கோலிவுட் ஹீரோயின்களுக்கு போட்டியாக வருகிறார் மற்றொரு பாலிவுட் ஹீரோயின் பிரணிதி சோப்ரா. ‘இஷ்க்ஸாதே என்ற இந்தி படத்தில் நடித்தவர் பிரணித¤ சோப்ரா. இவர் தமிழில் உருவாகும் ‘சும்மா படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். ஹீரோவாக நடிப்பதுடன் ஸ்கிரிப்ட் எழுதி இயக்குகிறார் மதன். இவர் டாக்டர் ராஜசேகரின் தங்கை மகன். மதன் கூறும்போது, ‘காடுகளுக்குள் புதைந்திருக்கும் பல ரகசியம் வெளியுலகுக்கு தெரிவதில்லை. அதை அம்பலமாக்கும் கதைதான் இது. இந்தியில் வெற்றிபடத்தில் நடித்த பிரணிதி சோப்ரா ஹீரோயின். மற்றொரு ஹீரோயினும் நடிக்க உள்ளார்.
இவர்களுடன் சுமன் ஷெட்டி, சேஷு, டி.பி.கஜேந்திரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஜெய் ஒளிப்பதிவு. ஆர்.தயாளன் இசை. எஸ்.எஸ்.எஸ் தயாரிப்பு. இதன் ஷூட்டிங் தேனி, குரங்கணி மற்றும் அச்சங்கோவில், தலக்கோணம், காளஹஸ்தி என தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா என 3 மாநிலங்களில் உள்ள அடர்ந்த காட்டு பகுதிகளில் ஷூட்டிங் நடந்துள்ளது. இப்படத்துக்கு ‘சும்மா என டைட்டில் வைத்ததற்கு காரணம் காடுகளில் புதைந்திருக்கும் ரகசியம்போல் இந்த டைட்டிலிலும் ஒரு ரகசியம் புதைந்திருக்கிறது என்பதை உணர்த்தத்தான்‘ என்றார்.
நாம் அன்பு செலுத்தும் உள்ளங்கள் நல்லுள்ளங்களாக இருப்பின், துன்பங்களில் கூட இன்பங்களை காணலாம்.
26 பிப்ரவரி 2013
19 பிப்ரவரி 2013
மூத்த நடிகர்களை அவமதிக்கவில்லை-அசின்
நடிகை அசின் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் மூத்த நடிகர்களைவிட இளம் ஹீரோக்களுடன் ஜோடியாக நடிப்பதே எனக்கு வசதியாக உள்ளது என்று கூறியிருந்தார்.
தன்னைவிட வயதில் மூத்தவர்களுடன் நடிப்பது சங்கடமாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டு இருந்தார். அசின் பேட்டி வயதான இந்தி நடிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அமீர்கான், சல்மான்கான், அக்ஷய்குமார், அஜய்தேவ்கான் போன்ற மூத்த நடிகர்களுடன் அவர் நடித்துள்ளார். இவர்கள் அசின் மேல் ஆத்திரத்தில் இருக்கிறார்களாம். அசினுக்கு இந்திப்பட வாய்ப்புகள் கிடைக்காமல் இவர்கள் தடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அசின் படங்கள் இல்லாமல் இருக்கிறார் என்கின்றனர்.
இதுகுறித்து அசினிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
நான் அளித்த பேட்டியில் எந்த உள்நோக்கமும் இல்லை. இளம் ஹீரோக்களுடன் ஜோடியாக நடிக்க ஆசைப்படுவது தவறு அல்ல. இதற்காக மூத்த நடிகர்களை அவமதிக்கிறேன் என்று வதந்தி பரப்பப்படுகிறது. வயதான கதாநாயகர்களை மதிக்கிறேன். நான் சொன்ன கருத்தை அவர்கள் புரிந்து கொண்டு இருக்கிறார்கள். பத்திரிகைகள்தான் இந்த பிரச்சினையை பூதாகாரமாக்குகின்றன.
எனக்கு சினிமா படங்கள் இல்லை என்று யார் சொன்னது இரண்டு பெரிய பட்ஜெட் படங்களில் நடிக்கப் போகிறேன். அதற்கான அறிவிப்பு விரைவில் வரும்.
இவ்வாறு அசின் கூறினார்.
09 பிப்ரவரி 2013
திரிஷாவின் அதிரடிக் கருத்து!
கதையளப்போம்.கொம் |
05 பிப்ரவரி 2013
தேவைப்பட்டால் பிகினி உடையணிந்து நடிப்பேன்!
வாகைசூடவா இனியா, என்னிடம் எக்கச்சக்கமாக திறமை உள்ளது. அதனால் எக்காரணம் கொண்டும் உடம்பைக்காட்டி நடிக்க மாட்டேன் என்று ஆரம்பத்தில் ஏகத்துக்கு எடுத்து விட்டு வந்தார். அதன்காரணமாக, முன்னணி நடிகர்களுடன் நடிக்க வாய்ப்புகள் வரும் என்று எதிர்நோக்கியிருந்த இனியாவை டி.வி நடிகர்களுடன் ஜோடி சேர்த்து விட்டனர். இதனால் அவரது நிலைமை படுமோசமாகி விட்டது. ஸ்பாட்டில்கூட ஒரு கதாநாயகி என்பதை மறந்து விட்டு சின்னத்திரை நடிகைகளுக்கு செய்து கொடுக்கும் வசதிகளைத்தான் இனியாவுக்கும் செய்து தருகிறார்களாம். அவர் கேரளத்தில் இருந்து சென்னை வந்தால், தங்குவதற்கு மிகச்சிறிய ஓட்டல்களில்தான் அறை எடுத்து கொடுக்கிறார்களாம். சாப்பாடு வசதியும் பெரிதாக கிடையாதாம்.
இப்படி வேகமாக எகிறிய தனது மார்க்கெட் அதே வேகத்தில் இப்போது இறங்கி விட்டதால், மனசொடிந்து போயிருந்தார் இனியா. அதனால் தனது கொள்கைகளை தளர்த்தினால் ஒழிய இனி ஏறுமுகத்தில் தனது மார்க்கெட் செல்ல வாய்ப்பில்லை என்பதை புரிந்து கொண்ட நடிகை, இப்போது சின்னத்திரை நடிகர் செந்திலுடன் நடித்துள்ள கண்பேசும் வார்த்தைகள் படத்தில் சில காட்சிகளில் கவர்ச்சியை தூவியிருக்கிறார். அதோடு, இதையடுத்து கதைக்கு அவசியம் என்றால் பிகினி நடிகையாகவும் மாறுவேன் என்று கிக்கான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனால் இதுவரை இனியாவை கண்டுகொள்ளால் இருந்த படாதிபதிகள்வட இப்போது இந்த கேரள குட்டியும், நயன்தாராவுக்கு தங்கை மாதிரிதான் இருக்கிறார். இவரையும் பில்லா நயன்தாராவாட்டம் கவர்ச்சி நடிகையாக்கி விடுவோம் என்று முற்றுகையிட்டு வருகின்றனர். இதனால் முழுநேர கவர்ச்சிக்கோதாவில் இறங்க தனது உடல்கட்டை உரம்பாய்ச்சும் வேலைகளில் படுதீவிரமாகியிருக்கிறார் இனியா.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)