பக்கங்கள்

09 மே 2013

மேலங்கி இல்லாத பூஜா காந்தி!

‘கரிமேடு’ படத்தில் பூஜா காந்தி கொள்ளை கும்பலின் அழகியாக,மேலங்கி அணியாமல் நடித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். உண்மை சம்பவம்,பெங்களூர் அருகே தண்டுபாளையம் என்ற இடத்தில் தொடர்ந்து நடைபெற்ற 91 கற்பழிப்புகள், 106 கொலைகள், 203 கொள்ளைகளை மையமாக வைத்து, ‘கரிமேடு’ என்ற படம் தயாராகி இருக்கிறது.அக்கிரமங்கள் செய்த மனித மிருகங்களை, காவல் துறையினர் உயிரை பணயம் வைத்து, கடமை உணர்வுடன் எப்படி வேட்டையாடினார்கள்? என்பதை இந்த படத்தில் உணர்வுப்பூர்வமாக படமாக்கி இருக்கிறார்கள். இந்த படத்தில் பூஜா காந்தி கொள்ளை கும்பலின் அழகியாக மேலங்கி அணியாமல் துணிச்சலாக நடித்து, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். படத்தில் அவர், பீடியை பற்ற வைத்து புகைப்பது போன்ற காட்சியும் வருகிறது. பூஜா காந்தி ‘கொக்கி,’ ‘திருவண்ணாமலை’ ஆகிய படங்களில் நடித்தவர். இந்த படத்தை சீனிவாசராஜு டைரக்டு செய்து இருக்கிறார். அருந்ததி, காஞ்சனா, கண்ணா லட்டு தின்ன ஆசையா ஆகிய படங்களை வெளியிட்ட ராம.நாராயணனின் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ், இந்த படத்தை தமிழ்நாட்டில் வெளியிடுகிறது. இந்த படத்தை பற்றி ராம.நாராயணன் கூறியதாவது:–
‘‘வீடுகளில் குடிக்க தண்ணீர் கேட்டு உள்ளே புகும் ஒரு கும்பல் பெண்களை கற்பழித்து, கொள்ளையில் ஈடுபடுவதுதான் இந்த படத்தின் கதை. இந்த படத்தை பார்த்து அதிர்ந்து போனேன். விறுவிறுப்பாக படமாக்கி இருக்கிறார்கள். கொலை கும்பலில் உள்ள ஒரு பெண்ணாக பூஜா காந்தி நடித்து இருக்கிறார். படத்தில் அவர் ஜாக்கெட் அணியாமல் நடித்த காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. இந்த படத்துக்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான கர்நாடக அரசின் விருது கிடைத்து இருக்கிறது. வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் மத்தியில் இந்த படம் விழிப்புணர்வை ஏற்படுத்தும்.’’ இவ்வாறு ராம.நாராயணன் கூறினார்.

06 மே 2013

முத்தத்திற்கு அஞ்சமாட்டேன்!

சினிமாவில் முத்தக் காட்சியில் நடிக்க மகளுக்கு அனுமதி கொடுத்திருக்கிறார் நடிகர் அர்ஜூன். பட்டத்து யானை திரைப்படத்தின் மூலம் அர்ஜூனின் மூத்த மகள் ஐஸ்வர்யா நாயகியாக அறிமுகமாகிறார். இதில் அவர் விஷாலுக்கு ஜோடியாக நடிக்கிறார். பூபதி பாண்டியன் இயக்கும் இந்தப் படத்துக்கு தமன் இசையமைக்கிறார். 'நாடோடிகள்' படத்தை தயாரித்த மைக்கேல் ராயப்பன் தயாரிக்கிறார். சினிமா என்றாலே முத்தக் காட்சிகள் இருக்குமே, அந்த மாதிரியான காட்சிகளில் நடிப்பீர்களா..? என ஐஸ்வர்யாவை கேட்டால் உடனே நடிப்பேன் என்கிறார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது : “என் அப்பா என்னை மிகவும் தைரியமான பெண்ணாகத்தான் வளர்த்திருக்கிறார். சினிமாவுக்கு நடிக்க வந்த பிறகு இந்தக்காட்சிகளில் மட்டும் தான் நடிப்பேன், அந்தக்காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று சொல்ல முடியாது, ஒரு படத்தின் திரைக்கதைப்படி காட்சிக்கு மிகவும் முக்கியம் என்றால் முத்தக்காட்சியில் நடிக்கவும் கூட முழு சுதந்திரம் கொடுத்திருக்கிறார்” என்றார்.