பக்கங்கள்

06 டிசம்பர் 2011

திருமணம் இப்போதைக்கில்லை.

பிரசன்னாவுடன் காதல் இருப்பது உண்மைதான். ஆனால் கல்யாணம் இப்போதைக்கில்லை. லேட்டாகும், என்று கூறியுள்ளார் ஸ்னேகா.
நடிகை ஸ்னேகாவுக்கும் தனக்கும் காதல் மலர்ந்துள்ளதாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளதாகவும் பிரசன்னா சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
ஆனால் இந்தத் திருமணம் குறித்து ஸ்னேகா இதுவரை எதுவும் பேசாமல் இருந்தார்.
சமீபத்தில் அவரிடம் இருவருக்கும் திருமணம் எப்போது என்று கேட்டபோது "உடனடியாக திருமணம் செய்து கொள்ளமாட்டோம், கொஞ்சம் லேட்டாகும்," என்றார்.
ரஜினியுடன் கோச்சடையான் படத்தில் நடிக்க ஸ்னேகா ஒப்பந்தமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதைத் தவிர வேறு சில பட வாய்ப்புகளும் அவருக்கு வந்துள்ளன. எனவே இப்போதைக்கு திருமணம் குறித்து யோசிக்கும் நிலையில் அவர் இல்லை என்று தெரிகிறது.

04 டிசம்பர் 2011

ரஜனிகாந்தின் தங்கை சினேகா.

கோச்சடையான் படத்தில் ரஜினியின் தங்கை வேடத்தில் சினேகா நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினி அடுத்து நடிக்கும் படம் கோச்சடையான். சௌந்தர்யா ரஜினி இயக்க, கே எஸ் ரவிக்குமார் மேற்பார்வையில் வரவிருக்கும் படம் இது.
இந்தப் படத்தில் நாயகியாக அனுஷ்கா நடிப்பார் என்று கூறப்படுகிறது. ஆனால் இன்னும் அந்த செய்தியை யாரும் உறுதிப்படுத்தவில்லை.
இந்த நிலையில் படத்தின் மிக முக்கிய வேடத்தில் நடிக்க நடிகை சினேகாவுடன் பேசி வருகின்றனர். ரஜினியின் தங்கை வேடத்தில் அவர் நடிப்பார் என்று தெரிகிறது.
இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் என்றும் செய்திகள் வந்துள்ளன.
இதையெல்லாமே இன்னும் சில தினங்களில் தெளிவாக்கிவிடுவோம். அதுவரை பொறுத்திருங்கள் என்று சௌந்தர்யா ரஜினி தெரிவித்துள்ளார்.

30 நவம்பர் 2011

எதிர்ப்பால் அதிர்ந்த ஜெய்!

ஒரு நடிகையை நிச்சயம் திருமணம் செய்ய மாட்டேன் என்று நடிகர் ஜெய் அறிவித்தது அவருக்கு எதிராக திரும்பியிருக்கிறது.
நடிகை என்றால் அவ்வளவு கேவலமா என்று திரையுலகில் கண்டனக் குரல் ஒலித்ததால் தனது அறிக்கைக்கு புதிய விளக்கம் தந்துள்ளார்.
அஞ்சலிக்கும் ஜெய்க்கும் காதல் என்ற செய்தி பரவியதால், இனி ஜெய்யுடன் நடிக்க மாட்டேன் என அஞ்சலியும், அஞ்சலியை நான் காதலிக்கவும் இல்லை, கல்யாணம் பண்ணவும் மாட்டேன் என்று ஜெய்யும் மாறி மாறி அறிக்கை விட்டனர். ஜெய் ஒரு படி மேலே போய், வாழ்க்கையில் ஒரு நடிகையை திருமணம் செய்வதாக இல்லை என்று கூறிவிட்டார். இது சக நடிகைகளுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
நடிகைகளை திருமணம் செய்ய மாட்டேன் என்றால் என்ன அர்த்தம் நடிகைகள் பற்றி அவதூறாக பேசுவதா? என்றெல்லாம் எதிர்ப்பு கிளம்பியது. ஜெய்யுடன் நேரில் பேசியும் கண்டித்தனர்.
இதையடுத்து தனது அறிக்கைக்கு ஜெய் அளித்துள்ள விளக்கம்:
நடிகை பற்றி நான் சொன்னதை தவறாக எடுத்துக்கொண்டுள்ளனர். நான் சொல்ல வந்த அர்த்தம் வேறு.
நான் நடிகன் என்பதால் உள்ளூர்-வெளியூர் என்று படப்பிடிப்பில் இருப்பேன். என் மனைவியும் பிசியான நடிகையாக இருந்தால் சந்தோஷமாக இருக்குமா? என்ற அர்த்தத்தில்தான் நடிகையை திருமணம் செய்ய கொள்ள மாட்டேன் என்றேன். மற்றபடி நடத்தை பற்றியோ ஒழுக்கம் பற்றியோ நான் எதுவும் பேசவில்லை," என விளக்கம் அளித்துள்ளார்.

27 நவம்பர் 2011

அன்புக்கொன்று ஆசைக்கொன்று....!

தனக்கு வரும் கணவர் அன்புக்கு ஒன்றும் ஆசைக்கு ஒன்றும் என இரண்டு மனைவிகள் கொண்டவராக இருப்பார் என கிளி ஜோசியம் சொன்னதால், ஷாக் ஆனார் நடிகை தன்ஷிகா.
பாலிமர் டிவியில் ஞாயிறுதோறும் ஒன்பது மணியளவில் ஒளிபரப்பாகி வரும் சம்திங் சம்திங் வித் ஸ்டார்ஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் "பேராண்மை'' மற்றும் ''அரவான்'' படங்களின் நாயகி தன்ஷிகா கலந்துகொண்ட சிறப்பு நிகழ்ச்சி ஒளிப்பரப்பாக உள்ளது.
'அயன்' ஜெகன் தொகுப்பாளராக இருந்து நடிகை தன்ஷிகாவோடு மிகவும் மாறுபட்ட முறையில் சுவாரஸ்யமாக கலந்துரையாடிய இந்த நிகழ்ச்சி படமாக்கப்பட்டபோது ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது.
நிகழ்ச்சியின் ஒரு அம்சமான கிளி ஜோசியத்தில் தன்ஷிகா என் வருங்காலக் கணவர் எப்படி இருப்பார்? எப்படிப்பட்ட குணாதிசயம் கொண்டவராக இருப்பார் என்று கேட்டார்.
அதற்கு கிளி எடுத்துக் கொடுத்த சீட்டை வைத்து ஜோசியர், "உங்கள் கணவர் அன்புக்கு ஒன்றும் ஆசைக்கு ஒன்றும் வச்சிருப்பார் என்று பதிலளித்தார்."
உடனே பதறிய தன்ஷிகா, "அய்யய்யோ எனக்கு அப்படிப்பட்ட கணவரே வேண்டாம்... என் கணவர் எனக்காக மட்டுமே வாழும் அன்புகொண்டவராக அவர் இருக்கவேண்டும்," என்றார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரசிகர்களோடுஆடிப்பாடி நிகழ்ச்சியை கலகலப்பூட்டிய நடிகை தன்ஷிகா தனது நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் 'அரவான்' படம் பற்றிய வெளிவராத தகவல்களையும் பகிர்ந்து கொண்டார்.
இந்த சுவாரசியமான நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை பாலிமர் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது!

25 நவம்பர் 2011

பெண்ணைத்தான் சொன்னேன் பெண்களையல்ல.

சமீப காலமாக பரபரப்பாகப் பேசப்படும் தனுஷின் ஒய் திஸ் கொலவெறி டி பாடல் பெண்களுக்கு எதிரானது அல்ல என்று நடிகர் தனுஷ் விளக்கமளித்துள்ளார்.
சமீபத்திய சினிமா படங்கள் பலவற்றில் பெண்களை இழிவுபடுத்தி பாடல்கள் எழுதப்படுவதாக மகளிர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. சிம்பு பாடிய “எவண்டி உன்ன பெத்தான் கையில கிடைச்சா செத்தான்” என்ற பாடலும் ‘லூசுப் பெண்ணே லூசுப் பெண்ணே…’ பாடலும் பெண்களுக்கு எதிரானவை என்று கண்டிக்கப்பட்டன.
அந்த வரிசையில் தனுஷ் பெண்களை இழிவுபடுத்தி 3 என்ற படத்தில் ஒய் திஸ் கொலை வெறிடி பாடலை எழுதி இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பாடல் வெளியான 5 நாட்களில் இண்டர்நெட்டில் 20 லட்சம் பேர் இந்தப் பாடலைக் கேட்டுள்ளனர். இந்த நிலையில் இந்த குற்றச்சாட்டு குறித்து தனுஷிடம் கேட்டபோது, “எனது மனைவி ஐஸ்வர்யா 3 படத்தை இயக்குகிறார். பாடலுக்கான சூழ்நிலையை அவர் விளக்கியதும் இந்த பாட்டை எழுதினேன். படத்தில் இடம் பெறும் ஒரு பெண் கேரக்டரை பற்றிய பாடல் அது. ஒட்டு மொத்த பெண்களையும் இழிவுபடுத்தி அந்த பாடலை எழுதவில்லை. ஒரு பெண்ணை மட்டும் குறிப்பிட்டு எழுதி இருக்கிறேன். ‘கேர்ள்’ என்று ஒருமையில்தான் எழுதினேன். ‘கேர்ள்ஸ்’ என்று எல்லா பெண்களையும் குறிப்பிடவில்லை” என்றார்.

20 நவம்பர் 2011

மயங்க வைத்தார் நாகார்ஜுனா!

செட்டில் நாகார்ஜுனாவைப் பார்த்ததும் மயங்கி விழுந்துவிட்டேன். அவர் மீது அப்படியொரு பிரமிப்பு என்றார் நடிகை அமலா பால்.
தமிழை விட தெலுங்குப் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரும் அமலா பால், சமீபத்தில் ஹைதராபாதில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
ப்ள்ஸ்டூ முடித்ததுமே நடிக்க வந்துவிட்டேன். இதை பெற்றோர் விரும்பவில்லை. அவர்கள் என்னை எஞ்ஜினீயருக்கு படிக்க வைக்க விரும்பினார்கள். ஆனால் எனது அண்ணன் அவர்களை சமரசப்படுத்தி என் ஆசைப்படி நடிக்கை அனுமதித்தார். மைனா படம் திருப்பு முனையாக அமைந்தது. பிறகு விக்ரமுடன் நடித்தேன்.
நான் விக்ரமின் தீவிர ரசிகை. அவருடன் நடித்தது அதிர்ஷ்டம். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் கல்லூரிக்கு போய் படித்து வருகிறேன்.
தெலுங்கில் நாகார்ஜுனா படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. முதல் தட வையாக பெரிய நடிகரான அவரை படப்பிடிப்பு தளத்தில் பார்த்த போது மயக்கமே வந்து விட்டது," என்றார்.

17 நவம்பர் 2011

கஸ்தூரியின் சின்னக் காதலன்.

'நாங்க' என்ற படத்தில் தன்னை விட வயது குறைந்த இளைஞனுடன் ரொமான்ஸ் பண்ணும் கேரக்டரில் நடித்துள்ளார் கஸ்தூரி.
செல்வா இயக்க, சினிமா கொட்டகை நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் மொத்தம் 5 காதல் கதைகள் இடம்பெறுகின்றன.
இதில் ஒரு காதல்தான் சின்ன வயசு இளைஞன் உதய்க்கும், கல்யாணத்துக்கு காத்திருக்கும் கஸ்தூரிக்கும் இடையில் வரும் பொருந்தாக் காதல்.
கதைப்படி உதய் குடியிருக்கும் வீட்டு உரிமையாளர் பெண் கஸ்தூரி. உதய்யைவிட மூத்தவர். ரொம்ப அன்னியோன்னியமாக பழகும் கஸ்தூரியிடம் ஒரு கட்டத்தில் தன் காதலைச் சொல்ல, அதை அவர் மறுத்துவிடுகிறார். இதனால் ஆத்திரமடைந்த உதய், கஸ்தூரியை கற்பழிக்க முயற்சிக்கிறார்... என்று போகிறது இந்தக் காதல் கதை.
இடையில் கஸ்தூரிக்கும் உதய்க்கும் மகா கவர்ச்சியான கனவுக் காட்சி வேறு வருகிறதாம். இதில் கஸ்தூரி ஏக கவர்ச்சி காட்டியுள்ளாராம்.
இதுகுறித்துக் கேட்டபோது, கதைக்குத் தேவை என்பதால் இந்தக் காட்சிகளில் அதிகபட்ச கவர்ச்சி காட்டி நடித்ததாக தெரிவித்தார் கஸ்தூரி.
பாலமுருகன் ஒளிப்பதிவு செய்ய, பாலபாரதி இசையமைத்துள்ளார்.

16 நவம்பர் 2011

அது எப்பன்னு நாங்க சொல்லுவோம்!

சினிமாக்காரர்கள் கல்யாணத்தை மட்டும் இந்தத் தேதியில் நடக்கும் என்று யாரும் கணித்துச் சொல்லிவிட முடியாது. அட.. அது அவர்களே் அறிவிக்கிற தேதியிலாவது நடக்குமா என்றால், அதையும் உறுதியாக சொல்ல முடியாது!
காதலிப்பார்கள்... ஆனால் கேட்டால் இல்லவே இல்லை என்பார்கள். ரகசியமாக திருமணம் நிச்சயமாகியிருக்கும்.. ஆனால் விசாரித்தால் சத்தியமாய் இல்லை, பொய்ச் செய்தி என்பார்கள். ஆனால் ஒருநாள் மாலையும் கழுத்துமாக காட்சி தருவார்கள். இதற்கு முக்கிய காரணம், கிடைக்கிற வாய்ப்பை எல்லாம் பணமாக்கிக் கொள்ள வேண்டும் எனும் அவர்களின் நோக்கமே.
கைவசம் படங்களே இல்லாத நிலையில் திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கும் காதல் ஜோடிகள், புதிதாக இரண்டு பட வாய்ப்புகள், துபாயில் இரண்டு கச்சேரி, ஏதாவது விளம்பரப் பட வாய்ப்பு என்று வந்தால், அப்படியே திருமணத்தை தள்ளிப் போடுவது வழக்கம். ஆனால் கல்யாண தேதியை அறிவித்துவிட்டால், யாரும் வாய்ப்பு தரமாட்டார்கள். எனவே தொழில்ரீதியான பயம்தான் இந்த ரகசிய காத்தலுக்கு காரணம்.
ஜெனிலியாவின் கல்யாண சமாச்சாரமும் அப்படித்தான் ஆகிவிட்டது. இவருக்கும் இந்தி நடிகர் ரிதேஷுக்கும் நிச்சயமாகிவிட்டாலும், அதை இருவருமே வெளியில் சொல்லவில்லை. அதற்குள் ஜெனிலியாவுக்கு புதுப்புது பட வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளன. வேலாயுதம் வேறு எதிர்பாராமல் நன்றாக ஓடுவதாக கூறப்படுவதால், மேலும் இரு பெரிய பட வாய்ப்புகள். இவற்றை விட நிச்சயம் எந்த நடிகைக்கும் மனசு வராதல்லவா...
பிப்ரவரி 4-ம் தேதி இவருக்கும் ரிதேஷுக்கும் திருமணம் என்று முடிவு செய்திருந்த நிலையில், கைவசம் இன்னும் பட வாய்ப்புகள் இருப்பதால், தேதியை தள்ளிப் போட்டுள்ளனர்.
இதுகுறித்து ஜெனிலியா கூறுகையில், எனக்கு என்றைக்கு திருமணம் என்பதை நாங்கள்தான் அறிவிப்போம். நிச்சயம் இந்தக் கல்யாணம் ரகசியமாய் நடக்காது. விரைவில் நாங்களே சொல்கிறோம். அதுவரை மீடியா இதுபற்றி எதுவும் சொல்லக் கூடாது, என்றார்.

14 நவம்பர் 2011

இணையத் துடிக்கும் சிம்புவும் திரிசாவும்!

மீண்டும் இணைந்து நடிக்க விரும்புவதாக சிம்புவும் த்ரிஷாவும் கூறியுள்ளனர்.
அலை படத்தில் முதல்முறையாக சிம்புவும் த்ரிஷாவும் நடித்தனர். அந்தப் படம் வெற்றி பெறவில்லை. பல ஆண்டுகள் கழித்து இருவரும் மீண்டும் இணைந்த படம் விண்ணைத்தாண்டி வருவாயா.
கவுதம் மேனன் இயக்கிய இந்தப் படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. சிம்பு - த்ரிஷா ஜோடி பேசப்பட்டது.
நிஜத்திலும் த்ரிஷாவை விட இளையவர் சிம்பு. இந்த வயது வித்தியாசமே இந்த ஜோடியின் சிறப்பாக சிலர் கூறுகின்றனர். எனவே இருவரையும் மீண்டும் இணைத்து படமெடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிம்பு கூறுகையில், "த்ரிஷாவுடன் இணைந்து நடிப்பது சந்தோஷமான விஷயம். அப்படியொரு வாய்ப்புக்காகக் காத்திருக்கிறேன்," என்றார்.
த்ரிஷா கூறுகையில், "சிம்பு எப்போதுமே எனக்கு ஸ்பெஷல். அவருக்கும் எனக்கும் ஆன் ஸ்க்ரீன் கெமிஸ்ட்ரி பிரமாதமாக ஒர்க் அவுட் ஆகிறது. அடுத்த பட வாய்ப்புக்கு காத்திருக்கிறேன்," என்றார்.

11 நவம்பர் 2011

சினேகாவிடம் இப்படித்தான் காதல் வந்தது.

ஸ்னேகா பழக இனிமையானவர். அவரது எளிமையும் யதார்த்தமும் அவரை என் மனைவியாக்கிக் கொள்ளத் தூண்டியது. அதனால்தான் காதலித்தேன், என நடிகர் பிரசன்னா கூறினார்.
ஸ்னேகாவுடன் காதல் மலர்ந்தது எப்படி என்பது குறித்து பிரசன்னா அளித்த பேட்டி:
அச்சமுண்டு அச்சமுண்டு படம பண்ண போது ஸ்னேகாவுக்கும் எனக்கும் ஆரம்பத்தில் தொழில் ரீதியான நட்புதான் இருந்தது. நாளடைவில் ஸ்னேகா நடவடிக்கையில் ஈர்ப்பானேன். அவர் பெரிய நடிகை. ஆனாலும் அந்த தலைக்கனம் கொஞ்சமும் இல்லை. பந்தா இல்லாமல் பழகுவார். எளிமையாக நடந்து கொள்வார். அந்த குணங்கள் எனக்கு பிடித்தது.
ஸ்னேகா என் மனைவியாக வாழ்க்கை முழுக்க என்னுடன் இருக்கவேண்டும் என்று ஆசைப்பட்டேன். மூன்றரை வருடம் எங்களுக்குள் காதல் இருந்தது. ஆனாலும், அவசரப்படாமல் ஒருவரையொருவர் முழுமையாக புரிந்து கொள்ள கால அவகாசம் எடுத்தோம். நிறைய யோசித்தோம். விவாதித்தோம். அதன் பிறகு திருமணம் செய்து கொள்வதென முடிவு எடுத்தோம்.
காதலின் அடையாளமாக முதலில் ஸ்னேகாவுக்கு புடவை வாங்கி கொடுத்தேன். அது அவருக்கு ரொம்ப பிடித்தது. எனக்கு ஸ்னேகா விலை உயர்ந்த கைக்கடிகாரம் வாங்கி கொடுத்தார்.
நாங்கள் ரொம்ப நெருக்கமான பிறகு ஸ்னேகாவுக்கு அவரது பிறந்த நாளில் 'ஐ பேட்' வாங்கி கொடுத்தேன். இரு குடும்பத்தாரும் திருமணத்துக்கு சம்மதித்து விட்டனர். விரைவில் நிச்சயதார்த்தம் நடைபெறும்," என்றார்.
நடிகை ஸ்னேகா இன்னமும் இந்த திருமணம் குறித்து பேசவில்லை. ஸ்னேகா அனுமதியுடன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக பிரசன்னா தெரிவித்தார்.
விரைவில் இருவரும் கூட்டாக பிரஸ் மீட் வைக்கப் போகிறார்களாம்.

08 நவம்பர் 2011

அன்னக்கொடியும் கொடி வீரனும்.

பாரதிராஜா இயக்கப் போகும் கனவுப் படமான அன்னக்கொடியும் கொடி வீரனும் படத்தின் நாயகியாக கோ பட நாயகியும், முன்னாள் நாயகியும், பாரதிராஜாவின் மோதிரக் கையால் குட்டுப்பட்டு நாயகியாக அறிமுகமானவருமான ராதாவின் மகளுமான கார்த்திகா நடிக்கப் போவதாக தகவல்கள் கூறுகின்றன.
பழம்பெரும் நாயகியான ராதாவின் மகள்தான் கார்த்திகா. இவர் கோ படம் மூலம் தமிழில் அறிமுகமாகி நல்ல கிராக்கிக்குள்ளாகியுள்ளார். அவரைத் தேடி பல பட வாய்ப்புகள் போனபோதும் கோ படம் போல நல்ல கதையம்சம் உள்ள படமாக பார்த்துக் கொண்டிருப்பதால் புதிய படம் எதையும் ஒப்புக் கொள்ளாமல் இருந்தனர் ராதாவும், கார்த்திகாவும்.
இந்த நிலையில் பாரதிராஜாவின் அன்னக்கொடியும், கொடி வீரனும் படத்தின் நாயகியாக கார்த்திகா நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தில் நாயகியாக, இனியா நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகிருந்தது நினைவிருக்கலாம். முதலில் பிரியா மணியைத்தான் யோசித்திருந்தார் பாரதிராஜா. பின்னர் வாகை சூட வா படத்தைப் பார்த்த பின்னர் இனியாவை தனது நாயகியாக அவர் தேர்வு செய்தார் என தகவல்கள் தெரிவித்தன.
இந்த நிலையில் கார்த்திகா அந்த வேடத்திற்குத் தேர்வாகியுள்ளதாக கூறப்படுகிறது. இடையில் என்ன நடந்தது என்பது தெரியவில்லை. இனியா நிராகரிக்கப்பட்டுள்ளாரா அல்லது கார்த்திகா இன்னொரு ஹீரோயினாக நடிக்கப் போகிறாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

05 நவம்பர் 2011

உயிரையும் உயிரா நினைச்ச மண்ணையும் இழந்தவங்களுக்காய்.....!!!

தமிழ்ப் படங்களுக்கு இலங்கை அரசு தடை விதிப்பதும், தணிக்கை செய்வதும் தொடர்கிறது. அவர்கள் என்ன நமது படங்களுக்கு தடை விதிப்பது... இலங்கையில் எனது படத்தை திரையிட அனுமதி தரமாட்டேன். கோடம்பாக்கம் நினைத்தால் கொழும்பு வருமானத்துக்கே செக் வைக்க முடியும், என்றார் இயக்குநர் / தயாரிப்பாளர் சசிகுமார்.
சர்ச்சைக்குரிய தமிழ் படங்களுக்கு இலங்கை அரசு தடை விதிக்கிறது. புதுப்படங்களை அங்குள்ள தணிக்கை குழுவுக்கு அனுப்பி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான வசனங்களை நீக்குகிறது. இஷ்டம் போல் காட்சிகளை வெட்டித் தள்ளி அரை குறையாக தியேட்டர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
தீபாவளிக்கு ரிலீசான 7ஆம் அறிவு படத்திலும் தமிழர்களுக்கு ஆதரவான வசனங்கள் நீக்கப்பட்டன. இலங்கையின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு இயக்குனர் சசிகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பத்திரிகைப் பேட்டியில், "தமிழனாகப் பிறந்த எல்லோருமே ஈழ உணர்வாளர்கள்தான். இதயத்தைப் பிளந்து காட்டித்தான் அதை வெளிப்படுத்தணும்கிற அவசியம் இல்லை. சராசரி சசிகுமாரா அந்த துயரத்துக்காகத் துடிச்சிருக்கேன். கதறி இருக்கேன். உணர்வோ உதவியோ... என்னால முடிஞ்சதை எப்பவுமே செய்றவன் நான். அதை வெளியே காட்டிக்க வேண்டிய அவசியம் இல்லை.
இப்பவும் 'போராளி’ படத்துக்கான எஃப்.எம்.எஸ். உரிமையை இலங்கைக்குக் கொடுக்கக் கூடாதுங்கிறதுல நான் உறுதியா இருக்கேன். ஒரு தயாரிப்பாளரா இந்த முடிவு என்னைப் பாதிக்கும்தான். ஆனால், கண்ணீரும் கதறுலுமா நம்ம சொந்தங்கள் அல்லாடித் தவிக்கிற அந்த மண்ணில் படம் ஓட்டிக்காட்ட நான் விரும்பலை.
முன்னாடிலாம் கிராமப்புறங்களில் வயதானவங்க இறந்துட்டா தூக்கம் விழிக்கணுங்கிறதுக்காக துக்க வீட்டில் சினிமா ஓட்டுவாங்க. உலகத்தையே உலுக்கிய துக்கத்துக்கும் நாம படம் ஓட்டிக்கிட்டு இருக்கிறது நியாயமா படலை.
அங்கே மிச்ச சொச்சமா இருக்கிற தமிழர்களும் படம் பார்க்கிற மனநிலையில் இல்லை. சுற்றுலாவும் சினிமாவும்தான் இலங்கையோட பொருளாதார ஆதாரம். தொப்புள்கொடி உறவுனு துடிக்கிற நாம் எதுக்காக இலங்கைக்கு எஃப்.எம்.எஸ். உரிமை கொடுக்கணும்? எவ்வளவு லாபத்தை இழந்தாலும், இனி நான் எடுக்கப்போற எந்தப் படத்துக்குமே எஃப்.எம்.எஸ். உரிமையை இலங்கைக்குக் கொடுக் கப்போறது இல்லை.
தமிழ் உணர்வுகளைத் தட்டி எழுப்புற மாதிரி ஒரு வசனம் வந்தால்கூட சம்பந்தப்பட்ட படத்தை இலங்கை அரசாங்கம் தடை பண்ணிடுது. சமீபத்தில்கூட இந்த மாதிரி கெடுபிடிகளை இலங்கை அரசு காட்டி இருக்கு. அவங்க என்ன நம்ம படங்களைத் தடை பண்றது?
கோடம்பாக்கம் மனசு வைத்தால் கொழும்புக்கே வருமானரீதியா செக் வைக்க முடியும். நமக்கும் இதில் இழப்பு இருக்கத்தான் செய்யும். என்ன பண்றது? உயிரையும் உயிரா நெனச்ச மண்ணையும் இழந்தவங்களுக்காக வருமானத்தை இழக்குறது தவறே இல்லை!'' என்று கூறியுள்ளார்.
சசிகுமாரின் இந்த அதிரடி முடிவு தமிழ் உணர்வு கொண்ட பல தயாரிப்பாளர்களையும் யோசிக்க வைத்துள்ளது.
சசிகுமார் முடிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரபல தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின், "இலங் கைக்கு எஃப்.எம்.எஸ். உரிமை வழங்கலாமா, கூடாதா என்பது குறித்து தயாரிப்பாளர்கள் சங்கம், இயக்கு நர்கள் சங்கம் உள்ளிட்டவை கலந்து ஆலோசித்து இப்படி ஒரு திட்டத்தைச் சொன்னால், நிச்சயமாக அதனை ஏற்று நடப்பேன். தமிழர்களின் வலி அறிந்த ஒரு தயாரிப்பாளர்களில் ஒருவனாக சசியின் கருத்துக்குத் தலைவணங்குகிறேன். சினிமா வுக்கு வருமானம் அவசியம்தான் என்றாலும், அதைவிட, தமிழனின் தன்மானம் முக்கியமானது!'' என்று கூறியுள்ளார்.

02 நவம்பர் 2011

சிம்பு எனக்கு தடை போடவில்லை.

ஜீவா படத்தில் நடிக்க வேண்டாம் என்று சிம்பு என்னிடம் கூறவில்லை. நான் எப்பொழுதும் சுயமாக முடிவு எடுப்பவள் என்று நடிகை ரிச்சா தெரிவித்துள்ளார்.
நடிகை ரிச்சா சிம்புவுடன் ஒஸ்தி படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் ஜீவாவின் புதிய படத்தில் நடிக்க ரிச்சா முதலில் சம்மதித்ததாகவும், பிறகு சிம்பு சொன்னதால் நடிக்க மறுத்ததாகவும் செய்திகள் வந்தது.
சிம்பு-ஜீவா மோதல் தமிழகமே அறிந்தது. கோ படத்தில் முதலில் சிம்பு நடிப்பதாக இருந்தது. பின்னர் அவரை மாற்றி விட்டு ஜீவா நடித்தார். அதிலிருந்து இருவருக்குள்ளும் முட்டிக்கொள்ள ஆரம்பித்தது. சிம்பு ஏதாவது சொல்ல பதிலுக்கு ஜீவா ஏதாவது சொல்ல என்று அவர்களின் வார்த்தை விளையாட்டு முடிவின்றிப் போய்க் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தான் இயக்குனர் அகமது இயக்கத்தில் ஜீவா படத்தில நடிக்க வேண்டாம் என்று ரிச்சாவிடம் சிம்பு தெரிவித்ததாக செய்தி வந்தது.
இது குறித்து ரிச்சா கூறியதாவது,
ஜீவா ஜோடியாக நடிக்குமாறு யாருமே என்னைக் கேட்கவில்லை. அப்படி இருக்கையில் ஜீவாவுடன் நடிக்கக் கூடாது என்று சிம்பு கூறியதாக செய்தி வந்தது. அது வெறும் வதந்தி தான். என் படம் தொடர்பான விஷயங்களில் யாரும் தலையிடுவதில்லை என்றார்.
இதற்கிடையே, நான் எப்பங்க ரிச்சாகிட்ட ஜீவா கூட நடிக்கக் கூடாதுன்னு சொன்னேன் என்று சிம்புவும் தெரிவித்துள்ளார்.
எங்கு 'வம்பு' என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் வம்பு வலுத்து வருவது மட்டும் தெரிகிறது!

31 அக்டோபர் 2011

தேவானந்திற்கு ஐந்தாண்டு சிறை!

டிவி நடிகை வைஷ்ணவியை தற்கொலைக்குத் தூண்டியதாக தொடரப்பட்ட வழக்கில் சக டிவி நடிகரும், காதலருமான தேவானந்த்துக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
பல்வேறு டிவி தொடர்களில் நடித்தவர் வைஷ்ணவி. பாபா உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கும், இன்னொரு டிவி நடிகரான தேவானந்த் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில், கடந்த 2006 ஏப்ரல் 15ம்தேதி வைஷ்ணவியை தேவானந்த் கிழக்கு கடற்கரை சாலைக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் இரவு வீடு திரும்பினார் வைஷ்ணவி. அப்போது அவரது முகத்தில் காயம் இருந்தது.
இதுகுறித்து தனது பெற்றோரிடம் அவர் கூறுகையில், தேவானந்த் இரண்டாம் தாரமாக திருமணம் செய்ய வற்புறுத்துகிறார். இல்லையென்றால் யாருடனும் வாழ முடியாமல் செய்து விடுவேன் என்றும் மிரட்டுகிறார் என்று கூறியுள்ளார்.
பின்னர் 2 நாட்கள் கழித்து அவர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவரது பெற்றோர் அண்ணாநகர் காவல் நிலையத்தில் தேவானந்த் மீது புகார் கொடுத்தனர்.
போலீஸார் தேவானந்த் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இன்று தேவானந்த் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக தெரிவித்த நீதிபதி அவருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ. 10,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

29 அக்டோபர் 2011

ரிச்சாவிற்கு சிம்பு போட்ட தடை!

நடிகர் ஜீவாவுக்கும் சிம்புவுக்கும் இடையிலான மோதல் இன்னும் முற்றிவிட்டது. இதன் விளைவாக, தனக்கு ஜோடியாக ஒஸ்தி படத்தில் நடிக்கும் ரிச்சா, ஜீவாவுடன் நடிகக் கூடாது என தடை விதித்துள்ளார் சிம்பு.
'கோ' படத்தில் நடிக்க முதலில் சிம்புவுக்குதான் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் கதையில் சிம்புவின் தலையீடு இருந்ததால், அந்த வாய்ப்பை ஜீவாவுக்குக் கொடுத்தார் கேவி ஆனந்த்.
கோ சூப்பர் ஹிட் ஆனதால் அதில் ஏன் நடிக்கவில்லை என சிம்புமேல் பலரும் ஆதங்கப்பட்டனர். இந்த நிலையில் சிம்பு என் நண்பன் இல்லை என்று ஜீவா அறிவித்தது அவர்களின் மோதலை தீவிரமாக்கியது.
தற்போது ஜீவாவுடன் நடிகை ரிச்சா ஜோடி சேருவதை சிம்பு தடுத்து விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தெலுங்கில் ரிச்சா முன்னணி நடிகையாக உள்ளார். தமிழில் தனுஷுடன் “மயக்கம் என்ன”, சிம்புவுடன் “ஒஸ்தி” படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் இயக்குனர் அகமது, தனது புதுப்படத்தில் ஜீவா ஜோடியாக நடிக்க ரிச்சாவை போனில் தொடர்பு கொண்டு பேசினாராம். இவர் ஏற்கனவே ஜெய் நாயகனாக நடித்த 'வாமணன்' படத்தை இயக்கியவர்.
ஜீவா ஜோடி என்பதால் முதலில் நடிக்க ஒப்புக் கொண்டாராம் ரிச்சா. எத்தனை நாள் கால்ஷீட் தருவேன் என்பதை பிறகு சொல்கிறேன் என்றும் உறுதியாக சொன்னாரம்.
அதை நம்பி பட வேலைகளை இயக்குநர் அகமது தொடங்கிய நிலையில், திடீரென அகமதுவுக்கு போன் செய்த ரிச்சா, ஜீவா ஜோடியாக நடிக்க முடியாது என கூறிவிட்டாராம். முதலில் சந்தோஷமாக கால்ஷீட் தருவதாக கூறிய ரிச்சா திடீரென மனம் மாறிய காரணம் புரியாமல் இயக்குனர் குழம்பி போனார்.
இப்போது ஒஸ்தி படப்பிடிப்பில் சிம்புவுடன் நடித்துக்கொண்டு இருக்கிறார் ரிச்சா. சிம்புதான் ஜீவாவுடன் நடிக்க வேண்டாம் என ரிச்சாவைத் தடுத்ததாக பரபரப்பாக பேசப்படுகிறது.
ஜீவா படத்துக்குப் பதில் வேறு வாய்ப்பு தருவதாகவும் சிம்பு உறுதியளித்துள்ளாராம். எனவே ரிச்சா ஜீவாவை உதறியதாகச் சொல்கிறார்கள்.

28 அக்டோபர் 2011

மகளை பாராட்டினாராம் அப்பா.

ஏழாம் அறிவு படத்தில் சிறப்பாக நடித்ததாக மகள் ஸ்ருதியை கமல் ஹாஸனும், கவுதமியும் பாராட்டியுள்ளனர்.
லக் என்ற இந்தி படத்தில் நாயகியாக அறிமுகமானார் ஸ்ருதி ஹாஸன். பின்னர் தெலுங்குப் படங்களிலும் நடித்தார். இப்போது அவர் தமிழில் சூர்யா ஜோடியாக 7 ஆம் அறிவு படத்தில் அறிமுகமாகியுள்ளார்.
தீபாவளிக்கு ரிலீசாகி ஓடிக் கொண்டிருக்கிறது. ஸ்ருதி நடித்த முதல் தமிழ் படம் என்பதால் தந்தை கமல் ஆர்வமாக ஃபோர் பிரேம்ஸ் தியேட்டரில் போய் அப்படத்தைப் பார்த்தார். ஸ்ருதி நடித்த ஒவ்வொரு காட்சியையும் ரசித்தார். ஸ்ருதி நடிப்பு அவருக்கு ரொம்பப் பிடித்துப் போனது.
படம் பார்த்து முடிந்ததும் ஸ்ருதியிடம் சிறப்பாக நடித்து இருப்பதாக வெகுவாக பாராட்டித் தள்ளினாராம் கமல். நடிகை கவுதமியும் இந்தப் படத்தைப் பார்த்த பின், ஸ்ருதியை பாராட்டினார்.

25 அக்டோபர் 2011

விக்ரமின் கனவுக்கன்னிகள்!

ராஜபாட்டை படத்தில் ஹீரோ விக்ரம் கனவில் வரும் குத்துப் பாட்டில் ரீமா சென்னும் ஸ்ரேயாவும் குத்தாட்டம் போடுவதாக ஒரு காட்சியை வைத்துள்ளார் இயக்குநர் சுசீந்திரன்.
இதுகுறித்து இயக்குநர் சுசீந்திரன் கூறுகையில், "ராஜபாட்டை பக்கா கமர்சியல் படம். விக்ரம் ஜிம்பாய் கேரக்டரில் வருகிறார். மெகா பட்ஜெட்டில் தயாராகியுள்ளது. நான் சொன்னதை உள்வாங்கி விக்ரம் மிக பிரமாதமாக நடித்துள்ளார். அவருடன் பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவம். அவருக்கு இன்னும் ஒரு கதை சொல்லி உள்ளேன். கண்டிப்பாக மீண்டும் படம் செய்யலாம் என்று கூறியுள்ளார்.
விக்ரம் கனவு காண்பது போன்ற பாடல் காட்சியொன்று உள்ளது. இதில் ஸ்ரேயா, ரீமாசென் இருவரும் நடிகைகளாகவே வந்து நடனம் ஆடுகின்றனர். இப்பாடல் காட்சி இத்தாலியில் படமாக உள்ளது.
அடுத்து விஷ்ணுவை வைத்து படம் இயக்குகிறேன். இது தெலுங்கிலும் தயாராகிறது. தெலுங்கில் வேறு ஹீரோ.
எனக்கென்று தனி பாணி கிடையாது. வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல என்று வித்தியாசமான கதைகளை படமாக்குவதே திட்டம்," என்றார் சுசீந்திரன்.
ராஜபாட்டையில் ரீமா - ஸ்ரேயா இணைந்து குத்தாட்டம் போடுகின்றனர் என முதலில் செய்தி வெளியாகியிருந்தது ஆனால் அப்போது இயக்குநர் சுசீந்திரன் இதை மறுத்து பேட்டியளித்திருந்தார். இப்போது அவரே அந்த செய்தியை ஒப்புக் கொண்டுள்ளார்!

23 அக்டோபர் 2011

சந்தர்ப்பத்தை பயன்படுத்திய காஜல்!

தம்மு தெலுங்குப் படத்தில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக ஒப்பந்தமாகி பின்னர் திடீரென கழன்று கொண்டார் ஸ்ருதி. காரணம், அவருக்கு வந்த இந்திப்பட வாய்ப்பு.
விஷயம் வெளியான உடனே, ஜூனியர் என்.டி.ஆரை பல நடிகைகளும் மொய்க்க ஆரம்பித்தனராம். இவர்களில் தமன்னா, த்ரிஷா என டாப் ஸ்டார்களும் உண்டாம்.
ஆனால் என்.டி.ஆர், காஜல் அகர்வாலை ஒப்பந்தம் செய்தார். உடனே சந்தோஷமாக நடிக்க ஒப்புக் கொண்டாராம் காஜல்.
காரணம், ஏற்கெனவே நான் வட இந்தியப் பெண் என்று பேசி தெலுங்கு நடிகர்-இயக்குநர்களிடம் கெட்டப் பெயர் சம்பாதித்துள்ளார் காஜல்.
இந்த நிலையில் ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைத்தால், மீண்டும் தெலுங்கில் ஒட்டிக் கொள்ளலாம் என காத்திருந்தபோது, இந்த லட்டு வாய்ப்பு வந்தது.
விடுவாரா... அதே நேரம் தனக்கு சம்பளமாக பெரும் தொகையைக் கேட்டாராம் காஜல். வேறு வழியில்லை என்பதால், கேட்ட தொகையைக் கொடுத்துவிட்டாராம் ஜூனியர் என்.டி.ஆர்.

21 அக்டோபர் 2011

காத்திருக்கும் சித்தாரா!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்இந்திய மொழி படங்கள் அனைத்திலும் நடித்தவர் நடிகை சி்த்தாரா. தமிழில் "புது புது ராகங்கள்", "புது வசந்தம்", "உன்னை சொல்லி குற்றமில்லை", "புதுப்புது அர்த்தங்கள்" உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாகவும், "நட்புக்காக", "படையப்பா" உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர கேரக்டரிலும் நடித்துள்ளார். இந்நிலையில் சினிமாவுக்கு வந்து 25 வருடங்கள் ஆகியும் இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கிறார்.
இதற்கான காரணம் குறித்து அவர் கூறியிருப்பதாவது, நிறைய வரன்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் வரும் வரன்கள் எல்லாம், திருமணத்திற்கு பின்பு சினிமாவில் நடிக்க கூடாது என்று நிபந்தனை விதிக்கிறார்கள். திருமணத்திற்கு பின்ன நல்ல வாழ்க்கை அமைந்தால் நடிக்காமல் இருக்கலாம், ஆனால் அப்படி ஒரு வாழ்க்கை அ‌மையவில்லை என்றால் என்ன செய்வது. என்னை பெண் பார்க்க வருபவர்களிடம் பரந்த மனப்பான்மை இல்லை. அப்படி இல்லாதவர்களிடம் நான் எப்படி குடும்பம் நடத்த முடியும்.
சினிமாவிற்கு முன்பு வரை சினிமாவை பற்றி நிறைய பயம் இருந்தது. ஆனால் சினிமாவிற்கு வந்தபின்னர், அதில் ஒரு நம்பிக்கையும், ஒரு பக்தியும் ஏற்பட்டது. சினிமாவை தேடி நான் வரவில்லை. சினிமா தான் என்னை தேடி வந்தது. சினிமாவை ரொம்பவே மதிக்கிறேன். அதனால், திருமணத்துக்குப்பின் நடிக்க மாட்டேன் என்று ஒருபோதும் சொல்ல மாட்டேன். 25 வருடங்களாக நான் சினிமாவில் இருக்க வேண்டும் என்று எழுதப்பட்டிருக்கிறது.
நான் யாரையும் காதலிக்கவில்லை என்று பொய் சொல்ல மாட்டேன். காதலித்து இருக்கிறேன். அது, கல்யாணம் வரை போகவில்லை. காதலித்துதான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். என்னை புரிந்துகொண்டு, நீ எப்பவும் போல நடிக்கலாம் என்று சொல்கிற கணவர் தான் வரவேண்டும். அப்படி ஒருவருக்காக காத்திருக்கிறேன் என்றார்.

18 அக்டோபர் 2011

பிரபுதேவாவை விட்டு பிரியமாட்டேன்!

"பிரபுதேவாவின் குழந்தைகள் எனக்குப் பிரச்சினையாக இருப்பதாகக் கூறுவதில் உண்மையில்லை. அவர்கள் இருப்பது எனக்கு முதலிலேயே தெரியுமே. எனவே அதற்காக, அவரை விட்டு பிரிவது என்ற எண்ணத்துக்கே இடமில்லை," என்று நடிகை நயன்தாரா கூறினார்.
நயன்தாரா மீதுள்ள காதலால் மனைவியை திட்டமிட்டு விவாகரத்து செய்துவிட்டவர் பிரபு தேவா. ஆனால் இப்போது நயன்தாரா - பிரபுதேவா இருவருக்குமே பிரச்சினை வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. முதல் மனைவி மற்றும் குழந்தைகளை அவர் ரகசியமாக பார்த்ததால் கோபித்துக் கொண்ட நயன்தாரா, பிரபு தேவாவை நடுத்தெருவில் நிறுத்திவிட்டதாக செய்திகள் வெளியாகின.
இதை மறுத்து நயன்தாரா மட்டும் கடந்த இரு தினங்களாக பேட்டி கொடுத்து வருகிறார். ஆனால் பிரபு தேவா செல்போனைக் கூட அணைத்துவிட்டு, மும்பையில் ஷூட்டிங்கில் மூழ்கிவிட்டாராம்.
இந்த நிலையில், பிரபுதேவா தன் குழந்தைகளை முழுமையாக விலகி வந்தால்தான் திருமணம் என்று நயன்தாரா பிடிவாதமாக இருப்பதாகக் கூறப்பட்டது.
ஆனால் அதையும் நயன்தாரா மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், "எனக்கும், பிரபுதேவாவுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. எங்களுக்கு இடையே உறவு முன்பைவிட பலமாக இருக்கிறது. நாங்கள் ஒன்றாகத்தான் இருக்கிறோம்.
அவருக்கு குழந்தைகள் இருப்பது எனக்கு முன்பே தெரியும். குழந்தைகள் எனக்கு பிரச்சினை இல்லை. பிரபுதேவாவை விட்டு நான் ஒருபோதும் பிரிய மாட்டேன்.
எங்களை பற்றி வதந்திகள் பரவுவது புதிது அல்ல. நிறைய பார்த்து விட்டோம். இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில், எங்கள் திருமண தேதியை விரைவில் அறிவிப்போம்,'' என்றார்.

15 அக்டோபர் 2011

பிரபுதேவா நயன் திருமணம் நிறுத்தம்?

நடிகை நயன்தாரா மலையாள நடிகர் மோகன்லாலை காதலித்து பின்னர் பிரிந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து நடிகர் சிம்புவை காதலித்து பிரிந்தார். இதையடுத்து நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவை காதலித்து திருமணம் வரை வந்தது. இப்போதும் அந்த காதலும் முறிந்துவிட்டதாக கூறப்படுகிறது.
நயன்தாரா -பிரபுதேவா காதலுக்கு பிரபுதேவாவின் முதல் மனைவி ரமலத் எதிர்ப்பு தெரிவித்தார். தனது கணவரை நயன்தாராவிடமிருந்து மீட்டு தாருங்கள் என்று போராட்டம் எல்லாம் நடத்தி, கடைசியாக கோர்ட் படியேறினார் ரமலத்.
இறுதியில் ரமலத்தையே சமாதனம் செய்து விவாகரத்துக்கு சம்மதிக்க வைத்த பிரபுதோ, ரமலத்திற்கு பலகோடி மதிப்பிலான சொத்துக்களையும் எழுதி கொடுத்தார்.
இதனையடுத்து நயன்-பிரபுதேவா காத‌லுக்கான சிக்கல் தீர்ந்தது. இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்து, திருமண ஏற்பாடுகளும் நடந்து வருகிறது.
இதனிடையே தன்மீது கொண்ட காதலுக்காக முதல் மனைவி ரமலத்தையே விவாகரத்து செய்துவிட்டு வந்த பிரபுதேவாவுக்காக இந்து மதத்துக்கு மாறினார் நயன்தாரா. மும்பையில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் வேளையில், இவர்கள் காதலில் திடீர் விரிசல் ‌ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் திருமணத்தை ரத்து செய்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த அதிரடி மாற்றம் குறித்து சொல்லப்படும் காரணம் : முதல் மனைவியை பிரிந்தாலும் தனது குழந்தைகள் மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளாராம் பிரபுதேவா.
சென்னை வரும் போதெல்லாம் குழந்தைகளை சந்திக்கிறாராம். ஆனால் இது நயன்தாராவுக்கு பிடிக்கவில்லை. குழந்தைகளை சந்திக்க நயன்தாரா தடை போட்டதாக தெரிகிறது. இருந்தும் நயன்தாராவுக்கு தெரியாமல் குழந்தைகளை சந்தித்து வருகிறார் பிரபுதேவா.
சமீபத்தில் கேரளா சென்ற பிரபுதேவா, நயன்தாராவிடம் வெளியூர் சூட்டிங்குக்கு போவதாக பொய் சொல்லிவிட்டு சென்னை வந்தாராம். இங்கு குழந்தைகளுடன் தங்கி இருந்துள்ளார். இந்த விஷயம் நயன்தாரா காதுக்கு எட்ட ஆத்திரமானார்.
பிரபுதேவாவுக்காக சினிமா, குடும்பம் என எல்லாத்தையும் விட்டு வந்த எனக்கு, அவர் துரோகம் செய்துவிட்டார் என்று ஆத்திரப்பட்டுள்ளார். மேலும் குழந்தைகளை விட்டு தன்னால் பிரிய முடியாது என்று பிரபுதேவாவும் உறுதியாக கூறிவிட்டாராம்.
இதையடுத்து பிரபுதேவா - நயன்தாரா காதல் முறிந்து, திருமணம் நின்றுபோனதாக பேசப்படுகிறது.

14 அக்டோபர் 2011

ஆள் வைத்து மிரட்டும் புவனேஸ்வரி!

கொடுத்த கடனை திருப்பிக்கேட்டால் நடிகை புவனேஸ்வரி ஆள் வைத்து மிரட்டுகிறார் என்று சென்னை ஐகோர்ட்டில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கே.கே.நகரை சேர்ந்த குருநாதன் என்பவர் ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், டி.வி. தொடர்களில் நடித்து வருவதாக நடிகை புவனேஸ்வரி என்னிடம் தெரிவித்தார். மேலும் டி.வி. தொடர்களை அவரே தயாரித்து வெளியிட இருப்பதாகவும், அதற்கு தேவையான பணம் தன்னிடம் இல்லை என்றும் கூறினார். எனவே இதற்காக ரூ.1.50 கோடி தொகையை கடனாக தரவேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார். நான் அவர் கேட்ட தொகையை வழங்கினேன். ஆனால் அவர் டி.வி. தொடர் எதையும் தயாரிக்கவில்லை என்று தெரிந்துகொண்டேன். இதனையடுத்து கடனாக கொடுத்த தொகையை திருப்பிக்கேட்டேன். ஆனால் அவர் தரமறுத்துவிட்டார். மேலும் என்னை ஆள்வைத்து மிரட்டினார். இதுபற்றி கே.கே.நகர் போலீசில் புகார் கொடுத்தேன். ஆனால், புவனேஸ்வரி மீது வழக்குப்பதிவு செய்ய போலீசார் மறுத்துவிட்டனர். கடனை தராமல் மிரட்டல் விடுத்த அவர் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசுக்கு உத்தரவிட வேண்டும், என்று தமது மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆறுமுகசாமி, குருநாதனின் மனுவுக்கு இன்னும் ஒரு வார காலத்திற்குள் பதிலளிக்கும்படி கே.கே.நகர் போலீசுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டார்.

11 அக்டோபர் 2011

சினிமாவிலும் அம்மாவாகிறார் சிம்ரன்!

தெலுங்குப் படம் ஒன்றில் அம்மா வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் நடிகை சிம்ரன்.
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் கனவு தேவதையாகத் திகழ்ந்த சிம்ரன், திருமணத்துக்கு பின் பட வாய்ப்புகளை இழந்தார். மீண்டும் கதாநாயகி வேடம் வந்தால் நடிப்பேன் என்று அடம் பிடித்துவந்தார்.
ஆனால் அக்கா, அண்ணி வாய்ப்புகளே வந்தன. அந்த வேடங்களிலும் சில படங்களில் நடித்தார். அப்போது அம்மா வேடத்தில் நடிக்க பலர் அழைத்தனர். அம்மாவாக நடிக்கும் அளவுக்கு எனக்கு வயதாகி விடவில்லை. அம்மா வேடத்தில் நடிக்கவே மாட்டேன் என்று மறுத்து வந்தார்.
தொடர்ந்து வாய்ப்புகளே இல்லாமல் போனதால் தற்போது அவர் பிடிவாதம் தளர்ந்துள்ளது.
தெலுங்கு படமொன்றில்அம்மா வேடத்தில் நடிக்க சம்மதித்துள்ளாராம். இவருக்கு மகனாக நடிப்பவர் உபேந்திரா. இருவரும் ஏற்கனவே சத்யம் படத்தில் நடித்துள்ளனர். உபேந்திராவுக்கு ஐம்பது வயதுக்கு மேல்! அவருக்கு அம்மாவாக நடிக்க சிம்ரன் ஒப்புக்கொண்டது திரையுலகில் ஒரு சின்ன ஆச்சர்யம்தான். ஆனால் பெரிய தொகையை இதற்கு சம்பளமாகப் பேசியுள்ளார் சிம்ரன் என்ற தகவல் தெரியவந்ததும் அந்த ஆச்சர்யமும் காணாமல் போய்விட்டது.
சினிமா உலகில் பணத்துக்குதானே முதலிடம்!

09 அக்டோபர் 2011

மாமனார் கொடுத்த பரிசு!

நடிகை ரம்பாவின் மகள் லான்யாவுக்கு அவரது அண்ணன் வாசு ரூ. 50 லட்சம் மதிப்புள்ள லேண்ட் ரோவர்-ஜாக்குவார் காரை பரிசாகக் கொடுத்து அசத்தியிருக்கிறாராம். ரம்பாவுக்கு என்ன அவ்வளவு பெரிய புள்ளையா இருக்கு என்று நினைக்க வேண்டாம். லான்யா 8 மாதக் குழந்தை.
ஈழத் தமிழர் இந்திரன் பத்மநாதனை திருமணம் செய்து கனடாவில் செட்டிலான ரம்பாவுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் அழகிய பெண் குழந்தை பிறந்தது. அதற்கு லான்யா என்று பெயர் வைத்துள்ளார். சமஸ்கிருதத்தில் லான்யா என்றால் தேவதை என்று பொருளாம்.
குழந்தை நல்லபடியாக பிறந்தால் திருப்பதி கோவிலுக்கு வருவதாக வேண்டிக் கொண்ட ரம்பா, லான்யாவுடன் இந்தியாவுக்கு வந்தார். திருப்பதி உள்பட பல கோவில்களுக்கு சென்று குட்டி தேவதையைத் தந்த இறைவனுக்கு நன்றி தெரிவித்தார்.
ஏற்கனவே குளிருக்குப் பெயர்போன கனடாவில் குளிர்காலம் முடியும் வரை இந்தியாவில் தங்கியிருக்க திட்டமிட்டுள்ளார். அவரது கொலுக், மொலுக் மகளைப் பார்க்க பல திரை நட்சத்திரங்கள் ரம்பா வீட்டுக்கு வந்து செல்கிறார்களாம்.
இந்நிலையில் ரம்பாவின் அண்ணனும், தயாரிப்பாளருமான வாசு ரூ. 50 லட்சம் மதிப்புள்ள லேண்ட் ரோவர்-ஜாக்குவார் காரை 8 மாதக் குழந்தை லான்யாவுக்கு பரிசாகக் கொடுத்துள்ளாராம்.

07 அக்டோபர் 2011

பூச்சியை ருசித்து சாப்பிட்ட அசின்!

நடிகர் சல்மான் கான் அசினிடம் சவால்விட்டு அதில் தோற்றுப்போனார்.
நடிகர் சல்மான் கானும். அசினும் சேர்ந்து ரெடி என்ற சூப்பர்ஹிட் படத்தில் நடித்தனர். அந்த படப்பிடிப்பின்போது சல்மான் அசினிடம் சவால்விட்டார். அந்த சவாலில் இப்போது சல்மான் தோற்றுவிட்டாராம்.
அந்த சுவாரஸ்யமான சவால் பற்றி அசின் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார்.
அது குறித்து அசின் கூறுகையில், "சல்மான் ரெடி படப்பிடிப்பின் போது தான் பாங்காக் வனப்பகுதியில் இருந்து பிடித்து வந்த பூச்சியை வைத்திருந்தார். திடீர் என்று இந்த பூச்சியை நீங்கள் சாப்பிடுங்கள் பார்ப்போம் என்று சவால்விட்டார்.
பொதுவாக பெண்கள் பூச்சிகளைப் பார்த்தாலே ஓடுவார்கள். அதனால் தான் அவர் தைரியமாக சவால்விட்டார். ஆனால் நானோ சிறிதும் பயப்படாமல் அந்தப் பூச்சியை சாப்பிட்டேன். அதைப் பார்த்து அவர் அசந்துவிட்டார். நீங்கள் பூச்சியைப் பார்த்து கத்தி, கூச்சல் போடுவீர்கள் என்று நினைத்தேன் என்றார்.
நான் சல்மான் கானை மதிக்கிறேன். அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால் நான் ஒன்றும் அவரைக் காதலிக்கவில்லை. அவரைக் காதலிக்க வேண்டும் என்ற எண்ணம் கூட எனக்கு வந்ததில்லை. அவர் மீது அளவு கடந்த மரியாதை வைத்துள்ளேன்," என்றார்.