபுவின் பிரியாணி படத்தில் கார்த்தியுடன் சேர்ந்து நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதே வேகத்தில் அப்படத்தில் ஹன்சிகா மோத்வானி புக் ஆனதாகவும் செய்திகள் வந்ததால் ரிச்சா மேட்டர் குழப்பமானது.
நாம் அன்பு செலுத்தும் உள்ளங்கள் நல்லுள்ளங்களாக இருப்பின், துன்பங்களில் கூட இன்பங்களை காணலாம்.
29 அக்டோபர் 2012
23 அக்டோபர் 2012
சுபா திடீர் மரணம்!
மாலைப்பொழுதின் மயக்கத்திலே என்ற படத்தில் நடித்து வந்த நடிகை சுபா புத்தெலா திடீரென மரணமடைந்துள்ளார். சிறுநீரக கோளாறு இதற்குக் காரணமாக கூறப்பட்டுள்ளது.சமீபத்தில் செம்பட்டை என்ற படத்தின் ஹீரோ திலீபன் அகால மரணமடைந்தார். இந்த நிலையில் இன்னொரு முக்கியப் படத்தின் நாயகி மரணமடைந்திருப்பது கோலிவுட்டை அதிர வைத்துள்ளது.
மாலைப்பொழுதின் மயக்கத்திலே என்று ஒரு படம் தயாராகி வந்தது. இதில் நாயகியாக நடித்திருந்தவர் சுபா புத்தெல்லா. இன்று காலை அவர் திடீரென மரணமடைந்தார்.
அவருக்கு சிறுநீரக கோளாறு இருந்ததாகவும், அதனால் அவதிப்பட்டு வந்த அவர் சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 அக்டோபர் 2012
அதிர வைக்கும் அஞ்சலி!
அங்காடித்தெரு அஞ்சலியை கலகலப்பு படம் மாஸ் நடிகையாக்கி விட்டது. அதுவரையில் அவரை கண்டுகொள்ளாதிருந்த அண்டை மாநில இயக்குனர்கள் அந்த படத்தில் அவர் நறுக் ஆட்டம் போட்டதைப்பார்த்து ஆடிப்போனார்கள். இந்த குடும்ப நடிகைக்குள் இப்படியும் ஒரு அயிட்டம் நடிகை குடியிருக்கிறாரா? என்று அசந்து போனார்கள்.
அதனால் அதே மூடில் அஞ்சலியை ஆந்திராவுக்கு வரவைத்து கேட்ட சம்பளத்தை கொடுத்து கால்சீட்டையும், அஞ்சலியையும் கேட்ச் பண்ணி விட்டனர். என்னதான் தமிழ் சினிமா தன்னை வளர்த்தது என்றாலும், தெலுங்கு தாய் மொழியாயிற்றே அதனால் அடுத்து அங்கு முகாம்போட்டு கல்லாக்கட்ட தீர்மானித்து விட்டார் அஞ்சலி. அதனால் தமிழில் நடித்து வரும் சேட்டை உள்ளிட்ட சில படங்களை முடித்துக்கொடுத்துவிட்டு ஆந்திர கரையோரம் முழுநேரமும் ஒதுங்க இருக்கிறார் அம்மணி.
14 அக்டோபர் 2012
நடிக்க வந்தார் ஆக்ஷன் கிங் மகள் ஐஸ்வர்யா!
நடிகர் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா புதிய படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். படத்தின் தலைப்பு பட்டத்து யானை.
பூபதி பாண்டியன் இந்தப் படத்தை இயக்குகிறார்.
இந்தப் படத்தின் ஹீரோ விஷால். அர்ஜுனிடம் ஏழுமலை உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் விஷால் என்பது நினைவிருக்கலாம்.
எத்தனையோ ஹீரோக்கள் கேட்டபோதும் தன் மகளை நடிக்க அனுமதிக்காத அர்ஜுன், ஹீரோ விஷால் என்றதும் சந்தோஷத்துடன் ஒப்புக் கொண்டாராம்.
அர்ஜூனிடம் நேரில் போய் ஐஸ்வர்யாவை நடிக்க வைக்க வேண்டும் என்று கேட்டவரே விஷால்தானாம்.
"என்ன நினைப்பாரோ என்ற சந்தேகத்துடன்தான் அர்ஜுனிடம் போய் கேட்டேன். ஆனால் அவர் எடுத்த எடுப்பிலேயே ஒப்புக் கொண்டார். இந்த கேரக்டருக்கு ஐஸ்வர்யா தவிர பொருத்தமான ஒருவர் கிடைப்பது கஷ்டம்," என்கிறார் ஹீரோ விஷால்.
விஷுவல் கம்யூனிகேஷன்ஸ் படித்துள்ள ஐஸ்வர்யாவுக்கு நடிப்பு மீது ரொம்பவே ஆர்வமாம்.
08 அக்டோபர் 2012
சுஜிபாலா வேணாம் முறுக்கிக் கொண்ட இயக்குநர்!
நடிகை சுஜிபாலா எனக்கு வேண்டாம்... திருமணத்தை ரத்து செய்கிறேன் என்று அறிமுக இயக்குநர் ரவிக்குமார் கூறியுள்ளார்.
'உண்மை' என்ற தலைப்பில் படம் இயக்கி வரும் புதிய இயக்குநர் ரவிக்குமாருக்கும் அந்தப் படத்தில் ஹீரோயினாக நடித்த சுஜிபாலாவுக்கும் காதல் மலர்ந்தது.
இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர். நாகர்கோவிலில் நிச்சயதார்த்தம் நடந்தது.
பிறகு இருவருக்கும் திடீர் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் சுஜிபாலா தற்கொலைக்கு முயன்றார். ஆனால் இதை மறுத்து சுஜிபாலா, நிச்சயிக்கப்பட்டபடி ரவிக்குமாரை திருமணம் செய்வேன் என்றார்.
இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன் நாகர்கோவில் வைத்தியநாதபுரத்தில் உள்ள சுஜிபாலா வீட்டுக்கு ரவிக்குமார் திடீரென்று சென்றார். அப்போது சுஜிபாலாவுக்கும் அவருக்கும் சண்டை ஏற்பட்டதாம்.
திருமணத்துக்கு மறுத்ததுடன் சுஜிபாலைவை பிடித்து தள்ளிவிட்டு வீட்டை விட்டு அவர் வெளியேறிவிட்டதாக கூறப்பட்டது. அப்போது வீட்டில் இருந்த சில ஆவணங்களை எடுத்துச் சென்றுவிட்டாராம்.
இந்த நிலையில் இயக்குனர் பி.ரவிக்குமார் சொந்த ஊரான காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து, திருமணம் ரத்தாகிவிட்டதாக கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், "எனக்கும் சுஜிபாலாவுக்கும் இரு வீட்டு பெற்றோர் சம்மதத்துடன் நாகர்கோவிலில் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் தற்போது எங்கள் இருவருக்குமே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் பிரிந்துவிட்டோம். திருமணம் ரத்தாகிவிட்டது. இனி எனக்கும் சுஜிபாலாவுக்கும் எந்த உறவோ தொடர்போ இல்லை," என்றார்.
05 அக்டோபர் 2012
போதையில் இளைஞர்கள்:சரண்யா வேதனை
போதை என்ற குறும்படத்தில் போதைக்கு அடிமையான இளைஞர்களை திருத்தும் பாத்திரத்தில் நடித்த நடிகை காதல் சரண்யா மிகுந்த மனவேதனை அடைந்தாராம். இதனை அந்த படத்தை இயக்கிய இயக்குநர் செல்வகணேஷ் கூறியுள்ளார்.
வெண்ணிலா கபடி குழு, குள்ளநரிக் கூட்டம், துரோகி படங்களுக்கு இசை அமைத்த செல்வகணேஷ் தற்போது போதை என்ற குறும்படத்தை இயக்கியுள்ளார். இதற்கு அவரே இசையும் அமைத்துள்ளார்.
போதைக்கு அடிமையாகும் இளைஞர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் இந்தப் படத்தில், போதை இளைஞர்களை திருத்தி, நல்ல பாதைக்கு மாற்றும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சரண்யா.
போதையின் பாதையில் செல்லும் இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம், சர்வதேச அளவில் நடக்கும் குறும்பட விழாவுக்கு செல்ல உள்ளது.
இந்த படத்திற்காக நிஜத்திலேயே போதைக்கு அடிமையான இளைஞர்களை சந்தித்த சரண்யா அவர்களின் எதிர்காலம் பற்றி மிகவும் கவலைப்பட்டார் என்று இயக்குநர் செல்வகணேஷ் கூறியுள்ளார். இந்த கதாபாத்திரம் சரண்யாவுக்கு பெரிய சவாலாக இருந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)