இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற திரை நட்சத்திரங்களில் ஒருவரான ஷாருக்கான் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டதற்கு அந்நாட்டு ராஜ்ய உயர் அதிகாரிகள் மன்னிப்பு கேட்டுள்ளனர்.அமெரிக்க வெளியுறவு துணை செயலர் நிஷா பிஸ்வால், அமெரிக்காவின் டெல்லியில் இருக்கும் இந்தியத் தூதர் ரிச்சர்ட் வர்மா ஆகியோர் இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்திருக்கின்றனர்.அமெரிக்காவில் நுழையும் போது பாலிவுட் நட்சத்திரமான ஷாருக்கான் விசாரணைக்கு உட்படுத்தப்படுவது இது மூன்றாவது முறையாகும்.பாதுகாப்பின் அவசியத்தை புரிந்து கொண்டு மதிப்பதாக தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கும் ஷாருக்கான், ஒவ்வொரு முறையும் குடியேற்ற துறை தடுத்து வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று தெரிவித்திருக்கிறார்.முன்னதாக, ஷாருக்கானின் முஸ்லிம் பெயரால் அவர் தனிமைப்படுத்தப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களை அமெரிக்கா மறுத்துள்ளது.நாம் அன்பு செலுத்தும் உள்ளங்கள் நல்லுள்ளங்களாக இருப்பின், துன்பங்களில் கூட இன்பங்களை காணலாம்.
12 ஆகஸ்ட் 2016
ஷாருக்கானை தடுத்த அமெரிக்கா மன்னிப்பு கோரியது!
இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற திரை நட்சத்திரங்களில் ஒருவரான ஷாருக்கான் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டதற்கு அந்நாட்டு ராஜ்ய உயர் அதிகாரிகள் மன்னிப்பு கேட்டுள்ளனர்.அமெரிக்க வெளியுறவு துணை செயலர் நிஷா பிஸ்வால், அமெரிக்காவின் டெல்லியில் இருக்கும் இந்தியத் தூதர் ரிச்சர்ட் வர்மா ஆகியோர் இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்திருக்கின்றனர்.அமெரிக்காவில் நுழையும் போது பாலிவுட் நட்சத்திரமான ஷாருக்கான் விசாரணைக்கு உட்படுத்தப்படுவது இது மூன்றாவது முறையாகும்.பாதுகாப்பின் அவசியத்தை புரிந்து கொண்டு மதிப்பதாக தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கும் ஷாருக்கான், ஒவ்வொரு முறையும் குடியேற்ற துறை தடுத்து வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று தெரிவித்திருக்கிறார்.முன்னதாக, ஷாருக்கானின் முஸ்லிம் பெயரால் அவர் தனிமைப்படுத்தப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களை அமெரிக்கா மறுத்துள்ளது.22 ஜூலை 2016
மகனை சுட்டுக்கொல்லுமாறு குவான்டீலின் தந்தை குமுறல்!
16 ஜூலை 2016
பாகிஸ்தானின் பிரபல மொடல் அழகி கொலை!
26 மே 2016
சிம்பு நயன்தாரா நடிப்பில் இது நம்ம ஆளு!
![]() |
| இது நம்ம ஆளு |
16 மே 2016
நிச்சயமாக இது வித்தியாசமான தேர்தல்-ரஜினிகாந்த்
நிச்சயமாக இது வித்தியாசமான தேர்தல்தான் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார். தமிழகத்தில் 232 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இன்று காலை தொடங்கியது. தஞ்சாவூர், அரவக்குறிச்சிக்கு மட்டும் வரும் 23-ம் தேதி தேர்தல் நடக்கவிருக்கிறது. நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் முதல் ஆளாக வாக்குப்பதிவு செய்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அனைவரும் தங்களது கடமையை உணர்ந்து வாக்களிக்க வேண்டும். அது நமது கடமை. நிச்சயமாக இம்முறை வித்தியாசமான தேர்தல் தான்," என்று தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து பணம் பட்டுவாடா குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, "அது குறித்து கருத்துக்கூற விரும்பவில்லை" என்றார் ரஜினி.05 பிப்ரவரி 2016
காதுக்குள் வாழ்க்கை நடத்திய எறும்புகள்(காணொளி)
இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றான குஜராத்தில் வாழ்ந்து வரும் பன்னிரண்டு வயது சிறுமி ஒருவரின் காதுக்குள் எறும்புகள் குடித்தனம் நடத்தி வந்தமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்தச் சிறுமியின் காதுக்குள் இருந்து ஆயிரம் வரையான எறும்புகள் மருத்துவர்களால் வெளியே எடுக்கப்பட்டுள்ளது.அதன் காணொளியை இங்கே காணலாம்.
11 ஜனவரி 2016
பாரதிராஜாவின் கனவை நனவாக்குகிறார் பாலா!
‘என் வாழ்க்கைக்கு அர்த்தம் தரப்போற விஷயம் அது மட்டும்தான். நானும் இளையராஜாவும் மீண்டும் இணையப் போறோம். சேதுபதிக் கிழவன் மாதிரி நானே நடிக்கிறேன். போலீஸ்காரன் வேஷத்தில் சேரன் நடிக்கிறார். ரத்னகுமார் வசனம் எழுதுகிறார். ‘குற்றப் பரம்பரை’ படம் எடுக்காம என் திரையுலக வாழ்க்கை நிறைவு பெறாது. பிரிட்டிஷ் காலத்துக் கதை. மண்ணைப் பிழிஞ்சு, மனசைக் கரைச்சு செய்திருக்கேன்!’ என்று 2007-ல் வார இதழ் ஒன்றுக்குப் பேட்டி அளித்தார் இயக்குநர் பாரதிராஜா.
இந்நிலையில், பாரதிராஜாவின் கனவுப்படத்தை இயக்க முன் வந்துள்ளார் இயக்குநர் பாலா. இதற்காக ஒரு பெரிய நடிகர் பட்டாளத்தை அவர் ஒப்பந்தம் செய்துள்ளார்.
விஷால், ஆர்யா, அதர்வா, ராணா, அரவிந்த் சாமி ஆகியோர் பாலாவின் இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இந்தக் கூட்டணியில் மனிஷா கொய்ராலாவும் இணைந்துள்ளார் என்று புதிய தகவல் கிடைத்துள்ளது. மேலும் ஓர் இளம் நடிகை இந்தப் படத்தில் நடிக்க உள்ளார்.
பாரதிராஜாவின் கனவுப் படம் என்று கூறப்படும் குற்றப் பரம்பரை கதையை இயக்குநர் பாலா எப்படி கையாளப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பு இப்போதிருந்தே உருவாகியுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
